சிலர் எந்தவித முயற்சியும் செய்யாமல், வெறுமனே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாலும், அவருக்கு ராஜயோகம் உண்டாகும். அதற்குக் காரணங்களாக இருப்பவை அவருடைய ஜாதகத்திலுள்ள 2-ஆம் அதிபதியும், 9-ஆம் அதிபதியும்.தான் ஒரு ஜாதகத்தில் 2-க்கு அதிபதியான கிரகம் 9-ல் இருந்தால் அல்லது 9 -க்கு அதிபதியான கிரகம் 2-ல் இருந் தால், அந்த ஜாதகரின் வாழ்க்கையில் தசாகாலங்கள் சரியாக வரும்போது திடீரென அவருக்குப் பதவி, பண வசதி, பெயர், புகழ் ஆகியவை வந்து சேரும்.

ஜாதகத்தில் 2-ஆம் அதிபதி 2-ல் இருந்து, அதை 8-க்கு அதிபதியான கிரகம் பார்த்தால் அல்லது 8-க்கு அதிபதியான கிரகம் 2-ஆம் அதிபதி யுடன் 2அல்லது 5-ல் இருந்தால், அந்த ஜாதகருக்கு திடீரென ராஜயோகம் உண்டாகும். சிறிதும் எதிர்பாராமல் அவருக்குப் பண வசதியும், பதவியும் தேடிவரும்.

2-ஆம் அதிபதியும் 8-ஆம் அதிபதியும் குருவால் பார்க்கப்பட்டு, அந்த குரு கேந்திரத்தில் இருந்தால், அந்த ஜாதகருக்கு 2-ஆம் அதிபதி தசை, 5-ஆம் அதிபதி தசை அல்லது 9-ஆம் அதிபதி தசை நடக்கும்போது திடீரென ராஜயோகம் உண்டாகும். அவர் பெரிய பதவியை வகிப்பார்.

ஜாதகத்தில் 9-க்கு அதிபதியான கிரகம் 2-ல் இருந்து, அதே ஜாதகத்தில் 10-ல் குரு, 11-ல் சந்திரன் இருந்தால், அந்த ஜாதகருக்கு 9-ஆம் அதிபதியின் தசை நடக்கும்போது, அவர் திடீரென வானத்தில் நட்சத்திரமாக மின்னுவார்.

Advertisment

ஜாதகத்தில் சந்திரனுக்கு முன்னாலும், பின்னாலும் கிரகம் இருந்தால், அந்த ஜாதகருக்கு யோகக் காரக தசை நடக்கும்போது, அவர் பெரிய பதவியை வகிப்பார். லக்னத்தில் சந்திரன், 4-ல் குரு, 10-ல் சனி இருந்தால், அந்த ஜாதகருக்கு சந்திர தசை நடக்கும்போது பெரிய மனிதராகிவிடுவார்.

ஜாதகத்தில் சுக்கிரன், சூரியன், சந்திரன் லக்னம் அல்லது 2-ஆம் பாவத்தில் இருந்து, அதை குரு பகவான் பார்த் தால், அந்த ஜாதகர் 40 வயதிற்குப் பிறகு திடீரென பெரிய மனிதராவார்.

லக்னத்தில் புதன் உச்சமாக இருந்து, அதே ஜாதகத்தில் 2-ஆம் பாவத்திற்கு அதிபதி கிரகமான சுக்கிரன் இருந்து, அதை 10-ஆம் பாவத்திலிருந்து குரு பகவான் பார்த்தால், சுக்கிர தசை நடக்கும்போது அந்த ஜாதகர் சிறிதும் எதிர்பாராமல் பெரிய மனிதராக வலம்வருவார்.

Advertisment

pp

லக்னத்தில் சந்திரன், செவ்வாய், 4-ல் குரு, 10-ல் சனி, 11-ல் உச்ச புதன் இருந்தால், அந்த ஜாதகர் வாழ்க்கையில் திடீரென நட்சத்திரமாக ஒளிவீசுவார்.

ஜாதகத்தில் உச்ச சூரியன் 10-ல் இருந்து, 11-ல் சுக்கிரன், 6-ல் செவ்வாய் இருந்தால், அந்த மனிதர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாலும், அவரைத் தேடி பதவிவரும்.

லக்னத்தில் சந்திரன், 5-ல் குரு, செவ்வாய், 11-ல் சூரியன், சுக்கிரன் இருந்தால், அந்த ஜாதகர் திடீரென பெரிய மனிதராகிவிடுவார்.

ஜாதகத்தில் 2-ஆம் வீட்டில் சனி, 5-ல் சுக்கிரன், புதன், 6-ல் செவ்வாய், சந்திரன் இருந்தால், அந்த ஜாதகர் தன் வாழ்க்கையின் முற்பகுதியில் ஏராளமான கஷ்டங்களை அனுப விப்பார். ஆனால், பிற்பகுதியில் பெரிய மனிதராகி விடுவார்.

லக்னத்தில் உச்ச சந்திரன், 4-ல் சூரியன், குரு, சுக்கிரன், புதன் இருந்தால், அந்த ஜாதகர் திடீரென மிகப்பெரிய பதவியில் அமர்வார்.

லக்னத்தில் குரு, புதன், சூரியன் இருந்து, அதற்கு கேந்திரத்தில் சந்திரன் இருந்தால், அந்த ஜாதகர் பெரிய பதவியைப் பெறுவார்.

லக்னத்தில் சூரியன், சுக்கிரன், ராகு, 10-ல் செவ்வாய், 11-ல் சந்திரன் இருந்தால், அந்த ஜாதகர் தன் 35 வயதிற்குப் பிறகு, மிகப்பெரிய மனிதரா வார்.

லக்னத்தில் செவ்வாய், 2-ல் சனி, 7-ல் குரு, 10-ல் சுக்கிரன் இருந்தால், அந்த ஜாதகர் தன் வாழ்க்கை யில் சிறிதும் எதிர்பாராமல் பெரிய பதவியில் அமர்வார்.

லக்னத்தில் செவ்வாய், 6-ல் குரு, 10-ல் சூரியன், சுக்கிரன் இருந்தால், அந்த ஜாதகர் யாருமே எதிர் பாராமல் மிகப்பெரிய மனிதராக மாறுவார்.

லக்னத்தில் சனி, 2-ல் குரு, 5-ல் சந்திரன், 10-ல் செவ்வாய் இருந்தால், அந்த ஜாதகர் பெரிய பதவியில் அமர்ந்து, அனைவரையும் ஆச்சரியப்படவைப்பார்.

பெரிய மனிதராக வலம்வருவதற்கு..செய்ய வேண்டிய பரிகாரங்கள் இவை...

தினமும் சூரியன் உதயமாகும்போது, அதற்கு நீர்விட்டு வழிபடவேண்டும்.

ஆதித்திய ஹிருதய ஸ்தோத்திரத்தைப் படிக்கவேண்டும்.

தெற்கில் தலைவைத்துப் படுக்கவேண்டும்.

தன் லக்னம், 9-க்கு அதிபதியின் ரத்தினத்தை அணியவேண்டும்.

வீட்டின் வடகிழக்கில் படுக்கக்கூடாது.

கருப்பு நிற ஆடை அணியக்கூடாது.

வீட்டின் சுவரில் பச்சை வர்ணம் இருக்கக் கூடாது. .

வீட்டின் தென்மேற்கு திசையில் கிணறு அல்லது ஆழ்துளைக் கிணறு இருக்கக்கூடாது.

வீட்டின் பிரதான வாசல் உச்சமாக இருக்க வேண்டும்.

செல்: 98401 11534