திறமைசாலிலிகள் பலர் வாழ்க்கையில் வெற்றிபெற முடியாமல், கவலையுடன் தெருவில் அலைந்துகொண்டிருக் கிறார்கள். ஆனால் சிலருக்கு எங்கிருந்தோ அதிர்ஷ்டம் தேடிவந்து, உயர்ந்த இடத்திற்குப் போய்விடுகிறார்கள். இது எப்படி நடக்கிறது?

Advertisment

ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதி லக்னத்தில் இருந்து, 2-ஆம் பாவாதிபதி சனியுடன் இருந்தால், அவர் தன் வாழ்க்கையின் முற்பகுதியில் நிறைய கஷ்டங்களை அனுப விப்பார்.

Advertisment

dd

லக்னத்தில் சூரியன், 2-ல் புதன், சனி, 3-ல் குரு, செவ்வாய், 4-ல் நீச சந்திரன், 5-ல் கேது, 11-ல் ராகு, 12-ல் சுக்கிரன் இருந்தால், அந்த ஜாதகர் இளம்வயதில் பல கஷ்டங்களை அனுப விப்பார். 31 வயதானபிறகு, பெயர், புகழ் வந்துசேரும். எல்லாரும் ஆச்சரியப்படுகிற அளவுக்கு பெரிய மனிதராகி விடுவார்.

ஒரு ஜாதகத்தில் சந்திரன் நீசமாக இருந்து, அதற்கு 8-ல் ராகு, 10-ல் சூரியன் இருந்தால், அவருக்கு 33 வயதில் திடீரென்று வசதியான வாழ்க்கை அமைந்துவிடும்.

Advertisment

சந்திரன் லக்னாதிபதியாகி லக்னத்தில் இருந்து, 9-ல் ராகு, சனி, செவ்வாய் இருந்தால், அந்த ஜாதகரின் முற்பகுதி வாழ்க்கை சிரமங்கள் நிறைந்ததாய் இருக்கும். ஆனால், இரண்டாம் பகுதியில் அவரே நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பெயர், புகழுடன் இருப்பார். பல வெற்றிகளைக் காண்பார்.

லக்னத்தில் சூரியன், 2-ல் புதன், 3-ல் ராகு, செவ்வாய், 7-ல் சந்திரன், 8-ல் குரு இருந்தால், அவர் தன் 36 வயதிற்குப்பிறகு நினைத்துப் பார்க்கமுடியாத அளவுக்கு பணவசதியோடு வாழ்வார்.

12-ல் புதன், சூரியன், சுக்கிரன், 2-ல் ராகு, குரு, 5-ல் செவ்வாய், 8-ல் சந்திரன், கேது, 11-ல் சனி இருந் தால், அந்த ஜாதகருக்கு இளம் வயதில் படிக்கக்கூட இயலாத நிலை இருக்கும். பல இடங்களில் வேலை பார்க்கும் சூழல் இருக்கும். ஆனால் திடீரென்று 32 வயதிற்குப்பிறகு வசதியான வாழ்க்கை வந்துசேரும். பிள்ளை களுடன் சொந்த வீட்டில் மகிழ் வுடன் வாழ்வார்.

ஒரு ஜாதகத்தில் லக்னத்தில் சந்திரன், 3-ல் சனி, 10-ல் குரு இருந்தால், அவர் 33 வயதிற் குப்பிறகு வசதியான வாழ்க்கை வாழ்வார்.

5-க்கு அதிபதியும், லக்னா திபதியும் 7 அல்லது 10-ல் இருந்தால், அவருடைய வாழ்க்கையின் இரண்டாவது பகுதி நன்றாக இருக்கும். 7-க்கு அதிபதி 10-ல் இருந்து, 10-க்கு அதிபதி லக்னத் தில் உச்சமடைந்தால், அவர் சுய முயற்சியால் முன்னுக்கு வருவார். 31 வயதிற்குமுன்பு பல சிரமங்களை அனுபவிப்பார். அதற்குப்பிறகு வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

ஒரு ஜாதகத்தில் 10-க்கு அதிபதி 11-லும், 11-க்கு அதிபதி 10-லும் இருந்து, லக்னத்தில் சூரியன் அல்லது சந்திரன் இருந்தால், அவர் 14 வயதிலிருந்து 30 வயதுவரை கடுமை யாக உழைக்கவேண்டியதிருக்கும். அதற்குப் பிறகு பெரிய வெற்றிகளை அவர் பார்ப்பார்.

லக்னாதிபதி 2-லும், 2-க்கு அதிபதி 4-லிலும் இருந்தால், அவர் தன் 36 வயதிற்குப்பிறகு வசதியான வாழ்க்கை வாழ்வார்.

லக்னத்தில் ராகு, 3-ல் சூரியன், 6-ல் சனி, 12-ல் சந்திரன் இருந்தால், அவரின் முற்பகுதி வாழ்க்கை யில் நிறைய கஷ்டங்களைச் சந்திக்க வேண்டி யிருக்கும். பிற்பகுதி நன்றாக இருக்கும்.

லக்னத்தில் நீச குரு, 2-ல் சனி, 3-ல் கேது இருந்தால், அவர் ஆரம்பகட்டத்தில் ஏராள மான சிரமங்களைச் சந்தித்திருப்பார். 35 வயதிற் குப்பிறகு வசதி நிறைந்த வாழ்க்கை அமையும்.

2-ஆவது வீட்டில் குரு, சனி, 3-ல் கேது, 4-ல் சந்திரன், 9-ல் ராகு, 10-ல் சுக்கிரன், 11-ல் சூரியன் இருந்தால், அவர் பல தொழில்களைச் செய்வார். ஆனால் 35 வயதிற்குப்பிறகுதான் அவர் பெயர், புகழுடன் வசதியான வாழ்க்கையை வாழமுடியும்.

பரிகாரங்கள்

சிரமங்களை அனுபவிப் பவர்கள், உயர்வு கிடைக் காமல் இருப்பவர்கள் செய்ய வேண்டியவை...

தெற்கில் தலைவைத்துப் படுக்கவேண்டும்.

தினமும் அரசமரம் அல்லது ஆலமரத்திற்கு நீர் விடவேண்டும்.

ஆஞ்சனேயரை தினமும் வழிபடவேண்டும்.

வீட்டின் வடக்கு, வடகிழக்கு திசைகள் சுத்தமாக இருக்கவேண்டும்.

வீட்டில் பச்சை, சிவப்பு, நீலம் ஆகிய வண்ணங்கள் இருக்கக்கூடாது.

தினமும் ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரம் படிக்கவேண்டும்.

9-க்கு அதிபதியின் ரத்தினத்தை அணியலாம்.

வீட்டிலிருக்கும் வயது மூத்தவர்களுடன் சண்டை போடக்கூடாது.

செல்: 98401 11534