Advertisment

யாருக்கு திருமணப் பொருத்தம் பார்க்கத் தேவையில்லை? -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி

/idhalgal/balajothidam/who-doesnt-need-marriage-match-prasanna-astrologer-i-anandhi

வ்வொருவருடைய வாழ்க்கையிலும் மிக அவசிய மான ஒரு திருப்பமாகவும், ஆனந்தத்தை எதிர்நோக்கும் ஆரம்ப நிகழ்ச்சியாகவும் அமைவது திருமணம்.

Advertisment

அதனால்தான் இந்த நிகழ்வை "திருமணம்' என்று சொல்கிறார் கள். கடவுள்களின் திருமணத் தைக்கூட திருக்கல்யாணம் என்றுதான் அழைக்கிறோம். இத்தகைய சிறப்புவாய்ந்த நிகழ்வு மனிதர்களுக்கு விசேஷம் நிறைந்ததாக அமைய வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பம்.

உறுதியான திருமண வாழ்க்கை அமைய சாஸ்திரங் களில் கூறப்பட்ட உபாயம்தான் திருமணப் பொருத்தம்.

ஒரு ஆணையும் பெண்ணை யும் திருமண பந்தத்தில் இணைப்பதற்குமுன் இருவரு டைய ஜாதகங்களையும் ஜோதிடரிடம் காட்டுவது சம்பிரதாயம். அந்த ஜோதிடர் விவாகப் பொருத்தம் எப்படியிருக்கிறது என்பதை அலசிப் பார்த்து சேர்க்க லாம் அல்லது சேர்க்கக்கூடா தென்று வெளிப்படையாகச் சொல்லிவிடுவார்கள். கிரகங்களும் நட்சத்திரங்களும் என்ன கூறுகிறதோ அதை அப்படியே கூறிவிடுவார் கள். அத

வ்வொருவருடைய வாழ்க்கையிலும் மிக அவசிய மான ஒரு திருப்பமாகவும், ஆனந்தத்தை எதிர்நோக்கும் ஆரம்ப நிகழ்ச்சியாகவும் அமைவது திருமணம்.

Advertisment

அதனால்தான் இந்த நிகழ்வை "திருமணம்' என்று சொல்கிறார் கள். கடவுள்களின் திருமணத் தைக்கூட திருக்கல்யாணம் என்றுதான் அழைக்கிறோம். இத்தகைய சிறப்புவாய்ந்த நிகழ்வு மனிதர்களுக்கு விசேஷம் நிறைந்ததாக அமைய வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பம்.

உறுதியான திருமண வாழ்க்கை அமைய சாஸ்திரங் களில் கூறப்பட்ட உபாயம்தான் திருமணப் பொருத்தம்.

ஒரு ஆணையும் பெண்ணை யும் திருமண பந்தத்தில் இணைப்பதற்குமுன் இருவரு டைய ஜாதகங்களையும் ஜோதிடரிடம் காட்டுவது சம்பிரதாயம். அந்த ஜோதிடர் விவாகப் பொருத்தம் எப்படியிருக்கிறது என்பதை அலசிப் பார்த்து சேர்க்க லாம் அல்லது சேர்க்கக்கூடா தென்று வெளிப்படையாகச் சொல்லிவிடுவார்கள். கிரகங்களும் நட்சத்திரங்களும் என்ன கூறுகிறதோ அதை அப்படியே கூறிவிடுவார் கள். அதன்படி திருமண விஷயத்தைப் பெற்றோர் முடிவுசெய்வார்கள்.

Advertisment

திருமணம் ஆயிரம் காலத்துப் பயிராக நிலைத்து நின்றது அந்தக் காலம். இந்தக் காலத்தில் திருமணப் பொருத்தம் பார்க்கவேண்டுமென்று ஒரு பிரிவினர் விரும்புகின்றனர். சிலர் பார்க்க விரும்புவதில்லை.

அப்படிப் பொருத்தம் பார்த்தாலும் ஆண்வீட்டு ஜோதிடரும், பெண்வீட்டு ஜோதிடரும் கூறும் பதில்கள் முரண்படாகவே இருக்கின்றன. நம் முன்னோர்கள் பொருத்தம் பார்த்துதான் திருமணம் செய்தார்கள் என்பதற்கு கருட புராணத்தில் சான்றுகள் உள்ளன.

dd

முற்காலத்தில் ஊருக்கு ஒரு ஜோதிடர் இருந்தார். தற்போது தெருவுக்குப் பத்து ஜோதிடர்கள் இருக்கிறார்கள். எப்படிப் பொருத்தம் பார்த்தாலும் பல திருமணங்கள் தோல்வியில் முடிவதால், திருமணப் பொருத்ததில் பலர் மன நிறைவடைவதில்லை. அல்லது பொருத்தம் பார்க்க முன்வருவதில்லை. இது ஒருபுறம் இருக்க, சிலவகைத் திருமணங் களுக்கு பொருத்தம் பார்க்கவேண்டிய அவசியமில்லை என்று வலியுறுத்தப்படு கிறது. எந்த அறிமுகமும் இல்லாத வதுவுக்கும் வரனுக்கும்தான் பொருத்தம் பார்க்கவேண்டும். ஏதாவதொரு வகையில் வரனும் வதுவும் ஒருவரையொருவர் அறிந்தவர்களாக இருந்தால் பொருத்தம் பார்க்கத் தேவையில்லை என்று நமது ஜோதிட முன்னோடிகள் கூறியுள்ளனர். அதன்படி கீழ்க்கண்ட திருமணங்களுக்குப் பொருத்தம் பார்க்கத் தேவையில்லை

1. உறவில் திருமணம்

முறைப்பண்ணும் முறைப்பையனும் திருமணம் செய்துகொள்வதற்கு ஜாதகப் பொருத்தம் தேவையில்லை.

2. கர்ப்ப நிச்சயம்

குழந்தை தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போதே, அக்குழந்தை பெண் ணாய்ப் பிறந்தால் இன்னார் மகனுக்குத் திருமணம் செய்து வைப்பேன் எனவும்; ஆணாகப் பிறந்தால் இன்னாருக்குப் பிறக்கும் மகளுக்குத் திருமணம் செய்து வைப்பேன் எனவும் நிச்சயிப்பது கர்ப்ப நிச்சயம் எனப்படும்.

3. காந்தர்வத் திருமணம்

காந்தர்வத் திருமணம் எனப்படும் காதல் திருமணத்திற்குப் பொருத்தம் பார்க்கத் தேவையில்லை.

4. தெய்வ நிச்சயம்

யாருக்காவது தெய்வ அருள் வந்து, "இன்னார் மகன் இன்னார் மகளைத் திருமணம் செய்துகொள்ளவேண்டும்' என அருள்வாக்கு கூறப் படும் தெய்வ நிச்சயத்திற்குப் பொருத்தம் பார்க்கவேண்டிய அவசியம் கிடையாது.

5. குரு நிச்சயம்

ஆன்மிக குரு ஒருவர் ஆண்- பெண் இருவரையும் அழைத்து திருமணம் செய்துகொள்ளும்படி ஆசிர்வதித்தால் பொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்துகொள்ளலாம்.

6. சுப சகுனம்

வது- வரன் இருவரின் சந்திப்பு நிகழும் போதும் சுப சகுனங்கள் தோன்றினால் பொருத்தம் பார்க்காமலேயே திருமணம் செய்யலாம்.

7. மனப் பொருத்தம்

வது- வரன் இருவருக்கும் பூரண மனப் பொருத்தம் இருந்தால் ஜாதகப் பொருத்தம் பார்க்கத் தேவையில்லை.

8. ஆதிக்க பலமுள்ள நட்சத்திரம்

மிருகசீரிடம், மகம், சுவாதி, அனுஷம் ஆகிய நான்கும் ஆதிக்க பலமுள்ள நட்சத்திரங்களாகும். இந்த நட்சத்திரங்களில் ஒன்று பெண் அல்லது ஆணின் ஜென்ம நட்சத்திரமாக இருந்தால் பொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்யலாம்.

கடந்த நூற்றாண்டுவரை இந்தியப் பெண் களுக்கு எந்த சுதந்திரமும் கிடையாது. பெண்ணானவள் முழுக்க முழுக்க ஆணைச் சார்ந்துவாழும் சூழ்நிலை இருந்தது. ஒரு ஆண் தன் மனைவியை எளிதில் உதறிவிட்டு வேறு பெண்ணை சேர்த்துக்கொள்ளும் வழக்கம் சாதாரணமாக இருந்துவந்தது. இதனால் பெண்ணின் வாழ்க்கைக்கு உத்திர வாதம் இல்லாத சூழ்நிலை நிலவியது. இதனால் பெண்ணைப் பெற்றவர்கள் தங்கள் மகளைக் கைப்பிடிப்பவன் தன் மகளுடன் எல்லாவிதத்திலும் இணக்க முடன் நடந்து கொள்வானா? தன் பெண் ணுக்கு உறுதுணையாக இருப்பானா? எந்த சூழ்நிலையிலும் தன் மகளைக் கைவிடாமல் இருப்பானா? தன் மகளின் விருப்பங்களைப் பூர்த்தி செய்வானா என்பதுபோன்ற வினாக்களுக்கு விடை காண வழிமுறைகளைத் தேடினார்கள். அதற்காக முன்னோர்கள் கண்டுபிடித்த வழிமுறைதான் திருமணப் பொருத்தமாகும். எனவே முறையான திருமணப் பொருத்தம் பல சூழ்நிலைகளில் தம்பதிகளுக்குத் தேவை.

செல்: 98652 20406

bala041122
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe