Advertisment

வட்டித் தொழில் யாருக்கு நன்மை தரும்? -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி

/idhalgal/balajothidam/who-benefits-usury-business-prasanna-astrologer-i-anandhi

ரு தனி மனிதனின் வாழ்வாதாரத்தை நிர்ணயம் செய்வதில் பொருளாதாரத்தின் பங்கு அளப்பரியது. ஆள்பாதி, ஆடை பாதி என்பதுபோல, ஒரு மனிதனின் சமுதாய அங்கீகாரத்தை நிர்ணயம்செய்வது அவரவரின் தொழிலே. உத்தியோகமோ, தொழிலிலோ அவரவரின் கர்மவினைப்படியே அமையும். நவீன யுகத்தில் "லேட்டஸ்ட் டிரெண்டிங்'கான தொழில்கள் பல இருந்தாலும், வட்டித் தொழிலுக்கென்று தனி மவுசு உள்ளதை யாராலும் மறுக்கமுடியாது. இதை நகைச்சுவையாக பல திரைப்படங்களில் சித்தரித்துள்ளதை நாமும் அறிவோம்.

Advertisment

அதாவது பிச்சை எடுப்பவர்கூட மிகப்பெரிய வங்கியில் பணத்தை டெபாசிட் செய்வது, மிகப்பெரிய பணத்தை வட்டிக்கு விட்டு வரவு- செலவு செய்வது போன்றவற்றைப் பார்த்திருப்போம். வட்டித் தொழிலை மூன்றாக வகைப்படுத்தலாம்.

1. வங்கிகள்

வங்கிகளின் பெரும்பான்மையாக முதலீடு என்பது பங்குகளாகவே இருக்கும். வங்கிகளின் இரண்டு முக்கியமான வேலைகள் டெபாசிட் வாங்குவது மற்றும் கடன் கொடுப்பது.

கடன் வசூல் செய்த பணத்திற்கும், டெபாசிட் திரும்பக் கொடுக்கும் பணத்துக்குமுள்ள வித்தியாசம்தான

ரு தனி மனிதனின் வாழ்வாதாரத்தை நிர்ணயம் செய்வதில் பொருளாதாரத்தின் பங்கு அளப்பரியது. ஆள்பாதி, ஆடை பாதி என்பதுபோல, ஒரு மனிதனின் சமுதாய அங்கீகாரத்தை நிர்ணயம்செய்வது அவரவரின் தொழிலே. உத்தியோகமோ, தொழிலிலோ அவரவரின் கர்மவினைப்படியே அமையும். நவீன யுகத்தில் "லேட்டஸ்ட் டிரெண்டிங்'கான தொழில்கள் பல இருந்தாலும், வட்டித் தொழிலுக்கென்று தனி மவுசு உள்ளதை யாராலும் மறுக்கமுடியாது. இதை நகைச்சுவையாக பல திரைப்படங்களில் சித்தரித்துள்ளதை நாமும் அறிவோம்.

Advertisment

அதாவது பிச்சை எடுப்பவர்கூட மிகப்பெரிய வங்கியில் பணத்தை டெபாசிட் செய்வது, மிகப்பெரிய பணத்தை வட்டிக்கு விட்டு வரவு- செலவு செய்வது போன்றவற்றைப் பார்த்திருப்போம். வட்டித் தொழிலை மூன்றாக வகைப்படுத்தலாம்.

1. வங்கிகள்

வங்கிகளின் பெரும்பான்மையாக முதலீடு என்பது பங்குகளாகவே இருக்கும். வங்கிகளின் இரண்டு முக்கியமான வேலைகள் டெபாசிட் வாங்குவது மற்றும் கடன் கொடுப்பது.

கடன் வசூல் செய்த பணத்திற்கும், டெபாசிட் திரும்பக் கொடுக்கும் பணத்துக்குமுள்ள வித்தியாசம்தான் வங்கிகளுக்கான லாபம். இதைத்தவிர வங்கிகளில் நடக்கும் பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்களும் வங்கிகளுக்கு லாபமாகக் கிடைக்கிறது. முறையாக பதிவு செய்யப்பட்ட வங்கிகள் தங்களது பங்குகளை உலகச் சந்தையில் விற்கமுடியும்.

Advertisment

"ரெப்போ' விகிதத்திற்கேற்ப பங்குகளின் மதிப்பில் ஏற்ற- இறக் கம் இருக்கும். வங்கிகளில் பணம் பெறுதல், கடன் கொடுத்தல் ஆகியவற்றிற்கு முறையான சட்டதிட்டம் உண்டு. வட்டி விகிதமும் சட்டதிட்டத்திற்குக் கட்டுப்பட்டிருக்கும். அரசுடைமை வங்கிகளில் வாராக்கடன்கள் அதிகமாக இருக்கும். தனியார் வங்கிகளின் வாராக் கடன்கள் சற்று குறைவாக இருக்கும். தனியார் வங்கிகளின் பவுண்டர்களின் ஜாதகத்தில் 1, 2, 9, 10, 11-ஆம் பாவகத்திற்கு குரு, ராகு சம்பந்தமிருக்கும்.

dd

2. நிதி நிறுவனங்கள்

நிதி நிறுவனம் என்பது அரசு அல்லாத தனி நபர்கள் அல்லது பங்குதாரர்கள் சிலர் சேர்ந்து நடத்தும் நிறுவனம். தனியார் நிறுவனம் தனது பங்குகளை தேசிய பங்குச்சந்தையில் வியாபாரம் செய்ய இயலாது. பொதுவாக தனியார் நிறுவனங்கள் பொது நிறுவனங்களைக் காட்டிலும் குறைந்தே காணப்பட்டாலும், உலகப் பொருளாதாரத்தில் தனியார் நிறுவனங் களின் பங்கீடு மிகவும் முக்கியமானது. இவர் களுக்கு முறையான சட்ட திட்டங்கள் இருந் தாலும், வட்டி விகிதம் வங்கிகளைவிட அதிக மாகவே இருக்கும். வாராக்கடன்களின் விகிதமும் அதிகமாகவே இருக்கும்.

இதில் சேமிக்கும் பணத்திற்கு எந்த உத்தர வாதமும் கிடையாது. பெரும்பாலும் இவர்கள் ஏலச்சீட்டு நடத்துவது, அடமானத்தின் பேரில் ஃபைனான்ஸ் கொடுப்பது போன்றவையாக இருக்கும். இவர்களின் ஜாதகத்தில் 2, 6, 10-ஆம் பாவகத்திற்கு குரு, ராகு சம்பந்தமிருக்கும்.

3. முறையற்ற கொடுக்கல்- வாங்கல்

மீட்டர் வட்டி, கந்து வட்டி, ஏலச்சீட்டு, ஒருவரிடம் குறைந்த வட்டிக்கு பணம் வாங்கி அதிக வட்டிக்குக் கடன்கொடுப்பது, ரேஷன் கார்டு, வண்டி ஆர்.சி புக்மீது கடன் பெறுவது, நண்பர்கள்மூலம் குழுக்களாக ஏலச்சீட்டு நடத்துவது என்று முறையற்ற கொடுக்கல்- வாங்கல் இருக்கும். இதில் வாராக்கடன்களின் விகிதம் அதிகம்.

பல இடங்களில் வட்டிக்குக் கொடுத்தவர், அசலையும் வட்டியையும் வாங்கமுடியாமல், வட்டிக்கு வாங்கியவரோடு கட்டிப்புரண்டு சண்டைபோடுவார்கள். அல்லது பணம் பெற்றவர்களை மிரட்டி சித்திரவதை செய்வார்கள்.

இவர்களின் ஜாதகக்தில் குரு- ராகு, குரு- கேது சம்பந்தம் 2 , 6, 8-ஆம் பாவகத்துடன் இருக்கும்.

மேலே கூறிய மூன்று நிலைகளிலும் குரு- ராகு, குரு- கேது போன்ற கிரகங்களின் சம்பந்தமே, ஒருவரை வட்டித் தொழிலில் ஈடுபடவைக்கும் பிரதான கிரக அமைப்பாகும். தசாபுக்திக்கேற்ப தொழிலில் கிடைக்கும் லாபம் அல்லது நட்டம் இருக்கும்.

வட்டித் தொழில் யாருக்கு நன்மைதரும்?

தன காரகரான குருவே ஒரு ஜாதகரின் பொருளாதாரத்தை நிர்ணயம் செய்பவர். பொதுவாக குரு- ராகு, குரு- கேது சம்பந்த மில்லாத வட்டித் தொழில் கிடையாது.

குரு, ராகுவை நோக்கிச் செல்பவர்கள் அசலை பெரிய அளவில் இழக்கிறார்கள். குரு கேதுவை நோக்கிச் சென்றால் முதலில் வட்டி வாங்கி வாழ்கிறார்கள். குறுகிய காலத் திற்குப்பிறகு வட்டிக்கு வாங்கி வாழ்க்கையை நடத்துகிறார்கள். குரு, ராகு- கேதுவின் பிடியில் இருப்பவர்களின் பணம் பாம்பு வாயில் சென்ற தவளைதான். அதேநேரத்தில் தன, லாப பாவகங்களான 2, 10, 11-ஆம் அதிபதிகள் சுபவலுப் பெற்றவர்களின் பணம் கடலில் கரைத்தாலும் விருட்சமாக வளரும். 2, 10, 11-ஆம் அதிபதிகள் 6, 8, 12-ஆம் பாவகங் களுடன் சம்பந்தம் பெறாதவரை வட்டித் தொழில் நல்ல வருமானம் தரும். அதேபோல் 2, 10, 11-ஆம் அதிபதிக்கும், குருவுக்கும் வலுப்பெற்ற செவ்வாய் சம்பந்தமிருந்தால் வட்டித் தொழிலில் நிலையான- நிரந்தரமான வருமானமுண்டு. சுருக்கமாக, குரு வலுத்து ராகு- கேது பலம்குறைந்தவர்களுக்கு வட்டித் தொழில்மூலம் வருமானம் பெருகும்.

வட்டித் தொழில் செய்யலாமா?

இயலாதவர்களைப் பணத்திற்காகத் துன்புறுத்தி நோகடிப்பதை எந்த மதமும் அங்கீ கரிக்கவில்லை. அதேபோல் அடாவடித்தனமாக வட்டித் தொழில் செய்பவர்களின் வாரிசுகள் கிரகண தோஷத்தால் பாதித்து முன்னேற்றமில்லாமல் வாழ்கிறார்கள் அல்லது குழந்தை பேறில்லாமல் வம்சம் முடிவடைகிறது. எனவே சிந்தித்து செயல்படுவது நல்லது.

பரிகாரம்

வட்டித் தொழிலில் வாராக்கடனால் துயரப் படுபவர்கள் வியாழக் கிழமை ராகு காலத்தில் துர்க்கை அல்லது காளியை வழிபடவேண்டும்.

செல்: 98652 20406

bala200123
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe