பூசம், அனுஷம், உத்திரட்டாதி மேற்கண்ட நட்சத்திரங்களின் சாரநாதர் சனி. எனவே, இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர் களுக்கு ஆரம்ப தசை சனி தசையாக இருக்கும்.

இதன் காலம் 19 வருடங்கள். இந்த நட்சத்திரங்களின் ஆரம்ப காலத்தில் பிறந்திருந்தால், பிறந்த நேரப்படி ஏறக்குறைய 19 வருடங்கள் தசா இருப்பு அமையும். இரண்டாம் பாதத்தில் பிறந்திருந்தால் 14 வருட அளவிலும், மூன்றாம் பாதத்தில் பிறந்திருந்தால் ஒன்பது வருட அளவிலும், நான்காம் பாதத்தில் பிறந்திருந் தால் ஏறக்குறைய நான்கே முக்கால் வருட கால அளவிலும் தசை இருப்பு இருக்கும்.

அடுத்து, புதன் தசை 17 வருடங்கள், கேது தசை ஏழு வருடங்கள் சென்றபின், சுக்கிர தசை ஆரம்பிக்கும். எனவே, மேற்கண்ட நட்சத்திரக்காரர்களுக்கு சுக்கிர தசை விருப்ப ஓய்வு அல்லது இயல்பான ஓய்வுக்காலமாக அமையும். சுக்கிர தசையின் காலம் 20 வருடங்கள்.

பூச நட்சத்திரம் கடக ராசியிலும், அனுஷம் விருச்சிக ராசியிலும், உத்திரட்டாதி மீன ராசியிலும் அமையும். இவர்களின் ஓய்வுக்கால தசா அதிபதி சுக்கிரன் உச்சமாக இருப்பின் ரிடையர்மென்ட் பீரியடை ரிலாக்ஸ்டாகக் கழிக்கலாம். மாறாக, சுக்கிரன் நீசமானால் இவர்கள் பாடு திண்டாட்டம்தான். 6, 8, 12-ல் மறைந்தாலும் நல்லதல்ல.

Advertisment

மேற்கண்ட நட்சத்திரங்களில் பிறந்த வர்கள் அனைவரும் ஒரே லக்னத்தில் பிறந் திருக்க வாய்ப்பில்லை. எனவே, 12 லக்கனத்தில் பிறந்த சனி சார ஜாதகர்களின் ஓய்வுக்கால வாழ்க்கையைக் காண்போம்.

மேஷம்: இவர்களுக்கு ஓய்வுப் பணம் வந்தவுடனே ஓட்டல் அல்லது சூப்பர் மார்க்கெட், அழகுப் பொருட்கள் விற்பனைக் கடை என சுக்கிரன் குறிப்பிடும் வியா பாரத்தை ஆரம்பித்துவிடுவார்கள். குடும்பத் தாரும் இவர்களோடு தோள் கொடுத்துப் பணியாற்றுவர். சிலர் நல்ல வட்டிவரும் வழியில் முதலீடும் செய்துவிடுவர். இவர்கள் கடையில் நிறைய இளம்பெண்கள் வேலை செய்வர். ஏதோ ஓய்வுக்காலம் கலர்ஃபுல்லாக ஓடும். ஒருசிலருக்கு உடம்பு ஒத்துழையாமை செய்யும்.

ரிஷபம்: இவர்கள் இவர்கள் ஓய்வுபெற்ற வுடன் அடுத்த வேலையில் சேர்ந்துவிடு வார்கள். அது ஏற்கெனவே வேலை பார்த்த இடமாகக்கூட இருக்கலாம். வேலை இல்லா விட்டால் நோய்ப் பிரச்சினை தாக்கும் நிலை ஏற்படும்.

Advertisment

மிதுனம்: ஓய்வுக்காலப் பணப்பலன் கையில் கிடைத்தவுடன், பிள்ளைகள் விஷயமாக உடனே செலவு வந்து நிற்கும்.

அநேகமாக அது அவர்களின் வெளிநாட்டுப் பயணமாக அமையும். அவ்வாறு இல்லாவிடில், ஜாதகரின் ஆரோக்கியம் சம்பந்தமான செலவு செய்வார்கள். இதெல் லாம் இல்லாமல் சில அயோக்கியக் கிழடுகள் சின்னப் பெண்ணை இழுத்துக்கொண்டு ஓடிவிடுவர். கையில் பணமிருக் கிறதே... யாரும் இவர்களைக் கேள்வி கேட்கமுடியாது.

கடகம்: இவர்கள் தங்கள் ஓய்வுக்காலத்தில் அழகான மாளிகை ஒன்றில் வாழவேண்டும் என்னும் பேராசை கொண்டிருப்பார்கள்.

bb

அதுபோலவே, பணம் வந்தவுடன் இருக்கிற வீட்டைப் புதுப்பிப்பார்கள் அல்லது புதிய மாளிகை வாங்கிவிடுவார்கள். சிலர் ஹோட்டல், விடுதிகளில் பங்கேற்பார்கள். சிலர் பிறந்த ஊர் சென்று வேளாண்மை செய்யத் தொடங்குவார்கள்.

சிம்மம்: இவர்கள் ஓய்வுபெற்றவுடன் கலை சம்பந்தமான விஷயத்தில் ஈடுபடுத்திக் கொள்வார்கள். தொலைத்தொடர்பு அல்லது கைபேசிக்கடை வைத்தல், சூப்பர் மார்க்கெட் என ஓய்வுக்காலத்தைப் பரபரப்பாகக் கடப்பார்கள்.

கன்னி: குடும்பத்தோடு ஆன்மிகப் பயணம், உல்லாசப் பயணம் என குதூகலிப் பார்கள். பணத்தை நம்பிக்கையான இடத்தில் முதலீடும் செய்துவிடுவார்கள்.

சிலர் வாகனம், வேளாண்மை, அலங்காரம் சம்பந்தமான கல்வி அல்லது ஆராய்ச்சியில் ஈடுபடுவர்.

துலாம்: இவர்களுக்கு ஓய்வுக்கால தசாநாதன் சுக்கிரன் 1, 8-ஆம் அதிபதி. எங்கிருந் தாலும் துன்பம், அவமானம், அவச்சொல் தான். அதனைத் தெரிந்து, பழகிய இடத் திலிருந்தே எதிர்கொள்வதுதான் புத்திசாலித் தனம். சிலசமயம் பெண்களால் அவமானப் பட்டு, அவர்களே வெளியேற்றவும் கூடும். எது எப்படியாயினும், இவர்கள் விருப்ப ஓய்வு கேட்பது நல்லதல்ல.

விருச்சிகம்: இவர்களில் தெய்வத்துக்கு பயந்த சிலர் ஓய்வுப்பணம் வந்தவுடன், தங்கள் பெயரிலும் மனைவி பெயரிலும் நன்கு முதலீடு செய்துவிடுவார்கள். ஏனெனில், எந்த நேரமும் ஏதேனும் நேர்ந்துவிடலாம் என்னும் உள்ளுணர்வு காரணமாகப் பணத்தைப் பத்திரப்படுத்துவார்கள். வேறுசிலர், "கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா...? இல்ல.. ஓடிப்போயி கல்யாணந் தான் கட்டிக்கலாமா...' என்னும்ரீதியில் குத்தாட்டம் ஆடுவர். எல்லாவற்றையும் யாருக்கோ வாரிக்கொடுத்துவிட்டு ஏதுமில் லாமல் நிற்பர்.

தனுசு: இவர்களில் ஒருசிலருக்கு சர்க்கரை நோய் அதிகமாகி, அதன்விளைவாக சிறிது இடைஞ்சல் ஏற்படும். வேறுசிலர் ஓய்வு நேரத்தை விருந்து, விழாக்கள், தேர்தலில் வெற்றி, நினைத்தவை எல்லாவற்றையும் அனுபவித்தல், வெளிநாடு சென்று மகிழ்ச்சி யாக இருத்தல் என ஓய்வுக்காலத்தைக் கொண்டாட்டமாக அனுபவிப்பர்.

மகரம்: சிலர் தங்கள் வாரிசுகள் தொழில் தொடங்க ஓய்வுப்பணத்தைக் கொடுக்க வேண்டிவரும். அது அநேகமாக சுக்கிரனின் காரகத்துவத் தொழில்களாக அமையும். வேறுசிலர் சினிமா, நாடகம், இசை என கலைத்துறையில் பங்கெடுத்துப் பெருமை கொள்வர். வேறுசிலர் நன்றாக மதுவைக் குடித்துவிட்டுக் கும்மாளமிடுவர்.

கும்பம்: இவர்களில் பலர் பிறந்த இடம் சென்று வீடுவாசல், வயல் என வாங்கி நன்கு செட்டிலாகிவிடுவார்கள். சிலர் வெளிநாடு செல்வர். சிலர் கல்வியில் நாட்டம் கொள்வர்.

அல்லது தங்களது பணிக்கால அறிவை அடுத்தவருக்குப் போதிக்கும் ஆசிரியராகி விடுவர்.

மீனம்: இவர்களின் ஓய்வுக்கால தசாநாதன் சுக்கிரன் 3, 8-ன் அதிபதி. எனவே இவர்கள் விருப்ப ஓய்வு வாங்கக்கூடாது. ஏனெனில், இவர்கள் வாகன விபத்து போன்றவற்றை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

அப்போது வேலை பார்த்துக்கொண்டிருந் தால் ஏதோ ஒருவிதத்தில் உதவி கிடைக்கும். ஓய்வு பெற்றுவிட்டால் யாரும் சீண்டமாட்டார்கள். எனவே, முடிந்தமட்டும் ஓய்வு பெறுவதைத் தவிர்ப்பது நன்று.

இவர்களின் ஓய்வுக்கால தசாநாதன் சுக்கிரனைப் பிரீதிசெய்ய பெருமாள் கோவில்களில் அமர்ந்திருக்கும் மகாலட்சுமித் தாயாரை நன்கு வழிபடவும். ஓய்வுக்காலத்தில் அதிக செலவில் தானம் கொடுக்க இயலாது. எனவே கொஞ்சம் சர்க்கரையை தானம் கொடுங்கள். உங்களுக்குத் தெரிந்த வட்டாரத்தில் பெண் பிள்ளைகள் திருமணத்திற்குக் காத்திருந்தால் கைகாட்டி உதவுங்கள். திருமண வீட்டு விசேஷங்களில் முடிந்த உதவி செய்யுங்கள்.

(தொடரும்)

செல்: 94449 61845