யில்யம், கேட்டை, ரேவதி மேற்கண்டவை புதன் சார நட்சத்திரங்கள். எனவே, இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ஆரம்பகால தசா இருப்பு புதன் தசையாக இருக்கும். இதன் காலம் 17 வருடங்கள்.

இவர்கள் இந்த நட்சத்திரங்களின் ஆரம்பத்தில் பிறந்திருந்தால் 17 வருட புதன் தசையும்; இரண்டாம் பாதத்தில் பிறந்திருந்தால் ஏறக்குறைய பன்னிரண்டு வருடங்களும்; மூன்றாம் பாதத்தில் பிறந்திருந்தால் எட்டரை வருடங்களும்; நான்காம் பாதத்தில் பிறந்திருந்தால் நான்கரை வருடங்களும் புதன் தசை இருப்பு அமையும்.

தொடர்ந்து, கேது தசை ஏழு வருடங்கள், சுக்கிரதசை 20 வருடங்கள், சூரிய தசை ஆறு வருடங்கள் எனக் கடக்கும்போது, அடுத்து சந்திர தசை பத்து வருடங்கள் ஆரம்பிக்கும். அது ஐம்பதிலிருந்து அறுபது வயதுவரை ஓரளவு கணக்குக்கு வரும். மேற்கண்ட நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் தங்கள் விருப்ப ஓய்வு அல்லது சாதாரண ஓய்வுக்காலத்தை சந்திர தசையில்தான் எதிர்கொள்வர்.

ஆயில்யம் கடக ராசியிலும், கேட்டை விருச்சிக ராசியிலும், ரேவதி மீன ராசியிலும் அமையும். இந்த சந்திர தசைக்காலம் நல்ல பலன் கொடுக்க, ஜாதகத்தில் சந்திரன் நீசம் பெறா மலிருத்தல் அவசியம்.

Advertisment

மேற்கண்ட நட்சத்திரத்தார் அனைவரும் ஒரே லக்னத்தில் பிறந்திருக்க இயலாது. 12 லக்னங்களிலும் பிறந்திருப்பர். சந்திரன் நீசமாகியிருந் தால் விருப்ப ஓய்வு பெறக்கூடாது. இனி, 12 லக்னத்தினருக்கான பலன் களைக் காண்போம்.

மேஷம்: இவர்கள் ஓய்வுபெற்றவுடன் சுகமாக வசிக்க நல்ல வீடு, நல்ல கட்டில், மெத்தை என வசதியானவற்றை முதலில் வாங்கிவிடுவார்கள். பலர் சொந்த ஊரில் செட்டிலாகிவிடுவார்கள். அங்கு தோட்டம், வயல், கிணறு என முதலீடு செய்து, வேளாண் பணி, தோட்ட வேலை என நிம்மதியாக இருப்பர். சிலர் கடற்கரைக்கு அருகில் வீடு வாங்குவர்.

vrs

Advertisment

ஓய்வுக்காலத்தைப் பயணங்களிலும் பயிர்த் தொழிலிலும் சுறுசுறுப்பாக செலவிடுவர்.

ரிஷபம்: இவர்கள் விருப்ப ஓய்வு பெற்றவுடன், பணத்தை முதலீடு செய்யலாமா- கடை ஆரம்பிக்கலாமா- தொழில் தொடங்கலாமா என மனக்குழப்பம் அடைவர். எனவே, ஓய்வுபெறுவதற்கு முன்பே நன்கு யோசித்து ஒரு தெளிவுக்கு வரவேண்டும். ஓய்வுபெற்றவுடன் இவர்கள் ஒரு வீடும், செல்போனும் வாங்குவது உறுதி. சிலர் இருக்கிற வீட்டை விற்று விட்டு பெரிய வீடு வாங்குவர்.

மிதுனம்: இவர்கள் ஓய்வுப்பணம் வந்த அடுத்த நிமிடம் பணத்தை வட்டிக்கு விட்டுவிடுவார்கள். வங்கியில் டெபாசிட் செய்வார்கள். சிலர் வெள்ளியில் முதலீடு செய்வர். ஏதோ ஒன்று- பணம் வட்டி கொடுக்கிற ஏற்பாடுகளைச் செய்து விட்டுத் தங்கள் பேச்சாற்றல்மூலம் ஓய்வு நேரத்தைப் பயனுள்ளதாகப் பயன் படுத்துவார்கள்.

கடகம்: பிறரைப்போல ஓய்வுபெற்றோமா- ஓரிடத்தில் அமர்ந்து ஓய்வெடுத்தோமா என்ற கதையே இவர்களிடம் கிடையாது. ஓய்வு பெற்ற அடுத்த நாளிலிருந்து ஒரு வேலைக்குச் சென்றுவிடுவார்கள். அல்லது கோவில் சேவை செய்யக் கிளம்பிவிடுவார்கள். அல்லது இனிய பயணங்களால் ஓய்வுக்காலத்தை அர்த்த முள்ளதாக மாற்றிக்கொள்வார்கள்.

சிம்மம்: இந்த லக்னத்திற்கு சந்திர தசை என்பது விரயாதிபதி தசை. அதனால், இவர்கள் ஓய்வுக்காலத்தில் ஓய்வின்றி சுற்றுவார்கள். அல்லது வருகிற பணத்தை எல்லாம் மொத்தமாக செலவழித்துவிடுவார்கள். எனவே பணம் வந்தவுடன், எளிதில் எடுக்கமுடியாத அளவுக்கு டெபாசிட் செய்துவிடவேண்டும். நன்கு யோசித்து விருப்ப ஓய்வுக்கு மனு கொடுக்க வேண்டும். பொதுவாக விருப்ப ஓய்வு இவர்களுக்கு சரிவராது.

கன்னி: இவர்கள் ஓய்வுபெறுவதற்கு முன்பே தங்கள் ஆசைகள், கற்பனைகள் என எல்லாவற்றையும் எழுதி வைத்துக்கொள் வார்கள். ஓய்வுபெற்றவுடன் அனைத்தையும் டிக் செய்து நிறைவேற்றுவார்கள். நண்பர்களுடன் சேர்ந்து புதிய பாதை தேடுவார்கள். சிலர் தர்மமாகவும், சிலர் அதர்மமாகவும் தேடுவர். சிலர் தேர்தல்மூலம் நன்கு பணம் சம்பாதிப்பர்.

துலாம்: ஓய்வுபெற்றவுடன் சொந்தத் தொழில் தொடங்கி முதலாளி ஆகிவிடு வார்கள். பெரும்பாலும் அது சந்திரனின் கார கத்துவத் தொழில்களான பால், எண்ணெய், அலுமினியம், அரிசி அல்லது தண்ணீர் ஏஜென்சி என அமையும்.

விருச்சிகம்: ஓய்வுபெற்றவுடன் பேரன், பேத்தியைப் பார்க்க வெளிநாடு செல்வார்கள். புனிதப் பயணம் உண்டு. சிலர் விருப்பமான கல்வி அல்லது ஆராய்ச்சியில் ஈடுபடுவர்.

தனுசு: இவர்களின் ஓய்வுக்கால தசா நாதனான சந்திரன் லக்னத்துக்கு எட்டாம் அதிபதியாவார். எனவே, இவர்கள் விருப்ப ஓய்வு பெறக்கூடாது. இயல்பான ஓய்வுக்காலத் தையும் எச்சரிக்கையாகக் கடக்கவேண்டும்.

இவர்களுக்கு ஞாபகமறதி நோய் வரக்கூடும். அல்லது தண்ணீர் சம்பந்தமான பிரச்சினை ஏற்படலாம்; கவனம் தேவை.

மகரம்: இவர்கள் தங்கள் ஓய்வுக்காலத்தில், யார் என்ன சொல்கிறார்களோ அதன்படியே கேட்டு நடந்துகொள்வர். சிலர் ஒருமுறை கூறியதை அவர்களே மறுமுறை கேட்க மாட்டார்கள். மனம் மாறிக்கொண்டே இருக்கும். புத்தி அலைபாயும். எனவே, மகர லக்னத்தில் விருப்ப ஓய்வு தேவையா என நன்கு யோசித்து முடிவெடுக்கவேண்டும். அதுபோல ஓய்வுபெற்றவுடன் வியாபாரம், தொழில் என ஆரம்பித்துவிடவேண்டாம்.

கும்பம்: சிலர் விருப்ப ஓய்வுபெற்றவுடன் வேறொரு வேலை தேடிக்கொள்வர். சிலருக்கு ரத்தம் சம்பந்தமான நோய்த் தாக்கம் ஏற்பட்டு நிறைய செலவழிந்துவிடும். எனவே, விருப்ப ஓய்வுபெற நன்கு யோசிக்கவும். சிலரால் மட்டுமே ஓய்வுப் பணப்பலனை முதலீடு செய்ய இயலும்.

மீனம்: இவர்கள் ஓய்வுபெற்றவுடன் தங்கள் பிள்ளைகள் நலன், வேலை, தொழில் என பணத்தைக் கொடுத்துவிடுவர். சிலர் ஓய்வு பெற்றவுடன் தங்கள் கலைத்திறமையை வெளிக்கொணரும் முயற்சியில் ஈடுபடுவர். சிலர் பங்கு பத்திரத்தில் முதலீடு செய்வர். சிலர் விளையாடி வெற்றிபெறுவர்.

ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திரக்காரர்களின் ஓய்வுக்காலம் சந்திர தசையாக அமையும். சந்திரன் மிக வேகமான கிரகம். எனவே, இவர்கள் ஓய்வுக்காலத்திலும் ஒரு நிமிடம்கூட ஓய்ந்திராமல் சுறுசுறுப்பாக வேலை செய்வர். ஓய்வுக்காலம் மேலும் சிறக்க திங்கட்கிழமைகளில் அம்பாளை வணங்கவும். இயன்றவரை அரிசி தானம் செய்யலாம். தாங்கள் வேலை செய்த அனுபவத்திற்குத் தகுந்தவாறு குளங்களை செப்பனிடுதல், மழைநீர் சேகரிப்பு, ஆழ்துளைக் கிணறு மேம்பாடு, விவசாய ஆலோசனை, நீரை சிக்கனப் படுத்துதல், கழிவுநீரைத் தூய்மைப்படுத்தி வேறு பயன்பாட்டுக்குத் திருப்பிவிடுதல் என நீராதாரங்கள் சம்பந்தமான சேவை செய் யுங்கள். இது சுற்றியுள்ளவர்களின் மனதைக் குளிரச்செய்து உங்களை ஆரோக்கியமாக வாழவைக்கும்.

(முற்றும்)

செல்: 94449 61845