முன்னோரின் கர்மாவைச் சுமப்பவர்கள் யார்? - பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி

/idhalgal/balajothidam/who-bear-karma-ancestors-prasanna-astrologer-i-anandi

ன்மாவின் பிறப்பிற்குக் காரணமாக அமை வது சஞ்சித கர்மா, ப்ராரப்த கர்மா, ஆகாம்ய கர்மா என்ற மூன்றுவிதமான கர்மவினையின் பிரதி பலிப்பு. இதில் சஞ்சித கர்மா என்பது கரு உருவா கும்போதே உடன் உருவாவது. அதாவது தாய்- தந்தை, முன்னோர்களிடமிருந்தும், ஆத்மா பல ஜென்மங்களில் செய்த பாவ- புண்ணியத்தாலும் இந்தப் பிறவியில் பற்றிக்கொள்ளும் கர்மவினையாகும்.

தந்தை- தாய் என இருவழி முன்னோர்கள்மூலம் கர்மவினை வந்தாலும், தந்தைவழி முன்னோர் கள்மூலம் வரும் கர்மவினைத் தாக்கத்திற்கு வலிமை அதிகம். கர்மா என்றால் வினைப்பயன். ஒருவர் செய்த நல்ல, தீய செயல்களின் பிரதிபலன்.

kk

லக்னத்திற்கு 10-ஆம் இடம் கர்மஸ்தானம். இந்த 10-ஆம் பாவம் ஜாதகரின் பாவ- புண்ணி யங்களைக் குறிக்கும் இடமாகும். காலபுருஷ 10 -ஆம் அதிபதியான சனியே கர்மக்காரகனாவார்.

ஒருவரின் கர்மவினையை முழுமையாக அனுப விக்க உதவுபவர். ஒருவரின் பிறப்பு முதல் இறப்புவரை நடக்கும் எல்லா சம்பவங்களையும் தனக்குள் பதிவு செய்து வைத்து, உரிய காலகட்டத் தில் சுப, அசுபப் பலனை வழங்குபவர். மனி தர்களின் கர்மவினைகள் அனைத்தும் சனி கிரகத்தில்தான் பதிவாகியிருக்கும். முற்பிறவில் செய்த பாவ, புண்ணியங் களுக்கேற்ப பலனைப் பெற்றுத்தரு பவர் சனி பகவான்.

வினைப

வினைப் பதிவிற்கான பலனை நிகழ்த்த உதவுபவர்கள் சனியின் பிரதி நிதியான ராகு- கேதுக்கள். முன்ஜென்மத் தில் ஒருவர்செய்த கர்மா என்னவென் பதை கேது சுட்டிக்காட்டும். முன் ஜென்மத்தில் செய்த கர்மாவுக்கு என்ன பலன் என்பதை ராகு சுட்டிக்காட்டும்.

ஒரு குடும்பத்தில் ஒன்றுக்குமேற் பட்ட ஆண்கள் வாரிசாக இருந்தால் முன்னோர்களின் பாவ- புண்ணியப் பலன் யாருக்கு வரும்? அதை எப்படி அறிவது என்பதே இக்கட்டுரை.

இந்த கலிகாலத்தில் முன்னோர் களின் கர்மவினை யாருக்கு என்ற ஆய்வுக்கு வாய்ப்பே கிடையாது. ஒரு குடும்பத்திற்கே ஒரே குழந்தைதான் வாரிசாக இருக்கும்பட்சத்தில், அந்த ஒரு குழந்தை மட்டுமே அதை அனுப வித்து முன்னோர்களுக்கும், தன் தலை முறையினருக்கும் விமோசனம் பெற்றுத்தர வேண்டும். ஒரு குடும்பத்தில் மூன்று வாரிசுகள் இருந்தால், ஒருவர் நன்றாக இருக்கலாம்; இருவர் நன்றாக இருக்கலாம்; மூவரும் நன்றாக இருக்க லாம் அல்லது ஒருவர் துன்பப்படலாம்; இருவர் துன்பப்படலாம்; மூவரும் துன்பப்படலாம்.

kk

ஒருவரின் மகிழ்சியான, மகிழ்சியற்ற வாழ்வைத் தீர்மானிப்பது பணம் மட்டுமல்ல. வீடுவாசல் இல்லாமல் தெருவோரத்தில் வசிப்பவர்களிடம் இருக்கும் மனநிம்மதிகூட மாளிகையில் வசிப்பவர்களிடம் இல்லை என்பதே இதற்குச் சான்றாகும்.

முன்னோர்களின் முன்வழிக் கர்மாவான சஞ்சித கர்மா, சுபம்- அசுபம் கலந்தே ஒருவரை வந்தடையும். முன்னோர்களின் கர்மவினைத் தாக்கம் யாருக்கு அதிகம் உள்ளது என்பதை உணர்த்தும் கிரக அமைப்புகள்:

✶ லக்னத்தில் சூரியன்.

✶ ஒன்பதில் சூரியன், சனி.

✶ ஒன்பதில் சனி, ராகு- கேது.

✶ 9- ஆம் பாவகத்துடன் சம்பந் தம்பெறும் சூரியன், சனி, ராகு- கேதுக்கள்.

✶ சூரியன் + ராகு, சூரியன் + கேது, சூரியன் + சனி.

✶ சந்திரன் + ராகு, சந்திரன் + கேது, சந்திரன் + சனி போன்ற கிரகச் சேர்க்கைகள்.

கிரகச் சேர்க்கை என்பது இருகிரகங்களின் இணைவு, பார்வை, சாரநாதன் என எந்த வகையில், எந்த பாவகத்துடன் சம்பந்தம் பெற்றாலும் சுப- அசுபப் பலன் நடப்பது உறுதி. இந்த கிரகச் சேர்க்கையால் ஏற்படும் நன்மையைவிட தீமையே மிகுதியாகும். இந்த கிரக சம்பந்தம் இருப்பவரே குடும்ப முன்னோர் களின் கர்மாவைச் சுமப் பவர்கள். குடும்ப பாரத்தை அதிகம் சுமப்பவர்கள். முன்னோர்களின் கர்மாவைக் கழிப் பதற்காகவே உருவான வாரிசுகள் என்றுகூட கூறலாம்.

முன்னோர்வழி சஞ்சித கர்மாவால் ஏற்படும் விளைவுகள்

திருமணத் தடை, குழந்தை பாக் கியமின்மை அல்லது ஆண் வாரிசு இன்மை, கடுமையான பொருளா தார நெருக்கடி, பூர்வீகத்தைவிட்டு வெளியேறுதல், பூர்வீகமே தெரியாமல் போவது, பூர்வீகச்சொத்து அழிந்து போவது, பூர்வீகம் தொடர்பான வழக்குகள், தொடர் துர்மரணம், குடும்பத்தில் ஒற்றுமையின்மை, சண்டைசச்சரவு போன்றவை நிலவும்.

இங்கே உதாரணமாக ஒரு குடும்பத்தின் தந்தை, அவருடைய இரு மகன்கள் ஜாதகம் கொடுக்கப் பட்டுள்ளன.

இதில் தந்தை அமா வாசை கிரகண அமைப் பில் பிறந்துள்ளார். சூரியன், சந்திரன், ராகு- கேது சம்பந்தம் உள்ளது.

முதல் மகன் ஜாதகத்தில் சூரியனுக்கு திரிகோணத் தில் ராகு உள்ளது. இரண்டாவது மகன் பிரதமை திதியில்- அமாவாசைக்கு மறுநாள் பிறந்துள்ளார். இவரும் தந்தையைப்போல் கிரகண அமைப்பில் பிறந்துள்ளார். சூரியன், சந்திரன், ராகு- கேது சம்பந்தம் உள்ளது. இரண்டாவது மகனுக்கு முன்னோர்வழி கர்மா அப்படியே மாறுதலாகி விட்டது. இவர்கள் பூர்வீ கத்தை விட்டு வெளி யேறியவர்கள். குலதெய்வ வழிபாடு கிடையாது. பூர்வீகம் தெரியாது.

கோடான கோடிக்கு தொழில்செய்து மீளமுடியாத அளவுக்குக் கடனில் சிக்கிய வர்கள். இதில் இரண்டாவது மகனுக்கு பாதிப்பு அதிகம். முதல் மகனுக்கு பாதிப்பு குறைவு. அப்படியென்றால் முதல் மகன் பாக்கியவான். இரண்டாவது மகன் பாக்கியக் குறைவானவரா? முதல் மகனுக்கு முன்னோர்வழி சஞ்சித கர்மாவின் பாதிப்பு கிடையாதா என்னும் கேள்வி எழும். இரண்டாவது மகன் இப்பொழுதே பிரச்சினையை அனுப வித்து முடித்துவிடுவார். மூத்த மகனுக்கு சூரியனுக்கு திரிகோணத் தில் ராகு. திரிகோணத்திலுள்ள கிரகம் எதிர்காலத்தில் நடக்கப் போகும் பிரச்சினையை சுட்டிக் காட்டுகிறது.

இளம்வயதில் எதிர்நீச்சல்போட்டு பிரச்சினையை சமாளிக்கும் தெம்பு, தைரியம் இருக்கும். வயதானபிறகு சமாளிக்கமுடியாமல், கர்மாவைக் கழிக்கமுடியாமல் மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும். இதிலிருந்து ஒரு தெளிவு கிடைத்திருக்கும். அதாவது முன்னோர்களின் கர்மவினைத் தாக்கம் எல்லாருக்கும் உண்டு. அதை அனுப விக்கும் காலகட்டத்தில் மாற்றம் இருக்குமேதவிர, யாரும் அனுபவிக் காமல் தப்பிக்கமுடியாது.

பலர்,“ "என் தம்பி நல்லா இருக்கான். நான் சிரமத்துடன் இருக்கிறேன்' என சொல்வதையும், "அண்ணன் நல்லா இருக்கிறான். நான் சுகமாக வாழவில்லை'’’ என சொல்வதையும் கேள்விப்பட்டிருக்கிறோம். ஒரே தாயின் கருவறையில் பிறந்த அனைவருக்குமே நிச்சயம் கர்மப்பலன் முறையாகப் பகிரப்படும். சுய கர்மாவிற் கேற்ப சஞ்சித கர்மாவின் தாக்கத்தில் மாற்றம் இருக்குமேதவிர, பாதிப்பு இல்லாமல் போகாது.

கர்மா எப்படி இயங்குகிறது- கர்மாவிலிருந்து தப்பிக்கும் வழி என்ன என்பதைப் பார்க்கலாம்.

தொடர்ச்சி அடுத்த இதழில்...

செல்: 98652 20406

bala120719
இதையும் படியுங்கள்
Subscribe