பொதுவாக பலரும் எதிலும் தலைமைப் பொறுப்பு வகிக்கவே விரும்பு வர். சிலரோ அத்தகைய வாய்ப்பு கிடைத்தாலும் அதை மறுத்துவிடுகிறார்கள்.
அதற்கு ஜாதகரீதியிலான காரணங்கள் உள்ளன.
ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதி பலவீனமாக இருந்தால், அவர் காரியங்களில் முன்னிற்கத் தயங்குவார். ஏனென்றால், பலவீனமான லக்னா திபதி "நான் இந்த வேலைக்குத் தகுதியானவன் அல்ல' என்று கூறிக்கொண்டே இருக்கும்.
அவருக்கு மனதிற்குள் ஒருவித பயமும் இருந்து கொண்டிருக்கும்.
ஜாதகத்தில் சந்திரன் பலவீனமாக- தேய்பிறைச் சந்திரனாக இருந்தால் அவர் அதிகமாக சிந்திப்பார். எந்த காரியத்தைச் செய்தாலும், அதன் நல்லது, கெட்டது பற்றி எண்ணிப் பார்ப்பார். அதனால் அவருக்கு முழு தைரியம் இருக்காது.
எந்த பொறுப்பில் அமர்வ தற்கும் பயப்படுவார். சிலருக்கு மனநோய் இருக்கும். தூக்கம் சரியாக வராது.
ஜாதகத்தில் செவ்வாய் பலவீனமாக இருந்தால் மனதைரியம் இருக்காது. யாரைச் சந்திப்பதற்கும் பயப்படுவார். எந்த செயலைச் செய்தாலும், பிறரை முன்னால் அமரவைத்து தான் பின்னால் அமர்ந்து ஆதாயத்தை அடையலாம் என்று எண்ணுவார். சிலர் பயணம் செய்யும்போதுகூட தனியே போகாமல், யாரையாவது தன்னுடன் அழைத்துச் செல்வார்கள். அதேபோல வியாபாரம் செய்வதில்கூட யாராவது பங்குதாரர் இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைப்பார்கள். பதவியில் அமரும் சூழல் வந்தால், வேறு யாரையாவது அமரவைத்து தான் பின்னால் இருந்து கொண்டு இயக்கலாம் என்று திட்ட மிடுவார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/guru_21.jpg)
ஒருவர் ஜாதகத்தில் சந்திரனும் செவ்வாயும் நீசமாக இருந்தால், அவருக்கு ஏழரைச்சனி நடக்கும்போது நல்ல வாய்ப்பு வராது. அலைச்சல் அதிகமாக இருக்கும். வெற்றி கிடைக்காது. அதனால் எந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டாலும், பிறருக்கு பதில் கூறவேண்டியதிருக்குமென்று, அந்த பதவியே வேண்டாமென்று கூறிவிடுவார்.
லக்னத்தில் செவ்வாய், புதன் இருந்து சந்திரன் பலவீனமாக இருந்தால், சில நேரங்களில் அந்த ஜாதகர் தேவை யற்றதைப் பேசி எதிர்ப்புகளை ஏற்படுத்திக்கொள்வார். வாய்ப்பு வரும்போது, நாம் எதையாவது பேசி பிரச்சினை உண்டாகிவிடுமோ என்று அஞ்சி அதை நிராகரிப்பார்கள்.
ஜாதகத்தில் சூரியன் பலவீனமாக இருந்து, 6-ல் சந்திரன் இருந்தால், அவர் பல தவறுகளைச் செய்வார். அது அனைவருக்கும் தெரிந்துவிடும். அதனால் வாய்ப்பு வரும்போது, நாம் தவறு செய்து அது பலருக்கும் தெரிந்துவிடுமோ என்று பயந்து, அந்த பதவியில் அமர மறுத்துவிடுவார்.
லக்னாதிபதி அஸ்தமனமாக இருந்து, 9-ஆவது வீட்டில் ராகு இருந்தால், அவர் எந்த காரியத்தைச் செய்தாலும் அதிகமாக சிந்திப் பார். பயம் காரணமாக எந்த செயலிலும் முன்னிற்க மாட்டார். மேடையில் அமர்வ தற்கும் பயப்படுவார்.
ஜாதகத்தில் 12-ல் சந்திரன், 4-ல் கேது, 7-ல் செவ்வாய் இருந்தால் அவர் அதிகமாகப் பேசுவார். ஒரு காரியம் நடக்கும்போது, அந்த இடத்தில் அவர் இருக்கமாட்டார். தன் வேலையை வேறுயாராவது செய்யட்டு மென்று நினைப்பார். எந்தப் பதவி வந்தாலும், அதில் அவர் அமரமாட்டார்.
ஒரு வீட்டின் பிரதான வாசல் நீசமாக இருந்தால், அந்த வீட்டில் இருப்பவர் மன தைரியத்துடன் இருக்கமாட்டார். வடமேற்கு திசையில் வசிப்பவர்கள், "நம் வேலையை பிறர் செய்தால் நன்றாக இருக்கும்' என்று நினைப்பார்கள். எந்த பொறுப்பையும் வகிக்க பயப்படுவார்கள்.
ஒரு வீட்டின் தென்மேற்கு திசை காலியாக இருந்து, வடக்கில் தேவையற்ற பொருட்களைச் சேர்த்து வைத்தால், அங்கு வசிப்பவர் எந்தச் சமயத்திலும் பெரிய பதவியில் அமரமாட்டார்.
பரிகாரங்கள்
தினமும் குளித்து முடித்து, சூரியனை வழிபட்டு, ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரத்தைப் படிக்கவேண்டும்.
தெற்கில் தலைவைத்து உறங்குவது நல்லது.
வீட்டில் அடர்த்தியான நீலம், சிவப்பு, பச்சை வண்ணங்களைத் தவிர்க்கவேண்டும்.
தினமும் ஆஞ்சனேயரை நான்குமுறை சுற்றிவந்து வழிபடுதல் நன்று.
கருப்புநிற ஆடையை அணியக்கூடாது.
வீட்டின் வடக்கு, வடகிழக்குப் பகுதி சுத்தமாக இருக்கவேண்டும்.
பழைய கடிகாரங்கள், பழைய எலக்ட் ரானிக் பொருட்கள் இருந்தால் அவற்றை அகற்றிவிட வேண்டும்.
தன் லக்னாதிபதியின் ரத்தினத்தை அணியலாம்.
அங்காரக எந்திரம் வைத்துப் பூஜித்தால் நன்மை மிகும்.
செல்: 98401 11534
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-08/guru-t_0.jpg)