Advertisment

உலகப் புகழ்பெறும் பெண்கள் யார்?

/idhalgal/balajothidam/who-are-worlds-most-celebrated-women

ரு பெண் உயர்ந்த பதவிக்கு வரவேண்டு மென்றால் அவளது ஜனன ஜாதகத்தில் லக்னாதி பதி லக்னத்தில் அல்லது 5-ல் அல்லது 9-ல் இருக்கவேண்டும். அதுவும் 2, 5, 9-ஆம் அதிபதி யுடன் இருந்தால், அவள் புகழுடன் வாழ்வாள்.

Advertisment

லக்னாதிபதியும், 2-க்கு அதிபதியும் 5-ல் இருந்தால், அந்தப் பெண் பிறக்கும்போதே நல்ல வசதியுடன் பிறப்பாள். காலப்போக்கில் புகழுடன் இருப்பாள். லக்னாதிபதியும் 5-க்கு அதிபதியும் 9-ல் இருந்தால், அவள் தன் சுய முயற்சியால் பெரிய பதவியை அடைவாள்.

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் லக்னாதிபதியும் 9-க்கு அதிபதியும் 5, 11-ல் இருந்தால், அவள் புகழுடன் வாழ்வாள். அவளுடன் அதிர்ஷ்டம் எப்போதும் இருக்கும். 5-க்கு அதிபதி உச்சமாக இருந்தால், அவள் தன் 20 வயதிற்குப் பிறகு 60 வயதுவரை புகழுடன் நட்சத்திரத்தைப்போல மின்னுவாள்.

5-க்கு அதிபதி லக்னாதிபதிய

ரு பெண் உயர்ந்த பதவிக்கு வரவேண்டு மென்றால் அவளது ஜனன ஜாதகத்தில் லக்னாதி பதி லக்னத்தில் அல்லது 5-ல் அல்லது 9-ல் இருக்கவேண்டும். அதுவும் 2, 5, 9-ஆம் அதிபதி யுடன் இருந்தால், அவள் புகழுடன் வாழ்வாள்.

Advertisment

லக்னாதிபதியும், 2-க்கு அதிபதியும் 5-ல் இருந்தால், அந்தப் பெண் பிறக்கும்போதே நல்ல வசதியுடன் பிறப்பாள். காலப்போக்கில் புகழுடன் இருப்பாள். லக்னாதிபதியும் 5-க்கு அதிபதியும் 9-ல் இருந்தால், அவள் தன் சுய முயற்சியால் பெரிய பதவியை அடைவாள்.

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் லக்னாதிபதியும் 9-க்கு அதிபதியும் 5, 11-ல் இருந்தால், அவள் புகழுடன் வாழ்வாள். அவளுடன் அதிர்ஷ்டம் எப்போதும் இருக்கும். 5-க்கு அதிபதி உச்சமாக இருந்தால், அவள் தன் 20 வயதிற்குப் பிறகு 60 வயதுவரை புகழுடன் நட்சத்திரத்தைப்போல மின்னுவாள்.

5-க்கு அதிபதி லக்னாதிபதியுடன் லக்னத் தில் இருக்க அதை குரு பகவான் பார்த்தால், அந்தப் பெண் அரசியலில் ஈடுபடுவாள். அல்லது அரசாங்கத்தின் ஏதாவது துறையில் பெரிய பதவியில் இருப்பாள்.

Advertisment

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 5-ஆம் பாவத்தில் குரு, சூரியன், புதன் இருந்தால், அவள் அரசாங்கத்தின் பெரிய பதவியில் இருப்பாள். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற பதவிகளில்! அவளுக்கு 9-க்கும் 10-க்கும் உரிய கிரகங்களின் தசை நடக்கும் போது புகழுடன் விளங்கு வாள்.

lakshmi

ஜாதகத்தில் 2-ஆம் பாவத்தில் சனி பகவான் இருந்தால், அதுவும் சுய வீட்டிலோ உச்சமாகவோ இருந்து அதை குரு பகவான் பார்த்தால், அந்தப் பெண் உலக அளவில் புகழுடன் இருப்பாள்.

2-ல் சந்திரன், 3-ல் புதன்- சூரியன், 4-ல் சுக்கிரன் இருந்தால், அவள் ஏழைக்குடும்பத்தில் பிறந்தாலும், 25 வயதிற்குப் பிறகு புகழுடன் வாழ்வாள். தைரியம்கொண்ட பெண்ணாக பெரிய பதவியில் இருப்பாள். அதே ஜாதகத்தில் ராகு 11-ல் இருந்தால், அவள் ராஜயோகத்துடன் வாழ்வாள்.

லக்னத்தில் சனி, 4-ல் சுக்கிரன்- குரு, 5-ல் சூரியன்- புதன் இருந்தால், சாதாரண குடும்பத்தில் பிறந்தவளாக இருந்தாலும், அவள் திருமணமான பிறகு புகழுடன் வாழ்வாள்.

ஜாதகத்தில் 5-க்கு அதிபதி லக்னத்தில் உச்சமாக இருந்து, அதே ஜாதகத்தில் 11-ல் ராகு, 10-ல் குரு இருந்தால் அவள் நல்ல பெயருடனும், மதிப்புடனும் வாழ்வாள்.

லக்னத்தில் புதன் உச்சமாக இருந்து, 3-ல் சனி, 10-ல் சுக்கிரன் இருந்தால், அவள் பல காரியங்களை மிகவும் தைரியமாக முடித்து, அனைவரின் பாராட்டுகளையும் பெறுவாள்.

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் லக்னாதிபதி லக்னத்தில் இருந்து, 6-ல் செவ்வாய், 10-ல் குரு இருந்தால், அவள் தன் செயல்களைத் துணிச்சலாகச் செய்வாள். 31 வயதிற்குப் பிறகு நல்ல பெயருடனும் புகழுடனும் வாழ்வாள்.

10-க்குரிய கிரகம் லக்னத்தில் உச்சமாக இருந்து, 2-ஆம் வீட்டில் சுக்கிரன், 6-ல் சனி, 10-ல் குரு, 11-ல் சந்திரன் இருந்தால், அவள் தன் 30 வயதிற்குப் பிறகு ஆன்மிகம், ஜோதிடம் ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க நபராக வருவாள். பேராசிரியையாக வருவதற்கும் வாய்ப்பிருக்கிறது.

லக்னத்தில் குரு, 9-ல் சுக்கிரன்- புதன், 10-ல் செவ்வாய் அல்லது சனி- செவ்வாய் இருந்தால், அப்பெண் தன் சுயமுயற்சியால் பெரிய தொழிலதிபராக வருவாள்.

ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதியான சுக்கிரன் லக்னத்தில் இருந்து, அதே ஜாதகத்தில் 4-ல் செவ்வாய், குரு அல்லது சனி, குரு இருந்து, சூரியன் 5, 11-ல் இருந்தால், அந்தப்பெண் கடுமையாக உழைத்து, உயர்ந்த பதவியில் புகழுடன் இருப்பாள். அரசியலில் பெரிய பதவியை வகிப்பாள்.

பரிகாரங்கள்

ஜாதகத்தில் தோஷம், தடைகள் இருந்தால்... காலையில் எழுந்தவுடன் தன் உள்ளங்கைகளைப் பார்த்தவாறு விஷ்ணுபகவானை நினைக்க வேண்டும். குளித்து முடித்து, செப்புப் பாத்தி ரத்தில் நீரில் குங்குமம், சர்க்கரை, மலரின் இதழ்கள் ஆகியவற்றைப் போட்டு, சூரியனுக்கு வார்க்க வேண்டும்.

செவ்வாய் சரியில்லாமல் இருந் தால், மனதில் தைரியம் இருக்காது. அத்தகையவர்கள் செவ்வாய்க்கிழமை விநாயகர் ஆலயத்திற்குச் சென்று, நான்குமுறை சுற்றிவந்து, அங்கு ஒரு தீபத்தை ஏற்றி வழிபடவேண்டும்.

சூரியன் சரியில்லாமலிலிருந்தால் ஞாயிற்றுக்கிழமை தலைக்குக் குளிக்கக்கூடாது. தலையில் எண்ணெய் தேய்க்கக்கூடாது.

தெற்கில் தலையை வைத்துப் படுக்கவேண்டும். படுக்கையறையில் பச்சை, சிவப்பு, ப்ரவுன் நிறம் தவிர்க்கவும். கருப்புநிற ஆடையையும் தவிர்த்தல் நன்று.

லக்னாதிபதி, 5-க்குரிய கிரகத்தின் ரத்தினத்தை அணிவது நல்லது.

செல்: 98401 11534

bala281218
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe