பெண்களில் சிலர் ஆச்சரியப்படுமளவிற்கு, ஆண்களுக்கு நிகராக- ஏன்... ஆண்களையும்விட தைரியசாலிலியாகவும், துணிச்சல் மிக்கவர் களாகவும் இருக்கிறார்கள்...
ஒரு பெண் தைரியசாலிலியாக இருப்பதற்கு ஜாதகத்தில் லக்னாதிபதி பலமாக இருக்க வேண்டும். நவாம்சத்தில் லக்னாதிபதியின் நிலை நல்லமுறையில் இருக்கவேண்டும். லக்னாதி பதியை சுபகிரகம் பார்க்கவேண்டும். லக்னாதிபதி லக்னத்திலோ கேந்திரத்திலோ உச்சமடைந்தால், அந்தப் பெண் வாழ்க்கையில் பல சாதனைகளைச் செய்வாள்.
ஒரு ஜாதகத்தில் லக்னத்திலிலிருந்து 3-ஆவது பாவாதிபதி அந்த ஜாதகரின் தைரி யத்தைக் குறிக்கும். மூன்றாம் பாவாதிபதி சுய வீட்டில் இருந்தால், அந்த ஜாதகர் தைரியசாலிலியாக இருப்பார். 3-ஆவது பாவத்தில் செவ்வாய், சனி அல்லது குரு இருந்தால், அந்தப் பெண் மிகவும் தைரியசாலிலி. எதையும் துணிச்சலுடன் செய்வாள்.
5-க்கு அதிப

5-க்கு அதிபதி முற்பிறவியின் புண்ணி யத்தைக் குறிக்கும். ஒரு பெண்ணின் திறமையையும், தைரியத்தையும்கூட அது குறிக்கும். 5-க்கு அதிபதி சுபகிரகத்தால் பார்க்கப்பட்டால், அந்தப் பெண் துணிச் சல் மிக்கவளாக இருப்பாள்.
7-க்கு அதிபதி பெண்ணின் தொழில் வெற்றியைக் குறிக்கும். 7-க்கு அதிபதி 9, 10-லிலிருந்து, அதை சுபகிரகம் பார்த்தால், அந்தப் பெண் தான் செய்யும் பணியில் பெரிய வெற்றி காண்பாள். தைரியமாக பல செயல்களைச் செய்வாள்.
9-க்கு அதிபதி சுப கிரகத்துடன் இருந்தால் அல்லது சுப கிரகத்தால் பார்க்கப்பட்டால், அந்தப் பெண் அதிர்ஷ்டசாலிலியாக இருப்பாள். பல இடங்களிலும் அவளுக்கு வெற்றி கிடைக்கும். எந்தத் தொழிலைச் செய்தாலும் அவளுக்கு தனலட்சுமி யோகம் உண்டாகும்.
9-க்கு அதிபதி லக்னாதிபதியுடன் இருந்தால், இளம்வயதிலேயே தன் தந்தையின் தொழிலிலில் மாறுதல் உண்டாக்க வேண்டும்; அதில் வெற்றி பெறவேண்டுமென்று மகள் விரும்புவாள். அதைச் செயல்வடிவிலும் காட்டுவாள். அதனால் அவளுக்கு தந்தை, தாத்தா ஆகியோரின் ஆசிர்வாதம் கிடைக்கும்.
ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 10-ஆம் பாவாதிபதி அவள் எந்தத் தொழில் செய் தால் வெற்றிபெற முடியும் என்பதைக் கூறும். 10-ஆம் பாவாதிபதி 10-ல் அல்லது லக்னத்தில் இருந்தால், அவள் சுய முயற்சியால் பெரிய வெற்றிகளைக் காண்பாள்.
10-க்கு அதிபதி லக்னாதிபதியுடன் இருந்து, அதற்கு கேந்திரத்தில் குரு இருந்தால் கேசரி யோகம் உண்டாகும். அந்த யோகத்தால் அவளுக்குப் பல வெற்றிகள் கிடைக்கும்; புகழ்பெறுவாள்.
ஒரு பெண் தன் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு, அவளுடைய ஜாதகத்திலுள்ள லக்னாதிபதியும், 5-க்கு அதிபதியான கிரகமும் லக்னத்தில், 5-ல், 7-ல், 9-ல், 10-ல் இருக்கவேண்டும். அவள் நிறைய சாதனைகளைச் செய்வாள்.
ஒரு பெண்ணின் ஜாதகத்தில் சந்திரனின் நிலையைப் பார்க்கவேண்டும். வளர்பிறைச் சந்திரனாக குருவுடன் இருந்தால் அல்லது குரு கேந்திரமாக இருந்தால், அந்த லக்னத் திற்கு குருவும் சந்திரனும் நல்லது செய்பவர் களாக இருந்தால், கஜகேசரி யோகம் உண்டாகும். அந்த யோகத்தால் அந்த ஜாதகி எங்கு சென்றாலும் புகழ்கிடைக்கும்.
ஒரு ஜாதகத்தில் 5, 9-க்கு அதிபதிகள் 10-ல் இருந்தால், அந்தப் பெண்ணுக்கு அரசாங்கப் பதவி கிடைக்கும். அதில் நல்ல பெயரைப் பெறுவாள்.
ஜாதகத்தில் புதன், குரு, சுக்கிரன் அல்லது புதன், குரு, சூரியன் 9 அல்லது 10-ல் இருந் தால், அந்தப் பெண் நிறைய சாதனைகளைச் செய்வாள்.
செவ்வாய், சுக்கிரன், சனி 6, 8-ல் இருந்தால், அந்தப் பெண் வெற்றியைக் காணும் நேரத்தில் பல தடைகள் உண்டாகும்.
சந்திரன், சனி, செவ்வாய் லக்னம், 4, 7 அல்லது 8-ல் இருந்தால், அவளுக்கு பல வாய்ப்புகள் வரும்போது தடைகளும் உண்டாகும். ஆனால், 35 வயதிற்குப்பிறகு சந்தோஷமாக வாழ்வாள்.
ஒரு ஜாதகத்தில் ராகு, சுக்கிரன், செவ்வாய் லக்னம், 2, 4, 7, 8 அல்லது 12-ல் இருந்தால், அவளுக்கு அருமையான வாய்ப் புகள் வரும்போது, குடும்பத்தில் ஏதாவது பிரச் சினைகள் உண்டாகும். வெற்றி கிடைப்பதில் தடையேற்படும்.
பரிகாரங்கள்
பெண்கள் தினமும் விநாயகரை நான்கு முறை சுற்றிவர வேண்டும்.
வெள்ளிக்கிழமை துர்க்கை ஆலயத்திற்குச் சென்று தீபமேற்றி வழிபடவேண்டும்.
தெற்கில் தலைவைத்துப் படுப்பது நல்லது. கறுப்புநிற ஆடையைத் தவிர்க்கவேண்டும்.
ஞாயிற்றுக்கிழமை ஆதித்ய ஹருதய ஸ்தோத்திரம் படிப்பது நல்லது. தன் லக்னா திபதி, 9-க்கு அதிபதியின் ரத்தினத்தை அணியலாம்.
வீட்டில் அடர்த்தியான பச்சை வண்ணம் இருக்கக்கூடாது. வீட்டின் தென்கிழக்கில் நீர்பிடித்து வைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
செல்: 98401 11534