அடுத்த பிறவியிலும் அதே குடும்பத்தில் பிறப்பவர்கள் யார்?

/idhalgal/balajothidam/who-are-born-same-family-next-birth

ஜோதிடத்தில் 1, 4, 7, 10-ஆம் இடமான கேந்திரத்தில் சுபகிரகங்களான குரு, சுக்கிரன், சந்திரன், புதன் இருந்தால் கேந்திராதிபதி தோஷம் என்று அன்றுமுதல் இன்றுவரை நடைமுறையில் உள்ளது. இதற்கு சில ஜோதிடர்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். சிலர் கொடுப்பதில்லை. இதைப் பற்றி சற்று ஆராய்வோம்.

கேந்திராதிபதி தோஷம் என்பது ஒரு கேந்திரந்தின் அதிபதியான சுபகிரகம் இன்னொரு கேந்திரத்தில் இருந்தால், கேந்திரத்தில் அமர்ந்த சுபகிரகத்திற்கு கேந்திராதிபதி தோஷம் வந்துவிடும். ஒரு கிரகம் தன் சொந்த வீட்டில் இருந்தால் காரகோ பாவ நாஸ்தி என்பது ஜோதிட விதி. மேஷ லக்னத்திற்கு நான்காம் இடமான கடகத்தில் சந்திரன் ஆட்சிபெற்றால், நான்காம் வீட்டு அதிபதி ஆட்சி. அதேநேரத்தில் சந்திரன் திக்பலம் பெறுகிறார். கூடவே காரகோ பாவ நாஸ்தி பெறுகிறார். இந்த சந்திரனை எந்தக் கணக்கில் எடுத்துக்கொள்வது? நல்லவர் என்று முடிவு செய்வதா? கெட்டவர் என்று முடிவு செய்வதா? கேந்திராதிபதி தோஷம் என கணக்கில் எடுத்துக்கொள்வதா என்றால், நல்லவர் என்ற முறையில்தான் எடுத்துக்கொள்ளவேண்டும். கேந்திராதிபதி தோஷம் அடிபட்டுப் போய்விடும். சந்திரன் ஆட்சி பெற்றுள்ளார். காரகோ பாவ நாஸ்தி வேலை செய்யாது.

மேஷ லக்னத்திற்கு பத்தில் குரு ஆட்சி பெற்றால் கேந்திராதிபதி தோஷம் வேலை செய்யாது. அதற்கு பதில் பஞ்சமகா புருஷ யோகமான ஹம்சயோகம் வேலை செய்யும். மேஷ லக்னத்திற்கு குரு யோகாதிபதி. மற்றும் தனுசு வீடு மூலத்திரிகோண வீடு என்பதால் கேந்திராதிபதி தோஷம் அடிபட்டுப்போய்விடும். காரகோ பாவ நாஸ்தி வேலை செய்யாது.

மேஷ லக்னத்திற்கு நான்காம் இடமான கடகத்தில் குரு ஆட்சி பெற்றால் கேந்திராதிபதி தோஷம் வேலை செய்யாது. அதற்கு பதில் ஹம்சயோகம் வேலை செய்யும்.

ரிஷப லக்னத்திற்கு லக்னத்தில் சுக்கிரன் ஆட்சி பெற்றால் லக்னாதிபதி என்ற அடிப்படையில் வேலை செய்யும். கூடவே மாளவ்ய யோகம் வே

ரிஷப லக்னத்திற்கு லக்னத்தில் சுக்கிரன் ஆட்சி பெற்றால் லக்னாதிபதி என்ற அடிப்படையில் வேலை செய்யும். கூடவே மாளவ்ய யோகம் வேலை செய்யும். லக்னாதிபதி என்ற அடிப்படையில் சுக்கிரன் செயல்படுவார்.

கேந்திராதிபதி தோஷம் அடிபட்டுப்போய்விடும். காரகோ பாவ நாஸ்தி வேலை செய்யாது.

மிதுன லக்னத்திற்கு புதன் லக்னத்தில் ஆட்சி பெற்றாலும், நான்காம் வீடான கன்னியில் புதன் உச்சம் பெற்று மூலத்திரிகோண வீடாக அமைவதால், புதன் லக்னாதிபதி மற்றும் நான்காம் வீட்டு அதிபதி எனும் அடிப்படையில் வேலை செய்வார். கூடவே பஞ்சமகா புருஷயோகமான பத்ரயோகம் வேலை செய்யும். கேந்திராதிபதி தோஷம் வேலை செய்யாது. ஜோதிடத்தில் புதன் அலிலிகிரகம் என்று சொல்லப்பட்டாலும், சுபகிரகத்தோடு புதன் சேர்ந்தால் புதன் சுபராகவும், அசுபகிரகத்தோடு சேர்ந்தால் அசுப கிரகம் வகையில் செயல்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. காரகோ பாவ நாஸ்தி வேலை செய்யாது.

மிதுன லக்னத்திற்கு ஏழாம் இடத்தில் குரு ஆட்சி பெற்றால் கேந்திராதிபதி தோஷம், பாதகாதிபதி தோஷம், மாரகாதிபதி தோஷம் ஆகிய மூன்றும் சேர்ந்து வேலை செய்யும். பொதுவாக உபய லக்னமான மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகியவற்றுக்கு 7, 11-க்குடையவர் மாரகாதிபதிகள் ஆவார்கள்.

ஏழாம் இடத்தில் குரு ஆட்சி பெற்றாலும் பஞ்ச மகா புருஷயோகமான ஹம்சயோகம் வேலை செய்யாது. பத்தில் குரு ஆட்சி பெற்றாலும் ஹம்சயோகம் வேலை செய்யாது. காரகோ பாவ நாஸ்தி வேலை செய்யும். மிதுன லக்னத்திற்கு பத்தில் சுக்கிரன் உச்சம் பெற்றால் கேந்திராதிபதி தோஷம் வேலை செய்யாது. அதற்கு பதில் மாளவ்ய யோகம் வேலை செய்யும். மிதுன லக்னத்திற்கு சுக்கிரன் யோகாதிபதி என்ற அடிப்படையில் வேலை செய்யும்.

சிம்ம லக்னத்திற்கு பத்தில் சுக்கிரன் ஆட்சி பெற்றால் கேந்திராதிபதி தோஷம் வேலை செய்யாது. அதற்கு பதில் மாளவ்ய யோகம் வேலை செய்யும். காரகோ பாவ நாஸ்தி வேலை செய்யாது.

கன்னி லக்னத்திற்கு நான்கில் குரு ஆட்சி பெற்றால் ஹம்சயோகம் வேலை செய்யாது. கேந்திராதிபதி தோஷம், பாதகாதிபதி தோஷம் வேலை செய்யும். ஏழில் குரு ஆட்சி பெற்றால், கன்னி லக்னத்திற்கு குரு பாதகாதிபதி, மாரகாதிபதி, கேந்திராதிபதி என்ற அடிப்படையில் இந்த மூன்றும் சேர்ந்து வேலை செய்யும் .

ammanஆனால் ஹம்சயோகம் வேலைசெய்யாது. காரகோ பாவ நாஸ்தி வேலை செய்யும்.

துலா லக்னத்திற்கு லக்னத்தில் சுக்கிரன் ஆட்சி பெற்றால், மூலத்திரிகோண வீடாக இருப்பதாலும் லக்னாதிபதி என்ற அடிப்படையிலும் சுக்கிரன் வேலை செய்வார். கூடவே மாளவ்ய யோகமும் வேலை செய்யும். கேந்திராதிபதி தோஷமும், காரகோ பாவ நாஸ்தியும் வேலை செய்யாது.

விருச்சிக லக்னத்திற்கு ஏழில் சுக்கிரன் ஆட்சி பெற்றால் கேந்திராதிபதி தோஷம், காரகோ பாவ நாஸ்தி வேலை செய்யாது.

அதற்கு பதில் மாளவ்ய யோகம் வேலை செய்யும். காரகோ பாவ நாஸ்தி வேலை செய்யாது.

தனுசு லக்னத்திற்கு லக்னத்தில் குரு ஆட்சி பெற்றாலும், நான்காம் இடமான மீனத்தில் குரு ஆட்சி பெற்றாலும் லக்னாதிபதி, சுகஸ்தானாதிபதி மற்றும் ஹம்ஸ யோகம் இந்த மூன்றும் சேர்த்து வேலை செய்யும். தனுசு லக்னத்திற்கு குரு யோகாதிபதி, 1, 4-க்குடைய முழு சுபர் என்பதால் குரு நன்மையே செய்வார்.

கேந்திராதிபதி தோஷம் அடிபட்டுப்போய்விடும். காரகோ பாவ நாஸ்தி வேலை செய்யாது.

மகர லக்னத்திற்கு பத்தில் சுக்கிரன் ஆட்சி பெற்றால் மாளவ்ய யோகம் வேலை செய்யும். கேந்திராதிபதி தோஷமும், காரகோ பாவ நாஸ்தியும் வேலை செய்யாது.

கும்ப லக்னத்திற்கு நான்கில் சுக்கிரன் ஆட்சி பெற்றால், சுக்கிரன் பாதகாதிபதி என்பதால் மாளவ்ய யோகம் வேலை செய்யாது. பாதகாதிபதி, யோகாதிபதி அடிப்படையில் வேலை செய்து கொடுத்துக் கெடுப்பார்.

அல்லது கெடுத்துக் கொடுப்பார். காரகோ பாவ நாஸ்தி வேலை செய்யும். மீன லக்னத்திற்கு லக்னத்தில் குரு ஆட்சி பெற்றாலும், பத்தில் ஆட்சி பெற்றாலும் ஹம்ச யோகம் வேலை செய்யும். கேந்திராதிபதி தோஷம் வேலை செய்யாது. மீன லக்னத்திற்கு குரு முழு சுபர் என்ற அடிப்படையில் வேலை செய்வார். காரகோ பாவ நாஸ்தி வேலை செய்யாது. மீன லக்னத்திற்கு புதன் நான்கில் ஆட்சி, ஏழில் உச்சம் பெற்றாலும் புதன் பாதகாதிபதி, கேந்திராதிபதி, மாரகாதிபதி என்ற அடிப்படையில் இந்த மூன்றும் சேர்ந்து வேலை செய்யும். அதற்கு பதில் பத்ர யோகம் வேலை செய்யாது. காரகோ பாவ நாஸ்தி வேலை செய்யும்.

கடக லக்னத்திற்கு லக்னத்தில் சந்திரன் ஆட்சி பெற்றால் லக்னாதிபதி என்ற அடிப்படையில் சந்திரன் செயல்படுவார். கேந்திராதிபதி தோஷம் வேலை செய்யாது. காரகோ பாவ நாஸ்தி வேலை செய்யாது.

துலா லக்னத்தில் பத்தில் குரு உச்சம் பெற்றாலும், 3, 6-க்குடைய ஆதி பத்யம் மற்றும்

துலா லக்னத்திற்கு குரு பகை, எதிரி என்பதாலும், எதிரி உச்சம் பெற்றுள்ளதால் ஹம்சயோகம் வேலை செய்யாது.

பொதுவாக கேந்திர ஸ்தானத்தில் கிரகம் ஆட்சி பெற்றால் தன் சொந்த வீடாக இருப்பதால் கேந்திராதிபதி தோஷம் வேலை செய்யாது. பொதுவாக எந்த ஒரு கிரகமும் சொந்த வீடாக இருந்தால் அதிக தீமைகள் செய்வதில்லை. அதேநேரத்தில் சில லக்னத்தில் தன் சொந்த வீடாக இருந்தாலும் தீமையே செய்யும். உதாரணமாக கன்னி லக்னத்திற்கு ஏழில் தன் சொந்த ராசியான மீன ராசியில் ஆட்சி பெற்றாலும் பாதகாதிபதி, மாரகாதிபதி அடிப்படையில் வேலை செய்யும்.

எந்த ஒரு லக்னத்திற்கும் கேந்திராதிபதி கேந்திரத்தில் இருக்கும்பொழுது பகை, நீசம், அஸ்தமனம், கிரகயுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்படடால் கேந்திராதிபதி தோஷம் வேலை செய்யாது. உதாரணமாக மீன லக்னத்திற்கு குரு நான்காம் வீடான மிதுனத்தில், ஏழாம் வீடான கன்னியில் இருந்தால், குரு பகை பெற்றுள்ளதால் கேந்திராதிபதி தோஷம் பலம் குறைந்து நன்மை அதிகரிக்கும். 1, 4, 7, 10-ஆம் இடமான கேந்திர ஸ்தானத்தில் பத்தாம் இடம்தான் அதிக வலிலிமைபெற்ற கேந்திரஸ்தானம் என்பதால், பத்தாம் இடத்தில் உள்ள சுபகிரகம் மட்டும் கேந்திராதிபதி தோஷத்தால் அதிக பாதிப்பு அடையும். மற்ற இடத்தில் பாதிப்பு அவ்வளவு இருக்காது. பலன் சொல்வதில் கேந்திராதிபதி தோஷம் என்பது பிரதானமான தோஷம் கிடையாது. மிக முக்கியமான தோஷம் கிடையாது. அப்படியே கேந்திராதிபதி தோஷம் இருந்தால் வெறும் ஐந்து சதவிகிதம் மட்டுமே பாதிப்பு உண்டாகும்.

ஜாதகத்தில் சுபகிரகங்கள் கேந்திரத்தில் தனித்திருந்தால் மட்டுமே கேந்திராதிபதி தோஷம் இருக்கிறதா இல்லையா என்பதை ஆராய வேண்டும். மற்ற கிரகங்களோடு கேந்திரத்தில் சேர்ந்திருந்தால் கேந்திராதிபதி தோஷம் அடிபட்டுப் போய்விடும். எனவே கேந்திர ஸ்தானத்தில் சுபகிரகங்கள் இருந்தால் அதைக்கண்டு பயப்படத் தேவையில்லை.

அப்படியே தோஷம் இருந்தாலும் அந்த தசை, புக்தி நடைமுறையில் வந்தால்தான் பாதிப்படையும். மற்ற நேரங்களில் பாதிக்காது.

ஒரு சிறப்புப் பலனாக குரு சொந்தவீடான மீனம், தனுசுவில் ஆட்சி பெற்று ஐந்தாம் வீடாக அமைந்தாலும், ஐந்தாம் வீடான கடகத்தில் குரு உச்சம் பெற்ற ஜாதகர்கள் முற்பிறவி, இந்த பிறவி மற்றும் ஒருவேளை அடுத்த பிறவி மனிதப் பிறவியாக அமைந்தால், இவர்கள் தற்பொழுது எந்த குடும்பத்தில் பிறந்துள்ளார்களோ அடுத்த பிறவியிலும் இதே குடும்பத்தில்தான் பிறப்பார்கள். முற்பிறவியும் இதே குடும்பத்தில்தான் பிறந்திருப்பார்கள். உதாரணமாக, விருச்சிக லக்னத்திற்கு 2, 5-க்குடைய குரு ஐந்தாம் இடமான மீனத்தில் ஆட்சி பெற்ற ஜாதகர்கள், ஒருவேளை அடுத்த பிறவி மனிதப்பிறவியாக அமைந்தால் தற்பொழுதுள்ள இதே குடும்பத்தில் பிறப்பார்கள். மீன லக்னத்திற்கு ஐந்தாம் இடமான கடகத்தில் குரு உச்சம் பெற்ற ஜாதகர்கள் அடுத்த பிறவியிலும் இதே குடும்பத்தில்தான் பிறப்பார்கள். சிம்ம லக்னத்திற்கு ஐந்தாம் இடமான தனுசுவில் குரு ஆட்சிபெற்ற ஜாதகர்கள் அடுத்த பிறவியிலும் இதே குடும்பத்தில்தான் பிறப்பார்கள். இந்த ஜோதிட விதியில் வராதவர்கள் அடுத்த பிறவியில் வேறு குடும்பத்தில் பிறப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

செல்: 98403 69513.

bala240818
இதையும் படியுங்கள்
Subscribe