காதல் திருமணம் எந்த லக்னக்காரர்களுக்கு பாதிப்பைத் தரும்?

/idhalgal/balajothidam/which-zodiac-signs-will-love-marriage-affect

ப்போதைய பெற்றோர், தங்கள் வாரிசு திருமண விஷயம் பற்றி ஆரம்பிக்கும்போதே, அரேன்ஜ்ட் மேரேஜா அல்லது லவ் மேரேஜ் நடக்குமா என்று கேள்வி கேட்கிறார்கள். மக்கள் அவ்வளவு தெளிவாக மாறிவிட்டார்கள்.

பழைய காலத்தில், காதல் என்பது கெட்ட வார்த்தையாக பார்க்கப் பட்டது. இப்போது நிமிஷத்திற்கு நூறு காதல் என்கிற ரேஞ்சில் ஓடுகிறது.

சரி, ஜோதிடம் காதல் பற்றி கூறுகிறதா எனில், நன்றாகவே உரைக்கின்றது. காதல் திருமணம் நடப்பதற்கென்று முக்கியமான மூன்று கிரக அமைப்புகள் கூறப் பட்டுள்ளது.

1. சனி, செவ்வாய் சம்பந்தம்

2. புதன், கேது சம்பந்தம்

3. 5, 7-ஆம் அதிபதிகள் சம்பந்தம்.

சனி, செவ்வாய் சம்பந்தம்

சனி காலபுருஷனின் 11-ஆம் அதிபதி செவ்வாய், காலபுருஷனின் 8-ஆம் அதிபதி. 8-ஆம் வீடு என்பது மாங்கல்ய ஸ்தானமாகும். 11-ஆம் வீடு லாப ஸ்தானம். எனவே மாங்கல் யத்தை, அவர்களின் எண்ணப்படி, விரும்பியபடி அடைய ஏதுவாகிறது. 11-ஆமிடம் என்பது எண்ணங்கள், ஆசைகள் ஜெயிக்கும் இடமாகும். எனவேதான் சனி, செவ்வாய் சம்பந் தம் இஷ்ட திருமணம் கொடுத்து விடுகிறது.

ss

புதன், கேது சம்பந்தம்

புதன் காலபுருஷனின் 3-ஆமிட அதிபதி. இந்த 3-ஆமிடம் ஆண்களுக்கு முக்கியமான கட்டமாகும். இது ஒரு தைரிய ஸ்தானம். 7-ஆமிடத்திற்கு, 9-ஆமிடம், 3-ஆமிடம். எனவே, இந்த 3-ஆமிட புதன், கேது சம்பந்தம் பெறும்போது, திருமணம் விஷயத் தில் தைரியமாக முடிவெடுக்கிறார்கள் போலும்.

5, 7-ஆம் அதிபதிகள் சம்பந்தம்

காலபுருஷனின் 5-ஆம் அதிபதி சூரியன். மேலும் 5-ஆமிடம் என்பது காதல் விஷயத்தை சுட்டிக்காட்டும். அந்த 5-ஆம் அதிபதி, 7-ஆம் அதிபதியுடன் நிற்கும்போது, அங்கு காதல் கல்யாணம் உண்டாகிவிடுகிறது.

12 லக்னமும் காதலும்

மேஷ லக்னம்

உங்களுக்கு செவ்வாய் 8-ஆம் அதிபதி. சனி 11-ஆம் அதிபதி இந்த அமைப்பு, சனி, செவ்வாய் சேர்க்கை, பார்வை இருந்தால், அங்கு காதல் ஏற்படும். ஆனால் இந்த காத-ல், இருவரில் ஒ

ப்போதைய பெற்றோர், தங்கள் வாரிசு திருமண விஷயம் பற்றி ஆரம்பிக்கும்போதே, அரேன்ஜ்ட் மேரேஜா அல்லது லவ் மேரேஜ் நடக்குமா என்று கேள்வி கேட்கிறார்கள். மக்கள் அவ்வளவு தெளிவாக மாறிவிட்டார்கள்.

பழைய காலத்தில், காதல் என்பது கெட்ட வார்த்தையாக பார்க்கப் பட்டது. இப்போது நிமிஷத்திற்கு நூறு காதல் என்கிற ரேஞ்சில் ஓடுகிறது.

சரி, ஜோதிடம் காதல் பற்றி கூறுகிறதா எனில், நன்றாகவே உரைக்கின்றது. காதல் திருமணம் நடப்பதற்கென்று முக்கியமான மூன்று கிரக அமைப்புகள் கூறப் பட்டுள்ளது.

1. சனி, செவ்வாய் சம்பந்தம்

2. புதன், கேது சம்பந்தம்

3. 5, 7-ஆம் அதிபதிகள் சம்பந்தம்.

சனி, செவ்வாய் சம்பந்தம்

சனி காலபுருஷனின் 11-ஆம் அதிபதி செவ்வாய், காலபுருஷனின் 8-ஆம் அதிபதி. 8-ஆம் வீடு என்பது மாங்கல்ய ஸ்தானமாகும். 11-ஆம் வீடு லாப ஸ்தானம். எனவே மாங்கல் யத்தை, அவர்களின் எண்ணப்படி, விரும்பியபடி அடைய ஏதுவாகிறது. 11-ஆமிடம் என்பது எண்ணங்கள், ஆசைகள் ஜெயிக்கும் இடமாகும். எனவேதான் சனி, செவ்வாய் சம்பந் தம் இஷ்ட திருமணம் கொடுத்து விடுகிறது.

ss

புதன், கேது சம்பந்தம்

புதன் காலபுருஷனின் 3-ஆமிட அதிபதி. இந்த 3-ஆமிடம் ஆண்களுக்கு முக்கியமான கட்டமாகும். இது ஒரு தைரிய ஸ்தானம். 7-ஆமிடத்திற்கு, 9-ஆமிடம், 3-ஆமிடம். எனவே, இந்த 3-ஆமிட புதன், கேது சம்பந்தம் பெறும்போது, திருமணம் விஷயத் தில் தைரியமாக முடிவெடுக்கிறார்கள் போலும்.

5, 7-ஆம் அதிபதிகள் சம்பந்தம்

காலபுருஷனின் 5-ஆம் அதிபதி சூரியன். மேலும் 5-ஆமிடம் என்பது காதல் விஷயத்தை சுட்டிக்காட்டும். அந்த 5-ஆம் அதிபதி, 7-ஆம் அதிபதியுடன் நிற்கும்போது, அங்கு காதல் கல்யாணம் உண்டாகிவிடுகிறது.

12 லக்னமும் காதலும்

மேஷ லக்னம்

உங்களுக்கு செவ்வாய் 8-ஆம் அதிபதி. சனி 11-ஆம் அதிபதி இந்த அமைப்பு, சனி, செவ்வாய் சேர்க்கை, பார்வை இருந்தால், அங்கு காதல் ஏற்படும். ஆனால் இந்த காத-ல், இருவரில் ஒருவர் செமத்தியாக அடிபடவும், அவமானம் அடையவும் நேரிடும்.

புதன்+கேது சம்பந்தம்

வேலை செய்யும் இடத்தில் வரும் காதல் சற்று வீட்டைவிட்டு ஓடச்செய்யும்.

5, 7-ஆம் அதிபதிகள் சம்பந்தம்

கிரக அமைப்பு இருந்தால், காதல் கல்யாணத்தில் முடிவது பெரும் தடைகளை சந்திக்க வேண்டிவரும். ஏனெனில் 5-ஆம் அதிபதி சூரியன், 7-ஆமிடமான துலாத்தில் நீசமடைவார். அங்கு சுக்கிரன் ஆட்சி பெற்றாலோ அல்லது சுக்கிரன், சூரியன் பரிவர்த்தனை அடைந் தாலோ, சூரியன் நீசபங்கம் பெறுவார். எனவேதான் மேஷ லக்னத்தார் காதல் கல்யாணம் என்பது ரொம்ப கஷ்டமான விஷயமாக இருக்கும். சூரியன் நீசபங்கம் ஆகாவிட்டால் இவர்களின் குலம், தந்தை இவர்களால் காதல் காணாமல் போய்விடும்.

ரிஷப லக்னம்

ரிஷப லக்னத்துக்கு செவ்வாய் 12 மற்றும் 7-ஆம் அதிபதி. சனி 9, 10-ஆம் அதிபதி.

இவர்களின் காதல் வெளியூர், வெளிநாட்டில் வேலை செய்யும்போதோ, பயணங்களின் போதோ அல்லது கோவில்சென்று வழிபாடு நடத்தும்போதோ, வேறு கல்யாண சந்திப்பு களின்போதோ காதல் கண்சிமிட்டத் தொடங்கும். இவர்கள் பெரியோர்களை சம்மதிக்க வைத்து திருமணம் செய்து கொள்வர். இவ்வித அமைப்பு ஜோடியில், ஒருவர் ஒரு குறையுடன் அமைவார். அதனால் சில சமயங்களில் ஓடிப்போயும் திருமணம் நடக்கும்.

புதன்+கேது

ரிஷப லக்னத்துக்கு புதன் 2, 5-க்குரியவர். பேசி, பேசியே காதலை வளர்த்துவிடுவர். இவர்களில் காதலில் மொழிபிரிவு வேறாக இருக்கும். சிலர் கலை அல்லது பணம், பேச்சு இவற்றால் ஈர்க்கப்பட்டு காதல் அமையும். மேலும் 5-ஆமிடம் எனும் காதல் ஸ்தானத்தில் அதன் அதிபதி உச்சம் அடைவார்.

அதனால் அடம்பிடித்து காதல் திருமணம் செய்துகொள்வர்.

5, 7-ஆம் அதிபதி சம்பந்தம்

உங்கள் 5-ஆம் அதிபதி புதன் 7-ஆம் அதிபதி செவ்வாய் இந்த கிரக இணைவுதான், சில பெண்களை, ரவுடிகளை காதலிக்க வைத்து விடுகிறது. இந்த காதலில், இருவருக் கும் ரொம்ப ஈகோ இருக்கும். ஒன்று கட்டாய மாக இழுத்துக்கொண்டு ஓடி, திருமணம் நடக்கும். ஆனாலும் அனேகமாக சண்டை மட்டும் இருந்துகொண்டே இருக்கும். அதனால் காதல் கழன்றுவிடும். அல்லது கல்யாணம் பிரிந்துவிடும்.

மிதுன லக்னம்

உங்களுக்கு சனி 8, 9-ஆம் அதிபதி செவ்வாய் 6, 11-ஆம் அதிபதி. உங்களின் சனி, செவ்வாய் இணைவு காதலை கொண்டுவந்தாலும், அதனை நீடித்து இருக்கவிடாது. ஏனெனில் அடிதடி வழக்கு, கடன் பிரச்சினை, ஒன்றுக்கு மேற்பட்ட காதல், விபத்து இவை காரணமாக காதல் கானல் நீராகிவிடும். மிதுன லக்னத்தாருக்கு, இவ்வமைப்பு இருந்து, காதல் ஏற்பட்டால், திருமணத்திற்குமுன், நிறைய விசாரிக்க வேண்டியது அவசியம்.

புதன்+கேது

மிதுனத்தாருக்கு புதன் லக்ன, 4-ஆம் அதிபதி. இவர்களுக்கு இவ்வமைப்பு இருந்தால், படிக்கும் மாணவர் பருவத்திலேயே காதல் வந்துவிடும் அல்லது பயணங்களில் காதல் துளிர்க்கும். இந்த காதல், இவர்களின் கல்வியை காவு வாங்கிவிடும். இவர்களின் தாயாரும் காதலுக்கும் தடை போடுவர். அடித்து பிடித்து திருமணம் செய்தாலும், கல்வி கெடுவதால், வாழ்வு நிலை சீராக இராது. அதனால் காதல் கல்யாணம் நூறு சதவிகிதம் நன்றாக இருக்குமென்று சொல்ல இயலாது.

5, 7-ஆம் அதிபதிகள் சம்பந்தம்

மிதுன லக்னம் 5-ஆம் அதிபதி சுக்கிரன் 7-ஆம் அதிபதி குரு. இந்த காதல் ஜோடி களில் ஒருவர் மட்டும், இன்னொருவர்மேல் வெகு அன்புடன் உயிரையே கொடுக்கும் அளவிற்கு வெகு ப்ரியமாகி இருப்பார். அடுத்த காதல் பார்ட்டனர் அந்த அளவிற்கு மிக பாசமாக இருப்பார் என்று சொல்ல இயலாது.

அந்த ஒரு பார்ட்டனர்தான், திருமணத்தை இழுத்துக்கட்டி செய்யவேண்டும். இவர்கள் திருமணம் வெளியூர், வெளிநாடு, ஆடம்பர மாக அல்லது ஓடிப்போய் திருமணம் செய்யும் நிலையில் இருக்கும். எனினும் கூடியவரை அனுசரித்து காலம் கடத்துவர். காதல் கல்யாணம் ஓரளவு வெற்றியே தரும்.

கடக லக்னம்

சனி, செவ்வாய் சம்பந்தம்

உங்களுக்கு சனி, 7, 8-ன் அதிபதி. செவ்வாய், 5, 10-ன் அதிபதி. எனவே இங்கு கூடுதலாக 5, 7-ஆம் அதிபதிகள் சம்பந்த மும் உண்டாகி காதல் விஷயத்தை வலுவாக்கு கிறது. இவர்களுக்கு தொழில் செய்யும் இடத் தில் அல்லது உறவினர் திருமண நேரத்தில், அல்லது ஒரு சண்டையில் அல்லது நண்பர்கள் அறிமுகம்மூலம் காதல் ஏற்பட லாம். சிலருக்கு குலகௌரவம் பாழாகும் நிலை ஏற்படும் நிலை வந்தாலும், அழிச் சாட்டியமாக நின்று கல்யாணம் செய்து கொள்வர். அவ்வப்போது கைகலப்பு வரை சண்டை வந்தாலும், திருமண உறவு நீண்டகாலம் நீடித்து நிற்கும்.

புதன்+கேது

கடக லக்னத்துக்கு புதன் 3 மற்றும் 12-ன் அதிபதி. இந்த அமைப்பு இருப்பவர்களுக்கு, காதல் என்பது கண்டிப்பாக பயணத்தில்தான் உண்டாகும். சரி; காதல் வந்தாச்சு. பிறகு வீட்டில் சொல்-, எல்லாரையும் பேசி வழிக்கு கொண்டுவந்து, திருமணம் முடிக்கலாம் என்ற கதையே கிடையாது. லவ் வந்தாச்சு, நெக்ஸ்ட் மினிட் கல்யாணம். அதற்கடுத்த மினிட் புள்ளைதான். காதல் கல்யாணம் சுபம். இந்த லக்னக்காரர்களின் அவசரம் தெரிந்துதான் சனி+செவ்வாய்= 5+7 எனும் அமைப்பு உள்ளது.

சிம்ம லக்னம் செவ்வாய், சனி இணைவு

செவ்வாய் சிம்ம ராசிக்கு 4, 9-ன் அதிபதி.

சனி, 6, 7-ன் அதிபதி. இவர்களின் காதல் வேலை செய்யும் இடத்தில், வேலை மீட்டிங்கில், கோவிலில், பள்ளியில், கல்லூரியில், பெற்றோரின் உறவினருடன் காதல் பூக்கும். பூத்த காதல் கல்யாண மாலையாக மாறுமா எனில், இந்த சிம்ம லக்னத் தாரின் வெறிகொண்ட ஈகோ காதலை உருப்பட விடாது. பாதியிலேயே பிச்சு போட்டு விடும். சரி, எக்குத்தப்பில் காதல் கல்யாணம் நடந்துவிட்டாலும், ஏதோ ஒரு உப்பு சப்பில் லாத காரணம் பொருட்டு, விவாகரத்து வழக்கு தொடர்ந்துவிடுவர். சிம்ம லக்னக் காரர்கள் காதல் வந்தாலும், நன்றாக பேசி முடிவெடுத்து பின் திருமணம் நோக்கி நகருங்கள்.

புதன்+கேது

உங்களுக்கு புதன் 2, 11-ன் அதிபதி. இந்த அமைப்பில் உண்டாகும் காதலில் ஒருவர் அரசியல்வாதியாகவோ அல்லது சமையல் கலைஞராகவோ அல்லது ஓவியராகவே இருப்பார். இது இல்லாவிட்டால், அவருக்கு அது இரண்டாவது திருமணமாக இருக்கும். எனவே இவர்களின் காதல் திருமணம் என்பது பெரும் போராட்டத்திற்குபின் நடக்கும்.

5. 7-ஆம் அதிபதிகள் இணைவு

சிம்ம லக்னத்திற்கு 5-ஆம் அதிபதி குரு. 7-ஆம் அதிபதி சனி. இதில் 5-ஆம் அதிபதி குரு 6-ல் நீசமடையும் நிலையுண்டு. இந்த காதல் சண்டையினால் உண்டாகும். அல்லது "லவ் பண்ணாதான் ஆச்சு' என்கிற வலுக் கட்டாய காதலாகவும் இருக்கும். இந்த காதல் கல்யாணத்தில் முடிந்தாலும் அல்லது கல்யாணத்திற்குமுன்பே கூட, வம்பு, வழக்கில் கொண்டுபோய்விடும். அல்லது சில சமயம் விபத்து அல்லது சம்பவமும் நடக்க வாய்ப்பு ஏற்பட்டுவிடும். இந்த அமைப்பு கல்யாணத்தில் முடிந்தாலும், ஜோடியில் ஒருவர் ரொம்ப பொறுமையாக இருந்தால் மட்டுமே திருமணம் நீடிக்கும்.

கன்னி லக்னம்

சனி, செவ்வாய் சம்பந்தம்

கன்னி லக்னத்திற்கு சனி 5, 6-ன் அதிபதி. செவ்வாய், 3, 8-ன் அதிபதி. இந்த அமைப்பு காதலிக்க ஆரம்பித்தால், வெறிகொண்டு காதலிப்பர். சிலசமயம் இந்த காதலில் சில, ஒரு தலைக்காதலாக இருக்கவும் வாய்ப்புண்டு. அட, ஒரு தலைக்காதல் அல்லது பல தலை காதல் என எதுவாக இருந்தாலும், முடிவு அடியும் உதையும் சம்பவமுமாக அமைந்து விடும்.

புதன்+கேது இணைவு

உங்களுக்கு புதன் லக்ன மற்றும் 10-ஆம் அதிபதி. எனவே வேலை, தொழில் செய்யும் இடத்தில் காதல் துளிர்த்து, கல்யாணத்தில் முடியும் வாய்ப்புள்ளது.

5, 7-ஆம் அதிபதிகள் சம்பந்தம்

5-ஆம் அதிபதி சனி. 7-ஆம் அதிபதி குரு. இதில் 7-ஆம் அதிபதி குரு, சனி வீட்டில் நீசமடைவார். சிலசமயம் சனி, குரு பரிவர்த் தனை உண்டானால் குரு நீசம் தவிர்க்கப்படும். குரு நீசபங்கம் ஆகியிருந்தால், காதல் கல்யாணத்தில் முடியும். அவ்விதம் நீசபங்கம் ஆகாவிட்டால், தாய், தாய்மாமன், குலம், வேலை, கடன், பிறந்த இடமென இவை காரண மாக, காதல் கசந்து முடிந்துவிடும்.

bala110425
இதையும் படியுங்கள்
Subscribe