துலா லக்னம்
சனி+செவ்வாய் இணைவு
5, 7-ன் அதிபதி. துலா லக்னத்துக்கு சனி 4, 5-ன் அதிபதி. செவ்வாய், 2, 7-ன் அதிபதி. இரு வகையில் காதல் திருமணம் கொடுக்கும். சனி, செவ்வாய் இணைவு மற்றும் 5, 7-ன் சம்பந்தம் ஆக இந்த அமைப்புள்ளவர்கள், கண்டிப்பாக காதல் திருமணம் செய்துகொள்வர். சனி துலா லக்னத்தின் யோகாதிபதி. எனவே இந்த காதல் திருமணத்தில் முடிந்து, அமோகமாகவே இருப்பர்.
புதன்+கேது
புதன் உங்களுக்கு 9, 12-ன் அதிபதி. இந்த இணைவு இருப்பின், காதல், ஓடிப்போய் கல்யாணம் பண்ணச் சொல்லும்.
விருச்சிக லக்னம் சனி, செவ்வாய் இணைவு
சனி 3, 4-ன் அதிபதி. செவ்வாய் 1, 6-ன் அதிபதி. சிறு தூரப் பயணம், வேலை செய்யுமிடம், சண்டை, இளைய உடன்பிறப்புமூலம் காதல் வர வாய்ப்பு உள்ளது. இந்த காதல் சிலசமயம் ஞாபக மறதி காரணமாக சண்டை வந்து பிரியவும் கூடும். இருவரில் ஒருவர் பொறுமையாக இருந்தால், காதல் நீடித்து கல்யாணத்தில் சுபமாகும். இல்லையெனில் அடி நிச்சயம் உண்டு.
புதன்+கேது
புதன் 8 மற்றும் 11-ஆம் அதிபதி. இந்த புதன், இரகசிய கிரகமான கேதுவுடன் சேரும்போது, நிறைய இரகசிய காதல்களை கவனியுங்கள்; ஒருமையில் அல்ல, பன்மையில் காதல்களைத் தருவார். ஒரு காதல் போயின் இன்னொரு காதல் என போய்க்கொண்டே இருப்பார்கள். கல்யாணமும் அப்படித்தான், நிறைய கல்யாணம் பண்ணுவார்கள். இவர்களுக்கு புதன், மாங்கல்யகாரகன் மற்றும் பெருக்கத்துக்குரியவர். எனவே காதல், கல்யாணம் எல்லாம் ஒரு மேட்டரே கிடையாது. சும்மா ஒரு பொழுது போக்குத்தான்.
5+7-ன் அதிபதி சம்பந்தம்
விருச்சிக லக்னத்துக்கு 5-ஆம் அதிபதி குரு. 7
துலா லக்னம்
சனி+செவ்வாய் இணைவு
5, 7-ன் அதிபதி. துலா லக்னத்துக்கு சனி 4, 5-ன் அதிபதி. செவ்வாய், 2, 7-ன் அதிபதி. இரு வகையில் காதல் திருமணம் கொடுக்கும். சனி, செவ்வாய் இணைவு மற்றும் 5, 7-ன் சம்பந்தம் ஆக இந்த அமைப்புள்ளவர்கள், கண்டிப்பாக காதல் திருமணம் செய்துகொள்வர். சனி துலா லக்னத்தின் யோகாதிபதி. எனவே இந்த காதல் திருமணத்தில் முடிந்து, அமோகமாகவே இருப்பர்.
புதன்+கேது
புதன் உங்களுக்கு 9, 12-ன் அதிபதி. இந்த இணைவு இருப்பின், காதல், ஓடிப்போய் கல்யாணம் பண்ணச் சொல்லும்.
விருச்சிக லக்னம் சனி, செவ்வாய் இணைவு
சனி 3, 4-ன் அதிபதி. செவ்வாய் 1, 6-ன் அதிபதி. சிறு தூரப் பயணம், வேலை செய்யுமிடம், சண்டை, இளைய உடன்பிறப்புமூலம் காதல் வர வாய்ப்பு உள்ளது. இந்த காதல் சிலசமயம் ஞாபக மறதி காரணமாக சண்டை வந்து பிரியவும் கூடும். இருவரில் ஒருவர் பொறுமையாக இருந்தால், காதல் நீடித்து கல்யாணத்தில் சுபமாகும். இல்லையெனில் அடி நிச்சயம் உண்டு.
புதன்+கேது
புதன் 8 மற்றும் 11-ஆம் அதிபதி. இந்த புதன், இரகசிய கிரகமான கேதுவுடன் சேரும்போது, நிறைய இரகசிய காதல்களை கவனியுங்கள்; ஒருமையில் அல்ல, பன்மையில் காதல்களைத் தருவார். ஒரு காதல் போயின் இன்னொரு காதல் என போய்க்கொண்டே இருப்பார்கள். கல்யாணமும் அப்படித்தான், நிறைய கல்யாணம் பண்ணுவார்கள். இவர்களுக்கு புதன், மாங்கல்யகாரகன் மற்றும் பெருக்கத்துக்குரியவர். எனவே காதல், கல்யாணம் எல்லாம் ஒரு மேட்டரே கிடையாது. சும்மா ஒரு பொழுது போக்குத்தான்.
5+7-ன் அதிபதி சம்பந்தம்
விருச்சிக லக்னத்துக்கு 5-ஆம் அதிபதி குரு. 7-ஆம் அதிபதி சுக்கிரன். இதில் 7-ஆம் அதிபதி சுக்கிரன் 5-ல் உச்சமடைவார். இவ்வமைப்பு இந்த ஜோடியில், ஒருவரை தீவிர காத-ல் ஆழ்த்தும். காதல் இல்லையேல் சாதல் எனும் ரேஞ்சுக்கு இருப்பர். இதில் ஒருவர் அதிதீவிர காதல் கொண்டிருக்க, இன்னொருவர் எப்போதடா பிச்சுக்கிட்டு ஓடலாம் என்றிருப்பார். இந்த காதல் கல்யாணம் எல்லாம் 50 சதவிகித வெற்றி மட்டுமே தரும்.
தனுசு லக்னம் சனி+செவ்வாய் சம்பந்தம்
தனுசு லக்னத்துக்கு, சனி 2, 3-ன் அதிபதி. செவ்வாய் 5, 12-ன் அதிபதி. சிறுதூர பெரிய தூரப் பயணங்களில், பொழுதுபோக்கு இடங்களில், விளையாட்டு அல்லது உடற்பயிற்சி இடங்களில் காதல் துளிர்க்கும் வாய்ப்புண்டு. இவர்கள் காதலை பற்றி பேசுவதைவிட குடும்பம், காசு பணம் பற்றி ரொம்ப பேசுவார்கள். இவர்கள் காதல் ஓடிப்போய் கல்யாணம் செய்துவைக்கும். அல்லது பேசி பேசியே பிரியவும் கூடும்.
புதன்+கேது இணைவு
புதன் உங்களுக்கு 7, 10-க்குரியவர். கேது+புதன் சேர்க்கை காதலை உண்டாக்கும். எனினும் வரும் காதல் கணக்கு பார்த்து வரும். காத-த்தால், அதனால் நமக்கு கௌரவம் மேம்படுமா என ரொம்ப யோசிப்பார்கள். அதனால் இவர்கள் காதல் கண்டபடி இராமர் செலக்டிவாக இருக்கும். அதன்பொருட்டு, காதல் என்பதன் அடுத்த கட்டமான கல்யாணத்திற்கு, அதனை நகர்த்திச்செல்வது வெகு எளிதாக இருக்கும். இருவரும் புரிந்துணர்வோடு நடந்துகொள்வர்.
5, 7-ஆம் அதிபதிகள் சேர்க்கை
தனுசு லக்ன 5-ஆம் அதிபதி செவ்வாய். 7-ஆம் அதிபதி புதன். ஜாதகப்படி எந்த இடத்திலும் செவ்வாய், புதன் இணைவு விசேஷமில்லை. மல்யுத்தம்போல் சண்டை போடுவார்களாம். எனவே இந்த இணைவு இருந்து, எனக்கு தப்பாக காதல் வந்தாலும், ஒருத்தரை ஒருத்தர் அடித்துக்கொண்டு பிரிந்து போய்விடுவர். அனேகமாக இந்த காதல், கல்யாணம்வரை போகுமா என்பது சந்தேகமே!
மகர லக்னம் சனி, செவ்வாய் இணைவு
மகர லக்னத்திற்கு சனி 1, 2-ன் அதிபதி. செவ்வாய் 4, 11-ன் அதிபதி. இவர்களின் காதல் உணவு அருந்தும் இடம், வங்கி, கல்வி கூடங்கள், அரசியல் சார்ந்து அல்லது வெளிநாடு சம்பந்தம் என இந்தவகையில் ஏற்படும். இதில் சிலர், இரண்டாவது திருமணமாகவும் இருக்கலாம். இவரது குடும்பத்தில் இவரது தாயாரும், மூத்த சகோதரரும் எதிர்க்கக்கூடும். எனினும் திருமணம் முடிந்து குடும்பத்தை நல்ல விதமாகவே நடத்துவர்.
புதன்+கேது
மகர லக்னத்திற்கு புதன் 6, 9-ன் அதிபதி. இவருடன் கேது சம்பந்தப்படும்போது, வேலை செய்யும் இடம், உயர்கல்வி பயிலும் இடம் என இவ்விடங்களில் காதல் தோன்றும். இவர்களது திருமணம் நடந்தாலும், பிரிந்தாலும் இவர்களது தந்தையே காரணமாக இருப்பார்.
5, 7-ஆம் அதிபதி சம்பந்தம்
5-ஆம் அதிபதி சுக்கிரன் 7-ஆம் அதிபதி சந்திரன். இந்த 7-ஆம் அதிபதி சந்திரன், 5-ஆம் வீடான ரிஷபத்தில் உச்சமடைவார். எனவே இந்த காதல் உன்னதமானதாக இருக்கும். இவர்கள் குடும்பத்தார் அனைவரும் சேர்ந்து, அட்சதைப் போட்டு, திருமணம் நடத்தி வைப்பர். கல்யாணத்திற்கு பிறகும் தொடர்ந்து காத-ப்பார்கள்.
கும்ப லக்னம் சனி, செவ்வாய் சேர்க்கை
கும்ப லக்னத்துக்கு சனி 12, 1-ன் அதிபதி. செவ்வாய் 3, 10-ன் அதிபதி. இந்த இணைவு, அவசரக் காதலை, அடிக்கடி உண்டாக்கும். அதுபோல் காத-ல் கொஞ்சம் கோபம், கௌரவக் குறைச்சல், ஏதாவது கேள்வி கேட்டாலும் அந்த நிமிடமே காதல் டமால்தான். போட்டு உடைத்துவிட்டு, அடுத்த காதலை தேடி போய்க்கொண்டே இருப்பார்கள். இவர்கள் காதல் மிகுந்த ஈகோவால் அடிக்கடி பிரியும். திருமணம் நடந்தாலும், எந்த நேரமும் கோர்ட் படியேற தயாராக இருப்பார்கள்.
புதன்+கேது
கும்ப லக்னத்துக்கு புதன் 5 மற்றும் 8-ன் அதிபதி. இந்த காதல் நன்றாக இருக்கும்வரை மிக இனிக்கும். கொஞ்சம் ஏறுமாறாக செயல்கள் தென்பட்டால், அடுத்த நொடி சம்பவம்தான். காதலர்களுக்குள் தள்ளிவிட்டு கொலை, விஷம் கொடுத்து சாவு என்ற வகை எல்லாம் இதில்தான் அடங்கும்.
5, 7-ன் சம்பந்தம்
கும்ப லக்ன 5-ஆம் அதிபதி புதன். 7-ஆம் அதிபதி சூரியன். எப்போதும் சூரியனத் தொடர்ந்து அல்லது கூடவேதான் புதன் வருவார். எனவே அனேக ஜாதகங்களில் இந்த அமைப்பு இருப்பதை காணலாம். இவர்களின் காதல், கல்யாணத்தில் நிறைவுபெற, நிறைய எதிர்ப்புகளை, சண்டைகளை சந்திக்க வேண்டியிருக்கும். ஒருசிலருக்கு போலீஸ் ஸ்டேஷனில் திருமணம் நடக்கும். நிறைய தடைகளுக்குபிறகு முடிந்த கல்யாணத்தில், ஒருவரையொருவர் அனுசரித்து வாழ்வார்.
மீன லக்னம் சனி, செவ்வாய் இணைவு
மீன லக்னத்துக்கு சனி 11, 12-ன் அதிபதி. செவ்வாய் 2, 9-ன் அதிபதி. இவர்களின் காதல் உயர்கல்வியின்போது, வெளிநாட்டில் கல்வி கற்கும்போது உண்டாகும். வெளியூர் அரசியல் கூட்டங்களில் பார்த்து காதல் வரக்கூடும். இவர்களின் திருமணம், வெளியூர் வெளிநாட்டில் நடக்கும். சிலர் ஒரு கோவி-ல், ஓடிப்போய் திருமணமும் செய்துகொள்வர். சிலர் அரசியல் தலைவரின் தலைமையில் திருமணம் செய்வர். சிலருக்கு 2-ஆம் மணமாக அமையும்.
புதன்+கேது
மீன லக்னத்துக்கு புதன் 4, 7-ன் அதிபதி. இது கல்வி அல்லது வணிக சந்திப்பில் உதிக்கும் காதலாக இருக்கும். இந்த காதலுக்கு இவர்களின் தாயார் இணைக்க அல்லது பிரிக்க முற்படுவார். திருமணம் ஆனால் இணைபிரியாமல் நன்கு வாழ்வார்.
5, 7-ஆம் அதிபதிகள் இணைவு
மீன லக்னத்துக்கு 5-ஆம் அதிபதி சந்திரன். 7-ஆம் அதிபதி புதன். இந்த புதன், சந்திரன் இணைவு காதலை உண்டாக்கும். அனேகமாக கல்வி கற்கும்போது காதல் வர வாய்ப்புள்ளது. காதல், கல்யாணம் என எல்லாமே துரிதகதியில், வேக வேகமாக நடக்கும். ஒருவர் அவசரக்காரராகவும், ஒருவர் புத்திசா-யாகவும் இருப்பர்.
இந்த காதலை ஏற்படுத்தும் அமைப்புகள் இருந்தால் காதல் வரும்தான். அதற்கு வயதும் ஒரு விஷயமாக எடுத்துக்கொள்ளவேண்டும். சிறு குழந்தைகள் ஜாதகத்தில் இவ்வமைப்பை கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது இந்த காதல், திருமணமாக முடிய தசாபுக்திகள் துணைபுரியவேண்டும்.
ராசி, லக்னத்திற்கு ராகு- கேது எனும் நாக தோஷம், (1-7, 2-8) இருந்தால் கலப்பு கல்யாணம் நடக்கும். குரு சம்பந்தம் இருப்பின், உங்கள் இனத்தில் சற்று வேறுமொழி பேசுபவர்களாக காதல் கல்யாணம் நடக்கும்.
ஆதிகால ஜோதிடம், இருவர் மனம் ஒத்துப்போன பிறகு, ஜாதகம் பார்க்கக்கூடாது என்று அறிவுறுத்துகிறது.
இவ்விதம் வீட்டில் சொல்லாமல் கொள்ளாமல் திருமணம் செய்து கொண்டவர்கள், தர்மபுரி, சேலம், அதிய மான் கோட்டை சென்றாயப் பெருமாள் ஆலயம் சென்று, வணங்கி, அங்கு மாலை மாற்றிக்கொண்டால் மகிழ்ச்சியான மண வாழ்க்கை அமைவதுடன் ஜாதக தோஷங் களும் நீங்கிவிடும்.
செல்: 91 73056 04432