எந்தெந்த மாதத்தில் திருமண வரன் அமையும்? 12 ராசிக்காரர்களுக்கும் -கடுக்கரை- மா. ஆறுமுகப் பெருமாள்

/idhalgal/balajothidam/which-month-will-groom-be-found-12-zodiac-signs-kadukkarai-ma-arumuga-perumal

ண வாழ்வு, ராசியான மாதம், வரன்வரும் திசை, நல்ல நேரம், வரும் வரனின் நாம எழுத்து அதிக நற்பலன்தரும் பெயர் அமைப்பு எப்படி. திருமண சூட்சுமங்கள் பண்டய நாட்களின் அனுபவ ஆய்வு திரைப்பட பாடல்- ஒன்றை தேவயானி பாடுவார். "இவன் தானா, இவன்தானா! நான் எதிர் பார்க்கும் மணவாளன் இவன்தானா.'' பெண் களின் எதிர்பார்ப்பின் மேம்பாடு பொதுவானது.

ஆண்களின் பாடல். "என்னவளே, என்னவளே என் இதயத்தை தொலைத்துவிட்டேன். அது தொலைந்த இடம் எந்த இடம்.'' "நான் இங்கு சுகமே. நீ அங்கு சுகமா'' இப்படியாக பல சோக கீதங்கள் கேட்டுள்ளோம்.

இப்படிப்பட்ட சூழ் நிலையை கருத்தில் கொண்டு அக்கால சாஸ்திர முன்னோடி கள் தந்த அற்புத ஆய்வினை பார்ப்போம். திருமணம் என்றால் லக்னத்தை விட சந்திரனின் பேருதவி மிக இன்றியமை யாதது. சப்தம ஸ்தானத்தில் சந்திரனுக்கு 7-ல் எந்த கிரகநாதர்கள் இடம் பிடித்துள்ளார் களோ அதற்கு ஏற்ப வரனும், திருமணத்தின் தன்மையும் வெளிப்படும

ண வாழ்வு, ராசியான மாதம், வரன்வரும் திசை, நல்ல நேரம், வரும் வரனின் நாம எழுத்து அதிக நற்பலன்தரும் பெயர் அமைப்பு எப்படி. திருமண சூட்சுமங்கள் பண்டய நாட்களின் அனுபவ ஆய்வு திரைப்பட பாடல்- ஒன்றை தேவயானி பாடுவார். "இவன் தானா, இவன்தானா! நான் எதிர் பார்க்கும் மணவாளன் இவன்தானா.'' பெண் களின் எதிர்பார்ப்பின் மேம்பாடு பொதுவானது.

ஆண்களின் பாடல். "என்னவளே, என்னவளே என் இதயத்தை தொலைத்துவிட்டேன். அது தொலைந்த இடம் எந்த இடம்.'' "நான் இங்கு சுகமே. நீ அங்கு சுகமா'' இப்படியாக பல சோக கீதங்கள் கேட்டுள்ளோம்.

இப்படிப்பட்ட சூழ் நிலையை கருத்தில் கொண்டு அக்கால சாஸ்திர முன்னோடி கள் தந்த அற்புத ஆய்வினை பார்ப்போம். திருமணம் என்றால் லக்னத்தை விட சந்திரனின் பேருதவி மிக இன்றியமை யாதது. சப்தம ஸ்தானத்தில் சந்திரனுக்கு 7-ல் எந்த கிரகநாதர்கள் இடம் பிடித்துள்ளார் களோ அதற்கு ஏற்ப வரனும், திருமணத்தின் தன்மையும் வெளிப்படும். சந்திரனுடன் ராகு, 7-ல் கேது இருந்தால் திருமணம் அல்லலைத் தரும். சந்திரனுக்கு 7-ல் சனி அல்லது தீய கிரக நாதர்கள் இருந்தால் அதுவும் வில்லங்கம்தான். இவற்றிற் கெல்லாம் விடை தரும் சூட்சுமங்களை அறிவோம். வாழ்க்கைத் துணை வரும் திசை, நல்ல தமிழ் மாதம், எந்த நேரம், எந்த நாள் உகந்தது என பார்ப்போம். இன்னும் பல ஏதாவது பெயரின் முதல் எழுத்து இருந்தால், திருமண சுவைக்கு என்பதை பன்னிரு ராசிக்கும் பார்ப்போம்.

vv

மேஷம்

திருமணமாகும் தமிழ் மாதம்: வைகாசி, ஆவணி, மாசி ஆகியவை சிறப்பு. வரும் வரன் திசை: வடமேற்கு, வடக்கு ஆகியவை. மணநாள். கிழமை: ஞாயிறு, திங்கள், வியாழன் சிறப்பு. நேரம்: காலை 6.00 மணிமுதல் 7.00 மணிவரையிலும்; 8.00 மணிமுதல் 9.00 மணிவரையிலும் வரும் வரனின் நாம எழுத்து. P-M.R.D-T. (அதாவது பி. பெருமாள், எம். மாதவன், ஆர்.ராஜேந்திர், டி. துரைசாமி, டி.தமிழ் செல்வன்.) இவ்வாறு (உதாரணம் இது).

ரிஷபம்

மாதம்: வைகாசி, ஆனி, கார்த்திகை, பங்குனி ஆகியவை. வரன் வரும் திசை: கிழக்கு, தென்கிழக்கு. மணநாள் கிழமை: புதன், வெள்ளி, ஞாயிறு. நேரம்: காலை 6.00 மணிமுதல் 7.00 மணிவரையிலும்; 7.00 மணிமுதல் 9.00 மணிவரையிலும் வரும் வரனின் நாம எழுத்துக்கள். வ.ம.ச.ங-ந. ஆகியவை உத்தமம்.

மிதுனம்

மாதம்: சித்திரை, ஆனி, ஆவணி, தை ஆகியவை. வரும் வரனின் திசை: மேற்கு, தெற்கு. கிழமைகள்: ஞாயிறு, திங்கள், புதன். நேரம்: காலை 6.00 மணிமுதல் 7.00 மணிவரையிலும்; 9.00 மணிமுதல் 10.00 மணிவரையிலும் வரும் வரனின் நாம எழுத்துக்கள். ம.ர.ஆ.ஓ.த. ஆகியவை உத்தமம்.

கடகம்

மாதம்: வைகாசி, ஆவணி, மாசி. வரன் வரும் திசை: வடக்கு, கிழக்கு. கிழமைகள்: ஞாயிறு, திங்கள், வியாழன் சிறப்பு.

நல்ல நேரம்: காலை 6.00 மணிமுதல் 7.00 மணிவரையிலும்; 8.00 மணிமுதல் 10.00 மணிவரையிலும் நாம எழுத்துக்கள். ஃ.ஏ.ங.இ. ஆகியவை உத்தமம். ஜாதகத்தில் கடகத்திற்கு ஏழில் சனிபகவான் இருந்தால், சனிபகவானை வணங்கவும்; தடை அகலும்.

சிம்மம்

மாதம்: வைகாசி, ஆனி, ஆவணி, மாசி, பங்குனி. வரன் வரும் திசை: வடக்கு, தென்கிழக்கு, ஈடேறும் மணநாள். கிழமைகள்: ஞாயிறு, புதன், வியாழன் ஆகியவை. நல்ல நேரம்: காலை 8.00 மணிமுதல் 10.30 மணிவரையிலும் வரனின் நாம எழுத்துக்கள். ய.ஃ.த.ர.ந.உ.ஓ ஆகியவை உத்தமம்.

கன்னி

மாதம்: ஐப்பசி, கார்த்திகை, தை, பங்குனி. வரன் வரும் திசை: தெற்கு, கிழக்கு ஆகியவை. மணநாள். கிழமைகள்: திங்கள், வெள்ளி. நல்ல நேரம்: காலை 6.00 மணிமுதல் 8.00 மணிவரையிலும்; 9.00 மணிமுதல் 10.00 மணிவரையிலும் வரனின் நாம எழுத்துக்கள் ட.க.வ.ங.ஞ. ஆகியவை உத்தமம்.

துலாம்

மாதம்: வைகாசி, ஆனி, ஆவணி. திசை: வடக்கு, வடகிழக்கு கிழமைகள்: ஞாயிறு, புதன், திங்கள். நல்ல நேரம்: காலை 6.00 மணிமுதல் 10.30 மணிவரை நாம எழுத்துக்கள். க.ர.ஐ.ய. ஆகியவை உத்தமம்.

தனுசு

மாதம்: ஆனி, ஐப்பசி, கார்த்திகை, மாசி ஆகியவை. திசை: வடக்கு, தெற்கு. கிழமை: ஞாயிறு, திங்கள், புதன், வெள்ளி ஆகியவை நாம எழுத்துக்கள். த.ங.ந.ட.ஊ ஆகியவை உத்தமம்.

மகரம்

மாதம்: ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி ஆகியவை. திசை: மேற்கு, தெற்கு. கிழமைகள்: புதன், வெள்ளி. நல்ல நேரம்: காலை 6.00 மணிமுதல் 7.00 மணிவரையிலும்; 9.00 மணிமுதல் 10.00 மணிவரையிலும் வரனின் நாம எழுத்துக்கள். ஆ.இ.எ.ஏ.த. ஆகியவை உத்தமம்.

கும்பம்

மாதம்: ஆனி, ஆடி, ஆவணி, மாசி ஆகியவை. திசை: மேற்கு, வடக்கு. கிழமைகள்: திங்கள், புதன், வியாழன் நேரம்: காலை 6.00 மணிமுதல் 7.00 மணிவரையிலும்; 9.00 மணிமுதல் 10.30 மணிவரையிலும் நாம எழுத்துக்கள். ஈ.ஒ.ப.க.ங. ஆகியவை உத்தமம்.

மீனம்

மாதம்: வைகாசி, ஐப்பசி, தை, பங்குனி ஆகியவை. வரும் வரன் திசை: வடக்கு, கிழக்கு. கிழமைகள்: திங்கள், புதன். நேரம்: காலை 6.00 மணிமுதல் 7.00 மணிவரையிலும்; 9.00 மணிமுதல் 10.00 மணிவரையிலும் நாம எழுத்துக்கள். ச.த.ய.ஃ.ஞ. ஆகியவை உத்தமம்.

செல்: 93801 73464

bala130625
இதையும் படியுங்கள்
Subscribe