இந்த வருடம் பள்ளித் தேர்வுகள் முடிந்து அடுத்து என்ன மேற்கல்வி பயிலலாம் என்று மாணவர்களும் பெற்றோரும் ஆலோசித்து செயல்படவேண்டிய காலகட்டமிது.
"கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சைப் புகினும் கற்கை நன்றே.'
ஒருவர் கல்விகற்கப் பணமில்லாவிட்டாலும், பிச்சை எடுத்தாவது படித்து தன் அறிவை வளர்த்துக்கொண்டு, தான் கற்ற கல்விமூலம் தொழில்செய்து உயர்வு பெறவேண்டுமென்று, கல்வியின் முக்கியத்துவத்தை ஔவையார் தெளிவாகக் கூறியுள்ளார்.
இன்றைய காலகட்டத்தில் ஒருவர் தான் விரும்பிய கல்வியை, விரும்பிய கல்விநிலையங்களில் சேர்ந்து படிக்கமுடியாத சூழல் காணப்படுகிறது. இதற்குக் காரணம் கல்வி ஒரு வியாபாரப் பொருளாகவும், கல்வி நிலையங்கள் வியாபாரத் தலங்களாகவும் மாறி விட்டன. ஒவ்வொரு தொழில்துறை சார்ந்த கல்விக்கும் விலையை நிர்ணயம்செய்து விற்பனை செய்துகொண்டிருக்கிறார்கள்.
"கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக'
என்று வள்ளுவர் கூறிய,படி இன்றைய நாளில் ஒருவர் தான் கற்ற கல்விக்குரிய தொழிலைச் செய்து வாழ்வது சிரமமாகிவிட்டது. ஆரம்பக் கல்விமுதல் ஆராய்ச்சிக் கல்விவரை பல லட்ச ரூபாய் செலவுசெய்து படித்தாலும், அந்த படிப்பிற்கேற்ற வேலை, தொழில் செய்து வாழ்கிறார்களா என்றால், பெரும்பாலும் இல்லை என்று தான் கூறுகிறார்கள். பலருக்குத் தாங்கள் படித்தது ஒன்றாகவும், வாழ்க்கைக்காக செய்யும் தொழில் வேறாகவும் உள்ளது.
"மாடுதான் ஆனாலும் ஒரு போக்குண்டு
மனிதனுக்கு அவ்வளவுந் தெரியாதப்
இந்த வருடம் பள்ளித் தேர்வுகள் முடிந்து அடுத்து என்ன மேற்கல்வி பயிலலாம் என்று மாணவர்களும் பெற்றோரும் ஆலோசித்து செயல்படவேண்டிய காலகட்டமிது.
"கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சைப் புகினும் கற்கை நன்றே.'
ஒருவர் கல்விகற்கப் பணமில்லாவிட்டாலும், பிச்சை எடுத்தாவது படித்து தன் அறிவை வளர்த்துக்கொண்டு, தான் கற்ற கல்விமூலம் தொழில்செய்து உயர்வு பெறவேண்டுமென்று, கல்வியின் முக்கியத்துவத்தை ஔவையார் தெளிவாகக் கூறியுள்ளார்.
இன்றைய காலகட்டத்தில் ஒருவர் தான் விரும்பிய கல்வியை, விரும்பிய கல்விநிலையங்களில் சேர்ந்து படிக்கமுடியாத சூழல் காணப்படுகிறது. இதற்குக் காரணம் கல்வி ஒரு வியாபாரப் பொருளாகவும், கல்வி நிலையங்கள் வியாபாரத் தலங்களாகவும் மாறி விட்டன. ஒவ்வொரு தொழில்துறை சார்ந்த கல்விக்கும் விலையை நிர்ணயம்செய்து விற்பனை செய்துகொண்டிருக்கிறார்கள்.
"கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக'
என்று வள்ளுவர் கூறிய,படி இன்றைய நாளில் ஒருவர் தான் கற்ற கல்விக்குரிய தொழிலைச் செய்து வாழ்வது சிரமமாகிவிட்டது. ஆரம்பக் கல்விமுதல் ஆராய்ச்சிக் கல்விவரை பல லட்ச ரூபாய் செலவுசெய்து படித்தாலும், அந்த படிப்பிற்கேற்ற வேலை, தொழில் செய்து வாழ்கிறார்களா என்றால், பெரும்பாலும் இல்லை என்று தான் கூறுகிறார்கள். பலருக்குத் தாங்கள் படித்தது ஒன்றாகவும், வாழ்க்கைக்காக செய்யும் தொழில் வேறாகவும் உள்ளது.
"மாடுதான் ஆனாலும் ஒரு போக்குண்டு
மனிதனுக்கு அவ்வளவுந் தெரியாதப்பா
நாடுமெச்ச நரகமென்பார் சொர்க்க மென்பார்
நல்வினை தீவினை அறியமாட்டார்'
என்கிறார் அகத்தியர்.
ஐந்தறிவு கொண்ட ஒரு மாட்டுக்குக்கூட தான் உண்ணும் புற்களில் தனக்கு எது நல்லது- எது கெட்டதென்று அறிந்து உண்ணும். தனக்குத் தீமைதரும் பொருட்களை ஒதுக்கிவிடும். வண்டியில் கட்டினால் அதை இழுத்துச் செல்லவேண்டும்; ஏற்றத் தில் கட்டினால் நீர் இறைக்க வேண்டும் என்பதைத் தன் அறிவால் அறிந்து அதற்குத் தகுந்தபடி செயல்படும். இந்த பூமியில் ஆறறிவு உள்ளவர்கள் என்று பெருமையாகக் கூறிக் கொள்ளும் மனிதர் கள் மட்டும், இருக்கிறதா- இல்லையா வென்று எவருக்கும் தெரியாத சொர்க்கம்- நரகம், விண்ணுலகம், அதில் வசிப்பவர் களைப் பற்றி, எல்லாம் அறிந்தவர்கள்போல பல கதைகளைப் பேசிக்கொள்கிறார்கள் என்கிறார்.
இனி, ஒருவன் தனக்கு நன்மைதரும் கல்வி, தொழிலை எப்படி அறிந்து கொள்வது என்பது பற்றிக் காண்போம்.
இன்றைய நாளில் 64 கலைகள் எனக் கூறப்படும் அனைத்தும் மனிதன் வாழ்வதற் கான தொழில்கள்தான். இன்னும் இவற் றைச் சார்ந்த உப தொழில்கள் என 576 கலைகள் உள்ளன. இந்த பூமியில் பிறக்கும் அனைவரும் இவற்றில் ஒரு தொழில் பற்றிய ஞானத்துடனும் திறமை யுடனும்தான் பிறக்கிறார்கள். அதை யறிந்து, அதற்குரிய கல்வியைக் கற்று, அந்தத் தொழிலை நடைமுறைவாழ்வில் செய்துவந்தால் வெற்றியை அடையலாம்.
ஒவ்வொரு குழந்தையும் பேச ஆரம்பித்த வுடன், அதற்கு அமைந்துள்ள இயல்பான அறிவை வெளிப்படுத்த முயற்சிக்கும். தன் கண்களில் காண்பதையெல்லாம் தெரிந்துகொள்ள முயலும். தான் பார்க்கும் ஒவ்வொன்றைப் பற்றியும் கேள்விகள் கேட்கும். இதையே சித்தர்கள் 'ஞானம் வெளிப்படும் காலம்' என்று கூறினர். பலர் குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்குத் தெளிவான விடைகூறத் தெரியாமல், 'எல்லாம் கடவுள் செயல்' என்று கூறி, அந்த குழந்தையின் ஞானத்தேடலைத் தடுத்துவிடுகின்றனர்.
குழந்தை விளையாடும்போது அது விரும்பும் பொம்மைகளைக் கொண்டும், ஆரம்பக்கல்வியில் அதற்கு ஏற்படும் ஈடுபாட்டைக் கொண்டும் அது எந்தத் துறையில் ஞானம் பெற்றுள்ளது என்பதை அறிந்துகொள்ள முடியும். அதற்கேற்ப படிக்கவைத்தால் அவர்கள் மேதைகளாக- பண்டிதர்களாக உயர்வார்கள். எதிர்கால வாழ்க்கை வளமானதாக அமைந்துவிடும்.
ஒரு குழந்தையின் பிறப்பு ஜாதகத்தில் கல்விக்கு உதாரண கிரகமாகக் கூறப்படும் புதனுடன் எந்த கிரகம் இணைந்துள்ளதோ அது சம்பந்தமான கல்வியைத் தேர்வு செய்தால், அந்தக் குழந்தைக்கு பிறப் பிலேயே அமைந்துள்ள ஞானமும் திறமையும் அபரிமிதமான சக்தியாக வெளிப்படும். கல்வியில் தடை ஏற்படாது.
ஒருவர் ஜாதகத்தில் கல்வி கிரகமான புதனுடன் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் இணைந்திருந்தால், அவற்றுள் எது வலிமையானதோ அந்த கிரகம் சார்ந்த கல்வியைத் தேர்வுசெய்து படித்தால், கல்வி தடைப்படாமல் உயர்ந்த நிலையை அடைவார்.
இனி, ஒருவர் பிறந்த ஜாதகத்தில் புதன் எந்த ராசியில் உள்ளதோ அதற்குரிய கல்வி என்னவென்று காண்போம்.
மேஷம்
ஒருவர் ஜாதகத்தில் மேஷ ராசியில் புதன் இருந்தால் ஏதாவதொரு தொழிற்கல்வி பயிலலாம். விவசாயம், அறுவை சிகிச்சை மருத்துவம், பல் மருத்துவம், ரத்தம் சம்பந்த மான மருத்துவம், புவியியல், பொறியியல் துறை, விளையாட்டுத்துறை, மின்சாரம், ஆயுதம், சமையல் கலை, பௌதீகம், இராணுவம், காவல்துறை, தீயணைப்புத் துறை, வனம், மலைசார்ந்த காவல் சம்பந்தமான கல்வி பயிலலாம்.
ரிஷபம்
ஜாதகத்தில் ரிஷபத்தில் புதன் இருந்தால் அழகுக்கலை, அலங்கார ஆபரணங்கள், உணவுப் பொருட்கள், நிர்வாகம், வங்கி, கருவூலம், பொருளாதாரம், கால்நடைத் துறை சம்பந்தமான கல்வி பயிலலாம்.
மிதுனம்
செய்தி மற்றும் தகவல் தொடர்புத்துறை, பத்திரிகைத்துறை, கல்வித்துறை, அஞ்சல்- தொலைபேசித்துறை, கணிதம், கணக் காளர், தணிக்கையாளர், வழக்கறிஞர், நீதித்துறை, ஆலோசகர், நவீன பொறியியல் துறை, மென்பொறியாளர், வாணிபம், வங்கி, விண்வெளித்துறை, தோட்டக்கலை சம்பந்தமான கல்வி பயிலலாம்.
கடகம்
விவசாயம், மருத்துவம், கடல், போக்கு வரத்து, கலைத்துறை, கல்வித்துறை, வணிகம், கப்பல், கலை, இலக்கியம், மொழி, உணவு சம்பந்தமான கல்வி பயிலலாம்.
சிம்மம்
பொறியியல், அறுவை சிகிச்சை மருத்துவம், இதயம், சித்த மருத்துவம், சமூகவியல், அரசு நிர்வாகம், அரசியல், தத்துவம், மக்கள் தொடர்பு, வனத்துறை சம்பந்தமான கல்வி கற்கலாம்.
கன்னி
கணக்காளர், தணிக்கையாளர், வணிக வியல், கணக்கியல், ஆசிரியர், வங்கி, எழுத்தர், நிர்வாக மேலாளர், விடுதி மேலாளர், கல்வித் துறை, நவீனகல்வி போன்றவை சார்ந்து படிக்கலாம்.
துலாம்
வங்கிப்பணி, நீதித்துறை, நிதித்துறை, பொருளாதாரம், திரைப்படம், தொலைக் காட்சி, இயல், இசை, நாடகம், நடிப்பு, அழகுக் கலை, அலங்காரம், ஆடை, ஆபரண வடிவமைப்பு, நெசவு சம்பந்தமாகப் பயிலலாம்.
விருச்சிகம்
பொறியியல், கனிமம், சுரங்கம், விவசாயம், மின்னணுவியல், கல்வி, தாதுப்பொருட்கள், தொல்பொருள்துறை, இரும்பு, நெருப்பு, உலைக்கூடம், ஆயுதங்கள், அறிவியல் சம்பந்தமான கல்வி பயிலலாம். அதேசமயம் கல்வியில் தடைகள் உண்டாகும்.
தனுசு
காடு, வனத்துறை, தோட்டத்துறை, வங்கி, சட்டம், நீதித்துறை, நிதித்துறை, கல்வித் துறை, ஆசிரியர், பொருளாதாரம், அணு மின்னியல், ஆயுதம் சம்பந்தமாகப் பயிலலாம்.
மகரம்
உணவு, ரசாயனம், திரவ மருந்து, எண்ணெய், பெட்ரோல், சுரங்கம், கனிமம், இரும்பு, விவசாயம், கட்டடக்கலை சம்பந்த மாக கல்வி பயிலலாம்.
கும்பம்
மனவியல் மருத்துவம், ஆராய்ச்சி, நிர்வாகம், ஆலோசகர், விண்வெளி, விமானம், தீயணைப்பு, தொல்பொருள், பொறியியல், சுரங்கம், உளவுத்துறை, அணு அறிவியல், பௌதிகம் சம்பந்தமான கல்வி கற்கலாம்.
மீனம்
கல்வித்துறை, மருத்துவம், நீதிமன்றம், நிதி, வங்கி, கடல், கப்பல், மீன்வளம், பொருளாதாரம், வணிகம், சட்டம், ஆலோசகர் தொடர்பான கல்வி பயிலலாம்.
மேற்கண்ட பலன்களுக்கு ராசி, லக்னம் என்று எதனையும் பார்க்கத் தேவையில்லை. ஒருவர் பிறப்பு ஜாதகத்தில் புதனுடன் வேறு கிரகங்கள் இணைந்திருந்தால் என்ன கல்வி கற்கலாம் என்பதைத் தொடர்ந்து காண்போம்.
தொடர்ச்சி அடுத்த இதழில்....
செல்: 99441 13267