சென்ற இதழ் தொடர்ச்சி...

ஒருவரது பிறப்பு ஜாதகத்தில் புதனுடன் மற்ற கிரகங்கள் இணைந்திருந்தால் என்ன கல்வி கற்கலாம் என்பதைக் காண்போம்.

புதன்+சூரியன்

ஒருவரின் பிறப்பு ஜாதகத்தில் புதன் கிரகத்துடன் சூரியன் இணைந்து ஒரே ராசியில் இருந்தாலும் அல்லது புதன் இருக்கும் ராசிக்கு 1, 5, 9-ஆவது திரிகோண ராசிகளில் சூரியன் இருந்தாலும் அவர் மின்னணுவியல், அறுவைசிகிச்சை மருத்துவம், கல்வித்துறை, அச்சுத்தொழில், தொலைதொடர்பு, பொதுநிர்வாகம், அரசியல், அரசுத்துறை உத்தியோகம் சம்பந்தமான கல்வி, செய்தித்துறை, ஆசிரியர், கணக்கியல், சம்பந்தமான கல்வி கற்கலாம்.

Advertisment

புதன்+சந்திரன்

ஒருவரின் பிறப்பு ஜாதகத்தில் புதன் கிரகத்துடன் சந்திரன் இணைந்து எந்த ராசியில் இருந்தாலும் அல்லது புதன் இருக்கும் ராசிக்கு 1, 5, 9-ஆவது ராசிகளில் சந்திரன் இருந்தாலும், நீர், திரவ மருந்து தொடர்பான கல்வி, விவசாயம், மருந்துப் பொருட்கள், பொது மருத்துவம், உணவு, மூலிகை, கலை, இலக்கியம், மொழி, தர்க்கம், வாதம், கடல், மீன்வளம், கப்பல் போக்கு வரத்து, கலைகள், கதை, காவியம் சம்பந்த மான கல்வி பயிலலாம்.

புதன்+செவ்வாய்

Advertisment

இயந்திரம், பொறியியல்துறை, விவசாயம், மருத்துவம் சார்ந்த கல்வி, அணு உலைக்கூடம், ஆயுதம், பூமி, காவல், இராணுவம், மின்னணுவியல், அறுவை சிகிச்சை மருத்துவம், போர்க்கருவிகள், கனிமம் சம்பந்தமான கல்வி பயிலலாம். இந்த ஜாதகருக்கு சகோதர சாபத்தால் கல்வியில் தடை ஏற்படலாம்.

புதன்+குரு

புதன் இருக்கும் ராசிக்கு 1, 5, 9-ஆவது ராசி களில் குரு இருந்தால், ஆசிரியர், எழுத்தர், கணிதம், தணிக்கையாளர், நீதித்துறை, அஞ்சல்துறை, செய்தி தகவல் தொடர்பு, தொலைபேசி, நிதி ஆலோசகர், வங்கி, நிர்வாகம், பொருளாதாரம் சம்பந்தமான கல்வி படிக்கலாம்.

புதன்+சுக்கிரன்

புதன் இருக்கும் ராசிக்கு 1, 5, 9-ஆவது ராசிகளில் சுக்கிரன் இருந்தால் அழகுக்கலை, ஆடை வடிவமைப்பு, பொன், கலைத்துறை, சினிமா, நடிப்பு, வங்கி, சுற்றுலா, கணக்கர், தணிக்கையாளர், வாகனம், கட்டடம் சம்பந்தமான கல்வி பயிலலாம்.

புதன்+சனி

சுரங்கம், கனிமம், இரும்பு, பெட்ரோல், எண்ணெய், ரசாயனம், பொறியியல், அரசியல், மக்கள் தொடர்பு, அச்சிடுதல், எரிவாயு சம்பந்தமான கல்வி பயிலலாம். பாமர சாபத்தால் கல்வியில் தடை உண்டாகலாம்.

d

புதன்+ராகு

ரசாயனம், மின்னணுவியல், தொழுநோய் மருத்துவம், தோல், அச்சு முதல், அணுமின் பொருட்கள், போர்க்கருவிகள், கலைக் கருவிகள், கலைத்தொழில்நுட்பம், வாகனம், இயந்திரம், தொல்பொருள் ஆராய்ச்சி, உளவுத்துறை, தடயவியல் தோல் சம்பந்த மான கல்வி பயிலலாம். வம்சத்தில் உண்டான சாபத்தினால் கல்வியில் தடை உண்டாக லாம். புத்தி மந்தமடையலாம்.

புதன்+கேது

இந்த இணைவு கல்வியில் தடையை உருவாக்கும். வானியல், ஜோதிடம், சித்த மருத்துவம் போன்ற கல்வி பயிலலாம். புதன்+சூரியன்+சந்திரன் சமூகவியல், பொருளாதாரம், அரசியல், நீர்ப்பாசனம், வாகனம், உணவு சம்பந்தமான கல்வி பயிலலாம்.

புதன்+சூரியன்+செவ்வாய்

புதன் இருக்கும் ராசிக்கு 1, 5, 9-ஆவது ராசிகளில் சூரியன், செவ்வாய் இருந்தால் பொறியியல், மருத்துவம், மின்னியல், காவல் துறை, இராணுவம், தீயணைப்புத்துறை, விவசாயம், சமையல், உலைக்கூடம், போர்க் கருவிகள், கட்டடக்கலை சம்பந்தமான கல்வி பயிலலாம். சகோதர சாபத்தால் கல்வியில் தடை உண்டாகலாம்.

புதன்+சூரியன்+குரு

புதன் இருக்கும் ராசிக்கு 1, 5, 9-ஆவது ராசிகளில் சூரியன், குரு இருந்தால் விஞ்ஞானம், சமூகவியல், பொறியியல், மருத்துவம், வருவாய்த் துறை உயர்பதவி, மக்கள் தொடர்பு, உயர்கல்வி, அரசியல் சம்பந்தமான கல்வி, நீதித்துறை, ஆசிரியர், மின்னணுவியல், தத்துவம் சம்பந்த மான கல்வி பயிலலாம்.

புதன்+சூரியன்+சுக்கிரன்

ஆடை, ஆபரணம், அழகுக்கலை கல்வி, கலைத்துறை, இசைக்கல்வி, நடிப்பு, பட்டு, சுற்றுலா, கால்நடை மருத்துவம், வங்கி, கணக்கர், தணிக்கைத் துறை, விடுதி நிர்வாகம், சமையல், உணவு, விசைத்தறி சம்பந்தமான கல்வி பயிலலாம்.

புதன்+சூரியன்+சனி

தொழிற்கல்வி, மின்னணுவியல், கணிப் பொறி, இரும்பு, கனிமப்பொருட்கள், சுரங்கம், தோல், செய்தித்துறை, அச்சு, வருவாய்த்துறை, பெட்ரோல், எரிவாயு, அரசு உயர்பதவிகள் சம்பந்தமான கல்வி பயிலலாம்.

புதன்+சூரியன்+ராகு

ரசாயனம், மின்னணுவியல், தொழுநோய் மருத்துவம், விண்வெளியியல், விமானத் தொழில்நுட்பம், விமானப் போக்குவரத்து, விமானி, புலனாய்வு, உளவுத்துறை, சினிமா தொழில்நுட்பம், அணுவியல், அணுஆயுதம், வெடிகுண்டு, விளையாட்டுத்துறை, தோல் சம்பந்தமான கல்வி பயிலலாம்.

புதன்+சூரியன்+கேது

சட்டத்துறை, பொது மருத்துவம், மருத்து வம் சம்பந்தமான கல்வி, மின்னணுவியல், மின்சாரப்பொருள் சம்பந்தமான கல்வி, நூற்பாலை, நெசவு, மூலிகை, தோட்டக்கலை சம்பந்தமான கல்வி பயிலலாம். தாய்மாமன் சாபத்தால் கல்வியில் தடை உண்டாகலாம். இளம்வயதிலேயே காதல் நிகழ்வுகள் உண்டாகலாம். புதன்+சந்திரன்+செவ்வாய் தொழிற்கல்வி, கப்பல், கடல், மீன்வளம் சம்பந்தமான கல்வி, மருத்துவம், மருந்துப் பொருள், சித்த மூலிகை, பூமி, விவசாயம், நெருப்பு, மின்துறை, சமையல் கலை சம்பந்த மான கல்வி பயிலலாம். வம்சத்தில் தொடரும் பெண் சாபத்தால் கல்வியில் தடை உண்டாகலாம்.

புதன்+சந்திரன்+குரு

சட்டம், நீதித்துறை, மருத்துவம்- அதனைச் சார்ந்த தொழிற்கல்வி, ஆசிரியர் கல்வித்துறை, நிர்வாகம், நிதி, பொருளாதாரம், ரசாயனம் சம்பந்தமான கல்வி பயிலலாம்.

புதன்+சந்திரன்+சுக்கிரன்

கலைகள், இலக்கியம், அழகுக்கலை, சமையல் கலை, வங்கி, கட்டடம், விடுதி நிர்வாகம், சுற்றுலாத்துறை, தையல்கலை, பட்டு, தொழில், ஆடை, ஆபரணம் வடிவமைப்பு, கட்டடக்கலை, விடுதி நிர்வாகம், போக்கு வரத்து, வாகனம் சம்பந்தமான கல்வி பயிலலாம்.

புதன்+சந்திரன்+சனி

கணிதம், மின்னணுவியல், கணிப்பொறி, இயந்திரங்கள், வாகனங்கள், போக்குவரத்து, கனிமவளம், கடல் ஆராய்ச்சி, இரும்பு, சுரங்கம் பத்திரிகை, தகவல் தொடர்பு, தபால், தந்தி, அச்சுக்கூடம், கணக்கர் சம்பந்தமான கல்வி பயிலலாம்.

புதன்+சந்திரன்+ராகு

கணக்கியல், வாணிபம், ரசாயணம், மின்னணுவியல், கடல், கப்பல், மீன்வளம் சார்ந்த தொழிற்கல்வி, வாகனத்தொழிற்கல்வி, அணு ஆயுதம், வெடிமருந்து, உளவுத்துறை, தொல்பொருள் ஆராய்ச்சி சம்பந்தமான கல்வி பயிலலாம். தண்ணீரில் கண்டம், கஷ்டம் உண்டாகும். விதவைப் பெண் சாபத்தாக்கம்.

புதன்+சந்திரன்+கேது

சட்டம், மின்சாரம், பொது மருத்துவம், மூலிகை மருத்துவம், தையல், நெசவு சம்பந்த மான கல்வி பயிலலாம். பெண் சாபத்தால் கல்வியில் தடை உண்டாகும். பெண்களால் பிரச்சினைகள் உண்டாகும்.

புதன்+செவ்வாய்+குரு

ஏதாவது ஒரு தொழிற்கல்வி, பூமி, பூகோளம், காவல், இராணுவம், விளையாட்டுத்துறை, ஆயுதங்கள், அணுசக்தி, ஆயுதம், மின்துறை, அறுவை சிகிச்சை மருத்துவம், ஆசிரியர், சட்டம், பொதுவான நிர்வாகம் சம்பந்தமான கல்வி பயிலலாம். கல்வியில் தடை ஏற்பட்டு, சிறிது காலத்திற்குப்பின்பு கல்வியைத் தொடர்ந்து கற்கும் நிலை ஏற்படும்.

புதன்+செவ்வாய்+சுக்கிரன்

கணிதம், கணக்கியல், பொருளாதாரம், நிர்வாகம், மின்துறை, சமையல், சட்டம், மருத்துவ உபகரணங்கள் சம்பந்தமான கல்வி பயிலலாம். கல்வியில் தடை ஏற்பட்டு, பின் கல்வியை தொடர்ந்து படிப்பார்.

புதன்+செவ்வாய்+சனி

தொழிற்கல்வி, ஆயுதக்கூடம், இயந்திரம், இரும்பு, நெருப்பு, அணு உலை, அணு மின்னியல், சம்பந்தமான கல்வி பயிலலாம். வம்சத்தில் உண்டான சகோதர- பங்காளி சாபத்தால் கல்வியில் தடை உண்டாகும்.

புதன்+செவ்வாய்+ராகு

ரசாயனம், தோல், விவசாயம், தொழிற்கல்வி பயிலலாம். வம்சத்தில் உண்டான சாபத் தாக்கத்தால் கல்வியில் தடை உண்டாகலாம்.

புதன்+செவ்வாய்+கேது

தொழிற்கல்வி, மின்சாரம், தோட்டக்கலை, தையல், நெசவு சம்பந்தமான கல்வி பயிலலாம். கல்வியில் தடை உண்டாகும்.

புதன்+குரு+சுக்கிரன்

நவீனமுறை புதுவகைக் கல்வி, அழகு, ஆடை, ஆபரணக் கலை சம்பந்தமான கல்வி, கலைகள், வங்கி, கணக்கர், தணிக்கையாளர், பொருளாதாரம், நிதிநிர்வாகம் சம்பந்த கல்வி படிக்கலாம்.

புதன்+குரு+சனி

ஏதாவது தொழிற்கல்வி, கணிதம், தணிக்கை யாளர், தட்டச்சர், அச்சுகலை, பத்திரிகைத் துறை, அஞ்சல்துறை, ஆசிரியர், நிர்வாகம், அரசு உயர் அதிகாரம், மக்கள் தொடர்பு, வாணிபம் சம்பந்தமான கல்வி பயிலலாம்.

புதன்+குரு+ராகு

நவீன மார்க்கத்தில் புதுமையான கல்வி, ரசாயனம், மின்னணுவியல், அணு ஆராய்ச்சி, விண்வெளி, சினிமா தொழில்நுட்பம், தடயவியல் சம்பந்தமான கல்வி பயிலலாம்.

புதன்+குரு+கேது

மருத்துவம், சட்டம், தையல், நூற்பாலை, நெசவு தொழிற்கல்வி பயிலலாம்.

புதன்+சுக்கிரன்+சனி

தொழிற்கல்வி, வாகனம், வங்கி, நிதி நிர்வாகம், வருமானவரித்துறை, சுங்கத்துறை, கலைகள், சுற்றுலாத்துறை, அழகுக்கலை, சினிமா, டி.வி., தொழில் நுட்பம், நடிப்பு, கட்டடக்கலை சம்பந்த மான கல்வி பயியலாம்.

புதன்+சுக்கிரன்+ராகு

மின்னணுவியல், சினிமா, டி.வி., கலை கள் சம்பந்தமான கல்வி, வாகனங்கள், கட்டடம் சம்பந்தமான கல்வி பயிலலாம்.

புதன்+சுக்கிரன்+கேது

மருத்துவம், சட்டம், நூற்பாலை, தையல், மூலிகை, மின்சாதனப் பொருட்கள் சம்பந்தமான கல்வி பயிலலாம். கல்வியில் தடை ஏற்படலாம்.

புதன்+சனி+ராகு

நவீன மார்க்க புதுமையான கல்வி, கணிப்பொறியியல், திரைப்படக்கல்வி, கேமரா, புகைப்படக் கல்வி பயிலலாம்.

புதன்+சனி+கேது

மருத்துவம், சினிமா, டி.வி., நடிப்பு, கனிமம், ஜோதிடம், தையல், மின்னணு வியல், சட்டம், மருத்துவம், மூலிகை சம்பந்தமான கல்வி பயிலலாம்.

செல்: 99441 13267