பெண்ணைப் பெற்றவர்கள், தங்கள் மகளுக்கு, பலவிதமான எதிர்பார்ப்புகளுடன் மாப்பிள்ளை தேடிக்கொண்டு இருப்பார் கள். சிலர் அரசு உத்தியோகத்திலுள்ள மாப்பிள்ளை யையும், இன்னும் சிலர் டாக்டர், என்ஜினீயர், ஐ.டி கமபெனியில், வெளிநாட்டில் வேலை பார்க்கும் மாப்பிள்ளையையும், தேடிக்கொண்டு இருப்பார்கள். பெண்ணைப் பெற்ற சிலர் பக்கத்து ஊரில் மாப்பிள்ளை அமையவேண்டும் என இவர்களே தீர்மானித்து வரன் தேடிக்கொண்டு இருப்பார்கள். சில பெண்கள், தங்களுக்கு கணவன் இப்படிதான் இருக்கவேண்டும், நான் நினைப் பதுபோல் மாப்பிள்ளை வந்தால்தான், திருமணம் செய்துகொள்வேன் என்று கூறிக்கொண்டு காத்துக்கொண்டு இருப்பார்கள்.
ஒரு பெண்ணிற்கு எப்படிப்பட்ட மாப்பிள்ளை அமைவான் என்பதை சித்தர்கள் கூறிய தமிழ்முறை சோதிடம்மூலம் அறிவோம்.
ஒரு பெண்ணின் பிறப்பு ஜாதகத்தில் அவள் கணவனைக் குறிப்பிடும் உதாரண கிரகமான செவ்வாய், 12 ராசிகளில், எந்த ராசியில் உள்ளதோ, அதனைக்கொண்டு, பெண்ணிற்கு கணவனாக வரப் போகின்றனைப் பற்றி தெரிந்துகொள்வோம். "யாருக்கு யார் கணவன்- அவன் எங்கே இருக்கின்றான்'' என்பதை அறிவோம்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/marriage_41.jpg)
மேஷம்
ஒரு பெண்ணின் ஜாதகத்தில் மேஷத்தில் செவ்வாய் இருந்தால், கணவன் கௌரவமான குடும்பத்தைச் சேர்ந்தவன். முன்கோபம், அவசரம், ஆத்திரம் வாக்குவாதம், ஆதிக்க உணர்வு, உணர்ச்சிவசப்படும் குணமுள்ளவன், அரசு உத்தியோகம், காவல்துறை, இராணுவம், தீயணைப்புதுறை, விவசாயம், நெருப்பு, இரும்பு சம்பந்தமான தொழில், பொறியியல் துறை, அறுவை சிகிச்சை மருத்துவர், சுரங்கம், ஆயுத சாலை, பூமி, விவசாயம் போன்ற தொழில்களில் ஒன்றை செய்பவராக இருப்பார். இந்தப் பெண்ணிற்கு சொந்தத்திலோ, சொந்த ஊரிலோ, வரன் அமையும். கணவனின் ஊர் 25 மைல் தொலைவிற்குள் கிழக்கு சார்ந்த திசையில் இருக்கும். கிழக்கு, மேற்கு வீதியில், தெற்கு வடக்கு முன்வாசலுள்ள வீடு. முருகன், ஆயுதங்கள், வீரர்களின் பெயர், காவல் தெய்வங்கள், போர் புரிந்த கடவுள்களின் பெயர், பூமி, ஊரின் பெயர்கள், பவளம், சிவப்பு நிறத்தை குறிக்கும் பெயரை உடையவனாக இருப்பான்.
ரிஷபம்
பெண்ணின் ஜாதகத்தில் ரிஷபத்தில் செவ்வாய் இருந்தால், கணவன் செல்வந்தனாக இருப்பான். கவர்ச்சி யான அழகான தோற்றமுடையவன். ஆடம்பர அலங்காரப் பிரியன். பொன், வெள்ளி, வியாபாரம், வட்டி, தரகு, நிதி நிறுவன பணி, அழகு, ஆடம்பர, கலைப் பொருட்கள், வாசனை, உணவு, திரவப் பொருட்கள், கலை தொழில், கவிதை, பாடுதல், கருவூலத்துறை தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள் நடத்துதல் போன்ற தொழில்களை செய்வார். சொந்தத்தில் மாப்பிள்ளை அமையலாம். தெற்கு சார்ந்த திசையில் 10 மைல் தொலைவிற்குள் வரன் அமையும். கணவன் வீடு வடக்கு தெற்கு வீதியில் கிழக்கு மேற்கு முன்வாசலுள்ள வீடு. அழகு, மலர்கள், வாசனை, அன்பு, சந்தோஷம், கல்யாணம், சுகம், காமம், கவிதை, இனிமை, ராகம், செல்வத்தைக் குறிக்கும் பெயரை உடையவனாக இருப்பான்.
மிதுனம்
மிதுனத்தில் செவ்வாய் இருந்தால், கணவன் படித்தவராக, அறிவாளியாக இருப்பார். வியாபார நோக்கம் உள்ளவர். செய்தி மற்றும் தகவல் தொடர்புத் துறை, விண்வெளி, கல்வி, தபால் மற்றும் தந்தி, தொலைபேசி, துறைகளிலும், புத்தகம், கணிதம், கணக்கர், தணிக்கையாளர், சட்டம், நீதிதுறை, ஆலோசகர், நவீன பொறியியல் துறை, எழுத்து, மேடைப் பேச்சு, தூதரகம், பல பொருள் வியாபாரம் போன்ற இந்த தொழில்களை செய்பவராக இருப்பார். கணவனின் ஊர் மேற்கு சார்ந்த திசையில், 2 மைல்முதல் 200 மைல் தூரத்திற்குள்கூட இருக்கலாம். கணவன் இருக்கும் வீடு, கிழக்கு, மேற்கு வீதியில் தெற்கு, வடக்கு முன்வாசலுள்ள வீடு. தாய்மாமன், தாய்வழி சொந்தம், அத்தைவழி உறவில்கூட கணவன் அமையக்கூடும். பெருமாள், இளமை, அறிவு, புத்தி, மரகதம், பச்சை நிறம் வளம், பூங்கா, சோலை, செடி, கொடிகள், மலர் இவற்றை குறிக்கும் பெயரை உடையவன்.
கடகம்
கடகத்தில் செவ்வாய் உள்ள பெண்ணிற்கு அமையும் கணவன், இவள் குடும்பத்தைவிட பொருளாதாரத்திலோ, இவளைவிட கல்வியில், அழகில் என ஏதாவது ஒருவகையில் சற்றுக் குறைந்த வனாக இருப்பான். அமைதியான, எல்லாரையும் அனுசரித்து செல்லும் குணமுள்ளவன். மனைவிக்கு கட்டுப்பட்டவன். சொந்தத்தில் வரன் அமையாது. உணவுப் பொருள், திரவப் பொருள், விற்பனை, ஏற்றுமதி, இறக்குமதி, கடல் கடந்து வாணிபம், வேளாண் தொழில், மருத்துவம், போக்குவரத்துறை கலைதுறை, கல்விதுறை இவைகளில் உத்தியோகம், தொழில் செய்வான். கணவனின் ஊர் வடக்கு சார்ந்த திசையில், 40 மைல் தொலைவிற்குள் இருக்கும். வடக்கு தெற்கு வீதியில் கிழக்கு அல்லது மேற்கு நோக்கி முன்வாசலுள்ள வீடு. கணவன் ஊரில் கடல், நதி, ஏரி என நீர் நிலைகள் இருக்கும் பிரசித்தமான ஒரு அம்மன் கோவில் இருக்கும். சந்திரன், நதி, சமுத்திரம், உணவுப் பொருட்கள், மாரி, மேகம், சக்தி அம்மன், முத்து இவற்றைக் குறிக்கும் பெயர் உடையவன்.
சிம்மம்
சிம்மத்தில் செவ்வாய் இருந்தால், செல்வாக்கான குடும்பத்தில் பிறந்தவன். தன்னம்பிக்கை, சுய மரியாதை, நிர்வாகத்திறமை, தாராள குணம், இரக்கம், கருணை, பிடிவாதம், முன்கோபம், அதிகார தோரண, மனிதநேயம் கொண்டவன். அரசு உத்தியோகம், அரசியல் தொடர்பு, பொறியியல் துறை, இரும்பு, நெருப்பு சம்பந்தமான தொழில், மருத்துவர் தொழில் செய்பவன். கிழக்கு சார்ந்த திசையில், 10 மைல்முதல் 100 மைல் தொலைவிற்குள் வரன் அமையும். கணவன் வீடு, கிழக்கு மேற்கு வீதியில், வடக்கு தெற்கு முன்வாசலுள்ள வீடு. கணவன் பிறந்த ஊர் மாநில தலைநகரகவோ, மாவட்டம், தாலூகா தலைநகர ஊராகவோ இருக்கும். சூரியன், ஒளி, சிவன், அரசர்கள், தந்தை வழி பாட்டன் பெயர், தலைவர்கள், புகழ், மாணிக்கம், வனம், மலை (கிரி) இவற்றைக் குறிக்கும் பெயரை உடையவன்.
கன்னி
கன்னியில் செவ்வாய் இருந்தால், கணவன் இளமை, அழகு, அறிவு, ஆய்வு குணம், வியாபார நோக்கம், பேச்சாற்றல் கொண்டவன். கணக்கர் தொழில், தணிக்கையாளர், பல பொருள் வியாபாரம், ஆசிரியர், மளிகை பொருள், வக்கீல், கமிஷன், தரகு, பூமி தொழில் போன்ற தொழில்களை செய்வார். கணவன் இருக்கும் ஊர், தெற்கு சார்ந்த திசையில் 2 மைல் முதல் 200 மைல் தொலைவிற்குள் இருக்கும். வடக்கு, தெற்கு வீதியில் கிழக்கு மேற்கு முன்வாசலுள்ள வீடு, அந்த ஊர் ஒரு வியாபார ஸ்தலமாகும். மக்கள் நெருக்கமுள்ள ஊர். பெருமாள், இளமை, அன்பு, அறிவு, புத்தி, சோலை, நந்தவனம், பூங்கா, மலர், செடி, கொடிகளை குறிக்கும் பெயரை உடையவன். கணவனாக வருவான்.
தொடர்ச்சி அடுத்த இதழில்...
செல்: 99441 13267
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/07/2026-02-07t115543118z-newsdesk-2026-02-07-17-25-38.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-08/marriage-t_0.jpg)