வேதத்தின் ஆறு அங்கங்களில் ஒன்றான ஜோதிட சாஸ்திரத்தின் உதவி இல்லாவிடில் நம்முடைய நித்ய கர்மானுஷ்டானங்களை சரிசெய்து சீர்பெற இயலாது. கடலைக் கடக்க திசைமானி அவசியம்.
அதுபோல வாழ்வின் இகபரசுகம் அறிந்துகொள்ள ஜோதிடம் இன்றியமையாதது.
இங்கு நீசபங்க ராஜயோகம் மற்றும் சில யோகங்களையும் சுருக்கமாக ஆய்வு செய்வோம்.
வெண்பா
"நீசனிருந்தில்லோ னிலையுச்ச மெய்திடினு
மேசில்சசி கேந்திரத்தி லெய்திட்டாற்- பூசிதமாய்
தேசமெங்கும் கீர்த்தித் திரைகட லோடுங்கப்ப
னேசமுட னாள்வார் நிலம்.'
அதாவது, நீச வீட்டுக்குடையோன் ஆட்சி, உச்சம் பெற்றாவது, சந்திரகேந்திரம் பெற்றாவது இருக்கின் நீசபங்கமாய் ராஜயோகம் உண்டு.
எந்த கிரகம் எந்த ராசியில் நீசமடைந்ததோ அந்த ராசிநாதன் ஆட்சியாகவோ உச்சமாகவோ இருந்தால் அது நீசபங்கமாகி ராஜயோகத்தைத் தரும்.
ஒரு ஜாதகருக்கு குரு உச்சமும், சந்திரன் ஆட்சியும், சுக்கிரன் நீசமுமாகி, இவர்கள் ஒருவருக்கொருவர் கேந்திர திரிகோணங்களாகி இருக்க, அந்த ஜாதகர் பிரபலமடையும் யோகம் உள்ளது.
கைரேகை எவ்வாறு உணர்த்தும்?
உள்ளங்கையில் சுட்டுவிரலின் நேர்கீழ் பாகத்திலுள்ள குருமேடு உச்சமாகி, பெருவிரலை (கட்டைவிரல்) அடுத்துள்ள சுக்கிரமேடு த
வேதத்தின் ஆறு அங்கங்களில் ஒன்றான ஜோதிட சாஸ்திரத்தின் உதவி இல்லாவிடில் நம்முடைய நித்ய கர்மானுஷ்டானங்களை சரிசெய்து சீர்பெற இயலாது. கடலைக் கடக்க திசைமானி அவசியம்.
அதுபோல வாழ்வின் இகபரசுகம் அறிந்துகொள்ள ஜோதிடம் இன்றியமையாதது.
இங்கு நீசபங்க ராஜயோகம் மற்றும் சில யோகங்களையும் சுருக்கமாக ஆய்வு செய்வோம்.
வெண்பா
"நீசனிருந்தில்லோ னிலையுச்ச மெய்திடினு
மேசில்சசி கேந்திரத்தி லெய்திட்டாற்- பூசிதமாய்
தேசமெங்கும் கீர்த்தித் திரைகட லோடுங்கப்ப
னேசமுட னாள்வார் நிலம்.'
அதாவது, நீச வீட்டுக்குடையோன் ஆட்சி, உச்சம் பெற்றாவது, சந்திரகேந்திரம் பெற்றாவது இருக்கின் நீசபங்கமாய் ராஜயோகம் உண்டு.
எந்த கிரகம் எந்த ராசியில் நீசமடைந்ததோ அந்த ராசிநாதன் ஆட்சியாகவோ உச்சமாகவோ இருந்தால் அது நீசபங்கமாகி ராஜயோகத்தைத் தரும்.
ஒரு ஜாதகருக்கு குரு உச்சமும், சந்திரன் ஆட்சியும், சுக்கிரன் நீசமுமாகி, இவர்கள் ஒருவருக்கொருவர் கேந்திர திரிகோணங்களாகி இருக்க, அந்த ஜாதகர் பிரபலமடையும் யோகம் உள்ளது.
கைரேகை எவ்வாறு உணர்த்தும்?
உள்ளங்கையில் சுட்டுவிரலின் நேர்கீழ் பாகத்திலுள்ள குருமேடு உச்சமாகி, பெருவிரலை (கட்டைவிரல்) அடுத்துள்ள சுக்கிரமேடு தாழ்ந்து நீசமானால், அவர்கள் கடவுளின் அருளால் பிரபல யோகமடையலாம். சூரியமேட்டில் செங்குத்தான ரேகை காணப்பட்டால் அறநிலையை அருள்பாலிக்கும் யோகம் கிடைக்கப்பெறும். கடக, மீன ராசியினருக்கு இது சுலப நன்மைகளைப் பெற்றுத்தரும்.
நீசமடைந்த கிரகம் சுக்கிரனுடன் கூடி அல்லது பார்வை பெற்றிருப்பதோடு, அந்த நீச வீடானது லக்ன கேந்திரங்களில் ஆட்சி, உச்சம் பெற்றிருப்பின் அந்த ஜாதகருக்கு தன் மனைவியாலும், போகஸ்திரீயாலும் பூரண ராஜயோகம் கிடைக்கப்பெறுமாம்.
கைரேகை சுலபமாக உணர்த்திவிடும்!
உள்ளங்கையில் சுக்கிரமேடு (கட்டை விரலை அடுத்த மேடு) தாழ்ந்து நீசமடைந்து இருப்பதோடு, சுண்டுவிரலை அடுத்த புதன்மேட்டின் ஓரப்பகுதியில் ஒரு ரேகை உதயமாகி ஆயுள்ரேகையைக் கடந்து சுக்கிர மேட்டை அடையும். இரு திருமண ரேகை சமச்சீராகக் காணப்படும். இது போகஸ்திரீ செல்வம் படைத்தவராக இருக்கப்போவதன் அறிகுறிதான்.
சகடை யோகம்
"மேலெழு வியாழன் நின்ற ராசிக்கோ ரீராமெட்டில்
மாலை வெண்மதியும் சேரில் வந்தநாள் சகடயோகம்
பாலகன் பிறக்கிற் சாவாம் பழிபடுமணத்தைச் செய்யின்
ஞால மேல்வழியிற் போகின் நலமில்லை நறுமின்தானே.'
பொருள்: குரு நின்ற ராசிமுதல் 6, 8, 12-ஆம் ராசியில் சந்திரன் நின்றால் சகடயோகம் எனப்படும். இதன் பலன் என்னவெனில், இவர்களுக்கு வாழ்வில் ஒரு குழந்தை பிறக்கும்; அது இறந்துவிடும். இவர்கள் விவசாயம் செய்யின் அதுவும் பலன்தராது. அன்னிய நாடு, அன்னிய மாநிலம், பிறந்த ஊரில்லாமல் வெளியூரில் நற்பலன் பெறலாம்.
இது சூடாமணி நூலின் கருத்தாகும். சாதக அலங்கார நூலாசிரியர் கூறுவது யாதெனில்-
"அகடி மன்னனுக் காறெட் டோடுவியத்
திகடிலாமதி யெய்திருந்திடில்
சகடயோகமிதிற் பிறந்தார்க் கெல்லாம்
விகடத்துன்பம் விளையு மரிட்டமே.'
பொருள்: குரு நின்ற ராசிக்கு 6, 8, 12-ஆம் இடங்களில் சந்திரன் இருந்தால் சகடயோகமாகும். அதன் பலன் என்னவெனில், மேற்படி சகடையில் பிறந்தோர்க்கு அளவிட முடியாத துன்பங்களும் அரிஷ்டங்களும் உண்டாகும்.
இந்த இரு கவிகளாலும் நாம் அறிந்துகொள்வது என்னவென்றால், குரு நின்ற ராசிக்கு 6, 8, 12-ல் சந்திரன் நிற்பதே சகட யோகம். சகடையில் பிறந்தோர் அனைவரும் எண்ணிலடங்கா துன்பத்திற்கு உட்படுபவர்கள்; அரிஷ்டத்திற்கும் ஆளாவார்கள் என்கிறது சாஸ்திரம். எனவே சகடையில் பிறந்த ஜாதகர்களுக்கு ஆயுள் நிர்ணயம் செய்வதாயின், லக்னாதிபதி, சந்திரன், சனி என்னும் இவர்கள் பலம்பெற்று இருந்தாலன்றி தீர்க்காயுள் என கூறுதல் கூடாது. மேலும் அந்த தோஷம் எந்த நாள்வரையில் என்பதை குருவுக்கு 6-ல் சந்திரனிருக்க 6 மாதம் அல்லது 6 வருடம் எனவும், 8-ல் நிற்க 8 மாதம்,
8 வருடம் எனவும், 12-ல் நிற்க, 12 மாதம், 12 வருடம் எனவும் கூறவேண்டும். அப்போதுள்ள தசாபுக்தியில் நிர்ணயம் செய்யலாம்.
சகடயோகம் இன்னும் என்னென்ன செய்யும்?
ஒரு மிகப்பெரிய வழிகாட்டிச் சென்ற புட்டபர்த்தி சாய்பாபாவின் ஜாதகத்தை சான்றாக ஆய்வு செய்வோம்.
புட்டபர்த்தி சாய்பாபா 23-11-1926 அதிகாலை 4.45 மணிக்கு ஆந்திராவில் பிறந்தார். அவரது ஜாதக நிலை யாதெனில் துலா லக்னம்; 2-ல் சூரியன், சுக்கிரன், புதன், சனி; 3-ல் கேது; 4-ல் குரு; 7-ல் செவ்வாய்; 9-ல் ராகு, சந்திரன்.
இவருக்கு குருவே நீசம் என்றாலும், அந்த லக்னத்திற்கு பாதகாதிபதி நீசம்; நல்லது.
குடும்பஸ்தானம் எனும் 2-ஆம் பாவத்தில் நான்கு கிரகச் சேர்க்கை; 7-ல் செவ்வாய். எனவே இல்லற வாழ்க்கையில் பற்றற்றவராக வாழ்ந்தவர்.
மூன்றாம் பாவத்தில் கேது. எனவே சித்து விளையாட்டு ஞானத்தைப் பெற்றார்.
இரண்டாம் பாவத்தில் சூரியன், புதன்.
சகட யோகம் பல கோணங்களில் உயர்வடையச் செய்யும்.
சில யோக அமைப்புகள்
மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு குரு, சனி தசைகள் யோகம் தரும்.
ரிஷப லக்னத்தாருக்கு சனி தசை மட்டும் யோகத்தைத் தரும்.
மிதுன லக்னத்தவர்களுக்கு சனி தசை யோகமுடையது. அதிர்ஷ்டம் தரும்.
கடகத்திற்கு செவ்வாய் ஒருவரே யோகக்காரர். அவரை நம்பலாம்.
சிம்ம லக்னத்தாருக்கு செவ்வாய் நூறு சதவிகித யோகம் செய்வார். சுக்கிரன் அரைப்பங்கு யோகம் தருபவர்.
கன்னி லக்னத்தாருக்கு மற்றும் ராசியினருக்கு சுக்கிரன் ஒருவரே யோகத்தைத் தருபவர்.
துலா ராசியினருக்கு சனி முழு யோகக்காரர். புதன்- அரையோகம் தருபவர்.
விருச்சிக ராசியினருக்கு குரு, சந்திரன் இருவரும் யோகத்தைத் தருவார்கள்.
தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சந்திரன் முழு யோகத்தையும், செவ்வாய் அரை யோகத்தையும் தருவார்.
மகர லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் முழு யோகத்தையும், புதன் கால்பங்கு யோகத்தையும் தருபவர்.
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு புதன் கால் யோகம், சுக்கிரன் அரை யோகம் தருபவர்.
மீன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு குரு பகவான் கால் யோகமும், செவ்வாய் அரை யோகமும் தருவார்.
ஆகையால் உங்கள் ஜாதகத்தில் யோகக்காரர்கள் இருக்கும் ராசி பலத்தாலும், பார்வை, சேர்க்கை சார்ந்த பலனாலும் அவரவர் தசை யோகம் உண்டென்றும், இல்லையென்றும், கால், அரை, முக்கால், முழுயோகம் உண்டா எனவும் உணர்ந்து செயல்படல் நன்று.
செல்: 93801 73464