ரஸ்தானம் என்பதற்கு வேறிடத்தில் தங்குதல் என்று பொருள். அதாவது ஒரு குறிப்பிட்ட நாளில் வெளியூருக்குப் பயணம் துவங்கவேண்டும். அந்த நாள் பஞ்சாங்க ரீதியாக வார சூலை, யோகினி, தாராபலன், சந்திரபலம் இல்லாத நாளாக இருந்தால் என்ன செய்வது? அதை அறிந்துகொள்வதற்கு முன்பாக, பயணம் செய்யக்கூடாத நாட் களைப்பற்றிக் காண்போம்.

சனி, திங்கட்கிழமைகளில் கிழக்குப் பக்கம் போகக்கூடாது. வியாழக்கிழமையில் தெற்கில் போகக்கூடாது. வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் மேற்கே போகக்கூடாது. செவ்வாய், புதன்கிழமைகளில் வடக்கே போகக்கூடாது. அந்தந்த இடங்கள் அந்தந்த கிழமைகளில் வார சூலையாகும். அப்படி அவசியம் போக வேண்டிய சூழ்நிலையிருந்தால் சூரிய உதயத்தில் வடக்கிலும், உச்சி நேரத்தில் கிழக்கிலும், அஸ்தமன வேளையில் தெற்கிலும், நடு இரவில் மேற்கு முகமாகவும் போகலாம். இதனால் கெடுதல் இல்லை.

travel

தற்காலத்தில் விமானங்கள், ரயில்கள், பஸ்கள்மூலம் தூரப் பயணம் செய்ய வேண்டுமானால் நாம் நினைத்தபோது டிக்கட் கிடைப்பதில்லை. எனவே முன்கூட்டியே ரிசர்வேஷன் செய்துகொள்கிறோம்.

டிக்கட் கிடைத்து நாம் பயணம் செய்யவேண்டிய நாள் வார சூலை, யோகினி முதலிய தோஷங்கள் உள்ளதாக இருந்தால் சிரமங்கள் ஏற்படலாம். இதுபோன்ற சூழ்நிலையில், புறப்பட்டவேண்டிய நாளுக்கு முன்தினம் நல்ல சமயத்தில் தாம் இருக்கும் ஊரிலேயே வேறிடத்திற்கு தம் பொருட்களுடன் போயிருந்து, மறுபடியும் தம் வீட்டிற்குத் திரும்பிவராமல் பயணம் செய்தால் அது வெற்றிகரமாய் அமையும்.

இதற்கு வாய்ப்பில்லாதவர்கள் தமது பொருட்களை முன்கூட்டியே நல்ல நாளில் வெளியூருக்கு அனுப்பிவிட்டு தாம் மட்டும் குறிப்பிட்ட நாளில் பயணம் செல்லலாம்.

ஆகவே ரிசர்வேஷன் செய்துகொள் பவர்கள் தாம் பயணம் செய்யவேண்டிய நாள் தோஷமுள்ளதாக இருந்தால், நல்ல நாளில் வீட்டைவிட்டுப் புறப்பட்டு அதே ஊரில் வேறிடத்தில் தங்கி, குறிப்பிட்ட நாளில் பயணம் தொடங்கினால் நன்மை யுண்டாகும்.

நல்ல காரியங்களை உத்தேசித்து வெளியூர் செல்லும் காலத்தில் முன்னதாகவே பிராமணருக்கு தன்னால் இயன்ற காணிக்கையை வெற்றிலை, பாக்குடன் வைத்து தானம்செய்து பின்னர் வெளியூர் செல்வது நல்லது.

தோஷங்கள் நிறைந்த நாளில் பயணம் செய்தால் ஏற்படும் சிரமங்களை கீழ்க்கண்ட பரிகாரம்மூலம் தவிர்த்துக்கொள்ளலாம்.

பரிகாரம்-1

வார சூலை, யோகினி முதலிலிய தோஷங்கள் உள்ள நாளில் பயணம் செய்யும்பொழுது, காரில் பயணம் செய்தால் நான்கு டயர்களுக்குக்கீழே ஒவ்வொரு எலுமிச்சம் பழத்தை வைத்து அதை நசுக்கிப் பயணம் மேற்கொள்ளவேண்டும். இதனால் எந்தவொரு ஆபத்து, விபத்து ஏற்படாது.

பஸ் அல்லது ரயில் அல்லது விமானத்தில் பயணம் செய்ய அவசியம் ஏற்படும்போது, குலதெய்வத்தை நினைத்து ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்து கைப்பை அல்லது சூட்கேஸில் வைத்துகொள்ளவேண்டும்.

பரிகாரம்-2

நீண்டதூரப் பயணம் சென்று அங்கேயே வருடக் கணக்கில் தங்கி மீண்டும் வருவோர், புறப்படுவதற்குமுன்னர் குலதெய்வ ஆலயத்திற்குச் சென்று வணங்கிவந்து பயணம் மேற்கொண்டால் சிரமம் எதுவும் வராது.

செல்: 94871 68174