டுமையான முயற்சி எடுத்து செல்வம் சேர்தல் பலம்மிக்க லக்னாதிபதி அமைந்து, குருவுடன் இணைந்து கேந்திரத்தில் இருக்கவும், 2-ஆம் அதிபதி வைகேசி காம்சத்தில் இருக்கவும்.லக்னாதிபதி நின்ற நவாம்சாதிபதி பலம்மிக்கவராக, 2-ஆம் அதிபதிக்கு கேந்திர, கோணத்தில் அமர அல்லது ஆட்சி, உச்சம் பெற தன முயற்சியால் செல்வம் சேரும்.

லக்னாதிபதி இருக்கின்ற ராசிக்கு கேந்திர, திரி கோணத்தில் 2-ஆம் அதிபதி இருக்கவும்.

2-ஆம் அதிபதி கேந்திர கோணங் களில் இருக்கவும், 2-ஆம் அதிபர் சுபராகி ஆட்சி, உச்சம் பெறவும்.

s

2-ஆம் அதிபதியும் உச்ச கோள் இணைவும்- தன் முயற்சியால் ஜாதகர் செல்வ நிலை அடைவார்.

இளம் வயதில் செல்வம் சேர்தல்

Advertisment

2-ஆம் பாவக அதிபதியும், 10-ஆம் பாவாதிபதியும் இணைந்து, லக்ன கேந்திரத்தில் இருக்க, இந்த இணைவு லக்னாதிபதி நின்ற நவாம்சத்தில் கிரகம் பார்க்க ஜாதகருக்கு இளம் வயதிலேயே செல்வம் சேரும்.

நடு வயதில் செல்வம் சேர்தல்

2-ஆம் அதிபதி காலபலம் பெற்று, லக்னாதிபதியுடன் இணைவு பெற்று, லாபாதிபதி கேந்திர, கோணத்தில் இருந்து, சுபரால் பார்க்கப்பட ஜாதகருக்கு நடு வயதில் செல்வம் சேரும்.

Advertisment

(காலபலம் - சந்திரன், செவ்வாய், சனி இரவி லும், சூரியன், குரு, சுக்கிரன் பகல் வேளையிலும், புதன் எப்பொழுதும், அசுப கிரகங்கள் தேய்பிறை காலங்களிலும், சுப கிரகங்கள் வளர்பிறை காலங் களிலும் காலபலம் பெறுகின்றன என்பதை அறிக).

முதுமை வயதில் செல்வம் சேர்தல்

லக்னாதிபதியும், தனாதிபதியும் சுபர் ராசியில் இருக்க, அந்த ராசி அதிபதி லக்னத்தில் அமர ஜாதகருக்கு முதிய வயதில் செல்வம் சேரும்.

உடன்பிறப்பால் செல்வம் சேர்தல்

லக்னாதிபதியும், தனாதிபதியும் 3-ஆம் வீட்டில் அமர்ந்து சுப கிரகத்தால் பார்க்கப்பட ஜாதகருக்கு உடன்பிறப்புகள்மூலம் செல்வம் சேரும்.

தாயின்மூலம் செல்வம் சேர்தல்

2-ஆம் அதிபதியும், 4 ஆம் அதிபதியும் (தாய் பாவம்) இணைந்திருக்க அல்லது அவர்களுக்குள் பரஸ்பர பார்வை செய்ய ஜாதகருக்கு தாயாரின் மூலம் செல்வம் சேரும்.

மனைவிமூலம் செல்வம் சேருதல்

பலம்மிக்க லக்னாதிபதியும், களத்திர காரகன் சுக்கிரனும் இணையவும், 2 ஆம் அதிபதியும் 7-ஆம் அதிபதியும் இணைந்திருக்க அல்லது ஒருவரை ஒருவர் பார்க்கவும் ஜாதகர் மனைவி மூலம் செல்வம் சேரும்.

குழந்தைகள்மூலம் செல்வம் சேர்தல்

தனாதிபதி மற்றும் 5-ஆம் அதிபதி இணைந் திருக்க அல்லது வைசேசிகாம்சம் அடைந்த குரு, லக்னாதிபதியுடன் இணைந்திருக்க ஜாத கருக்கு குழந்தைகள்மூலம் செல்வம் சேரும்.

பகைவர்மூலம் செல்வம் சேர்தல்

பலம்மிக்க 2-ஆம் அதிபதி, 6-ஆம் அதிபதி யுடன் இணைய அல்லது லக்னாதிபதி வைசேசி காம்சம் அடைந்து பலம்பெற்று, செவ்வாயுடன் இணையவும் ஜாதகர் பகைவர்கள்மூலம் செல்வம் பெறுவர்.

அதிக முயற்சியின்றி செல்வம் சேர்தல்

லக்னாதிபதியும், தனாதிபதியும் பரிவர்த் தனை அடைந்தால் ஜாதகருக்கு அதிக முயற்சி யின்றி செல்வம் சேரும்.

செல்வ இழப்பு

லக்னாதிபதி மற்றும் விரையாதிபதி பரிவர்த் தனை பெற அல்லது இணைய அல்லது இவ்விணையினை 7-ஆம் அதிபதி பார்க்கவும் ஜாதகருக்கு செல்வ இழப்பு ஏற்படும்.

லக்னாதிபதி 6-ல் இருக்கவும், 6-ஆம் அதிபதி லக்னத்தில் இருந்து தனாதிபதியை சந்திரன் பார்க்கவும் செல்வ இழப்பு ஏற்படும்.

லக்னாதிபதி 6-ல் இருக்க- நோய், கடன், வழக்கு இவற்றால் துன்பமும், பொருள் இழப்பும் ஏற்படும்.

6-ஆம் அதிபதி லக்னத்தில் இருக்க- தீவிர போராளியாகி, அதனால் பொருள் இழப்பு ஏற்படும்.

சந்திரன் தனாதிபதியை பார்க்க, சந்திரன் தேய்ந்து வளர்வது போல் செல்வமும் வளர்ந்து தேயும் நிலையற்ற தன்மையில் இருக்கும்.

சந்திரனும், கேதுவும் லக்னத்தில் இருக்க, மனோ விரக்தியால் பணம் ஈட்டும் தன்மை குறையும்.

லக்னாதிபதி 8-ல், தனாதிபதியுடன் இருக்க அல்லது 7-ஆம் அதிபதியுடன் இருக்க அல்லது பார்வை பெறவும் ஜாதகருக்கு செல்வ இழப்பு ஏற்படும்.

லக்னாதிபதி அசுபருடன் இணைந்து (சூ, செவ், சனி) 6, 8, 12-ஆம் வீடுகளில் இருந்து தனாதிபதி அல்லது களத்திர பாவாதிபதி இணைந்தோ அல்லது பார்வை பெற்றோ இருக்க ஜாதகருக்கு செல்வ இழப்பு ஏற்படும்.

லக்னாதிபதி 6 அல்லது 8 அல்லது 12-ஆம் அதிபதியுடன் இணைந்து அசுபரால் பார்க் கப்பட ஜாதகருக்கு செல்வ இழப்பு ஏற்படும்.

செல்வ இழப்பு ஏற்பட காரணங்கள்

லக்னாதிபதியும், 6-ஆம் அதிபதியும் இணைந்து சூரியனால் பார்க்கப்பட ஜாத கருக்கு செல்வ இழப்பு அரசாங்கத்தாலும், அதே இணைவை செவ்வாய் பார்க்க ஜாத கருக்கு கூட்டாளியாலும் எதிரிகளாலும் செல்வ இழப்பு ஏற்படும். அதே இணைவை சனி பார்க்க நோய் மற்றும் ஊதாரி தனத்தாலும் செல்வ இழப்பு ஏற்படும்.

லக்னாதிபதியும், 8-ஆம் அதிபதியும் சூரியனால் பார்க்கப்பட அரச தண்டனை ஏற்பட்டு அதனால் செல்வ இழப்பு ஏற்படும்.

லக்னாதிபதியும், 8-ஆம் அதிபதியும் செவ்வா யால் பார்க்கப்பட உடல் ஊனம் காரணமாக செல்வ இழப்பு ஏற்படும். இதே இணைவை சனி பார்க்க நிலையற்ற தன்மை காரணமாகவும், பொருள் காணாமல் போவதாலும், ஜாதகரின் இறப்பு காரணமாகவும் செல்வ இழப்பு ஏற்படும்.

லக்னாதிபதியும், 12-ஆம் அதிபதியும் இணைந்திருந்து சூரியனால் பார்க்கப்பட ஜாதகர் அந்தஸ்துக்காக அலைந்து திரிவார். செவ்வாயால் பார்க்கப்பட ஜாதகர் தாழ்ந்த நிலை ஊதியம் செய்வார். சனியால் பார்க்கப்பட ஜாதகர் பல ஊர்களுக்கு செல்வார் அல்லது சிறை வாசம் செல்லக்கூடும்.

செல்வம் இல்லாத நிலை பாக்கிய மற்றும் கர்ம பாவத்திற்கு ஆதி பத்தியம் பெறாத அசுபர் லக்னத்தி-ருந்து, அதை தன, களத்திர பாவாதிபதிகள் இணைந்தோ அல்லது பார்த்தோ இருக்க, ஜாதகருக்கு செல்வம் இல்லாத நிலை ஏற்படும். (காரணம் 2 மற்றும் 7-ஆம் அதிபதிகள் தீய செயல்களைச் செய்ய தூண்டுபவர்கள் ஆவர்).

லக்னாதிபதி மற்றும் நவாம்ச லக்னாதிபதி, ராசியில் 6, 8, 12-ஆம் அதிபதிகளுடன் இணைந்திருக்க அல்லது பார்த்திருக்க ஜாத கருக்கு செல்வம் இல்லாத நிலை ஏற்படும்.

செல் 97891 01742