சிலருக்கு வெளிநாடுகளுக்குப் பயணம் செல்வதற்கான வாய்ப்பு அதிர்ஷ்டவசமாகக் கிடைக்கிறது.
அதற்கு கிரகங்களின் நிலையே காரணம்.
பலர் வெளிநாடுகளுக்குச் சென்று வேலை செய்வார்கள். சிலர் சுற்றுலாப் பயணிகளாக வெளிநாடுகளுக்குச் செல்வர். சிலர் வெளிநாடுகளுக்குச் சென்று, நிரந்தரமாக அங்கேயே குடியிருக்க ஆரம்பித்துவிடு வார்கள். இதற்கெல்லாம் அவர்களின் ஜாதகங்களிலிருக்கும் கிரகங்களும் தசையும்தான் காரணம். அதற்கு அவர்களின் 5-ஆம் பாவம், 9-ஆம் பாவம், 11-ஆவது பாவம், 12-ஆவது பாவம், நடக்கும் தசை ஆகியவற் றைப் பார்க்கவேண்டும். ராகுவின் நிலைமையையும் பார்க்க வேண்டும்.
ஒருவரின் ஜாதகத்தில் லக்னாதிபதி விரய ஸ்தான அம்சத்தில் இருந்தால் அல்லது விரய ஸ்தானாதிபதியுடன் லக்னாதிபதி லக்னத்தில் இருந்தால், அவருக்கு வெளிநாடுகளுக்குச் செல்வதற்கான வாய்ப்பு நிச்சயமாக இருக்கும்.
லக்னாதிபதியும், 9-க்கு அதிபதி யும் 11-ல் இருந்தால், அவர் அடிக்கடி வெளிநாட்டிற்குச் செல்வார். அதன்மூலம் நல்ல ஆதாயம் கிடைக்கும்.
லக்னத்தில் சந்திரன் இருந்து அல்லது கடக லக்னமாக இருந்து, அதற்கு 9-ஆவது பாவத்தில் பாவகிரகம் இருந்தால் அல்லது அந்த இடத்தில் சனி- ராகு, சனி- செவ்வாய், சனி- சுக்கிரன்- ராகு இருந்தால், அவர் அடிக்கடி வெளிநாட்டிற்குச் செல்வார்.
ஒருவருக்கு 9-ஆவது பாவாதி பதியின் தசை நடக்கும்போது, அவருக்கு 5-ஆம் பாவாதிபதியின் அந்தரம் நடந்தால், அவர் வெளிநாட்டிற்குச் செல்வார்.
ஜாதகத்தில் 11-க்கு அதிபதி 12-ல் இருந்து, 11-ஆவது அதிபதியின் தசை நடக்கும் காலகட்டத்தில் வெளிநாட்டிற்குச் செல்வார்.
9-க்கு அதிபதி 12-ல் இருந்து, அவருக்கு 9-ஆம் பாவாதிபதியின் தசை நடந்தால், அந்த சமயத்தில் அவர் தொழில் சம்பந்த மாக அடிக்கடி வெளிநாட்டிற்குச் செல்வார்.
கோட்சாரத்தில் குரு பகவான் 9-ல் இருக்கும்போது, ராகு 3, 6, 12-ல் இருந்தால், அவருக்கு வெளிநாடுகளுக்குச் செல்வ தற்கான வாய்ப்பு கிட்டும்.
ஒருவரின் ஜாதகத்தில் 2-ஆம் பாவாதிபதி 5-ஆம் பாவாதிபதியுடன் 12-ல் இருந்தால், அவருக்கு வெளிநாட்டில் தங்கியிருப் பதற்கான வாய்ப்பு இருக்கும்.
ஜாதகத்தில் லக்னத்தில் சூரியன், புதன், 3-ல் ராகு, 9-ல் குரு, கேது இருந்தால், அவர் தன் புகழின் காரணமாக வெளி நாட்டில் பல வருடங்கள் தங்கியிருக்கும் வாய்ப்பினைப் பெறுவார்.
5-க்கு அதிபதியும், 11-க்கு அதிபதியும் 9-ஆவது பாவத்தில் இருந்தால், அந்த ஜாதகருக்கு வெளிநாட்டிற்குச் செல்வதற் கான வாய்ப்பு கிட்டும்.
ஒருவர் ஜாதகத்தில் ராகு, புதன், சுக்கிரன் 2-ல் இருந்து, அதே ஜாதகத்தில் 10-ல் செவ்வாய் இருந்தால், அவர் படிப்பிற் காகவும், புகழடைவதற்காகவும் வெளி நாட்டிற்குச் செல்வார்.
லக்னத்தில் சந்திரன், செவ்வாய், 10-ல் சனி இருந்தால், அவர் புகழ்பெறும் நிலைக்காக வெளிநாட்டிற்குச் செல்வார்.
சிலருக்கு திடீரென்று அதிர்ஷ்டம் உண்டாகி வெளிநாட்டிற்குச் செல்வார்கள். அதற்குக் காரணம் அவர்களுடைய ஜாதகத்திலுள்ள குரு, சுக்கிரன், ராகு ஆகிய கிரகங்கள்தான்.
குரு 5-ல் இருந்து 9-ல் இருக்கும் ராகுவைப் பார்த்தால், அந்த ஜாதகருக்கு திடீரென்று அதிர்ஷ்டம் உண்டாகி, வெளிநாட்டிற்குப் பயணம் செல்லும் சூழல் உண்டாகும்.
4-ல் சுக்கிரன், 9-ல் சனி, 10-ல் குரு இருந்தாலும், லக்னத்தில் சுக்கிரன், 9-ல் குரு, 11-ல் சந்திரன் இருந்தாலும், லக்னத்தில் சுக்கிரன், 4-ல் குரு, 9-ல் ராகு, 10-ல் சனி இருந்தாலும் அவர் அடிக்கடி வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொள்வார்.
ஒரு ஜாதகத்தில் 9-ஆம் பாவாதிபதி அஸ்தமனமாகவோ நீசமாகவோ இருந்தால், அவர் எப்போதெல்லாம் வெளி நாட்டிற்குச் செல்லவேண்டுமென்று தீர்மானிக்கிறாரோ, அப்போதெல்லாம் ஏதாவது பிரச்சினைகள் உண்டாகும்.
2-ஆம் பாவாதிபதி அஸ்தமனமாகவோ நீசமாகவோ இருந்து, 5-க்கு அதிபதி, 11-க்கு அதிபதியுடன் பலவீனமாக இருந்தால், அவர் வெளிநாட்டிற்குப் பயணம் செய்யும்போது ஏதாவது நஷ்டம் உண்டாகும்.
ராகு, சனி லக்னத்தில் அல்லது 4-ல் இருந்து, செவ்வாய் 7-ல் அல்லது 4-ல் இருந்தால், அவர் வெளிநாட்டிற்குப் பயணம் செய்யும்போது ஏதாவது பிரச்சினைகள் உண்டாகும்.
ஒரு வீட்டின் தென்கிழக்கிலும் வடமேற்கிலும் தேவையற்ற பொருட் களைத் தேக்கிவைத்தால், அவர் வெளி நாட்டிற்குப் பயணம் மேற்கொள்ளும்போது பிரச்சினைகள் வந்துசேரும். சிலருக்கு அந்தசமயத்தில் நோயின் பாதிப்பு உண்டாகும்.
பரிகாரங்கள்
வீட்டின் வடமேற்கு அறையில் மேற்கு திசையில் தலை வைத்துப் படுப்பது நல்லது.
வீட்டின் தென்கிழக்கில் தேவையற்ற பொருட்களைச் சேர்த்து வைக்கக்கூடாது. வடகிழக்கில் துணி துவைக்கக்கூடாது. வீட்டிற்கு பச்சை வண்ணம் கூடாது.
தினமும் ஆஞ்சனேயரை நான்குமுறை சுற்றிவந்து வழிபடவேண்டும்.
பௌர்ணமியன்று அரசமரத்தை ஒரு வெண்ணிற நூலைக்கொண்டு நான்குமுறை சுற்றிக் கட்டிவிட்டு, பிறகு அங்கு ஒரு தீபத்தை ஏற்றி வைக்க வேண்டும்.
பாஸ்போர்ட், விசா ஆகியவற்றை வீட்டின் வடக்கு திசையிலிருக்கும் அலமாரியில் வைக்கவேண்டும்.
செல்: 98401 11534