Advertisment

தன யோகம் எப்போது!

/idhalgal/balajothidam/when-dhana-yogam

ன்றைய உலகில் பணம் என்பது மிகவும் முக்கியமான விஷயம். பணம் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பது இன்றைய சூழ்நிலையாகும். குறிப்பிட்ட சிலருக்கு பணம் எளிதில் கிடைத்துவிடுகிறது. பலருக்கு அவ்வளவு எளிதில் பண வரவு கிடைப்பதில்லை. ஜோதிடரீதியாக யாருக்கு எளிதில் பணம் கிடைக்கிறது? திடீர் பணக்காரனாகும் யோகம் யாருக்கு என்பதனைப் பற்றி இங்கு பார்ப்போம்.

Advertisment

பொருளாதாரரீதியான சிறப்பான பலன் கள் ஏற்பட ஜனன ஜாதகம் சாதகமாக இருப் பது மட்டுமின்றி, கோட்சார கிரகச் சூழ்நிலையும் சாதக மாக அமையவேண் டும். அதைவிட மிக முக்கியமான ஒன்று, ஒரு ஜாதகத் தில் யோகங்கள் இருப்பது மட்டும் முக்கியமில்லை; யோகத்தை ஏற்படுத் தக்கூடிய கிரகங் களின் தசாபுக்தி நடக்க வேண்டும். அதிலும் அந்த தசா புக்தி பொருளாதார ரீதியாக ஏற்றத்தைத் தரும் தசாபுக்தியாக இருக்கவேண்டும்.

ஜனன ஜாதகமும் தன யோகமும்

lakshmiஜென்ம லக்னத் திற்கு 2-ஆம் வீடு தனஸ்தானம்; 9-ஆம் வீடு பாக்கிய ஸ்தானம்; 10-ஆம் வீடு ஜீவன ஸ்தானம்; 11-ஆம் வீடு லாப ஸ்தானமா

ன்றைய உலகில் பணம் என்பது மிகவும் முக்கியமான விஷயம். பணம் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பது இன்றைய சூழ்நிலையாகும். குறிப்பிட்ட சிலருக்கு பணம் எளிதில் கிடைத்துவிடுகிறது. பலருக்கு அவ்வளவு எளிதில் பண வரவு கிடைப்பதில்லை. ஜோதிடரீதியாக யாருக்கு எளிதில் பணம் கிடைக்கிறது? திடீர் பணக்காரனாகும் யோகம் யாருக்கு என்பதனைப் பற்றி இங்கு பார்ப்போம்.

Advertisment

பொருளாதாரரீதியான சிறப்பான பலன் கள் ஏற்பட ஜனன ஜாதகம் சாதகமாக இருப் பது மட்டுமின்றி, கோட்சார கிரகச் சூழ்நிலையும் சாதக மாக அமையவேண் டும். அதைவிட மிக முக்கியமான ஒன்று, ஒரு ஜாதகத் தில் யோகங்கள் இருப்பது மட்டும் முக்கியமில்லை; யோகத்தை ஏற்படுத் தக்கூடிய கிரகங் களின் தசாபுக்தி நடக்க வேண்டும். அதிலும் அந்த தசா புக்தி பொருளாதார ரீதியாக ஏற்றத்தைத் தரும் தசாபுக்தியாக இருக்கவேண்டும்.

ஜனன ஜாதகமும் தன யோகமும்

lakshmiஜென்ம லக்னத் திற்கு 2-ஆம் வீடு தனஸ்தானம்; 9-ஆம் வீடு பாக்கிய ஸ்தானம்; 10-ஆம் வீடு ஜீவன ஸ்தானம்; 11-ஆம் வீடு லாப ஸ்தானமாகும். ஒருவருக்கு வீடு, வாகன யோகத்தையும், அசையா சொத்து யோகத்தையும் உண்டாக்க வழிவகுக்கும் ஸ்தானமாக 4-ஆம் வீடு அமைகிறது. அதுபோல 5-ஆம் வீடு பலம்பெற்றிருந்தால் பூர்வபுண்ணிய வகையில் பொருளாதாரரீதியாக யோகத்தினை அடையமுடியும். நவகிரகங்களில் தனகாரகனான குருபகவான் ஒருவர் ஜாதகத்தில் ஆட்சி, உச்சம் பெற்றோ கிரகச் சேர்க்கை பெற்றோ பலமாக அமையப்பெற்றால் பொருளாதார மேன் மைகள் எளிதில் உண்டாகும். ஒருவர் ஜாதகத்தில் மேற்கூறியவாறு 2, 9, 10, 11 ஆகிய பாவங்கள் பலம்பெறுவது முக்கி யம். அதுமட்டுமின்றி கிரகங்கள் 6, 8, 12-ல் மறையாமல் இருப்ப தும் முக்கியமாகும்.

2, 9, 10, 11-க்கு அதிபதிகள் ஒருவருக் கொருவர் பரிவர்த் தனைப் பெற்றிருப்ப தும், ஆட்சி பெற்று பலமாக அமைவதும் வலிலிமையான தன யோகத்தை உண்டாகும். 4, 7, 10 ஆகியவை கேந்திர ஸ்தானங்கள்; 1, 5, 9 ஆகியவை திரிகோண ஸ்தானங் களாகும். ஒருவர் ஜாதகத்தில் கேந்திர, திரிகோணாதிபதிகள் பரிவர்த்தனைப் பெற்றிருந்தாலும், இணைந்து பலமாக அமையப் பெற்றிருந்தாலும் எதிர்பாராத வகையில் பொருளாதார ஏற்றத்தினை அடையமுடியும்.

Advertisment

பொதுவாக ஒருவர் ஜாதகத்தில் மூன்று கிரகங்கள் ஆட்சியோ, உச்சமோ பெற்றிருந்தால் அந்த ஜாதகர் எவ்வளவு ஏழ்மையான நிலையில் இருந்தாலும் சமுதாயத்தில் சொல்லக்கூடிய அளவுக்கு உயர்வினை என்றாவது ஒரு நாள் கண்டிப்பாக அடைவார். 4-ஆம் அதிபதி பலமாக அமையப் பெற்றால் கிடைத்த பணத்தை வைத்து சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும். அதுபோல ஒருவர் ஜாதகத்தில் எந்த பாவம் பலம்பெறுகிறதோ அந்த பாவத்தின் வழியில் தாராளமான பணத்தினை அடைய நேரிடும். உதாரணமாக, 9-ஆம் பாவம் பலம்பெற்றிருந்தால் தந்தை மூலமாகவும், 7-ஆம் பாவம் பலம்பெற்றால் மனைவி மற்றும் கூட்டுத்தொழில் மூலமாகவும், 4-ஆம் பாவம் பலம்பெற்றிருந்தால் தாய்வழியிலும், 3, 11-ஆம் பாவங்களும் செவ்வாயும் பலம்பெற்றிருந்தால் உடன்பிறந்தவர்மூலமும் எதிர்பாராத தனவரவுகளையும் பொருளாதார மேன்மைகளையும் அடையமுடியும்.

கோட்சாரமும் தன யோகமும்

கோட்சாரரீதியாக ஜென்ம ராசிக்கு ஆண்டுக்கோளான குருபகவான் 2, 5, 7, 9, 11 ஆகிய ஸ்தானங்களில் சஞ்சாரம் செய்யும்போது பணவரவு திருப்திகரமாக இருக்கும். அதுபோல ஒரு ராசியில் அதிக காலம் தங்கும் சனி பகவான் 3, 6, 11 ஆகிய பாவங்களில் சஞ்சாரம் செய்கின்றபோது பொருளாதாரரீதியாக மேன்மைகள் உண்டாகின்றன.

தசாபுக்தியும் தன யோகமும்

ஒருவர் சம்பாதித்து அத்தியாவசிய செலவுகள் செய்வதென்பது தன யோகமாகக் கருதமுடியாது. அத்தியா வசிய செலவுகளுக்கு அப்பாற்பட்டு அபரிமித மாக சேரும் பணமே தன யோகமாகும்.

அப்படிப்பட்ட சேர்க்கையானது தசாபுக்தி மிகவும் சாதகமாக இருக்கின்ற காலத்தில்தான் ஏற்படுகிறது.

குறிப்பாக எதிர்பாராத விதத்தில் தன யோகத்தை அடைய தசாபுக்தி ரீதியாக சில கிரகங்கள்தான் மிகவும் உதவியாக இருக்கின்றன. அதுவும் குறிப்பாக சுக்கிரன், புதன், சனி, ராகு ஆகிய தசைகள் தான் எதிர்பாராத யோகத்தினை உண்டாக்கு கின்றன. குறிப்பாக சூரியன், சந்திரன், செவ்வாய், குரு, கேது ஆகிய தசைகள் நடக் கின்றபோது தன வருவாய் ஒரு சீரானதாக இருக்கிறது. அதுமட்டுமின்றி நேர்மை யான வழியிலும் நல்வழியிலும் பல பொதுக்காரியங்கள் செய்வதற்கும் வழிவகுக் கும் தசையாகவே விளங்குகிறது. ஆனால் ஒருவருக்கு கேந்திர, திரிகோண ஸ்தானங் களில் சுக்கிரன், புதன், சனி, ராகு ஆகிய நான்கு கிரகங்கள் அமையப்பெற்று, அந்த தசையானது நடைபெற்றால் திடீர் செல்வந்த ராகக்கூடிய அமைப்பினை உண்டாக்குகிறது. பொதுவாக 3-ஆவது தசை பெரிய யோகத்தினை ஏற்படுத்துவதில்லை.

உதாரணமாக சனியின் நட்சத்திரமான பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு 4-ஆவது தசையாக சுக்கிர தசை வருவதால், சுக்கிரன் பலம்பெற்றுவிட்டால் எதிர்பாராத தன யோகத்தினை சுக்கிர தசையில் அடைய முடியும்.

அதுபோல புதனின் நட்சத்திரத்தில் பிறந்த வர்களுக்கு சுக்கிர தசை 3-ஆவது தசை என்பதால் பெரிய யோகத்தினை ஏற்படுத்த இடையூறுகள் உண்டாகும்.

சந்திரனின் நட்சத்திரத்தில் பிறந்தவர் களுக்கு ராகு தசை 3-ஆவது தசையாக வருவதால் அனுகூலத்தை ஏற்படுத்துவதில்லை. அதுவே சனி பலம்பெற்றிருந்தால் காலம் கடந்து வரக்கூடிய சனி தசை பெரிய அளவில் யோகத்தினை உண்டாக்குகிறது.

செல்: 72001 63001

bala091118
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe