எண்ணெய்க் குளியல் செய்வதற்கான வழிமுறைகளை நம் முன்னோர்கள் வகுத்துச் சென்றுள்ளனர். பலரும் அதைக் கடைப்பிடிப்ப தில்லை. தற்காலத்தில் விற்கப்படும் வாசனை திரவியங்களைப் பூசிக்கொள்வது மட்டும் எண்ணெய்க் குளியலாகிவிடாது.
இதுபற்றி ஒரு பாடல் உள்ளது.
"அருக்க னெண்ணெய் அழகழிக்கும்
அணியார் திங்க ளாகாது
திருக்கருஞ் செவ்வா யுயிர்போக்கும்
செய்ய புதனிற் பொருளுண்டாம்
கருத்தை யழிக்கும் கவின் வியாழம்
கைப்பொருள் போக்குங் கனவெள்ளி
பொருத்த முண்டாம் சனியெண்ணெய்ப்
பேணல் முழுக வல்லவரே.'
ஞாயிற்றுக்கிழமை எண்ணெய்க் குளியல் செய்தால் அழகு போய்விடும். எனவே ஞாயிற்றுக்கிழமைகளில் அழகுள்ளவர்கள் மட்டும் செய்யலாகாது.
திங்கள்கிழமைகளில் எண்ணெய்க் குளியல் செய்தால் சண்டை உண்டாகும். எனவே திங்கள் கிழமைகளைத் தவிர்க்கவேண்டும்.
செவ்வாய்க்கிழமைகளில் எண்ணெய்க் குளியல் செய்தால் சரீரத்தில் அசௌக்கியமும் ஒவ்வாமையும் தோன்றும். ஆகவே செவ்வாய்க் கிழமை கூடாது.
புதன்கிழமை செய்தால் திரவிய லாபம் உண்டாகும். அது விசேஷமான நாளாகும்.
எனவே ஆண், பெண் இருபாலரும் புதன்கிழமை யன்று எண்ணெய் ஸ்நானம் செய்துகொள்வது நல்லது.
வியாழக்கிழமையன்று எண்ணெய்க் குளியல் செய்தால் மன விகாரம் (எரிச்சல்) ஏற்படும். எனவே வியாழக்கிழமைகளில் ஆண், பெண் இருபாலரும் எண்ணெய்க் குளியல் செய்துகொள்ளக்கூடாது.
வெள்ளிக்கிழமை
யன்று பெண்கள் மட்டும் எண்ணெய்க் குளியல் செய்யலாம். நலம் பயக்கும். ஆண்கள் செய்யக்கூடாது.
எண்ணெய்க் குளியல் செய்வதற்கு ஆண்- பெண் இருபாலருக்கும் சனிக்கிழமை நல்ல நாளாகும். சரீர ஆரோக்கியமும், வல்லமையும் ஏற்படும்.
வெள்ளிக்கிழமைகளில் நண்ப கலுக்குமேல் தைலக் குளியல் செய்தால் தன விருத்தியுண்டாகும்.
கடுகெண்ணெய், அத்தர், மல்லிலிகைத் தைலம், வேறு ஏதாவது வஸ்து கலந்து அல்லது காய்ச்சிய எண்ணெயை வெள்ளிக்கிழமையன்று தேய்த்துக் கொண்டால் வாரம் முழுவதும் தோஷம் வராது.
அமாவாசையன்றும், ஞாயிற்றுக் கிழமைகளிலும், தைப்பொங்கல் வரும் கிழமைகளிலும் வெந்நீரில் நீராடக் கூடாது. ஜனனம், மரணங் களால் ஏற்படும் சூதகம் என்ற தீட்டுக்காலங்களிலும் வெந்நீரில் நீராடக் கூடாது. அப்படிச் செய்தால் "ரௌரவம்' என்ற நரகத்தை அடைவார் என்று சாஸ்திரம் கூறுகிறது.
எனவே புதன், சனிக்கிழமைகள் ஆண்- பெண் இருபாலரும் எண்ணெய்க் குளியல் செய்ய உகந்தவையாகும். வெள்ளிக்கிழமை மட்டும் பெண்களுக்கு நலம் உண்டாகும்.
தீபாவளி போன்ற விசேஷ தினங்கள் மற்ற கிழமைகளில் வந்தால் என்ன செய்வதென்ற எண்ணம் வரலாம். அவ்வாறு எண்ணெய் தேய்த்து நீராடும் அவசியம் வரும்போது கீழ்க்கண்ட பரிகாரத்தைச் செய்துகொள்ளவும்.
பரிகாரம்
இருந்த இடத்திலிலிருந்தே-
"மந்தனாம் சனியே உந்தன்
மகத்துவம் அறிந்து கொண்டேன்
வந்ததோர் துயரம் நீக்கு
மனதினில் அமைதி கூட்டு'
என்று 16 முறை சொல்லி சனி பகவானை வணங்கினால் எல்லா நன்மைகளும் உண்டாகும்.
செல்: 94871 68174