Advertisment

குருப்பெயர்ச்சி நல்ல பலன் தரும் நேரம் எப்போது? - "நையாண்டி சித்தர்" க.காந்தி முருகேஷ்வரர்

/idhalgal/balajothidam/when-best-time-gypsies-satirical-siddhar-k-gandhi-murugeshwar

னுஷனுக்கு ஒவ்வொரு வயதிலும், ஒவ்வொரு மனநிலை இருக்கும். ஒவ்வொருத்தரும் எல்லா கஷ்டத்தையும் தாங்கிட்டு, ஏதாவதொரு நம்பிக்கையில, வாழ்க்கை சீக்கிரம் மாறிடும்ன்னு போராடி ஓடுவாங்க. அதுல வெற்றியடைஞ்சவன் சகஜமான வாழ்க்கைய வாழ ஆரம்பிச்சுடுவான். தொடர் போராட்டமும், தொடர் தோல்வியும் சந்திக்கிற மனுஷன், நிலைகுலைஞ்சு போயிடுவான். அவ்வளவுதான் நம்ம வாழ்க்கையா? நம்ம ஜெயிக்கவே முடியாதா? என்கிற வேதனையும், வறுமையும் அவனை விரக்தியான முடிவுகளை எடுக்க வச்சுடும்.

Advertisment

இதற்கு அருகில் இருக்கும் யாராலும் ஆறுதலோ, உதவியோ செய்யமுடியாது. ஆனா, "நான் ஒரு இடத்துல ஜாதகம் பாத்தேன், நடந்ததெல்லாம் அப்டியே சொன்னாரு, அவர் சொன்னபடிதான் இப்பவும் நடந்துட்டு இருக்கு. நீ வேணா போய்ப்பாரு''ன்னு ஒரு வழிய காட்டுவாங்க. அப்படிதான் அந்த காலத்துல பல பேருக்கு ஜோதிடம் அறிமுகமாகும். இன்னைக்கு மீடியாக்கள் வளர்ச்சியால, யாருடைய துணையுமின்றி, பல ஜோதிடர்களை வீடியோக்களிலேயே சந்திக்கிறாங்க. அவர்கள் ஒவ்வொரு மாதிரியான சுயகருத்துகளை, கற்பனை கலந்து, தொழில்,வியாபாரத்துக்காக சொல்கிறார்கள். இது மக்களோட மனநிலைய கலக்கமடைய வச்சு, கலங்கி நிற்க வச்சிடுது.

"குருப்பெயர்ச்சி ஆனதும், சரியாகிடும்ன்னு ஒவ்வொரு நாளையும் கடத்திட்டு இருந்தேன். குருப்பெயர்ச்சியும் ஆகிடுச்சு. ஒரு மாற்றமும் இல்லை. இருப்பதைவிட மனக்கஷ்டம் அதிகமாயிட்டே போகுது. என்ன பண்றதுன்னே தெரியல. என் பிரச்சினைக்கு முடிவே இருக்கா? இல்லையா?'' சரியாகிடும்ன்னா எப்ப சரியாகும்?. இனிமேல் சரியே ஆகாதுன்னா சொல்லிடுங்க. நொந்த மனச தேத்துறேன்னு "இப்ப நடந்துரும், அடுத்த மாசம் நடந்துரும், இன்னும் ஆறு மாசத்துல நடந்துடும்ன்னு நம்பிக்கை கொடுக்காதீங்க.

னுஷனுக்கு ஒவ்வொரு வயதிலும், ஒவ்வொரு மனநிலை இருக்கும். ஒவ்வொருத்தரும் எல்லா கஷ்டத்தையும் தாங்கிட்டு, ஏதாவதொரு நம்பிக்கையில, வாழ்க்கை சீக்கிரம் மாறிடும்ன்னு போராடி ஓடுவாங்க. அதுல வெற்றியடைஞ்சவன் சகஜமான வாழ்க்கைய வாழ ஆரம்பிச்சுடுவான். தொடர் போராட்டமும், தொடர் தோல்வியும் சந்திக்கிற மனுஷன், நிலைகுலைஞ்சு போயிடுவான். அவ்வளவுதான் நம்ம வாழ்க்கையா? நம்ம ஜெயிக்கவே முடியாதா? என்கிற வேதனையும், வறுமையும் அவனை விரக்தியான முடிவுகளை எடுக்க வச்சுடும்.

Advertisment

இதற்கு அருகில் இருக்கும் யாராலும் ஆறுதலோ, உதவியோ செய்யமுடியாது. ஆனா, "நான் ஒரு இடத்துல ஜாதகம் பாத்தேன், நடந்ததெல்லாம் அப்டியே சொன்னாரு, அவர் சொன்னபடிதான் இப்பவும் நடந்துட்டு இருக்கு. நீ வேணா போய்ப்பாரு''ன்னு ஒரு வழிய காட்டுவாங்க. அப்படிதான் அந்த காலத்துல பல பேருக்கு ஜோதிடம் அறிமுகமாகும். இன்னைக்கு மீடியாக்கள் வளர்ச்சியால, யாருடைய துணையுமின்றி, பல ஜோதிடர்களை வீடியோக்களிலேயே சந்திக்கிறாங்க. அவர்கள் ஒவ்வொரு மாதிரியான சுயகருத்துகளை, கற்பனை கலந்து, தொழில்,வியாபாரத்துக்காக சொல்கிறார்கள். இது மக்களோட மனநிலைய கலக்கமடைய வச்சு, கலங்கி நிற்க வச்சிடுது.

"குருப்பெயர்ச்சி ஆனதும், சரியாகிடும்ன்னு ஒவ்வொரு நாளையும் கடத்திட்டு இருந்தேன். குருப்பெயர்ச்சியும் ஆகிடுச்சு. ஒரு மாற்றமும் இல்லை. இருப்பதைவிட மனக்கஷ்டம் அதிகமாயிட்டே போகுது. என்ன பண்றதுன்னே தெரியல. என் பிரச்சினைக்கு முடிவே இருக்கா? இல்லையா?'' சரியாகிடும்ன்னா எப்ப சரியாகும்?. இனிமேல் சரியே ஆகாதுன்னா சொல்லிடுங்க. நொந்த மனச தேத்துறேன்னு "இப்ப நடந்துரும், அடுத்த மாசம் நடந்துரும், இன்னும் ஆறு மாசத்துல நடந்துடும்ன்னு நம்பிக்கை கொடுக்காதீங்க. எதிர்பார்த்து, எதிர்பார்த்து ஏமாற்றம் அடைய, என்னால இனி முடியாது''. "வர வர ஜோதிடத்தின்மீது இருந்த நம்பிக்கையே போச்சு''என இன்று நிறைய பேர் பொளம்ப ஆரம்பிச்சுட்டாங்க... இதற்கெல்லாம் என்ன காரணம்?... குருப்பெயர்ச்சி யாருக்கு நன்மை செய்யும்? யாருக்கு தீமை செய்யும்?

guru

Advertisment

கோட்சாரப்படி குரு மீனத்திலிருந்து, மேஷத்திற்கு மாறினார். குரு 2, 5, 7, 9, 11-க்கு மாறியவர்களுக்கு நன்மையும், குரு 1, 6, 8, 12 தீமையும், குரு 3, 4, 10 கலவையான பலன்களையும் தருமென்பது பொது விதி. யாருக்கும் குரு மாறிய நாள் முதல், உடனே பலன் கிடைக்காது. அதற்கு சூட்சும காரணங்கள் நிறைய இருக்கிறது.

மேஷத்தில் மூன்று நட்சத்திரங்கள் இருக்கிறது. அஸ்வினி 4 பாதங்கள், பரணி 4 பாதங்கள், கார்த்திகை 1 என ஒன்பது பாதங்கள் இருக்கின்றன. மேஷம் சர ராசி. நெருப்பு ராசி, தர்ம திரிகோண ராசி.

மேஷத்தில் நவகிரகங்களின் நிலை, சூரியன் உச்சம், செவ்வாய் ஆட்சி, சனி நீசம், குரு நட்பு, புதன், சுக்கிரன், சந்திரன் சமம். ராகு, கேது பகை என இருக்கும். காலபுருஷ தத்துவப்படி, ராசி கட்டத்தில்முதல் ராசி மேஷ ராசி, அதன் அதிபதி செவ்வாய், அதன் காரகம், அதில் இருக்கும் மூன்று நட்சத்திரங்களுக்கான காரகத்துவம் தனித்தனியாக உண்டு. இப்படி மேஷ ராசிக்கென்று நிறைய பலன்கள் இருக்கிறது. அதனை பொறுத்தே பலன் கிடைக்கும்.

உதாரணமாக மீன ராசியை எடுத்துக்கொள்வோம். 2-ல் குரு மாறியதும் உடனே முழு யோக பலனை தருமா?. மேஷ ராசியை போன்று மீன ராசிக்கும் பூரட்டாதி 4, உத்திரட்டாதி 1, 2, 3, 4 ரேவதி நான்கு பாதங்கள் என மூன்று நட்சத்திரங்களும், ஒன்பது பாதங்களுக்கும் இருக்கிறது. ஒவ்வொரு நட்சத்திர பாதத்திற்கும், இந்த குருப்பெயர்ச்சி காலமான ஒரு வருடத்திற்குள், குறிப்பிட்ட காலகட்டத்திலேயே கோட்சார பலனான தனம், குடும்ப மகிழ்ச்சியை தருவார்.

கோட்சார பலனை பலவிதமாக கணித்தே, பலன் அறியமுடியும். மேஷத்தில் குரு அஸ்வினியில் பயணிக்கும்போது, நம் பிறந்த நட்சத்திரத்திற்கு அஸ்வினி நட்பா, பகையா என பார்க்கவேண்டும். பிறந்த நட்சத்திரத்திற்கு அஸ்வினி நட்சத்திரம்- சம்பத்து, சேம, சாதக, மைத்ர, பரம மைத்தர தாரை என இருந்தால் நன்மையும், ஜென்ம, விபத்து, ப்ரத்யர, வதை தாரை, வைனாசிக நட்சத்திரமாக அமைந்தால் தீமையும் தரும். அஸ்வினி கேதுவின் அம்சம். கேது லக்னத்திற்கு எந்த இடத்தில் இருக்கிறது. அதனுடன் இணைந்த, பார்த்த சுபக் கோள்களால் கேது பெற்ற நிலையை ஆராயவேண்டும்.

அஸ்வினியில் இருக்கும்போது தனுசு, கேது நட்சத்திரமான மகம் சிம்மத்திலும், மூலம் தனுசையும் பார்ப்பார். அதில் ஏதாவது கிரகங்கள் இருந்தால் அதன் காரகத்துவத்திற்கு நற்பலன் கிடைக்கும்.

கோட்சார குருப்பெயர்ச்சியான நேரத்தில் மேஷ வீட்டில் நான்கு கிரகங்கள் உள்ளன. குரு, சித்திரை மாதம் வரை உச்ச சூரியன், புதன், புதன் வக்ரம் வைகாசி 24 வரை, ராகு ஐப்பசி 13 வரை மேஷத்தில் இருக்கிறது. சூரியன், புதன், ராகு மேஷத்தை விட்டு விலகும்போதே குருவின் முழுபலனை அடையமுடியும்.

மேஷத்திற்குள் நுழைந்த குரு, அஸ்வினி நான்கு பாதங்களில் நகருவார். சுய ஜாதகத்தில் மேஷத்தில் கிரகங்கள் இருந்தால், அதன்மீது மோதுவார். உதாரணமாக சுயஜாதகத்தில் மேஷத்தில் செவ்வாய் அஸ்வினி 4-ஆம் பாதத்திலும், சனி பரணி 2-ஆம் பாதத்திலும் இருந்தால், கோட்சார குரு, பிறந்த ஜாதக செவ்வாய் அஸ்வினி 4-ஐயும், சனி பரணி 4-ஐயும் கடந்து செல்லுவார். லக்னத்திற்கு செவ்வாயும், சனியும் என்ன காரகமோ, அவர்களுக்கான பலன் தருவார். காரகம் சுபத்துவப்பட்டால் நன்மையும், பாவத்துவப்பட்டால் தீமையும் தருவார்.

குரு அஸ்வினியில் இருக்கும்போது கேதுவின் பலனும், பரணியில் சுக்கிரனின் பலனையும், கார்த்திகையில் சூரியனின் பலனையும், சுய ஜாதகத்தில் அவரவர் லக்னத்திற்கு கேது, சுக்கிரன், சூரியனின் நிலையை பொறுத்து ஒவ்வொருவிதமான பலன் கிடைக்கும். ஒரே ராசியில் இருப்பவர்களுக்கு ஒரே நேரத்தில் ஒரே மாதிரியான பலன் கிடைக்காததற்கு இதுவே காரணம்.

மேலும், தற்சமய கோட்சாரப்படி கும்பத்திலிருந்து சனி, மேஷத்தை மூன்றாம் பார்வையாக, கோட்சார குருவை பார்க்கிறார். இதனால் குரு, சனியால் பாதிக்கப்படுகிறது. குரு பாவகிரகமான சூரியன், பாதகாதிபதி புதன், சர்ப்ப கிரகமான ராகு இவர்களால் முழு சுப பலனை தரமுடியாமல் தவிப்பார். இதில் மேலும் மற்றொரு பாவரான சனி பார்வை இடுவதால், சுப பலன் தர தவறவிடுகிறார். இதனால் ஜாதகருக்கு கையில் கிடைத்த வாய்ப்புகள் பலருக்கு தட்டிபோகும். இதனால் நற்பலன் கிடைக் காமல், பலர் வருந்தகூடிய சூழலே வரும். கெடு பலன் நடப்பதாக சொல்லியவர்களுக்கு அதிஷ்டவசமாக தப்பித்து, தப்பித்து வாழ்வர்.

"என்னங்க நானும் பாக்குறேன். எனக்கு தெரிஞ்சதுல இருந்து பலபேர் நல்லா வாழுறாங்க. எத்தனை குருப்பெயர்ச்சி வந்தாலும் பல வருஷமா நான் கஷ்டப்பட்டுகிட்டேதான் இருக்கேன்'' என சொல்லுறவங்களும் இருக்காங்க. கோச்சாரபலன் எப்போதும் குறைந்த சதவீத பலனே மட்டுமே தரும். தசை பலன் தான் ஜாதகரின் வாழ்க்கையை தீர்மானிக்கும். சுப தசை நடந்தால், கோட்சார கிரகங்கள் பலவீனமாக இருந்தாலும், கெடுபலன்கள் அதிகம் நடக்காமல் சுப பலன்களே ஜாதகருக்கு அதிகம் நடக்கும்.

குரு நல்ல இடத்துக்கு வந்துருச்சு, எனக்கு ஏன் நல்ல பலன் நடக்கலன்னு கேட்டா, குரு பாவகிரகத்தால பாதிக்கப்பட்டிருச்சுன்னு சொல்லுறீங்க. கோட்சாரம் நன்றாக இருந்து,

சுப பலன் ஏன் நடக்கலன்னு கேட்டா, உங்க சுய ஜாதகத்துல தசை பலன் சரியில்லைன்னு சொல்லுறீங்க. நல்லது நடக்க வழி கேட்டா, பரிகாரம் பண்ணா சரியாகும்ன்னு சொல்லுறீங்க. நாங்களும் நீங்க சொல்ற விதவிதமான பரிகாரத்தை, வேக வேகமா கடனை வாங்கியாவது பண்ணுறோம்.

அதுவும் ஏன் நடக்கலன்னு கேட்டா, உங்க கர்மா அனுபவிச்சு தான் ஆகும்னு கடைசியா சொல்றீங்க. அதற்கு ஆரம்பத்துலேயே, உங்க வாழ்க்கை இப்படிதான் இருக்கும்ன்னு சொல்லி தொலைய வேண்டியது தானன்னு பலர் மனம் விட்டு இப்ப கேட்குறாங்க.

பட்டு தெரிஞ்சாதான் புத்தி வரணும்ன்னு சிலருக்கு விதியிருக்கு. நேர்மையா பல ஜோதிடர்கள் இதுதான் உங்க பலன். நீங்க கோடீஸ் வரனாக வாழமுடியாது. இருக்கிறத வச்சு வாழங் கன்னு சொன்னா, அந்த ஜோதிடரை திட்டுவது, நெகடிவ்வா பேசுறாருன்னு அவரை சந்திப்பதை தவிர்கிறார்கள். பலன் ஒன்னு இருந்தா, பரிகாரம் ஒன்னு இருக்கும்ல, நோய் என்று இருந்தால் மருந்து இருக்கும்ல என விதவிதமான, ஜோதிடத்திற்கு பொருந் தாத பழமொழிகளை சொல்லி, ஜோதிடர்களை கெடுப்பதே ஆசைகொண்ட மனிதர்கள்தான்.

பணம் சம்பாரிக்க மந்திரமோ யாகமோ இருந்தால், ஒவ்வொரு ஜோதிடரும் நாட்டின் பெரிய கோடீஸ்வர்களாக மாறியிருப்பார்கள். ஆசைகளை நிறைவேற்ற, உழைப்பையும், முயற்சியையும் தொடர்ந்து செய்யுங்கள். இலட்சம் கிடைக்கவேண்டிய நேரத்தில் கோடிகள் கிடைக்கும். குடும்பத்தினருடன் அன்பாக வாழ கற்றுக்கொள்ளுங்கள். அக்கம், பக்கத்தில் இருப்பவர்களுடன் ஒப்பிட்டு வாழாமல் இருப்பதே மிகச் சிறந்த பரிகாரம். பணம் கொட்ட வழி சொல்லும், கண்ட கண்டவீடியோக்களை பார்ப்பதை நிறுத்தி னாலே பலருக்கு அன்பான, நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும்.

செல்: 96003 53748

bala260523
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe