காலம் என்பது இன்றியமையாதது. அதை சரியாகப் புரிந்துகொண்டு பயன்படுத்தினால் உலகையும் வெல்லலாம் என்பது பெரியோர் வாக்கு.
ஒருவர் தன் வாழ்வில் உயர்நிலையும் வெற்றியும் பெற்று வளம்காண, மூன்று காலங்களையும் அறிந்து கணக்கிட்டு செயல்படவேண்டும். இது தனிமனித வெற்றியின் சிதம்பர ரகசியம்.
ஒரு ஆலயத்திற்குச் செல்லும்போது, அங்கே அர்ச்சகர் 108 திருநாமங்களால் இறைவனுக்கு அர்ச்சனை செய்வதைக் காண்கிறோம். அது என்ன 108 என்னும் கணக்கு? அதில் சொல்லப் படும் ரகசியம், காலத்தை 108-ஆகப் பகுப்பதே.
அதில் 36 சதவிகித மனிதர்கள் கடந்த காலத்தில் இருக்கிறார்கள். அடுத்த 36 சதவிகிதத்தினர் நிகழ்காலத்தை நினைத்தே காலத்தைத் தள்ளிவிடுகிறார்கள். அடுத்த 36 சதவிகிதத்தினர் எதிர்கால சிந்தனையில் நாட்களைக் கழித்துவிடுவர். இந்த மூன்று காலங்களையும் ஒன்றுசேர்த்து நிகழ்கா லத்தில் செயல்படுவதற்குப் பயிற்சி வேண்டும். இதைப் புரிந்துகொண்டால் அனைவரும் வெற்றியாளர்களே!v ஒரு மனிதனை மறதிக்கு இட்டுச்செல்லும் கிரகநிலைகளைக் கண்டறிந்து சரிசெய் தால்தான் இதில் சாதிக்கமுடியும்.
இக்காலத்தில், நான்கு வருடங்கள் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்துவிட்டு, ஓராண்டு கழித்து இன்னொரு நிறுவனத்தின் நேர்காணலுக்குச் சென்றால், ஒரு வருடம் வேலையின்றி இருந்ததைக் காரணம் காட்டி திரும்ப அனுப்பி விடுகிறார்கள். சுமார் 15 ஆண்டுகளுக்குமுன் அப்படியில்லை. நான்காண்டு அனுபவத்திற்கு முக்கி யத்துவம் கொடுத்து ஆர்வமாக சேர்த்துக் கொள்வார்கள். இது ஒருவகை காலமாற்றம் என்பதை நாம் உணரவேண்டும். "கடந்த காலம் உடைந்த பானைபோல்' என்று அறிஞர் பெருமக்கள் கூறியுள்ளனர். எனவே, அதை மனதில் வைத்துக்கொண்டு கவலையில் மூழ்கக்கூடாது.
செயல்படுத்தும் நிகழ்கால யுக்தி ஒருவர், "எனக்கு சுக்கிர தசையில் குரு புக்தி. அதனால் எனக்குப் பணம் வீடுதேடி வரும்' என்று காத்திருந்தார். அப்போது, கடந்த வருடம் கடன் வாங்கிய ஒருவர் தேடிவந்து பணத்தைக் கொடுத்துவிட்டுச் சென்றார். இதுவே தொடரும் என்றெண் ணிய அந்த நபர், தன் பணிகளைத் தள்ளிப்போட்டு வந்தார்.
இன்னொருவரோ, "எனக்கு குரு தசை. ஆனால், ராகுவும் சேர்க்கை என்பதால் எதுவுமே நடக்கவில்லை' என்றார். எதிர்வீட்டுக்காரர், "உன் ஜாதகப்படி கேது பார்வையால் கெடுதல்கள் தீரும். செயலில் இறங்கு' என்றார். அவருக்கு வெற்றிக்கனிகள் மடியில் வந்து விழுந்தவண்ணமிருந்தன.
36 சதவிகித மக்கள் மட்டுமே நிகழ்கால சிந்தனையில் மனதை வைத்துச் செயல்படுகிறோம். எப்போதும் நம் முழு சிந்தனையையும் ஓரிடத்தில் குவிக்கப் பழகவேண்டும். அவ்வாறு சிந்தித்தால் எண்ணியது எண்ணியபடி கைக்கு வந்துசேரும் என்பது உளவியல் விதி.
மூன்று கால சிந்தனைகளையும் நாம் ஒருங்கே பயன்படுத்தி நிகழ்காலத்தில் சாதிக்கவேண்டும். இது அவ்வளவு சீக்கிரம் செயல் வடிவில் வந்துவிடாது. பயிற்சியும் முயற்சியும் அவசியம்.
நாற்காலி தயாரிக்கும் நிறுவனம் ஒன்றுக்கு 500 நாற்காலிகளுக்கு ஆர்டர் வந்தது. மாலை ஆறு மணிக்குள் தரவேண்டும் என்பது நிபந்தனை. தொழிலாளர்கள் அனைவரும் தயங்கினர். 200 நாற்காலிகள் வேண்டுமானால் செய்யலாம் என்றனர். சற்றும் தயங்காத முதலாளி, ஆர்டர் கொடுத்தவர்களுக்கு போன் செய்து, "மூன்று மணி நேரம் அவகாசம் கொடுக்கமுடியுமா? அப்போதுதான் தரமாக தயாரிக்க முடியும்' என்றார். அவர்களும் சம்மதித்தனர். உடனே தொழிலாளர்களைப் பார்த்த முதலாளி, "இன்று உங்களுக்கு கம்பெனி செலவில் மூன்று வேளை உணவு, ஓ.டி என எல்லாம் உண்டு. தயாரா?' என்றார். அதற்குள் நான்குபேர் வேலையைத் தொடங்கியிருந்தனர்!
இதுதான் முன்னோடியான வாழ்க்கைச் சூழல்.
சனி, ராகு, கேது, குரு ஆகியோரின் திறன் அதிகமாக இருந்தால் திடீரென இப்படியொரு உத்வேகம், சாதிக்கும் ஆற்றல் மின்னல்போல வந்துவிடும்.
ஆதார சக்கரங்களில் கிரகங்களின் பலம் ஒருவரின் ஜனன ஜாதக கிரக நிலைக்கும், உடலிலுள்ள ஆறு ஆதார சக்கரங்களுக்கும் நெருங்கிய தொடர்புண்டு.
மூலாதாரம்: சனி, ராகு, கேது இங்கு அமர்ந்திருக்க, சரியான பாதையில் நாம் செல்லத் தூண்டுதல் ஏற்படும். வியாபாரத்தில் ஸ்திரமான லாபம்பெற முடிவெடுக்கும் தன்மை இங்கே உருவாகிறது.
சுவாதிஷ்டானம்: சுக்கிரன் இங்கே ஆதிக்கம் செலுத்துவார். ஜாதகத்தில் இவர் சரியில்லை என்றால் இந்த சக்கரம் வேலை செய்யாது. பணமுடக்கம் ஏற்படக்கூடும். அதிர்ஷ்டப் பஞ்சை என்று சொல்வதுபோல, பணமிருந்தும் நற்பெயரையும் முன்னேற்றத் தையும் அறியமாட்டார்.
மணிப்பூரகம்: செவ்வாயும் கேதுவும் ஆதிக்கம் செலுத்துவர். வீடு, ரியல் எஸ்டேட், கல்லூரியில் போதனை போன்ற வற்றில் சுப, அசுபப் பலன்களைத் தருவர். மணிப்பூரகம் கெட்டால் மனமும் கெடும்.
ஜாதகத்தில் கேது, செவ்வாயின் மறைவு நிலையைக் கணித்துப் பலன் கூறவேண்டும்.
அனாகதம்: சூரியனின் சக்தி பெற்ற சக்கரம். இந்த சக்கரம் சரியாக இயங்கினால் அரசியலில் சிறந்த வெற்றி, அரசுத் துறைகளில் மிகப்பெரிய பொறுப்புகள், அதிகாரப் பதவிகள் கிடைத்து மதிப்புடன் திகழலாம். ஆனால், ஜாதகத்தில் சூரியன் பலம் குன்றி இருந்தால் நோய், கண்பார்வைப் பிரச்சினை ஏற்படக்கூடும். சூரிய தியானம் மற்றும் பரிகாரத்தால் இதற்குத் தீர்வு காணலாம்.
விசுக்தி: புதனின் ஆளுமையுடைய சக்கரம். அறிவு விருத்தியையும், சமயோ சிதமாக செயல்படும் ஆற்றலையும் தருவது. ஒரு குழந்தைக்கு விசுக்தியின் சக்தி அதிகமிருந்தால், எதிர்காலத்தில் அக்குழந்தை ஆராய்ச்சிப் படிப்பில் வெற்றி பெற்று, வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர், ஆய்வர் பணிக்குச் சென்று பெருமை சேர்க்கும்.
ஆக்ஞை: இந்த இடத்தில் சந்திரன் ஸ்திரமாக பலம் பெற்று அமைந்துவிட்டால், புகழும் அழகான உடலும் நிலைத்துநிற்கும். பெண்களுக்கு அழகு, ஆபரணச் சேர்க்கை, தலைவி பதவி போன்றவை கிட்டிட ஆக்ஞாவின் ஆக்ஞை வேண்டும் என்கிறது சக்கரங்களின் ஆய்வு நூல். ஆக்ஞா சக்கராந்தராளஸ்தாயை நம: என்று, ஆதிசங்கரர் லலிதா பரமேஸ்வரியைப் பெருமைப்படுத்துகிறார். பெண்கள் வாழ்வில் உயர சந்திரன், சுக்கிரன், சனியின் சக்கரங்கள் பலமாக இருக்கவேண்டும்.
அப்போதுதான் உயர்நிலையை அடைய சிந்தனை வெளிப்படும்.
சகஸ்ராரம்: குருவின் சக்தியுடைய சக்கர நிலை. மூளை அதிக சக்தியோடு செயல்பட இந்த சக்கரத்தின் பலம் வேண்டும்.
ஒரு ஜாதகத்தில் கடகத்தில் குரு உச்சமானால் பேச்சு அதிகமாக வெளிப் படும். மகரத்தில் நீசமானால் எந்த திட்டமும் வகுக்கமுடியாமல் பிறரிடம் யோசனை கேட்க நேரும். இவ்விரண்டுக்கும் சகஸ்ராரச் சக்கரமே ஆதார பீடமாக அமைந்துள்ளது. கு என்றால் இருள்; ரு என்றால் வெளிச்சம். ஒரு மனிதனை இருளிலிருந்து வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் கிரகம் குரு. எனவே சகஸ்ராரச் சக்கரம் சக்தி பெற்றதாக அமைந்துவிட்டால், அந்த நபர் தோல்வியடைய நேரிட்டாலும், சகஸ்ராரச் சக்கரத்தைத் தூண்டும் ஐஸ்வர்ய சிவன் வழிபாடு செய்து வந்தால் குருவின் அதீத பலம் மீண்டும் கிடைக்கப்பெற்று வாழ்வில் மின்னுவர்.
வெளிநாடு சென்று கார் டிரைவராகப் பணிபுரிந்த மூன்றுபேர், இந்த லாக்டவுன் காலத்திலும் சக்கரங்கள் சக்தி பெற்றெழ, அதிர்ஷ்ட தேவியின் கடைக்கண் பார்வை கிட்டி கோடீஸ்வரர்களாகிவிட்டனர்.
அயல்நாடு சென்ற ஒரு ஏழை தோட்டக்காரன், அங்கே உணவுக்கே லாட்டரி அடித்துக்கொண்டிருந்தவன், லாட்டரி அடித்து 365 கோடிகளுக்கு அதிபதியானான்.
இந்த அபூர்வ நிகழ்வுகளுக்கெல்லாம் காரணம் நமது உடலிலுள்ள சக்கரங்களின் சக்தி கூடுவதும் குறைவதுமேயாகும். எனவே, நமது சக்கரங்களில் ஏற்படும் குறைபாடுகளை உணர்ந்து அதை சரிசெய்ய வேண்டும்.
108 என்ற எண்ணிக் கையின் சூட்சுமம் இதுவேதான். இதுபோல 308- த்ரிசதீ வழிபாடு, 1,008 சகஸ்ரநாம அர்ச்சனை, சிவனது பஞ்சமுகார்ச்சனை ஆகியவற்றுக்கும் தனித்தனி தத்துவங்கள் உண்டு.
சக்கரங்களுக்கு சக்தி யூட்டி சாதிக்கலாமா? ஏழு சக்கரங்களும் நம் புறக்கண்களால் காண முடியாதவை என்பதால் அவற்றைப் பலரும் அலட்சியம் செய்கின்றனர். வாழ்வில் நமக்கு நிம்மதியும் பொருளாதாரப் பலமும் தேவைப்படும்போது தெய்வப் பரிகாரங்களைத் தேடுகிறோம். அதுபோல, சக்கரங்களுக்கு சக்தியூட்டு கிற ஆத்ம தியான அப்பியா சமும், அந்த சக்கரங்களுடன் இணைந்து செயல்படும் சக்தி தேவியின் சக்கர வழிபாடும் தேவை.
மேலும், நமது பத்து விரல்களின் நுனிகளிலும், உள்ளங்கையிலும் தொடு நிலைகள் உள்ளன. இதனால் எவரும் சாதனை மனிதரா கலாம். கல்வியாளராகலாம்.
செல்வந்தராகலாம். சக்கரங் களின் சக்தி குறையாமல், சக்தியின் சக்கரங்களை வழிபட்டு எதிர்வரும் இன்னல்களைத் தீர்த்துக் கொள்வோம்.
செல்: 91765 39026