னக புஷ்பராகம் என்பது குருவின் ரத்தினம்.

ஜாதகத்தில் குரு நல்ல நிலையில் இருப்பவர்கள் நீதிபதி, மடாதிபதி, தர்மகர்த்தாக்கள், வங்கி அதிகாரிகள், பணம் கடன் தருபவர்கள், உயர்கல்வி அதிகாரிகள், மதபோதகர்கள், விஞ்ஞானிகள், சொற்பொழிவாளர்கள், அரசியல்வாதிகள், கல்வியாளர்கள், வாகன உரிமையாளர்கள், ரசாயனப் பொருட்கள் விற்பவர்கள், துணி வர்த்தகர்கள், ஏற்றுமதி- இறக்குமதி செய்பவர்கள், மாவட்ட ஆட்சியர்கள், உயர் காவல்துறை அதிகாரிகள், பழ வியாபாரிகள், ஆராய்ச்சி அறிஞர்கள், சமூக சேவகர்கள், பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள்- இப்படி ஆகலாம்.

Advertisment

குரு கெட்டுப் போயிருந்தால், மூட்டு நோய், முதுகுத்தண்டு நோய், கை- கால் வீக்கம், வயிற்றில் பிரச்சினை, ஜீரணக் கோளாறு, காதில் நோய் ஆகியவை உண்டாகும்.

ஒரு ஜாதகத்தில் லக்னத்தில் குரு இருந்தால், ஜாதகர் புகழுடன் இருப்பார். அங்கு குரு உச்சமாக இருந்தால் ஹம்ஸ யோகம் உண்டாகும். ஹம்ஸ யோகத்தில் பிறந்தவர்கள் பெயர், பதவியுடன் வாழ்வார்கள். அவர்களுக்கு கஷ்டங்கள் வராது.

dஅப்படியே இருந்தாலும், அவை எளிதில் நீங்கி விடும். குருவுடன் அல்லது குருவுக்கு கேந்திரத்தில் சந்திரன் இருந்தால் கஜகேசரி யோகம் உண்டாகும்.

அவர், காட்டிலிருக்கும் சிங்கத்தைப்போல கம்பீர மாக இருப்பார்.

Advertisment

2-ஆம் பாவத்தில் குரு நல்ல நிலைமையில் இருந்தால் புகழ், பணத்துடன் இருப்பார். நல்ல அறிவுரைகளைக் கூறுவார். அதனால் பலருக்கும் பயன் கிடைக்கும்.

குரு 3-ல் இருந்தால், அவருடைய வாழ்வில் முற்பகுதியில் அலைச்சல்கள் அதிகமாக இருக்கும். ஆனால் புகழ், பணவசதி இருக்கும். பிற்பகுதி நன்றாக இருக்கும்.

4-ல் குரு இருந்தால், அந்த இடம் சுயவீடாகவோ உச்சவீடாகவோ இருந்தால் ஜாதகர் மகிழ்வுடன் வாழ்வார். ஆனால், குருவுடன் சனி சேர்ந்தால் அவருடைய தாய்க்கு உடல்நல பாதிப்பு உண்டாகும். வீட்டில் பிரச்சினைகள் ஏற்படும். தொழில்களில் சிரமங்கள் உண்டாகும்.

Advertisment

5-ஆம் பாவத்தில் குரு இருந்தால் நன்மைகள் நடக்கும். புகழ், பண வசதி இருக்கும். ஆனால், குரு நீசமாக இருந்தால், பிள்ளைகளால் சந்தோஷம் இருக்காது. 5-க்கு அதிபதி அஸ்தமனமாகவோ, நீசமாகவோ இருந்து குரு 5-ல் இருந்தால், குழந்தை பிறப்பதில் பிரச்சினை இருக்கும். 5-ல் இருக்கும் குருவை சனி, ராகு பார்த்தால், குழந்தை பிறக்கும்போது பிரச்சினை ஏற்படும்.

6-ல் குரு இருந்தால் ஜாதகருக்கு நோய்கள் குறையும். ஆனால், குரு பலவீனமாகவோ அல்லது பாவகிரகத்தால் பார்க் கப்பட்டாலோ காலில் அடிபடும். முதுகுத் தண்டில் பிரச்சினை, ஜீரணக்கோளாறு உண்டாகும்.

7-ல் குரு இருந்தால் சிலருக்கு திருமணத் தடை உண்டாகும். 7-ல் குரு, சூரியன், செவ்வாயுடன் இருந்தால், திருமணத்தில் பிரச்சினை ஏற்படும். உடல்நலம் கெடும். கோபம் அதிகமாக உண்டாகும். 7-ல் குரு, சந்திரன், சனி இருந்தால் திருமணத்தடை ஏற்படும்.

8-ஆம் வீட்டில் குரு இருந்தால் உணவு ஜீரணமாகாது. தலைவலி அதிகமாக இருக்கும். முதுகுத்தண்டில் நோய் வரும். குரு, சூரியன், செவ்வாயுடன் 8-ல் இருந்தால் பலசாலியாக இருப்பார். சிலர் அதிகமாக சாப்பிடுவார்கள். சிலர் தந்தையின் சொத்தை வைத்து வாழ்வார்கள். ஜாதகத்தில் குரு, சனி, சந்திரன் 8-ல் இருந்தால் சிலருக்கு மனநோய் ஏற்படும்.

9-ல் குரு இருந்தால், தாத்தா, தந்தைமூலம் பெயர் கிடைக்கும். குரு, செவ்வாயுடன் இருந்தால் பூமி, வாகனம் வாங்குவதன்மூலம் சந்தோஷம் கிடைக்கும். புகழ் வரும். சிலர் அரசியல்வாதியாவார்கள்.

10-ல் குரு இருந்தால், சிலர் நல்ல அரசியல் வாதியாக இருப்பார்கள். புகழ்பெற்ற நீதிபதியாக இருப்பார்கள். பிறருக்கு நன்மைகள் செய்வார்கள். பேராசிரியர், ஜோதிடர், ஆசிரியர் போன்ற பணிகளைச் செய்வார்கள். அந்த குருவுக்கு கேந்திரத்தில் சூரியன் இருந்தால் கேசரி யோகம் உண்டாகும். ஜாதகர் சாதாரண குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தன் முயற்சியால் பெரிய மனிதராக வருவார். 10-ல் குரு, செவ்வாய், சந்திரன் சேர்ந்திருந்தால், அவர் ஐ.ஏ.எஸ்., அதிகாரியாகவோ, புகழ்பெற்ற மருத்துவராகவோ இருப்பார்.

11-ல் குரு இருந்தால், ஜாதகர் தன் தந்தை வாழும் காலம்வரை சந்தோஷமாக இருப்பார். ஆனால், தந்தை மறைந்தபிறகு பல சிக்கல்கள் உண்டாகும். குரு, சந்திரனைப் பார்த்தால் அல்லது குருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் அல்லது சந்திரன் இருந்தால் அவர் சந்தோஷமாக வாழ்வார். பணவசதி இருக்கும்.

12-ல் குரு இருந்தால், தான் செய்வதுதான் சரி என்று அவர் நினைப்பார். பெண் ஜாதகத்தில் குரு பகவான் 12-ல் இருந்தால், அவள் மகாராணியாக வாழ்வாள். 12-ல் குரு, ராகுவுடன் இருந்தால் பலருக்கு அவசியமற்ற கனவுகள் வரும். காலில் நோய் இருக்கும். குரு, சூரியன், சனி 12-ல் இருந்தால், புகழ் இருக்கும். ஆனால் உடலில் நோயின் பாதிப்பு உண்டாகும்.

பரிகாரங்கள்

மேஷ லக்னக்காரர்கள் குருவின் ரத்தினமான புஷ்பராகத்தை அணியவேண்டும். 9-ஆவது பாவத்திற்கு அதிபதியான குரு நன்மைகளைக் கொடுப்பார்.

ரிஷப லக்னக்காரர்கள் குரு தசை நடந் தால் புஷ்பராகம் அணியவேண்டும்.

மிதுன லக்னக்காரர்களுக்கு சில காலங்கள் குருவின் நிலைமை சரியில்லாமல் இருக்கும். அப்போது மட்டும் புஷ்பராகத்தை அணியவேண்டும்.

கடக லக்னக்காரர்கள் புஷ்பராகம் அணியலாம்.

சிம்ம லக்னக்காரர்களுக்கு குரு பகவான் நல்ல இடத்தில் இருந்தால் புஷ்பராகத்தை அணியலாம்.

விருச்சிக லக்னக்காரர்கள் புஷ்பராகம் அணியவேண்டும்.

தனுசு லக்னக்காரர்கள் கட்டாயம் புஷ்பராகத்தை அணியவேண்டும்.

கன்னி, துலாம், மகர லக்னக்காரர்கள் புஷ்பராகத்தை அணியக்கூடாது.

கும்ப லக்னத்தினர் குரு தசை நடந்தால் புஷ்பராகத்தை அணியலாம்.

மீன லக்னக்காரர்களும் அணியலாம்.

செல்: 98401 11534