சென்ற இதழ் தொடர்ச்சி...
கேந்திர ஸ்தானம்
திரிகோண ஸ்தானத்திற்கடுத்து முக்கியத்துவம் வாய்ந்தது கேந்திர ஸ்தானமாகும். 1, 4, 7, 10 ஆகிய பாவகங்கள் கேந்திர ஸ்தானமெனும் விஷ்ணு ஸ்தானங்களாகும். கர்மவினையின்படி நிகழக்கூடிய சுக- துக்கங்களை, திரிகோணத்திற்கு அடுத்து கேந்திரம் தீர்மானிக்கிறது. கர்மவினையை முழுமையாக அனுபவிப்பவர் ஜாதகர் என்பதால் லக்னமே முதல் கேந்திரமாகும்.
ஒரு ஜனனம் நிகழ்வதற்கு தந்தை முதல் காரணமென்றால், தாய் இரண்டாவது காரணமென்பதால் மாத்ரு ஸ்தானமெனப் படும் நான்காம் பாவகம் கேந்திர ஸ்தானத் தில் இரண்டாமிடத்தை வகிக்கிறது. இதை சதுர்த்த கேந்திரம் என்றும் கூறலாம்.
பெற்றோர்களுக்கு அடுத்தபடியாக ஒரு ஜாதகருக்கு வாழ்நாள் முழுவதும் உறுதுணையாக இருப்பது களத்திரமாகும். களத்திர ஸ்தானமென்பது ஏழாம் பாவகமாகும். இது கேந்திர ஸ்தானங்களில் மூன்றாமிடத்தை வகிக்கிறது. இதை சப்தம கேந்திரம் எனலாம்.
தாய்- தந்தை மற்றும் களத்திரத்துடன் நிம்மதியாக வாழ தொழில் மிக முக்கியம். பத்தாம் பாவகமென்பது தொழில் ஸ்தானம்.
இதை தசம கேந்திரம் எனலாம். இது கேந்திரத்தில் நான்காமிடத்தைப் பெறுகிறது.
தந்தை- தாய், களத்திரம் மற்றும் தொழில் ஆகியவற்றின்மூலம் ஜாதகருக்குக் கிடைக்கப்பெறும் அனுகூலத்தை லக்ன பாவகமே தீர்மானிக்கிறது என்பதால், திரிகோணம், கேந்திரம்
சென்ற இதழ் தொடர்ச்சி...
கேந்திர ஸ்தானம்
திரிகோண ஸ்தானத்திற்கடுத்து முக்கியத்துவம் வாய்ந்தது கேந்திர ஸ்தானமாகும். 1, 4, 7, 10 ஆகிய பாவகங்கள் கேந்திர ஸ்தானமெனும் விஷ்ணு ஸ்தானங்களாகும். கர்மவினையின்படி நிகழக்கூடிய சுக- துக்கங்களை, திரிகோணத்திற்கு அடுத்து கேந்திரம் தீர்மானிக்கிறது. கர்மவினையை முழுமையாக அனுபவிப்பவர் ஜாதகர் என்பதால் லக்னமே முதல் கேந்திரமாகும்.
ஒரு ஜனனம் நிகழ்வதற்கு தந்தை முதல் காரணமென்றால், தாய் இரண்டாவது காரணமென்பதால் மாத்ரு ஸ்தானமெனப் படும் நான்காம் பாவகம் கேந்திர ஸ்தானத் தில் இரண்டாமிடத்தை வகிக்கிறது. இதை சதுர்த்த கேந்திரம் என்றும் கூறலாம்.
பெற்றோர்களுக்கு அடுத்தபடியாக ஒரு ஜாதகருக்கு வாழ்நாள் முழுவதும் உறுதுணையாக இருப்பது களத்திரமாகும். களத்திர ஸ்தானமென்பது ஏழாம் பாவகமாகும். இது கேந்திர ஸ்தானங்களில் மூன்றாமிடத்தை வகிக்கிறது. இதை சப்தம கேந்திரம் எனலாம்.
தாய்- தந்தை மற்றும் களத்திரத்துடன் நிம்மதியாக வாழ தொழில் மிக முக்கியம். பத்தாம் பாவகமென்பது தொழில் ஸ்தானம்.
இதை தசம கேந்திரம் எனலாம். இது கேந்திரத்தில் நான்காமிடத்தைப் பெறுகிறது.
தந்தை- தாய், களத்திரம் மற்றும் தொழில் ஆகியவற்றின்மூலம் ஜாதகருக்குக் கிடைக்கப்பெறும் அனுகூலத்தை லக்ன பாவகமே தீர்மானிக்கிறது என்பதால், திரிகோணம், கேந்திரம் ஆகிய இரண்டிலும் லக்னம் இடம் பெறுகிறது. ஆக லக்னமும் லக்னாதிபதியும் ஜாதகத்தில் மிக முக்கியமாகும்.
திரிகோணாதிபதிகள் கேந்திர ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது முதல் தர இணைவு. கேந்திரத்திற்கு லக்னரீதியான அசுப கிரகங்கள் சம்பந்தம் மற்றும் ராகு- கேது சம்பந்தம் இருப்பது சுபித்துச் சொல்லக்கூடிய பலனல்ல. கேந்திராதிபதிகள் கேந்திரத்திலேயே ஆட்சிபெற்றால் கேந்திராதிபத்திய தோஷம் ஏற்படும். கேந்திராதிபத்திய தோஷத்திற்குட்பட்ட கிரகங்கள் சுபப் பலன் தருவதில்லை.
பணபர ஸ்தானம்
தந்தை- தாய், மனைவி மற்றும் குழந்தைகளை மகிழ்ச்சியாக வாழவைக்க பணம் மிக அவசியமென்பதால், திரிகோணம் மற்றும் கேந்திர ஸ்தானங்களுக்கு அடுத்தபடியாக பணபர ஸ்தானம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. பணபர ஸ்தானமென்பது ஒரு ஜாதகத்தில் ஜென்ம லக்னத் திலிருந்து இரண்டு மற்றும் பதினொன்றாம் இடங்களாகும்.
இரண்டாமிடமான தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமும்; பதினொன்றாமிடமான லாப ஸ்தானமுமே ஜாதகரின் பொருளாதாரத்தை நிர்ணயம் செய்யும் பாவகங்களாகும்.
பண பர ஸ்தானத்திற்கு கேந்திர, திரிகோணாதிகள் சம்பந்தம் இருப்பது மிகமிகச் சிறப்பு. லக்னரீதியான அசுப கிரகங்களின் சம்பந்தம் இருப்பது பொருளாதாரத்தில் தன்னிறைவற்ற நிலையைத் தரும்.
மறைவு ஸ்தானம்
ஒரு ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திலிருந்து 3, 6, 8 12 ஆகிய நான்கு பாவங்கள் துர் ஸ்தானங்கள் அல்லது மறைவு ஸ்தானங்கள் எனப்படும். இந்த நான்கு பாவகங்களும் அதன் அதிபதிகளும் ஒரு ஜாதகருக்கு அசுபப் பலன் தருபவர்கள். ஒருவரின் கர்மவினைப்படி அவர் அனுபவிக்கவேண்டிய துன்பங்களைப் பரிபூரணமாகத் தருவது மறைவு ஸ்தானாதி பதிகள்.
மூன்றாம் பாவகம் பாதி மறைவு ஸ்தானமாகக் கருதப்படுகிறது. எனவே இதன் அதிபதி மத்திமமானவராக அமைகிறார்.
பன்னிரன்டாமிடம் முக்கால் பங்கு மறைவு ஸ்தானமாகும். ஆறு மற்றும் எட்டாமிடங்கள் முழு மறைவு ஸ்தானங் களாகும். இதன் அதிபதிகள் ஒரு ஜாதகத்திற்கு முழு பாவ கிரகங்களாக அமைகிறார்கள். ஒரு ஜாதகத்தில் மறைவு ஸ்தானாதிபதிகள் வலுக் குறைவாக இருப்பதே சிறப்பு. மறைவு ஸ்தானாதிபதிகள் ஆட்சி, உச்சம் பெறாமல் நின்றால் விபரீத ராஜயோகம் ஏற்பட்டு சுபப் பலனும் தரும்.
ஆக, திரிகோணாதிபதிகள், கேந்திராதி பதிகள், பணபர ஸ்தானதிபதிகள் ஆட்சி, உச்சம் பெறுவதும், தங்களுக்குள் சம்பந்தம் பெறுவதும் சிறப்பு.
கோட்சாரம்
ஒரு ஜாதகத்தின் யோகத்தை நிர்ணயம் செய்வதில் கோட்சார கிரகங்களின் பங்களிப்பு அளப்பரியது. கிரகங்களில் வருட கிரகங் களான குரு, ராகு- கேது, சனி ஆகியவற்றின் நகரும் தன்மை மெதுவாக இருப்பதால், அவற் றால் ஏற்படும் சுப- அசுபப் பலன்கள் வருடக் கணக்கில் ஜாதகரை பாதிக்கும். பூமியில் பிறக் கும் அனைவருக்கும், அவரவர் பூர்வஜென்ம வினைகளே கிரகங்களாக மாறி ஜாதகக் கட்டத்தில் அமர்ந்து, வினைகளுக்கேற்ப தசைகளை அமைத்து, கோட்சார கிரக சஞ்சாரம்மூலம் வாழ்வை அமைக்கின்றன.
ஜனன ஜாதகத்தில் ஒரு சம்பவம் நடப்பதற்கான யோக அமைப்பிருந்தால் கோட்சார கிரகங்கள் அதன் தசாபுக்திக் காலத்தில் சம்பவத்தை நடத்திவைக்கும். ஜனன ஜாதகத்தில் இல்லாத பலனை கோட்சாரம் நடத்தித் தராது. ஒருவரின் ஆசை மற்றும் விருப்பம் எதுவாக இருந்தாலும், அதை அடையும் பாக்கியப் பலன் ஜனனகால ஜாதகத்தில் இருந்தால் மட்டுமே கோட்சார கிரகங்களும் தசா புக்தியும் உதவும். ஒரு தனிநபரின் ஜாதகத் தினைக்கொண்டு நிர்ணயம் செய்யப்படும் கோட்சாரப் பலனே துல்லியமாக இருக்கும். தசாபுக்திகளுடன் சம்பந்தம்பெறும் கோட்சாரம் சம்பவத்தை நூறு சதவிகிதம் கச்சிதமாக நடத்தித் தரும்.
தசாபுக்தி பலம்
ஜனனகால ஜாதகத்திலுள்ள கிரகங் களால் மனிதனின் விதியானது நிர்ணயிக் கப்படுகிறது. ஒருவருக்கு ஜாதகத்திலுள்ள கிரகங்களும், பாவகங்களும் யோகம் தரும் விதத்தில் அமைந்தால் மட்டும் போதாது.
ஜாதகத்தில் எத்தனை யோகங்கள், தோஷங்கள் இருந்தாலும் அந்த சாதக- பாதகத்தைத் தரும் கிரகங்களின் தசாபுக்திகள் நடைபெற்றால் மட்டுமே ஜாதகர் பலனை அனுபவிக்க முடியும். அவரது வாழ்நாளுக்குள் அனுபவிக்கவேண்டிய பருவத்தில் அந்த யோக கிரகங்களின் தசை வந்தால் மட்டுமே யோகப் பலனைப் பரிபூரணமாக அனுபவிக்கமுடியும்.
அந்த விதிப்பயனை ஜாதகர் எப்போது அனுபவிப்பார் என்பதை தசாபுக்திகளே தீர்மானிக்கின்றன. ஒருவருடைய ஜாதகத்தில் பாவகங்களோ கிரகங்களோ யோகம்தரும் விதத்தில் அமைந்தால் மட்டும் போதாது.
அவரது வாழ்நாளுக்குள் அனுபவிக்கவேண்டிய பருவத்தில் தசை வரவேண்டும். அதுவே யோக ஜாதகம். உதாரணமாக, ஷட்பலத்திலும் பாவகத்திலும் சுக்கிரன் வலிமைபெற்ற ஒருவருக்கு 25 வயதில் சுக்கிர தசை நடந்தால் சிறப்பான தொழில், தன வரவு, உரிய வயதில் திருமணம், உல்லாச வாழ்க்கை, ஆடை, ஆபரணச் சேர்க்கை, சொத்து சுக சேர்க்கை உண்டாகும். அதுவே 70 வயதில் வந்தால் சுக்கிரனால் கிடைக்கும் சுகபோகத்தை அனுபவிக்கமுடியாது. வயதிற்குப் பொருத்தமான சுபப் பலன்களை வழங்கக்கூடிய தசாபுக்திகள் தொடர்ந்து நடத்தும் ஜாதகமே யோக ஜாதகம்.
ஷட்பலத்தால் அதிக வலிமைபெற்ற கிரகங்கள் தங்கள் தசாபுக்திக் காலங்களில் அனுகூலமான பலன்களைத் தரும். மிகவும் வலுக்குன்றிய கிரகங்கள் தங்கள் தசாபுக்திக் காலங்களில் அனுகூலமற்ற பலன்களைத் தரும்.
ஒரு மனிதனின் ஜாதகத்தில் யோகமான அமைப்புகள் பல இருந்தாலும், அவை யோகங்களைத் தராமல் மாறுபட்ட பலனையும் கஷ்டங்களையும் தந்துவிடுகின்றன.
அதனால் ஒருவரின் நல்வினை- தீவினைகளே இன்ப- துன்பங்களை தருகின்றன; கிரகங்கள் அல்ல என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.
செல்: 98652 20406