ஜோதிடத்தில், கோட்சாரப்படி கிரகங்கள் கட்டம் விட்டு கட்டம் என ராசிகள் மாறிக்கொண்டே இருப்பர்.
குரு, சனி, ராகு, கேது ஆகியவை வருடாதி கிரகங்கள்; வருடக் கணக்குப்படி மாறுவர்.
சூரியன், செவ்வாய், சுக்கிரன், புதன் ஆகியவை நாட்கணக்கில், மாதக் கணக்கில் மாறியமர்வர்.
சந்திரன், தினப்படி ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் மாறுவார்.
இந்தக் கணக்கில், செவ்வாய் விருச்சிக ராசியிலிலிருந்து தனுசு ராசிக்கு மாறுகிறார். அங்கு ஏற்கெனவே குருவும் கேதுவும் இருக்க, நேரெதிரில் ராகுவும் உள்ளார்.
செவ்வாயின் கோட்சாரம்
திருக்கணிதப்படி 6-2-2020 முதல் தனுசில் நுழைந்து, 21-3-2020 அன்று மகரத்திற்கு மாறுவார்.
வாக்கியப்படி 10-2-2020 அன்று தனுசில் சென்று, 23-3-2020 வரை அங்கிருந்துவிட்டு, பின் மகரத்திற்குச் சென்றுவிடுவார்.
ஆக, செவ்வாய் எனும் ஆக்ரோஷமான கிரகம் குரு எனும் மிகச் சுபருடனும், கேது எனும் ஆழ்நிலை கிரகத்துடனும் சேர்ந்து, எதிரில் ராகு பார்வையில் கோட்சார நாட்களை நகர்த்துவார்.
திருக்கணிதப்படி, சனி தை 9-ஆம் தேதியே தனுசைவிட்டு விலகி, மகரத்திற்குச் சென்றுவிட்டார். வாக்கியப்படி, சனியும் இந்தக் கூட்டணியில் கும்மியடிப்பார்.
நல்லவேளையாக, செவ்வாய் மகரத்திற்கு நகர்ந்தபின்னரே, குருவின் மாற்றமிருக்கும். அதுவரை குரு தனுசில் ஆட்சியாக- பலம் மிக்கவராக இந்த பாவர்களுடன் அமர்ந்திருப்பார்.
2020, பிப்ரவரி முதல்வாரத் திலிலிருந்து மார்ச் கட

2020, பிப்ரவரி முதல்வாரத் திலிலிருந்து மார்ச் கடைசி வாரம்வரை தனுசில் அமரும் செவ்வாய் என்ன செய்வார்?
குரு, செவ்வாய் சேர்க்கை குரு மங்கள யோகமாகும். இந்த யோகப்படி நிலபுலன்விருத்தி உண்டாகும். ஆனால் கூடவே கேது பார்வையில் ராகு உள்ளார். கேது பிரிக்கும் தன்மையுடையவர். எனவே செவ்வாய் தற்போது தனுசில் உள்ளவரை, நிலங்களைப் பிரித்து விற்கும் ரியல் எஸ்டேட் தொழில் மிகச்சிறப்படையும். வெளிநாட்டினர் இங்கு நிறைய நிலம் வாங்குவர். ஆகவே நிலம், மனை விற்பனையில் வெளிநாட்டு கரன்சி சம்பந்தம் ஏற்படும். ராகு லஞ்சத்தைக் குறிப்பவர். மனை சம்பந்தமான லஞ்சப் பரிவர்த்தனை கௌரவமான முறையில் அமையும். பலரின் நிலங்கள், மனைகள் பொதுத்துறை, அரசால் எடுத்துக்கொள்ளப்படும்.
செவ்வாய் தீவிரவாதத்தைக் கொடுப்பார். ராகு அதனை அதிகரிக்கச் செய்வார். கேது ரகசிய திட்டம் தீட்டுவார். ஆயினும் இவர்களுடன் அமர்ந்த குரு, "ஒலின்லிலி ப்ளானிங்; நோ ப்ராக்டிக்கல்' என அடக்கிவிடுவார். எனவே இந்த காலகட்டத்தில் தீவிரவாத திட்டமைப்பு மிக அதிகமாகும். ரகசியமாக தீவிரவாத சதி ஆலோசனை நடத்துவர். செயலில் காட்டமாட்டார்கள். இக்காலகட்டத்தில், காவல்துறையைவிட உளவுத்துறைக்கு வேலை அதிகமிருக்கும்.
செவ்வாய், காவல், ராணுவம், தீயணைப் புத்துறையைக் குறிப்பார். ராகுவும் கேதுவும் இத்துறைகளில் கறுப்பாடுகளைப் பெருகச் செய்ய, குரு அதனைக் கட்டுப்படுத்தி, புது சட்டங்களைக் கொணர்வார். இதன்மூலம் நிறைய ஆபத்துகள் தவிர்க்கப்படும்.
செவ்வாய் முன்யோசனையில்லாத துணிச் சலைக் கொடுப்பார். ராகு குறுக்குவழிகளைக் காட்டுவார். ஆயினும் குரு தகுந்த நேரத்தில்,
தகுதியான யோசனைகளைக் கொடுத்து சீர்படுத்துவார். இது முக்கியமாக இளைஞர் களுக்கானது.
செவ்வாய் சகோதரனைக் குறிப்பார். அவருடன் இருக்கும் கேதுவும், பார்க்கும் ராகுவும்,
"இந்த க்ஷணம் பாகப்பிரிவினை செய்' என தூண்டுவர். உடனிருக்கும் குரு, அதனை அமைதி யாக, சண்டையில்லாது, ஒரு பெரியவர்மூலம் அவரவர் பங்கைக் கொடுக்கச் செய்வார்.
செவ்வாய், பெண்களின் மாங்கல்ய காரகன். (ஆண்களின் களத்திரகாரகன்.) செவ்வாய், ராகு- கேது சம்பந்தம் பெறும்போது, மாங்கல்ய நிலை சற்று கவலைக்குரியதாகும். ஆனால் உடனிருக்கும் குரு அதனை பலப்படுத்திவிடுவார்.
இந்த காலகட்டத்தில், மாங்கல்யம் திருட்டுப்போகவிருந்து, காப்பாற்றப்படும். எனவே தனுசில் செவ்வாய் இருக்கும்வரை பெண்கள் வெளியில் செல்லும்போது கழுத்தைப் புடவையால் நன்கு மூடிக்கொண்டு செல்லவும். அவசரத்திற்கு காவல்துறையின் "காவலன்' செயலிலியைக் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்துகொள்ளவும். குரு காப்பாற்றிவிடு வார்தான். ஆனால் அவரால் ஒவ்வொருவருக்கும் நேரிடையாக வந்து செய்யமுடியாது.
அவருக்கும் ஒரு வழி வேண்டுமல்லவா!
இந்த காலகட்டத்தில் நிறைய மறுமணங்கள் பேசி முடிவாகும். குறிப்பாக நிறைய விதவைகள் மறுவாழ்வு பெறுவர். செவ்வாய் போராட்ட குணமுடையவர். ராகு போராட்டத்தில் வெறி கிளப்புவார். ஆயினும் உடனிருக்கும் குரு, நல்ல நோக்கத்துக்காக போராட்டங்களை அமைத்து, அமைதி தருவார்.
செவ்வாய் + குரு + கேது = போலிச்சாமி யார்கள். இதன்மூலம் போலிலிச் சாமியார்களின் நடமாட்டம் அதிகரிக்கும். முக்கியமாக நிலம், மனை, போதைப்பொருள் சம்பந்தமான செய்திகள் அதிகம் பேசப்படும். சில சாமியார்கள் இந்தியாவில் மட்டுமல்லாமல், வெளிநாட்டிலும் தங்கள் போக்கிரித்தனமான கொடியைப் பறக்கச் செய்வர். இதனை ராகு அருமையாகச் செயல்படுத்துவார்.
செவ்வாய் நெருப்புக்கு அதிபதி. இவர் இருக்குமிடம் தனுசு. ஆலயம், மரங்கள் அடர்ந்த காடு, ஆயுதக்கிடங்கு, அரசு ஆவணங்கள் இருக்குமிடம், பூஜையறை, கஜானா மற்றும் வங்கி, நீதித்துறை, கல்வி, தர்மஸ்தாபனம் போன்றவற்றைக் குறிக்கும். இவ்விடங்களில் செவ்வாய் நெருப்பைப் பற்றவைக்க, ராகு அதனைப் பெருக்க, குரு எப்பாடுபட்டாவது அதனை அணைத்துவிடுவார். இதன்மூலம் தனுசில் செவ்வாய் இருக்கும் காலகட்டத்தில், மேற்கூறிய இடங்களில் தீயணைப்புக் கருவியைப் பழுதுநீக்கி, பயன் தரத்தக்க விதத்தில் அமைத்துக் கொள்ளவும்.
செவ்வாய், தெற்கு திசையைக் குறிப்பவர். எனவே தென்திசையில் கவனமாக இருக்கவும். செவ்வாய் மருத்துவர்களைக் குறிப்பவர். மருத்துவத்துறைக்கு கெட்ட பெயர் ஏற்படும் சூழ்நிலை உருவாக, அதனை குரு நீக்கிவிடுவார்.
செவ்வாய் ஒரு ராசியில் இருக்கும் காலம் சுமார் 45 நாட்களே ஆகும். "ஏம்மா, சும்மா நாப்பத்தஞ்சு நாட்களுக்கு ஒரு கட்டுரையா' என யோசிக்க வேண்டாம்.
செவ்வாய் + கேது- ராகு என இருந்திருந் தால் கதை கந்தல்தான். கூடவே சனியும் இருந்தால் உலக யுத்தம் "கன்பார்ம்ட்'. எனினும்,
கடவுள் புண்ணியத்தில் குரு உடனிருப்பதால், அனைத்து அதிர்வான நிகழ்வுகளையும் தடுத்தாட்கொண்டு, நல்ல வழியில் திருப்பிவிடுகிறார்.
செவ்வாய், ராகு, கேது வில்லங்கம்தான். எனவே மக்களும் சற்று விழிப்புடன் இருப்பது அவசியம்.
எப்போதுமே செவ்வாய், குரு இணை வென்றாலே, அது திருச்செந்தூர் சுப்பிரமணி யரைத்தான் குறிக்கும். திருச்செந்தூர் முருகன் குருவால் வணங்கப்பட்டவர். எனவே இந்த காலகட்டத்தில் திருச்செந்தூர் முருகனை வணங்குவது மகா உத்தமம்.
பிறந்த ஜாதகத்தில் செவ்வாய், ராகு- கேது சம்பந்தமுடையவர்கள் சற்று கவனமாக இருத்தல் அவசியம்.
மேலும் நரசிம்மரையும் வணங்குதல் நன்று. அந்தணர்களுக்கு அன்னமிட, ஆபத்துகள் விலகும் என கூறப்பட்டுள்ளது. எனவே அந்தணர் களின் குருகுல பாடசாலை போன்ற இடங் களுக்கு அரிசி அல்லது பொருளுதவி செய்யலாம்.
குருவும் செவ்வாயும் இவ்வாறு பேசிக் கொள்வார்கள்:
குரு: அங்காரகா, அங்க என்ன சத்தம்?
செவ்வாய்: ஒண்ணுமில்லை குருவே. ச்சும்மா பேசிக்கிட்டிருக்கேன். (தனக்குள்) என் ரௌடித் தனம் தெரிஞ்சே அடக்கி வச்சிருக்காரே, இவரை என்ன பண்ணலாம்? இவரைவிட்டு ஓடினாத்தான் நான் நல்லா இருப்பேன். செவ்வாய், குருவைவிட்டு விலகி, மகரத் திற்கு அவசர அவசரமாகச் செல்கிறார்.
செல்: 94449 61845