ஜோதிடத்தில் கிரக நகர்வுகளைக் "கோட்சாரம்' என்று குறிப்பிடுவர். கோள் களின் அசைவு என பொருள்படும். சிலசமயம் இந்த கிரக நகர்வுகள் அருமையானதாகவும், சிலசமயம் பயமுறுத்துவதாகவும் அமைந்து விடும்.
2019 (ஆனி மாதம்) ஜூன் 19 முதல் 24 வரையுள்ள சுமார் ஆறு நாட்களுக்கு சற்றே கவனிக்கும்படியானகிரகச் சேர்க்கை அமையவுள்ளது. இது வாக்கியக் கணக் காகும்.
ஆனி மாதம் எப்போதும் சூரியன் மிதுனத்தில்தான் இருப்பார். இப்போது ராகுவும் அங்கே உள்ளார். ஆனி 4 முதல் 9 வரை செவ்வாயும் மிதுனத்திலேயே இருப்பார். பின் கடகத்துக்கு நகர்ந்து விடுவார். புதனும் வாக்கியக் கணிதப்படி வக்ரமாகி மிதுன ராசிக்குள்ளேயே முன்னும் பின்னுமாக உலவுகிறார். ஆக, மிதுனம் என்னும் ஒரே ராசியில் சூரியன், செவ்வாய், ராகு, புதன் என நான்கு கிரகங்களும் சேர்ந்து அமர்ந் திருப்பார்கள்.
மிதுனத்தின் 180-ஆவது டிகிரியில்- அதாவது நேர் ஏழாவது ராசியில் வக்ர சனியும் கேதுவும் பலமாக அமர்ந்து, மிதுன ராசியிலுள்ள நான்கு கிரகங்களையும் பார்க் கின்றனர்.
இந்த நிலையில் சந்திரன், "நான் மட்டும் மட்டமா? நானும் ரவுடிதான்' என தன் பங்குக்கு அதிரச் செய்கிறார். ஆம்; ஆனி 3 (ஜூன் 18) அன்று மூல நட்சத்திரம்; ஆனி 4 (ஜூன் 19)- பூராடம்; ஆனி 5 (ஜூன் 20)- உத்திராடம் என தனுசில், வக்ர சனி மற்றும் கேதுவுடன் பயணம் செய்து, தன் இருப்பைப் பிரகனப் படுத்துகிறார்.
இந்த காலகட்டத்தில் சுக்கிரன் ரிஷபத் திலும், வக்ர குரு விருச்சிகத்திலும் தனித் திருக்கின்றனர்.
ஆகக்கூடி, பெரும்பாலான மற்ற பாவ கிரகங்கள் எல்லாம் ஒன்றுசேர்ந்து கும்மியடிக்கின்றனர்.
இதில

இதில் ஒரே ஆறுதல், மேற்சொன்ன ஆறு நாட்களுக்கு மட்டுமே செவ்வாய் இந்த கிரக யுத்தத்தில் இருப்பார். பின் செவ்வாய் நகர்ந்து கடகத்துக்குச் சென்றுவிடுவார். இந்த ஆறு நாட்களுக்கு மட்டும் (ஜூன் 19 முதல் 24 வரை) கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும்.
செவ்வாய் ராகுவுடன், சனி பார்வையில் இருப்பதால் நீண்ட பயணங்களை ஒத்திவைப்பது நல்லது. பயணங்களில் கவனமாக இருப்பது அவசியம். உள்ளூர் போக்குவரத்து சமயத்திலும் சிலருக்கு விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. செவ்வாய், புனர்பூசம் 3-ஆம் பாதத்தில் நிற்பதால் வர்க்கோத்தமம் எனும் நிலை பெற்று மிக பலமாக உள்ளார். (ராசி, அம்சத்தில் ஒரே கட்டத்தில் குறிப்பிட்ட கிரகம் இருப்பது வர்க்கோத்தமம் எனும் பலமான நிலை).
செவ்வாய் வர்க்கோத்தமம் பெற்று சூரியனுடன், கேது பார்வையில் இருக்கும் போது, நிறைய மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கும்.
விபத்துக்கள் ஏற்பட்டாலும், மருத்து வத்துறையின் வேகமாக முன்னேற் றமிகு சேவையால் உயிர்கள் காப்பாற் றப்படும்.
காலபுருஷனின் 3-ஆமிடத்தில் இத்தனை கிரகங்கள் கூட்டுசேர்ந்து நிற்பதால், "போக்சோ' சட்டத்தில் கைதுசெய்து காவல்துறை கழன்றுவிடும். செய்தித்து றையின் அச்சு தேய்ந்துவிடும். "மீடூ-க்கள்' மறுபடியும் குதியாட்டம் போடும்.
வீட்டிலுள்ள குழந்தைகளை கவனமாக கவனிக்க வேண்டும்.
வதந்திகள் சலங்கை கட்டி ஆடும்.
இந்த ஒரு வார காலத்தில் காதல் சம்பந்த மாக ஒரு முடிவும் எடுக்க வேண்டாம்.
மிதுன ராசியின் கூட்டு கிரகச்சேர்க்கை, தொலைத்தொடர்புத்துறையில்- அலைபேசி, மடிக்கணிணி, சிறு கணிணி என இவ்வாறான விஷயங்களில், இந்த ஆறு நாட்களில் மிகப் பெரிய மாற்றம், புரட்சி வியத்தகு அளவில் வெளியாகும்.
சினிமா போன்ற கலை சார்ந்த ஒரு மூத்த பிரபலமானவருக்கு ஒரு நிகழ்வு நடக்கக்கூடும். அரசியல் தலைவர் ஒருவரும் விபரீதத்தைச் சந்திக்கக்கூடும்.
ஒரு மதத்தலைவர்- பாரம்பரியமான மடத் தலைவர் எதிர்மறைச் செய்தியை எதிர் கொள்ளக்கூடும்.
கல்வி, விளையாட்டு, மருத்துவம், சட்டக் கல்வி பற்றிய ஒரு முக்கியமான சட்டம் இந்த நாட்களில் வெளியாகும்.
இந்த அதிக கூட்டணியிலிருந்து செவ்வாய் ஆனி 9 (ஜூன் 24) அன்று விலகி, கடக ராசிக்குள் நுழைந்து நீசமா கிவிடுவார்.
பின், ஆனி 14 (ஜூன் 29) அன்று சுக்கிரன், இந்தக் கூட்டணிக்குள் வந்து மாட்டிக் கொள்வார். ஆனி முடிந்து, ஆடி மாதம் தான் இந்த கிரகக் கூட்டணியிலிருந்து நகரமுடியும். அதுவரையில் ஆனி 14 முதல் அவர் ராகு, சூரியன், புதன் ஆகிய கிரகங் களுடன், சனி, கேது என்ற இரு இயற்கை பாவகிரகங்களின் பார்வையிலும்தான் இருப்பார்.
சுக்கிரன், ராகு சேர்க்கை அவ்வளவு நல்லதல்ல. குறிப்பாக, இளம்பெண்களுக்கு மிக பாதிப்பு ஏற்படுத்தும். இதனால் இளம் பெண்களின் பெற்றோர் அதீத கவனத்துடன் நடந்துகொள்ள வேண்டும்.
காலபுருஷனின் 3-ஆமிடத்தில் சுக்கிரன் பாவகிரகங்களுடன் சேர்ந்திருப்பதால், பெண்கள்மீது அபாண்டமாகப் பழிவிழும்.
சனி வக்ரமாகி கேதுவுடன் சேர்ந்து, பாவர்களுடன்கூடிய சுக்கிரன் பார்ப்பதால், பெண்களின் பாதுகாப்பு மிகமிக கவனிக் கப்பட வேண்டும்.
பொருந்தாக் காதல்- நட்பு ஏற்படும். கலையுலகப் பெண் நட்சத்திரங்கள் கவனமாக இருக்கவும்.
ஆனி மாதம்தான் குருவின் பார்வையில் லாமல், மிதுனத்தில் செவ்வாய், ராகு, சூரியன், புதன் ஆகிய கிரகங்கள், சனி, கேது பார்வையில் நிற்கின்றனர். எனவேதான் ஆனி மாதம் சற்று கவனமாக நடந்துகொள்ள வேண்டும்.
ஆனி மாதம் முதல் வாரம் செவ்வாய் இணைவினாலும், கடைசி இரண்டு வாரம் சுக்கிரனின் சேர்க்கையினாலும் சற்று திகிலா கத்தான் உள்ளது. ஆனி போய் ஆடி வந்தால் ஓரளவு நிம்மதி கிடைக்கும்.
ஆனி 17 (2-7-2019) அன்று சூரிய கிரகணமும் உண்டு.
ஆடி மாதப் பிறப்பன்று சூரியன் இந்த பாவர் கூட்டணியிலிருந்து விலகி, கடகத் துக்குச் சென்றுவிடுவார். கூடவே புதனும் புறப்பட்டுவிடுவார்.
எனவே இந்த ஆனி மாதத்தில் மிகவும் ஆட்டம் போடாமல்- அமைதி காப்பது நல்லது.
பாவர்களின் கூட்டணி பலமாக உள்ளது. நிச்சயம் பலமான பரிகாரம் தேவைதான். செவ்வாய், ராகு, சனி, கேது என இத்தனை பாவர்களின் சேர்க்கைக்கு எத்தனைப் பரிகாரங்கள் செய்ய வேண்டும்? பல நோய்க்கு ஒரே மருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!
இருக்கிறதே! அவ்வளவு பாவர் கூட்டணிக் கும் ஒரே நிவாரணம் துர்க்கைதான். ஆம்; முன்னொரு காலத்தில் மகிஷாசுரன் என்ற அரக்கன் உலகங்களைக் கொடுமைப் படுத்தியது மட்டுமல்லாது, தேவர்கள் அனை வரின் பொறுப்பையும் எடுத்துக்கொண்டான். இதனால் அனைத்து தேவர்களும், தெய்வத் திடம் சென்று முறையிட்டனர்.
அதனால் கடுங்கோபம் கொண்ட சங்கரர், விஷ்ணு, பிரம்மா போன்றவர்களின்மூலம் ஒரு மகத்தான ஒளி ஒன்று வெளிப்போந்தது. மற்ற தேவர்களிட மிருந்து வந்த ஒளியும் அதனுடன் சேர்ந்தது. அவ்வாறு வெளிப் போந்த அந்த ஒளி, ஒரு மகத்தான பெண்ணுரு கொண்டது. அந்த மகத்தான பெண் சக்திக்கு சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் தங்கள் ஆயுதங்களை அளித்தனர்.
மற்ற தேவதைகளும் அவ்வாறே தங்கள் ஆயுதங்கள், அணிகலன்கள், புஷ்பங்கள், வஸ்திரங்களை அளித்தனர்.
இவ்வாறு துர்க்கையின் ஆவிர்ப்பாவம் (தோற்றம்) ஏற்பட்டது. இவ்வாறு தோன்றிய துர்க்கை அட்டகாசம் செய்தாளாம். அவளின் ஒலி கேட்டு மூவுலகங்களும் அதிர்ந்தனவாம். இவளே மகிஷாசுரனை வதம்செய்தாள். எனவே இவளுக்கு மகிஷாசுரமர்த்தினி என பெயர் ஏற்பட்டது.
மனிதர்களுக்கு எத்தகைய துன்பம் ஏற்பட் டாலும், இந்த துர்க்கையை வணங்கினால் பேராபத்துக்களை அக்கணமே போக்குவாள்.
அவரவர் ஊரிலுள்ள துர்க்கைக்கு விளக்கேற்றி வழிபடுவது நல்லது.
நல்லெண்ணெய் தீபம் நன்று. எவ்வளவு விளக்கேற்ற முடியுமோ அவ்வளவு ஏற்றலாம். எங்கும் ஒளி பரவட்டும். இருள் மறையட்டும்.
இதில் இன, மத வேறுபாடு வேண்டாம். அவரவர் மதச்சடங்கின்படி ஒளிபரவச் செய்யலாம்.
துர்க்கைக்கு எலுமிச்சைப்பழ மாலை அணிவிக்கலாம். சிவப்பு வஸ்திரம் நன்று.
அம்மன் குளிர அபிஷேகம் செய்யலாம்.
ஆடி 18 (ஆகஸ்ட்- 3) வரை இவ்வாறு துர்க்கையை சாந்தப்படுத்த வேண்டும். ஏனெனில், ராகுவுடனும் சனி, கேது பார்வை யில் இருந்தும், சுக்கிரன், புதன் கிரகங்கள் விடுபடுவார்கள். ஆகஸ்ட் 3-க்குப் பிறகுதான் ராகுவுடன் எந்த கிரகமும் இருக்காது.
இந்த காலகட்டத்தில் துர்க்கை சந்நிதிக்கு பூஜை திரவியங்களும், பணமும் தாராள மாகக் கொடுக்கலாம். துர்க்கை சந்நிதி அர்ச்ச கர்கள், முழுமனதுடனும் சிரத்தையாகவும் உலக நன்மைக்காக துர்க்கையை நன்றாகப் பூஜிக்கவும்.
இந்த காலகட்டத்தில் நம் குடும்பத்துக்கு மட்டுமின்றி, உலக நன்மைக்காகவும் துர்க்கை யின் பாதம் பணிவோம். அவளே கதி.
துர்க்கையே சரணம். இந்த இருளான காலகட்டத்திலிருந்து, எங்களை மீட்க வேண்டியது உன் பொறுப்பேயாகும். உன்னைச் சரணடைந்தோம்.
செல்: 94449 61845