சூரியன், புதன், குரு, சுக்கிரன் லக்னத்தில் இருந்தால், ஜாதகர் பணக்காரராக இருப்பார். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். பெயர், புகழ் இருக்கும். நல்ல மனைவி அமைவாள். நல்ல வாரிசு அமைவார் கள். ஜாதகர் சாதுரியமானவராக இருப்பார். பிள்ளைகளால் சந்தோஷம் கிடைக்கும். ஜாதகருக்கு பலரின் பாராட்டுகள் கிடைக்கும்.
சூரியன், புதன், குரு, சுக்கிரன் 2-ஆம் பாவத்தில் இருந்தால், சிறந்த பேச்சாற்றல் இருக்கும். பிறரை ஈர்க்கும் சக்தி இருக்கும். சந்தோஷமான வாழ்க்கை இருக்கும். ஜாதகர் அறிவாளியாக இருப் பார். சிலர் பேராசிரியர்களாக இருப்பார் கள். சிலர் ஜோதிடர்களாக இருப்பார்கள். சிலர் துறவிகளாக இருப்பார்கள்.
நல்ல மனைவி கிடைப்பாள். நல்ல பிள்ளைகள் கிடைப்பார்கள்.
சூரியன், புதன், குரு, சுக்கிரன் 3-ஆம் பாவத்தில் இருந்தால், நல்ல பண வசதி இருக்கும். நல்ல குணம் இருக்கும். ஜாதகர் குடும்பத்தை நன்கு காப்பாற்றுவார். அழகான மனைவி இருப்பாள். நல்ல வாரிசுகள் பிறப்பார்கள். சிறிய அளவில் உடல்நலத்தில் பாதிப்பு இருக்கும். ஜாதகர் பல தொழில்களைச் செய்வார். அதன்மூலம் பணத்தைச் சம்பாதிப்பார். சொந்தத்தில் வாகனம் இருக்கும்.
சூரியன், புதன், குரு, சுக்கிரன் 4-ஆம் பாவத்தில் இருந் தால், ஜாதகர் நிறைந்த பண வசதியுடன் இருப்பார். வீடு, மனை இருக்கும். நல்ல மனைவி இருப்பாள். பூர்வீக சொத்தில் பிரச்சினை இருக்கும். வெளிநாட்டிற்குப் பயணிப்பதற்கு சிலருக்கு வாய்ப்பிருக்கிறது. பெயர், புகழ் இருக்கும். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். நல்ல வாரிசுகள் இருப் பார்கள்.
சூரியன், புதன், குரு, சுக்கிரன் 5-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் பணக்காரராக இருப்பார். நன்கு படித்தவராக இருப்பார். பிள்ளை கள் நல்லவர்களாக இருப்பார்கள். அரசாங்கத்தில் பெயர், புகழ் கிடைக்கும். சிலர் அரசாங்கத்தில் பெரிய பதவிகளில் இருப்பார்கள். சந்தோஷமான வாழ்க்கை இருக்கும். வீடு, மனை, வாகனம் இருக்கும்.
சூரியன், புதன், குரு, சுக்கிரன் 6-ஆம் பாவத்தில் இருந்தால், நல்ல பண வசதி இருக்கும். காலில் அடிபடும். பெண் மோகம் இருக்கும். சிலருக்கு வெளிநாட்டு பயணம் இருக்கும். சொந்தத்தில் வீடு, வாகனம் இருக்கும். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.
சூரியன், புதன், குரு, சுக்கிரன் 7-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் கோபக்காரராக இருப்பார். அழகான மனைவி இருப்பாள்.
ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார். சிலர் ஆசிரியர்களாக இருப்பார்கள். சிலர் வழக்கறிஞராக, நீதிபதிகளாக இருப்பார்கள். வீடு, மனை, வாகனம் இருக்கும். சிலர் துறவிகளாக இருப்பார்கள். சிலர் குருநாதர்களாக இருப்பார்கள்.
சூரியன், புதன், குரு, சுக்கிரன் 8-ஆம் பாவத்தில் இருந்தால், உடல் நலத்தில் சிறிய பிரச்சினை இருக்கும். வயிற்றில் பிரச்சினை இருக்கும். சிறுநீரகத்தில் பிரச்சினை இருக்கும். பண வசதி இருக்கும். பெயர், புகழ் இருக்கும். பூர்வீக சொத்து கிடைக்கும். நல்ல வாரிசு அமையும்.
சூரியன், புதன், குரு, சுக்கிரன் 9-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் நன்கு படித்தவராக இருப்பார்.
அரசாங்கத்தில் பெயர், புகழ் இருக்கும். சந்தோஷமான வாழ்க்கை அமையும். பூர்வீக சொத்து கைக்கு வரும். வாழ்க்கை கொண்டாட்டமாக இருக்கும். சிலர் வீண் செலவு செய்வார் கள். ஒரு வாரிசுக்கு உடல்நலக் கேடு உண்டாகும்.வாகனம் சொந்தத்தில் இருக்கும்.
சூரியன், புதன், குரு, சுக்கிரன் 10-ஆம் பாவத்தில் இருந்தால், சிலர் நேர்மையான அரசியல்வாதியாக இருப் பார்கள். சிலர் நல்ல நீதிபதி களாக இருப்பார்கள். சிலர் சிறந்த டாக்டர்களாக இருப்பார்கள். சிலர் நல்ல குருநாதராகவோ சிறந்த பேராசிரியராகவோ இருப்பார்கள். வாரிசு களால் சந்தோஷம் கிடைக்கும். வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும்.
சூரியன், புதன், குரு, சுக்கிரன் 11-ஆம் பாவத் தில் இருந்தால், கோப குணம் இருக்கும் ஜாதகர் கவனமாக பேசுவார். பிள்ளைகளால் சந்தோ ஷம் கிடைக்கும். ஜாதகர் பல தொழில்களைச் செய் வார். சிலர் ஃபைனான்ஸ் தொழிலில் இருப்பார்கள். பெயர், புகழ் இருக்கும். சிலர் ஆடிட்டர்களாக இருப்பார்கள்.
சூரியன், புதன், குரு, சுக்கிரன் 12-ஆம் பாவத்தில் இருந்தால், இளம் வயதில் கஷ்டங்கள் இருக்கும். சீக்கிரமே சம்பாதிக்க ஆரம்பிப்பார்கள். ஜாதகர் பணக்காரராக இருப்பார். 34 வயதிற்குப் பிறகு, நல்ல சம்பாத்தியம் இருக்கும். பயணம் இருக்கும்.
ஜாதகர் பல தொழில் களைச் செய்வார். ஆளுக் கேற்றபடி பேசுவார்.
செல்:
98401 11534