சூரியன், சந்திரன், குரு, சுக்கிரன்
லக்னத்தில் இருந்தால், ஜாதகர் சந்தோஷமான மனிதராக இருப்பார். வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஜாதகர் அனைத்து உயிர்களையும் நேசிப்பார். நல்ல குணத்தைக் கொண்டிருப்பார். நல்ல குடும்பத் தலைவராக இருப்பார். நல்ல மனைவி அமைவாள். தைரியசாலியாக இருப்பார். பண வசதி இருக்கும்.
சூரியன், சந்திரன், குரு, சுக்கிரன் 2-ஆம் பாவத்தில் இருந்தால், சந்தோஷமான வாழ்க்கை இருக்கும். பேச்சுத் திறமை இருக்கும். மனைவி நல்லவளாக இருப்பாள். இளம் வயதில் பல கஷ்டங்கள் இருக்கும். 23 வயதிற்குப்பிறகு, வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.
வீடு, வாகனம் இருக்கும்.
சூரியன், சந்திரன், குரு, சுக்கிரன்
3-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரிய குணம் உள்ளவராக இருப்பார். சுய முயற்சியால் பணம் சம்பாதிப்பார். அடிக்கடி பயணம்
சூரியன், சந்திரன், குரு, சுக்கிரன்
லக்னத்தில் இருந்தால், ஜாதகர் சந்தோஷமான மனிதராக இருப்பார். வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஜாதகர் அனைத்து உயிர்களையும் நேசிப்பார். நல்ல குணத்தைக் கொண்டிருப்பார். நல்ல குடும்பத் தலைவராக இருப்பார். நல்ல மனைவி அமைவாள். தைரியசாலியாக இருப்பார். பண வசதி இருக்கும்.
சூரியன், சந்திரன், குரு, சுக்கிரன் 2-ஆம் பாவத்தில் இருந்தால், சந்தோஷமான வாழ்க்கை இருக்கும். பேச்சுத் திறமை இருக்கும். மனைவி நல்லவளாக இருப்பாள். இளம் வயதில் பல கஷ்டங்கள் இருக்கும். 23 வயதிற்குப்பிறகு, வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.
வீடு, வாகனம் இருக்கும்.
சூரியன், சந்திரன், குரு, சுக்கிரன்
3-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரிய குணம் உள்ளவராக இருப்பார். சுய முயற்சியால் பணம் சம்பாதிப்பார். அடிக்கடி பயணம் செய்வார். இல்வாழ்க்கை ஆனந்தம் நிறைந்ததாக இருக்கும். 36 வயதிற்குப்பிறகு, நல்ல பண வரவு இருக்கும்.
சூரியன், சந்திரன், குரு, சுக்கிரன்
4-ஆம் பாவத்தில் இருந்தால், சந்தோஷமான வாழ்க்கை இருக்கும். வீடு, மனை, வாகனம் இருக்கும். வாரிசுகள் நன்றாக இருப்பார்கள். ஜாதகர் கடுமையான உழைப்பாளியாக இருப்பார். தைரியசாலியாக இருப்பார். நல்ல மனைவி அமைவாள். அடிக்கடி பயணம் இருக்கும். ஜாதகர் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார். சிலர் அரசியல்வாதிகளாக இருப்பார்கள்.
சூரியன், சந்திரன், குரு, சுக்கிரன் 5-ஆம் பாவத்தில் இருந்தால், நல்ல வாரிசு அமைவார்கள். பெயர், புகழ் இருக்கும். ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார். சிலர் நல்ல அரசு பதவிகளில் இருப்பார்கள். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். ஜாதகர் பலசாலியாக இருப்பார். சிலர் தொலைக்காட்சி, சமூக ஊடகங்களில் இருப்பார்கள்.
சூரியன், சந்திரன், குரு, சுக்கிரன் 6-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரிய குணம் உள்ளவராக இருப்பார். விபத்து காரணமாக காலில் பாதிப்பு உண்டாகலாம். இளம் வயதில் பிரச்சினைகள் இருக்கும். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். வீடு, மனை, வாகனம் இருக்கும். எப்போதும் மனதில் சில சிக்கல்கள் இருந்து கொண்டேயிருக்கும்.
சூரியன், சந்திரன், குரு, சுக்கிரன் 7-ஆம் பாவத்தில் இருந்தால், மனைவி நல்லவளாக இருப்பாள். ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். பெரிய தொழிலதிபராக இருப்பார். நிறைய படித்தவராக இருப்பார். வீடு, மனை இருக்கும். இல்வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். சிலர் அரசியலில் நல்ல பதவியில் இருப்பார்கள்.
சூரியன், சந்திரன், குரு, சுக்கிரன் 8-ஆம் பாவத்தில் இருந்தால், சிலர் விவசாயிகளாக இருப்பார்கள். சிலர் வியாபாரிகளாக இருப்பார்கள். இளம் வயதில் பிரச்சினைகள் இருக்கும். வயிற்றில் நோய் இருக்கும். சுய முயற்சியால் கடுமையாக உழைத்து, ஜாதகர் பணம் சம்பாதிப்பார். சில விஷயங்களை முன்கூட்டியே கணிக்கும் ஆற்றல் ஜாதகருக்கு இருக்கும்.
சூரியன், சந்திரன், குரு, சுக்கிரன் 9-ஆம் பாவத்தில் இருந்தால், பூர்வீக சொத்து இருக்கும். தந்தையால் சந்தோஷம் இருக்கும். நல்ல மனைவி அமைவாள். கடவுள் நம்பிக்கை இருக்கும். சிலர் தந்தையின் சொத்தை வைத்து வியாபாரத்தில் ஈடுபடுவார்கள். சிலர் தர்மசீலர்களாக இருப்பார்கள்.
சூரியன், சந்திரன், குரு, சுக்கிரன் 10-ஆம் பாவத்தில் இருந்தால், ராஜயோகம் என்று கூறலாம். அரசாங்கத்தில் பெயர், புகழ் இருக்கும்.
நல்ல அரசு பதவியில் அமர்ந்திருக்கும் வாய்ப்பு இருக்கும். சந்தோஷம் நிறைந்த வாழ்க்கை இருக்கும். சிலர் நல்ல அரசியல்வாதியாக இருப்பார்கள். சிலர் நல்ல நீதிபதிகளாக இருப்பார்கள். பேச்சாற்றல் இருக்கும். பிள்ளைகள் நன்றாக இருப்பார்கள்.
சூரியன், சந்திரன், குரு, சுக்கிரன் 11-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் பணக்காரராக இருப்பார்.
தினமும் பண வரவு இருக்கும். தந்தையின் சொத்து இருக்கும். ஜாதகர் சுயமாகவும் சம்பாதிப்பார். பேச்சாற்றல் இருக்கும். வாரிசுகள் நன்றாக இருப்பார்கள். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.
சூரியன், சந்திரன், குரு, சுக்கிரன் 12-ஆம் பாவத்தில் இருந்தால், இளம் வயதில் உடல்நல பாதிப்பு இருக்கும். வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். பூர்வீக சொத்து இருக்கும். அடிக்கடி பயணம் இருக்கும். அதிக செலவுகள் இருக்கும். அதற்கேற்றபடி பண வரவும் இருக்கும். ஜாதகர் மற்றவர்களைப் பார்த்து பொறாமைப் படுவார்.
செல்: 98401 11534