சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் லக்னத்தில் இருந்தால், சூடு, சொரணை என்பதே இல்லாத மனிதராக இருப்பார். கோப குணம் இருக்கும். திருட்டுத்தனம் இருக்கும். நல்ல எண்ணங்கள் இருக்காது. வெற்றியடையவேண்டும் என்ற சிந்தனை எப்போதும் இருக்கும். பெண் மோகம் அதிகமாக இருக்கும்.
சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் 2-ஆம் பாவத்தில் இருந்தால், இளம் வயதில் கஷ்டங்கள் இருக்கும். குடும்பத்தில் விவாதம் இருக்கும். 23 வயதிற்குப்பிறகு பணவரவு இருக்கும். தைரிய குணம் இருக்கும். பிறரின் சொத்துகளை அடையும் ஆசை எப்போதும் இருக்கும். பெண் மோகம் இருக்கும். காமவெறி இருக்கும். கோபம் அதிகமாக வரும்.
சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் 3-ஆம் பாவத்தில் இருந்தால், துணிச்சல் குணம் இருக்கும். அதைவைத்து ஜாதகர் பல சமூக விரோத செயல்களைச் செய்து பணம் சம்பாதிப்பார். எப்படிப்பட்ட செயல்களையும் செய்வார். பயணம் இருக்கும். வெளியூரில் தொழில் அல்லது வியாபாரம் நடக்கும். ஜாதகருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருக்கும். மகனுடன் உறவு சரியாக இருக்காது. ஒரு வாரிசு இருக்கும்.
சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் 4-ஆம் பாவத்தில் இருந்தால், சிலருக்கு மறுமணம் நடக்கும். சிலருக்கு திருமண விஷயத்தில் தடங்கல்கள் இருக்கும். முன்னோரின் சொத்தில் பிரச்சினை இருக்கும். கோப குணம் இருக்கும். ஜாதகர் தன் மனைவியிடம் வாதம் செய்வார். பண வரவு இருக்கும். பெண் மோகம் இருக்கும். சிலர் ரியல் எஸ்டேட் தொழிலில் இருப்பார்கள். சிலர் மெட்டல் வர்த்தகம் செய்வார்கள்.
சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் 5-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். பலசாலியாக இருப்பார். தன் அறிவை பயன்படுத்தி பணம் சம்பாதிப்பார். வெற்றி கிடைக்கும். நல்ல வாரிசு அமையும். ஜாதகர் பல சொத்துகளை வாங்குவார்.
சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் 6-ஆம் பாவத்தில் இருந்தால், தைரிய குணம் இருக்கும். விரோதிகள் குறைவாக இருப்பார்கள். ஜாதகர் பல சட்ட விரோத காரியங்களைச் செய்வார். அதன்மூலம் பணம் சம்பாதிப்பார். காலில் அடிபடும். சிலருக்கு காதில் நோய் இருக்கும். வசதியான வாழ்க்கை இருக்கும். சிலருக்கு வயிற்றில் கட்டி இருக்கும்.
சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் 7-ஆம் பாவத்தில் இருந்தால், கோபம் அதிகமாக வரும். சிலருக்கு மறுமணம் நடக்கும். ஜாதகருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருக்கும். சிலருக்கு பெண்கள் விஷயத்தில் பெயர் கெடும். பண வசதி இருக்கும். செலவுகள் அதிகமாக இருக்கும். மனதில் சந்தோஷம் இருக்கும்.
சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் 8-ஆம் பாவத்தில் இருந்தால், சிலருக்கு மறுமணம் நடக்கும். தோல் நோய் இருக்கும். சிலர் விவசாயத்தின் மூலம் பணம் சம்பாதிப்பார்கள். ஜாதகர் கோபமாக பேசுவார். இளம் வயதில் உடல் நல பாதிப்பு இருக்கும். 36 வயதிற்குப் பிறகு,வாழ்க்கை நன்றாக இருக்கும்.
சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் 9-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகருக்கு தைரிய குணம் இருக்கும். பலசாலியாக இருப்பார். வாழ்க்கை நன்றாக இருக்கும். பூர்வீக சொத்து கிடைக்கும். சிலர் வேலைக் காக வெளியூர் செல்வார்கள். பேச்சாற்றல் இருக்கும். நல்ல வாரிசு அமையும்.
சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் 10-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார். சிலர் அரசியல்வாதிகளாக இருப்பார்கள். சிலர் அரசு பதவிகளில் இருப்பார்கள். சிலர் பெரிய வர்த்தகர்களாக இருப்பார்கள். சிலர் ரகசிய காவல்துறை அதிகாரிகளாக இருப்பார்கள். பெண் மோகம் அதிகமாக இருக்கும்.
சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் 11-ஆம் பாவத்தில் இருந்தால், பலவித தொழில்களைச் செய்வார்கள். கோபமாக பேசுவார்கள். நல்ல வாரிசு இருக்கும். ஜாதகர் சூழலுக்கேற்றபடி தன்னை மாற்றிக் கொள்வார். வீடு, மனை, வாகனம் இருக்கும். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.
சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் 12-ஆம் பாவத்தில் இருந்தால், திருமண விஷயத்தில் தடைகள் இருக்கும். கோப குணம் இருக்கும். வீண் செலவுகள் இருக்கும். வாழ்க்கையின் முற்பகுதியில் உடல் நல பாதிப்பு இருக்கும். 34 வயதிற்குப் பிறகு, வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். கண்ணில் நோய் இருக் கும்.
செல்: 98401 11534