சூரியன், செவ்வாய், சுக்கிரன், சனி லக்னத்தில் இருந்தால், ஜாதகர் கோபக்காரராக இருப்பார். துரோகியாக இருப்பார். கெட்ட செயல்களைச் செய்பவராக இருப்பார். முரட்டுத்தனமாக, கடுமையாக பேசுவார். மாமிச பிரியராக இருப்பார். பணக்காரராக இருப்பார். பல நேரங்களில் சட்ட விரோத காரியங்களைச் செய்வார். சண்டை போடுவார். சிலருக்கு மறுமணம் நடக்கும். வாரிசுகளுடன் விவாதம் இருக்கும்.
சூரியன், செவ்வாய், சுக்கிரன், சனி 2-ஆம் பாவத்தில் இருந்தால், இளமையில் கஷ்டங்கள் இருக்கும். படிப்பில் பிரச்சினை இருக்கும். சிலருக்கு தந்தையால் சந்தோஷம் இருக்காது. சிலர் மனைவியுடன் சண்டை போடுவார்கள். சிலருக்கு மறுமணம் நடக்கும்.
சூரியன், செவ்வாய், சுக்கிரன், சனி 3-ஆம் பாவத்தில் இருந்தால், சிலர் வெளியூரில் சென்று வாழ்வார்கள். அங்கு கடுமையாக உழைப்பார்கள். சிலர் கறாராக பேசுவார்கள். சகோதரர்களுடன் உள்ள உறவில் பிரச்சினை இருக்கும். உடலில் அவ்வப்போது சிறிய அளவில் நோய்கள் இருக்கும். காது, மூக்கில் அடைப்பு இருக்கும். இளமையில் படிப்பில் பிரச்சினை இருக்கும்.
சூரியன், செவ்வாய், சுக்கிரன், சனி 4-ஆம் பாவத்தில் இருந்தால், சொத்து விஷயத்தில் பிரச்சினை இருக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும். சிலருக்கு மனைவியைத் தவிர, வேறு பெண்ணுடன் தொடர்பு இருக்கும். கோபம் அதிகமாக வரும். நல்ல பண வசதி இருக்கும். வீடு, மனை இருக்கும். ஆனால், அதில் பிரச்சினை இருக்கும்.
சூரியன், செவ்வாய், சுக்கிரன், சனி 5-ஆம் பாவத்தில் இருந்தால், சிலர் எஞ்சினீயர்களாக இருப்பார்கள்.
சிலர் கட்டட வேலை செய்பவர்களாக இருப்பார்கள். சிலர் மர வேலை செய்பவர்களாக இருப்பார்கள். உடல்நல பாதிப்பு இருக்கும். வயிற்றில் பிரச்சினை இருக்கும். பெண்களுக்கு கர்ப்பப் பையில் பிரச்சினை இருக்கும். குழந்தை பிறப்பதில் பிரச்சினை இருக்கும்.
சூரியன், செவ்வாய், சுக்கிரன், சனி 6-ஆம் பாவத்தில் இருந்தால், கோப குணம் இருக்கும். அடிக்கடி பயணம் செய்ய வேண்டியதிருக்கும். திருமண விஷயத்தில் தடங்கல்கள் இருக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும். காலில் அடிபடும். சிலருக்கு விபத்து நடக்கும். சிலர் பிறருடன் சண்டை போடுவார்கள். பித்த நோய் இருக்கும். தைரிய குணம் இருக்கும். சிலர் வீண் விவாதத்தில் ஈடுபடுவார்கள். சொத்தில் பிரச்சினை இருக்கும்.
சூரியன், செவ்வாய், சுக்கிரன், சனி 7-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் பல தொழில்களைச் செய்வார். அவற்றில் நஷ்டம் ஏற்படும். மனைவியுடன் சந்தோஷம் இருக்காது. சிலருக்கு திருமண விஷயத்தில் சிக்கல்கள் இருக்கும். சிலருக்கு தாமதமாக திருமணம் நடக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும். தலைவலி இருக்கும்.
சூரியன், செவ்வாய், சுக்கிரன், சனி 8-ஆம் பாவத்தில் இருந்தால், எட்டு வயதுவரை உடல்நல பாதிப்பு இருக்கும். கோபம் அதிகமாக வரும். இல்வாழ்க்கையில் சந்தோஷம் இருக்காது. சிலருக்கு விபத்து நடக்க வாய்ப்பிருக்கிறது. பணம் சம்பாதிப்பதற்காக பல தொழில் களைச் செய்ய வேண்டியதிருக் கும். சிலர் வெளியூரில் சென்று வாழ்வார்கள்.
சூரியன், செவ்வாய், சுக்கிரன், சனி 9-ஆம் பாவத்தில் இருந்தால், 42 வயதிற்குப் பிறகு, வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். கோப குணம் இருக்கும். ஜாதகருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருக்கும். உடலில் சிறிய அளவில் நோய்கள் இருக்கும். ஜாதகர் தொழிலுக்காக பல இடங் களுக்கும் பயணம் செய்வார்.
சூரியன், செவ்வாய், சுக்கி ரன், சனி 10 ஆம் பாவத்தில் இருந் தால், சிலர் அரசியல்வாதிகளாக இருப்பார்கள். கோபம் வரும். பல முயற்சிகளைச் செய்து, தோல்விகளைச் சந்திப்பார்கள். 48 வயதிற்குப் பிறகு, வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். சிலர் துறவியாக வடிவமெடுக்கலாம்.
சூரியன், செவ்வாய், சுக்கிரன், சனி 11-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் பணக்காரராக இருப் பார். கோபக்காரராக இருப்பார். தலைவலி இருக்கும். பித்தம் இருக்கும். பணம் சம்பாதிப்பதற் காக பயணம் செய்யவேண்டிய திருக்கும். சகோதரர்களுடன் ஜாதகர் விவாதம் செய்வார். பெண் களுக்கு வயிற்றில் பிரச்சினை இருக்கும். கர்ப்பப் பையில் பிரச்சினை இருக்கும்.
சூரியன், செவ்வாய், சுக்கிரன், சனி 12-ஆம் பாவத்தில் இருந் தால், வீண் செலவுகள் இருக்கும். விவாதம் இருக்கும். சிலருக்கு தந்தையால் சந்தோஷம் இருக் காது. சிலருக்கு தாமதமாக திருமணம் நடக்கும். 36 வயதிற்குப் பிறகு, வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.