சூரியன், குரு, சுக்கிரன், சனி லக்னத்தில் இருந்தால், சிலர் கவிஞராக இருப்பார்கள். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். பேராசை அதிகமாக இருக்கும். இதயத்தில் இரக்கம் இருக்கும். ஜாதகர் நல்ல மனிதராக இருப்பார்.பெயர், புகழ் இருக்கும். நீண்ட ஆயுள் இருக்கும். தலைவலி இருக்கும். பித்த நோய் இருக்கும்.

சூரியன், குரு, சுக்கிரன், சனி 2-ஆம் பாவத்தில் இருந்தால், சிலர் இளம் வயதிலேயே புத்தகம் எழுதுவார்கள். ஆராய்ச்சி செய்வார்கள். பிறருக்கு அறிவுரை கூறுவார்கள். சிலர் கமிஷன் ஏஜென்டாக இருப்பார்கள். நல்ல பேச்சாற்றல் இருக்கும். பண வரவு இருக்கும். நல்ல வாரிசு அமையும். சிலர் பிறரிடம் வாதம் செய்வார்கள்.

ss

சூரியன், குரு, சுக்கிரன், சனி 3-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். நல்ல வாரிசு இருக்கும். சிலர் வெளியூரில் பெயர், புகழுடன் இருப்பார்கள். சிலர் பிறருக்கு உபதேசம் செய்வார்கள். சகோதரர்களுடன் உறவு நன்றாக இருக்கும். சிலர் தொழிலதிபர்களாக இருப்பார்கள். தன் சம்பாத்தியத்தை வைத்து ஜாதகர் தன் சகோதரர்களுக்கு உதவுவார்.

சூரியன், குரு, சுக்கிரன், சனி 4-ஆம் பாவத்தில் இருந்தால், துணிச்சல் குணம் இருக்கும். நல்ல வாரிசு இருக்கும். நல்ல மனைவி அமைவாள். ஜாதகர் பணக்காரராக இருப்பார். சொந்த வீடு, வாகனம் இருக்கும். ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார்.

Advertisment

சூரியன், குரு, சுக்கிரன், சனி 5-ஆம் பாவத்தில் இருந்தால், நல்ல வாரிசு இருக்கும். ஜாதகர் நன்கு படித்தவராக இருப்பார். சிலர் நல்ல அரசு பதவிகளில் இருப்பார்கள் சிலர் ஐ.ஏ.எஸ்.

படித்தவர்களாக இருப்பார்கள். சிலர் பெரிய அரசியல்வாதியாக இருப்பார்கள். நிறைய பணம் சம்பாதிப்பார்கள். சொந்தத்தில் வாகனம் இருக்கும்.

சூரியன், குரு, சுக்கிரன், சனி 6-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தன் எதிரிகளை வெல்வார். காலில் நோய் இருக்கும். பித்த நோய் இருக்கும். வயிற்றில் நோய் இருக்கும். சிலர் வெளியூர் சென்று பணம் சம்பாதிப்பார்கள். பயணம் இருக்கும். நல்ல வாரிசு இருக்கும்.

Advertisment

சூரியன், குரு, சுக்கிரன், சனி 7-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் நல்ல வியாபாரியாக இருப்பார். நிறைய படித்தவராக இருப்பார். தைரியசாலியாக இருப்பார். நல்ல தோற்றத்தைக் கொண்டிருப்பார். திருமணமானபிறகு, வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். நன்கு பணம் சம்பாதிப்பார்.

சூரியன், குரு, சுக்கிரன், சனி 8-ஆம் பாவத்தில் இருந்தால், பூர்வீக சொத்தில் பிரச்சினை இருக்கும். தலைவலி இருக்கும். சிலர் அரசரைப்போல வாழ்வார்கள். சிலருக்கு அதிகமாக சிந்திப்பதன் காரணமாக, தலைவலி வரும். ஜாதகர் நன்கு படித்த வராக இருப்பார். சிலர் பெரிய எழுத்தாளர் களாக இருப்பார்கள்.

சூரியன், குரு, சுக்கிரன், சனி 9-ஆம் பாவத்தில் இருந்தால், தைரிய குணம் இருக்கும். பூர்வீக சொத்து கிடைக்கும். நல்ல மனைவி அமைவாள். நல்ல வாரிசு அமையும். வியாபாரத்தில் நல்ல பண வரவு இருக்கும். சிலர் உயர்ந்த அரசு பதவிகளில் இருப்பார்கள்.

சூரியன், குரு, சுக்கிரன், சனி 10-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார். சிலர் அரசியல்வாதியாக இருப்பார்கள். சிலர் நீதிபதியாக இருப்பார்கள். சிலர் ஐ.ஏ.எஸ். படித்தவர்களாக இருப்பார்கள். சிலர் நல்ல அரசு பதவிகளில் இருப்பார்கள். அழகான மனைவி இருப்பாள். நல்ல வாரிசு இருக்கும். தந்தையின் சொத்து கிடைக்கும்.

சூரியன், குரு, சுக்கிரன், சனி 11-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் பல தொழில்களைச் செய்வார். சிலர் நல்ல பதவிகளில் இருப்பார்கள். சிறந்த பேச்சாற்றல் இருக்கும். நல்ல பண வரவு இருக்கும். நல்ல வாரிசு அமையும். முதுகுத் தண்டில் அல்லது காலில் சிறிய பிரச்சினை இருக்கும்.

சூரியன், குரு, சுக்கிரன், சனி 12-ஆம் பாவத்தில் இருந்தால், தைரிய குணம் இருக்கும். இளமையில் கஷ்டம் இருக்கும். ஜாதகர் தன் சுயமுயற்சி யால் பணத்தைச் சம்பாதிப்பார். செலவுகள் அதிகமாக இருக்கும். சிலர் வெளியூர் அல்லது வெளிநாட்டிற்குச் சென்று, பணம் சம்பாதிப்பார்கள். வாழ்க்கை சந்தோஷ மாக இருக்கும். சிலருக்கு போதைப் பழக்கம் இருக்கும்.

செல்: 98401 11534