சூரியன், செவ்வாய், புதன், குரு லக்னத்தில் இருந்தால், ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். பலசாலியாக இருப்பார். நிறைய படித்தவராக இருப்பார். சிலர் பஞ்சு வர்த்தகத்தில் இருப்பார்கள். சிலர் துணி வியாபாரம் செய்வார்கள். சிலர் விவசாயம் செய்வார்கள். வாரிசுகள் நன்றாக இருப்பார்கள். வீடு, மனை, வாகனம் இருக்கும். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.

சூரியன், செவ்வாய், புதன், குரு 2-ஆம் பாவத்தில் இருந்தால், இளமையில் கஷ்டங்கள் இருக்கும். துணிச்சல் குணம் இருக்கும். பண வரவு இருக்கும். ஜாதகர் அறிவாளி யாக இருப்பார். பேச்சாற்றல் இருக்கும். நல்ல வாரிசு இருக்கும். சொத்து விஷயத்தில் பிரச்சினை இருக்கும். ஜாதகர் பயணம் செய்து, பணம் சம்பாதிப்பார். முகத்தில் ஏதாவது தழும்பு இருக்கும்.

சூரியன், செவ்வாய், புதன், குரு 3-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரிய குணம் படைத்தவராக இருப்பார். சுயமாக பணம் சம்பாதிப்பார். இளம் வயதில் படிப்பிற்காகவோ அல்லது தொழில் செய்வதற்காகவோ சொந்த ஊரைவிட்டு வெளியே சென்று வாழ வேண்டிய திருக்கும். சிலர் உருக்கு, செம்பு, பித்தளை வியாபாரம் செய்வார்கள். சிலர் இன்சூரன்ஸ் ஏஜென்டாக இருப்பார் கள். வாரிசுகள் நன்றாக இருப்பார்கள். அழகான மனைவி அமைவாள்.

சூரியன், செவ்வாய், புதன், குரு 4-ஆம் பாவத்தில் இருந்தால், தைரிய குணம் இருக்கும். திருமண விஷயத்தில் தடங்கல்கள் இருக்கும். தடைக்குப்பிறகு திருமணம் நடக்கும். சிலர் நன்கு படித்தவர்களாக இருப்பார் கள். பெரிய விவசாயியாக இருப்பார்கள். சொந்தத்தில் வீடு, வாகனம் இருக்கும். வசதியான வாழ்க்கை இருக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும். சிலர் கட்டடத் தொழிலில் கான்ட்ராக்டராக இருப்பார்கள். சிலர் ரியல் எஸ்டேட் தொழிலில் இருப்பார்கள்.

Advertisment

ss

சூரியன், செவ்வாய், புதன், குரு 5-ஆம் பாவத்தில் இருந்தால், சிலர் அரசு பதவியில் இருப்பார்கள். நிறைய படித்தவர்களாக இருப்பார்கள். சிலர் காவல்துறை அதிகாரிகளாக இருப்பார்கள். ஜாதகர் பலசாலியாக இருப்பார். துணிச்சல் குணம் இருக்கும். நல்ல வாரிசு அமையும். ஒரு வாரிசு நன்கு படிப்பார். சிலர் பெரிய அரசியல்வாதியாக இருப்பார்கள்.

சூரியன், செவ்வாய், புதன், குரு 6-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரியமான மனிதராக இருப்பார். காலில் அடிபடும். எதிரிகள் அதிகமாக இருப்பார்கள். சிலருக்கு குடும்பத்திற்குள் பகை இருக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும். சிலர் அதிகமாக பயணம் செய்வார்கள். சிலர் வெளிநாட்டு தொடர்புகளின்மூலம் வியாபாரம் செய்வார்கள்.

Advertisment

சூரியன், செவ்வாய், புதன், குரு 7-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகருக்கு கோப குணம் இருக்கும். அழகான மனைவி அமைவாள். சிலருக்கு மறுமணம் நடக்கும். படிப்பு விஷயம் நன்றாக இருக்கும். சிலர் அரசியல்வாதி யாக இருப்பார்கள். சிலர் கமிஷன் ஏஜென்டாக இருப்பார்கள்.

சூரியன், செவ்வாய், புதன், குரு 8-ஆம் பாவத்தில் இருந்தால், இளம் வயதில் உடல்நலம் கெடும். அடிக்கடி கடுமையான ஜுரம் வரும். பித்த நோய் இருக்கும். தலையில் அடிபடும். பூர்வீக சொத்து இருக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும். ஜாதகர் பலசாலியாக இருப்பார்.

சூரியன், செவ்வாய், புதன், குரு 9-ஆம் பாவத்தில் இருந்தால், கடவுள் நம்பிக்கை இருக்கும். ஜாதகர் பலசாலியாக இருப்பார். தாத்தா, தந்தை ஆகியோரின் புகழ் வெளிச்சத்தில் அவர் வாழ்வார். நன்கு சாப்பிடுவார்; தூங்குவார். நல்ல வாரிசுகள் அமையும்.

சூரியன், செவ்வாய், புதன், குரு 10-ஆம் பாவத்தில் இருந்தால், சிலர் டாக்டர் களாக இருப்பார்கள். சிலர் எஞ்சீனியர்களாக இருப்பார் கள். சிலர் அரசியல்வாதியாக இருப்பார்கள். பெயர், புகழ் இருக்கும். கோப குணம் இருக்கும். ஜாதகர் தன் பெற்றோரை மதிக்க மாட்டார். பண வசதி இருக்கும். நல்ல வாரிசுகள் இருப்பார்கள். ஒரு வாரிசுக்கு உடல்நலம் பாதிக்கப்படும்.

சூரியன், செவ்வாய், புதன், குரு 11-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் பணக்காரராக இருப்பார். புகழ் இருக்கும். நல்ல வாரிசு இருக்கும். பூர்வீக சொத்து இருக்கும். சகோதரர்களுடன் பிரச்சினை இருக்கும். வீடு, மனை, வாகனம் இருக்கும். ஆனந்தமான வாழ்க்கை இருக்கும்.

சூரியன், செவ்வாய், புதன், குரு 12-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் கோபக் காரராக இருப்பார். அடிக்கடி பயணம் செய்வார். இளம் வயதில் கஷ்டங்களுக்கு மத்தியில் படிப்பார். சிலருக்கு மறுமணம் நடக்கும். சிலருக்கு திருமண விஷயத்தில் தடங்கல்கள் இருக்கும். செலவுகள் அதிகமாக இருக்கும். ஜாதகர் வீண் செலவுகளைச் செய்வார்.

செல்: 98401 11534