சூரியன், புதன், சுக்கிரன், சனி லக்னத்தில் இருந்தால், ஜாதகர் நன்கு படித்தவராக இருப்பார்.

சகோதரர்களுடன் நல்ல உறவு இருக்கும். வாரிசு இருக்கும். ஜாதகர் பரந்த மனம் கொண்டவராக இருப்பார். அதிர்ஷ்டசாலியாக இருப்பார். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.

சூரியன், புதன், சுக்கிரன், சனி 2-ஆம் பாவத்தில் இருந்தால், நல்ல பேச்சாற்றல் இருக்கும். 23 வயதிற்குப் பிறகு, பண வரவு இருக்கும். சிலர் மருத் துவர்களாக இருப்பார்கள். சிலர் ஜோதிடராக இருப்பார்கள். சிலர் வர்த்தகர்களாக இருப்பார்கள். ஜாதகர் பணத்தைச் சேமிப்பார். நல்ல வாரிசு அமையும். ஜாதகர் தன் தந்தையிட மிருந்து பிரிந்து வாழ்வார். சிலர் வெளி நாட்டிற்குப் பயணம் செய்வார்கள்.

சூரியன், புதன், சுக்கிரன், சனி 3-ஆம் பாவத்தில் இருந் தால், ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். சொந்த ஊரை விட்டு வெளியே சென்று படிப் பார். சிலர் வெளியூர் சென்று தொழில் செய்வார்கள். ஜாத கர் இளம் வயதிலேயே பணம் சம்பாதிப்பார். போராடி வெற்றி பெறுவார்.

Advertisment

ss

சூரியன், புதன், சுக்கிரன், சனி 4-ஆம் பாவத்தில் இருந் தால், பூர்வீக சொத்தில் பிரச் சினை இருக்கும். தைரிய குணம் இருக்கும். திருமண வாழ்வில் சிறிய பிரச்சினைகள் இருக் கும். ஜாதகருக்கு தந்தையுடன் கருத்து வேறுபாடு இருக்கும். சிலர் தொழிலதிபர்களாக இருப்பார்கள். சிலர் ஓவியர்களாக இருப்பார் கள். சிலர் கைத் தொழில் செய்பவர்களாக இருப்பார்கள். சிலர் ஆசாரியாக இருப்பார்கள்.

சூரியன், புதன், சுக்கிரன், சனி 5-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். நிறைய படித்தவராக இருப்பார். வாரிசுகளுடன் பிரச்சினை இருக்கும். பெண்களுக்கு வயிற்றில் பிரச்சினை இருக்கும். சிலர் அரசியல்வாதிகளாக இருப்பார்கள். பணத்தைச் சேமிப்பார்கள்.

Advertisment

சூரியன், புதன், சுக்கிரன், சனி 6-ஆம் பாவத்தில் இருந் தால், தைரிய குணம் இருக்கும். ஜாதகர் பகைவர்களை வெல்வார். தலைவலி, வயிற்று வலி இருக்கும். சிலர் சொந்த ஊரைவிட்டு வெளியே சென்று, பணம் சம்பாதிப்பார் கள். பெயர், புகழ் இருக்கும்.

சூரியன், புதன், சுக்கிரன், சனி 7-ஆம் பாவத்தில் இருந் தால், அழகான மனைவி இருப்பாள். ஜாதகர் பணக் காரராக இருப்பார். தைரிய குணம் உள்ளவராக இருப் பார். சிலருக்கு வேறு பெண் களுடன் கள்ள உறவு இருக்கும்.

நல்ல பேச்சாற்றல் இருக்கும்.

சிலர் பெரிய தொழிலதிபர் களாக இருப்பார்கள். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.

சூரியன், புதன், சுக்கிரன், சனி 8-ஆம் பாவத்தில் இருந் தால், இளமையில் உடல்நல பாதிப்பு இருக்கும். மலச் சிக்கல் இருக்கும். சிலருக்கு மூல நோய் இருக்கும். அடிக்கடி பயணம் இருக்கும். பூர்வீக சொத்தில் பிரச்சினை இருக்கும். அதிகமான சிந்தனை காரணமாக தலைவலி வரும்.

சூரியன், புதன், சுக்கிரன், சனி 9-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் துணிச்சல் குணம் உள்ளவராக இருப்பார். இளமையில் கஷ்டம் இருக்கும். சிலர் கணக்காளர்களாக இருப் பார்கள். சிலர் ஓவியர்களாக இருப்பார்கள். நல்ல வாரிசு இருக்கும். ஜாதகர் அதிர்ஷ்டசாலியாக இருப்பார். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.

ஜாதகருக்கு பிறரின் சொத்தை அபகரிக்கும் எண்ணம் இருக்கும்.

சூரியன், புதன், சுக்கிரன், சனி 10-ஆம் பாவத்தில் இருந்தால், சிலர் அரசியல்வாதியாக இருப்பார்கள்.

அரசியலில் பெயர், புகழ் இருக்கும். வாழ்க்கையின் முற்பகுதியில் பிரச் சினைகள் இருக்கும். ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். சொந்த ஊரைவிட்டு வெளியே சென்று சிலர் வாழ்வார்கள். சிலர் பெரிய அரசு பதவிகளில் இருப்பார்கள். நல்ல வாரிசு இருக்கும்.

சூரியன், புதன், சுக்கிரன், சனி 11-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் துணிச்சலான மனிதராக இருப்பார். முன்னோரின் சாபம் இருக்கும். எனினும், ஜாதகர் பணம் சம்பாதிப்பார். ஒரு காலில் நோய் இருக்கும். ஜாதகர் கடுமையான உழைப்பாளியாக இருப் பார். அடிக்கடி பயணம் இருக்கும். தந்தை யுடன் உறவு சரியாக இருக் காது.

சூரியன், புதன், சுக்கிரன், சனி 12-ஆம் பாவத்தில் இருந்தால், வீண் செலவுகள் அதிக மாக இருக்கும். அதிக சிந்தனைகள் இருக்கும். சிலர் போதைப் பழக் கத்திற்கு அடிமையாக இருப்பார்கள். சிலர் வெளியூர் சென்று பணம் சம்பாதிப்பார்கள். சிலருக்கு பிற பெண் களுடன் கள்ள தொடர்பு இருக்கும்.

செல்: 98401 11534