சூரியன், சந்திரன், செவ்வாய், புதன் எங்கு இருந்தால் என்ன நடக்கும்....(06.09.24)

/idhalgal/balajothidam/what-will-happen-if-sun-moon-mars-mercury-are-anywhere060924

சூரியன், சந்திரன், சுக்கிரன், சனி லக்னத்தில் இருந்தால், தைரியம் குறைவாக இருக்கும். ஆனால், தைரியமாக இருப்பதைப்போல ஜாதகர் வெளியே காட்டிக்கொள்வார். மனதில் குழப்பங்கள் இருக்கும். தன் மனைவி தவிர, வேறு பெண்களுடனும் ஜாதகருக்குத் தொடர்பு இருக்கும். எப்போதும் இளமையுடன் இருக்கவேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.

சூரியன், சந்திரன், சுக்கிரன், சனி 2-ஆம் பாவத்தில் இருந்தால், குடும்பத்தில் பல சிக்கல்கள் இருக்கும். இளம் வயதில் பல பிரச்சினைகள் இருக்கும். பண கஷ்டம் இருக்கும். 24 வயதிற்குப் பிறகு, கடுமையாக உழைத்து ஜாதகர் பணத்தைச் சம்பாதிப்பார். அழகான மனைவி அமைவாள். அலைபாயும் மனம் இருக்கும். வெளி பெண்களுடன் ஜாதகருக்கு பழக்கம் இருக்கும். நல்ல வாரிசு இருக்கும். தைரிய குணம் இருக்கும். கண்ணில் நோய் இருக்கும். ஜாதகர் பணக்காரராக இருப்பார்.

சூரியன், சந்திர

சூரியன், சந்திரன், சுக்கிரன், சனி 3-ஆம் பாவத்தில் இருந்தால், இளமையில் படிப்பிற்காக அல்லது குடும்ப சூழ்நிலைக்காக ஜாதகர் சொந்த ஊரைவிட்டு, வெளியே சென்று வாழவேண்டியதிருக்கும். நல்ல பண வரவு இருக்கும். துணிச்சல் குணம் இருக்கும். நல்ல வாரிசு இருக்கும். குடும்பத்தில் பிரச்சினைகள் இருக்கும். பூர்வீக சொத்தில் சிக்கல் இருக்கும்.

சூரியன், சந்திரன், சுக்கிரன், சனி 4-ஆம் பாவத்தில் இருந்தால், குடும்பத்தில் சிக்கல்கள் இருக்கும். பூர்வீக சொத்தில் பிரச்சினை இருக்கும். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். ஜாதகர் சுய முயற்சியால் பணம் சம்பாதிப்பார். நண்பர்கள் விரோதிகளாக மாறுவார்கள். இதயத்தில் சிறிய பிரச்சினை இருக்கும்.

சூரியன், சந்திரன், சுக்கிரன், சனி 5-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். சுயமாக சம்பாதிப்பார். நல்ல வாரிசு இருக்கும். அழகான மனைவி அமைவாள். பெண் ஜாதகமாக இருந்தால், வயிற்றில் பிரச்சினை இருக்கும். கர்ப்பப்பையில் பிரச்சினை இருக்கும்.

சூரியன், சந்திரன், சுக்கிரன், சனி 6-ஆம் பாவத்தில் இருந்தால், பகைவர்கள் அதிகமாக இருப்பார்கள். கண்ணில் நோய் இருக்கும். பித்தம் இருக்கும். பூர்வீக சொத்தில் பிரச்சினை இருக்கும். ஜாதகர் சுயமாக சம்பாதிப்பார். கடுமையாக உழைத்து பணத்தைச் சம்பாதிப்பார். தைரிய குணம் இருக்கும். 36 வயதிற்குப்பிறகு, வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.

ss

சூரியன், சந்திரன், சுக்கிரன், சனி 7-ஆம் பாவத்தில் இருந்தால், திருமண வாழ்க்கையில் சிக்கல்கள் இருக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும். நல்ல வாரிசு அமையும். 42 வயதிற்குப் பிறகு, ஜாதகர் நிறைய பணம் சம்பாதிப்பார். தலைவலி இருக்கும். உடலில் ஏதாவது குறைபாடு இருக்கும்.

சூரியன், சந்திரன், சுக்கிரன், சனி 8-ஆம் பாவத்தில் இருந்தால், இளமையில் பிரச்சினை இருக்கும். உடல்நலம் கெடும். 8 வயதுவரை உடல்நல பாதிப்பு இருக்கும். சிலருக்கு நரம்புத் தளர்ச்சி இருக்கும். பணவரவு இருக்கும். பூர்வீக சொத்தில் பிரச்சினை இருக்கும். தந்தையுடன் கருத்து வேறுபாடு இருக்கும். சிலருக்கு கள்ள உறவு இருக்கும்.

சூரியன், சந்திரன், சுக்கிரன், சனி 9-ஆம் பாவத்தில் இருந்தால், துணிச்சல் குணம் இருக்கும். பூர்வீக சொத்தில் சிக்கல் இருக்கும். நல்ல பேச்சாற்றல் இருக்கும். பணம் சம்பாதித்து, ஜாதகர் தனக் காக செலவழிப்பார். அடிக்கடி பயணம் இருக்கும். ஜாதகர் தன்னை பக்தி மானாக வெளியே காட்டிக் கொள்வார்.

சூரியன், சந்திரன், சுக்கிரன், சனி 10-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரிய குணம் உள்ளவராக இருப்பார். சிலர் துறவியாக இருப்பார்கள். சிலருக்கு மறுமணம் நடக்கும். சிலருக்கு வயதான பிறகு, அரசியலில் பெயர், புகழ் இருக்கும். பேச்சாற்றல் இருக்கும். சிலர் பெரிய தொழிலதிபர்களாக இருப்பார்கள்.

சூரியன், சந்திரன், சுக்கிரன், சனி 11-ஆம் பாவத்தில் இருந்தால், தலைவலி இருக்கும். வயிற்று வலி இருக்கும். மனநோய் இருக்கும். சிலருக்குத் தூக்கம் சரியாக வராது. நல்ல பண வசதி இருக்கும். ஜாதகர் கடுமையான உழைப்பாளியாக இருப்பார். ஒரு வாரிசு நன்றாக இருக்கும். இன்னொரு வாரிசுக்கு உடல்நல பாதிப்பு இருக்கும். அடிக்கடி பயணம் இருக்கும்.

சூரியன், சந்திரன், சுக்கிரன், சனி 12-ஆம் பாவத்தில் இருந்தால், இளமையில் பல கஷ்டங்கள் இருக்கும்.

ஜாதகர் தைரியசாலியாக இருப்பார்.

உடல்நலம் கெடும். 28 வயதிற்குப் பிறகு, ஜாதகர் நிறைய பணம் சம்பாதிப் பார். பணம் சம்பாதிப்பதற்கு பயணம் செய்ய வேண்டிய திருக்கும். 45 வயதிற் குப்பிறகு, ஜாதகர் நிரந்தர தொழிலைச் செய்வார். தூக்கம் சரியாக வராது.

செல்: 98401 11534

bala060924
இதையும் படியுங்கள்
Subscribe