சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன், சனி லக்னத்தில் இருந்தால், ஜாதகர் கடுமையான மனம் கொண்டவராக இருப்பார். பண வசதி குறைவாக இருக்கும். ஜாதகர் கெட்ட காரியங்களில் ஈடுபடுவார். கோப குணம் இருக்கும். திருமண வாழ்க்கையில் பிரச்சினை இருக்கும். ஜாதகர் வாரிசுகளுடன் சந்தோஷமாக இருக்க மாட்டார். பெண் மோகம் அதிகமாக இருக்கும்.
சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன், சனி 2-ஆம் பாவத்தில் இருந்தால், இளமையில் பல கஷ்டங்கள் இருக்கும். படிப்பு விஷயத்தில் பிரச்சினை இருக்கும். பல தொழில்கள் இருக்கும். ஜாதகர் சீக்கிரமே பணம் சம்பாதிக்க ஆரம்பிப்பார். தேவையற்றதைப் பேசுவார். அதனால், வீட்டில் பிரச்சினை உண்டாகும். சந்தோஷம் இருக்காது. வயிற்றில் நோய் இருக்கும்.
சந்திரன், செவ்வாய், புதன், சுக்க

சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன், சனி 3-ஆம் பாவத்தில் இருந்தால், கோப குணம் இருக்கும். படிப்பில் பிரச்சினை இருக்கும். பயணம் இருக்கும். சிறிய இடை வெளிக்குப்பிறகு படிப்பு தொடரும். தைரிய குணம் இருக்கும். ஜாதகர் கடுமையாக உழைத்து, பணத்தைச் சம்பாதிப்பார். சில நேரங்களில் தன் தேவையற்ற பேச்சு காரணமாக பல நண்பர்களை இழந்துவிடுவார்.
சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன், சனி 4-ஆம் பாவத்தில் இருந்தால், திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள் இருக்கும். சிலருக்கு தாமதமாக திருமணம் நடக்கும். கோபம் வரும். அதனால் பல சிக்கல்கள் உண்டாகும். ஜாதகர் கெட்ட மனிதராக இருப்பார். கடுமை யாக பேசுவார். பண வரவு இருக்கும். எனினும், மனதில் சந்தோஷம் இருக்காது.
சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன், சனி 5-ஆம் பாவத்தில் இருந்தால், எந்திரம் சம்பந்தப்பட்ட தொழில் இருக்கும். சிலருக்கு தொழிற்சாலை இருக்கும். அடிக்கடி தொழிலில் சிக்கல்கள் உண்டாகும். வயிற்றில் நோய் இருக்கும். சிலருக்கு குழந்தை இருக்காது. வாரிசு இருக்கும்பட்சம், நல்ல உறவு இருக்காது.
சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன், சனி 6-ஆம் பாவத்தில் இருந்தால், அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்படும். காலில் பிரச்சினை ஏற்படும். இல்வாழ்க்கையில் சிக்கல்கள் இருக்கும். படிப்பு குறைவாக இருக்கும். சொந்த வீடு இருக்கும். வாழ்க்கையில் சந்தோஷம் இருக்காது.
சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன், சனி 7-ஆம் பாவத்தில் இருந்தால், சிலருக்கு மறுமணம் நடக்கும். திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள் இருக்கும். கோபம் அதிகமாக வரும். மனதில் குழப்பங்கள் இருக்கும். தொழிலுக்காக அடிக்கடி பயணம் இருக்கும்.
சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன், சனி 8-ஆம் பாவத்தில் இருந்தால், இல்வாழ்க்கையில் சிக்கல்கள் இருக்கும். சிலருக்கு திருமணம் தாமதமாக நடக்கும். கோப குணம் இருக்கும். சிலர் முரட்டுத்தனமாக பேசுவார்கள். அடிக்கடி விபத்து நடக்கும்.
சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன், சனி 9-ஆம் பாவத்தில் இருந்தால், முதுகுத் தண்டில் பிரச்சினை இருக்கும். ஜாதகர் பலசாலியாக இருப்பார். மனைவியுடன் விவாதம் இருக்கும். வாரிசுகளுடன் பிரச்சினை இருக்கும். சிலர் வெளியூரில் சென்று வாழ்வார்கள்.
சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன், சனி 10-ஆம் பாவத்தில் இருந்தால், தைரிய குணம் இருக்கும். சிலர் துறவியாக இருப்பார்கள். சிலருக்கு மன கஷ்டங்கள் இருக்கும். கடுமையான உழைப்பு இருக்கும். வாழ்க்கையின் பிற்பகுதி நன்றாக இருக்கும்.
சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன், சனி 11-ஆம் பாவத்தில் இருந் தால், ஜாதகர் துணிச்சல் குணம் கொண்டவராக இருப்பார். பல தொழில் களை அறிந்தவராக இருப்பார். பல திருட்டுத்தனங்களில் ஈடுபட்டு பணம் சம்பாதிப்பார். பெண் மோகம் இருக்கும். ஜாதகர் பாவச் செயல்களை சர்வசாதாரணமாக செய்வார்.
சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன், சனி 12-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் அதர்ம காரியங் களைச் செய்பவராக இருப்பார். திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள் இருக்கும்.கண்ணில் நோய் இருக்கும். தந்தையுடன் சுமாரான உறவு இருக்கும். பிள்ளைகளுடன் கருத்து வேறுபாடு இருக்கும். பல தவறான செயல்களைச் செய்து ஜாதகர் வாழ்க்கையை நடத்துவார்.
செல்: 98401 11534