சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு எங்கு இருந்தால் என்ன நடக்கும்.... (25.04.25)

/idhalgal/balajothidam/what-will-happen-if-sun-moon-mars-mercury-and-jupiter-are-located-250425

சூரியன், சந்திரன், புதன், குரு, சனி லக்னத்தில் இருந்தால், பிரச்சினைகள் அதிகமாக இருக்கும். அடிக்கடி கடன் வாங்க வேண்டிய நிலை இருக்கும். தரமற்ற பெண்களுடன் தொடர்பு இருக்கும். தைரியம் இருக்காது. வீண் சண்டை இருக்கும். முரட்டு குணம் இருக்கும். சராசரி வாழ்க்கை இருக்கும்.

சூரியன், சந்திரன், புதன், குரு, சனி 2-ஆம் பாவத்தில் இருந்தால், கோப குணம் இருக்கும். இளம்வயதில் பல கஷ்டங்கள் இருக்கும். சிலருக்கு படிப்பு விஷயத்தில் பிரச்சினை இருக்கும். சிலர் மருத்துவர்களாக இருப்பார்கள். சிலர் வெளியூரில் சென்று வாழ்வார்கள். சிலர் தத்து கொடுக்கப்பட்ட நபர்களாக இருப்பார்கள். நல்ல பேச்சாற்றல் இருக்கும். அதன் மூலம் பணம் சம்பாதிப்பார்கள்.காம வெறி இருக்கும்.

சூரியன்,

சூரியன், சந்திரன், புதன், குரு, சனி 3-ஆம் பாவத்தில் இருந்தால், தைரிய குணம் இருக்கும். வீண் பேச்சு இருக்கும். சிலர் வெளியூரில் வாழ்வார்கள். பல தொழில்களைச் செய்வார்கள். 45 வயதிற்குப் பிறகு, வாழ்க்கை நன்றாக இருக்கும். வாரிசுகளால் சந்தோஷம் கிடைக்கும்.

ss

சூரியன், சந்திரன், புதன், குரு, சனி 4-ஆம் பாவத்தில் இருந்தால், பூர்வீக சொத்தில் பிரச்சினை இருக்கும். தந்தையுடன் உறவு சரியாக இருக்காது. கடுமையான உழைப்பு இருக்கும். நல்ல வாரிசு அமையும். நல்ல மனைவி இருப்பாள். பெண் மோகம் அதிகமாக இருக்கும்.

சூரியன், சந்திரன், புதன், குரு, சனி 5-ஆம் பாவத்தில் இருந்தால், இளமையில் பல கஷ்டங்கள் இருக்கும். ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார். ஆனால், படிப்பிற்கேற்ற வேலை இருக்காது. பெண்களுக்கு கர்ப்பப்பையில் பிரச்சினை இருக்கும். சிலர் காவல்துறையில் இருப்பார்கள். சிலர் இராணுவத்தில் இருப்பார்கள். திருமண வாழ்க்கையில் சிறிய பிரச்சினைகள் இருக்கும்.

சூரியன், சந்திரன், புதன், குரு, சனி 6-ஆம் பாவத்தில் இருந்தால், பல நோய்கள் இருக்கும். இளம்வயதில் கஷ்டங்கள் இருக்கும். ஜாதகர் தைரியசா-யாக இருப்பார். அடிக்கடி பயணம் இருக்கும். அதன்மூலம் பண வரவு இருக்கும். மன நோய் இருக்கும். வாழ்க்கையில் பல சிக்கல்கள் இருக்கும்.

சூரியன், சந்திரன், புதன், குரு, சனி 7-ஆம் பாவத்தில் இருந்தால், சிலருக்கு மறுமணம் நடக்கும். திருமண வாழ்க்கையில் சிக்கல்கள் இருக்கும். தைரிய குணம் இருக்கும். கோப குணம் இருக்கும். பல தொழில்கள் இருக்கும். வாழ்க்கையின் பிற்பகுதியில் சந்தோஷம் இருக்கும். பெண் மோகம் இருக்கும்.

சூரியன், சந்திரன், புதன், குரு, சனி 8- ஆம் பாவத்தில் இருந்தால், உடல்நலத்தில் பாதிப்பு உண்டாகும். மனநோய் இருக்கும். அதிகமான சிந்தனைகள் உண்டாகும்.

ஜாதகர் சுத்தமாக இருக்க மாட்டார்.

வீண் பேச்சு இருக்கும். பணப் பிரச்சினை இருக்கும். அதற்காக கடன் வாங்கவேண்டிய நிலை உண்டாகும்.

சூரியன், சந்திரன், புதன், குரு, சனி 9-ஆம் பாவத்தில் இருந்தால், தந்தையுடன் சீரான உறவு இருக்காது. கடுமையான உழைப்பு இருக்கும். பல பெண்களுடன் தொடர்பு இருக்கும். ஜாதகர் நன்கு படித்தவராக இருப்பார். எனினும், வாழ்க்கையில் சந்தோஷம் இருக்காது. குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஜாதகருக்கு நல்ல உறவு இருக்காது.

சூரியன், சந்திரன், புதன், குரு, சனி 10-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் துணிச்சலான மனிதராக இருப்பார். இளம் வயதில் பல பிரச்சினைகள் இருக்கும். சிலர் துறவியைப்போல வாழ்வார்கள்.

சூரியன், சந்திரன், புதன், குரு, சனி 11-ஆம் பாவத்தில் இருந்தால், வாழ்க்கையில் பல பிரச்சினைகள் இருக்கும். தைரிய குணம் இருக்கும். பணம் சம்பாதிப்பதற்காக நிறைய கஷ்டப்பட வேண்டியதிருக்கும். பெண் மோகம் இருக்கும். ஜாதகர் வாழ்க்கையைப் பற்றிய அனுபவங்கள் உள்ளவராக இருப்பார்.

சூரியன், சந்திரன், புதன், குரு, சனி 12-ஆம் பாவத்தில் இருந்தால், செலவுகள் அதிகமாக இருக்கும். பெற்றோருடன் சரியான உறவு இருக்காது. தூக்கம் சரியாக வராது. இளம்வயதில் பல கஷ்டங்கள் இருக்கும். சிலர் வெளியூரில் சந்தோஷமாக வாழ்வார்கள்.

செல்: 98401 11534

bala250425
இதையும் படியுங்கள்
Subscribe