சூரியன், செவ்வாய், புதன், குரு, சனி லக்னத் தில் இருந்தால், உடல்நலம் கெடும். சரீரம் மெலிவாக இருக்கும். சிலர் துறவியாக இருப்பார் கள். பணவரவு குறைவாக இருக்கும். வாரிசு இருக்கும். பிள்ளைகளுடன் கருத்து வேறுபாடு இருக்கும்.

சூரியன், செவ்வாய், புதன், குரு, சனி 2-ஆம் பாவத்தில் இருந்தால், இளமையில் பல கஷ்டங்கள் இருக்கும்.

ss

குடும்பத்தில் பிரச்சினை இருக்கும். பூர்வீக சொத்தில் பிரச்சினை இருக்கும். வயிற்றில் நோய் இருக்கும். அதிக சிந்தனைகள் இருக்கும். 31 வயதிற்குப்பிறகு பண வரவு இருக்கும்.

சூரியன், செவ்வாய், புதன், குரு, சனி 3-ஆம் பாவத்தில் இருந்தால், தைரிய குணமிருக்கும்.

Advertisment

ஜாதகர் கடுமையாக உழைத்து பணம் சம்பாதிப்பார். செலவுகள் அதிகமாக இருக்கும். சகோதரர்களுடன் சுமாரான உறவு இருக்கும். வாரிசுகளுடன் உள்ள உறவில் பிரச்சினை இருக்கும். சிலருக்கு குறைவான படிப்பே இருக்கும்.

சூரியன், செவ்வாய், புதன், குரு, சனி 4-ஆம் பாவத்தில் இருந்தால், பூர்வீக சொத்தில் பிரச்சினை இருக்கும். தந்தையுடன் சுமாரான உறவு இருக்கும். படிப்பில் பிரச்சினை இருக்கும். ஜாதகர் கடுமையான உழைப்பாளியாக இருப்பார். பலரும் ஜாதகரை ஏமாற்றி இருப்பார்கள்.

சூரியன், செவ்வாய், புதன், குரு, சனி 5-ஆம் பாவத்தில் இருந்தால், துணிச்சல் குணமிருக்கும். படிப்பிற்கேற்ற வேலை இருக்காது. சிலர் ஆசிரியராக இருப்பார்கள். சிலர் இராணுவத்தில் இருப்பார்கள். சிலர் வெளியூரில் அல்லது வெளிநாட்டில் பணம் சம்பாதிப்பார்கள்.

Advertisment

சூரியன், செவ்வாய், புதன், குரு, சனி 6-ஆம் பாவத்தில் இருந்தால், இல்வாழ்க்கையில் பிரச்சினை இருக்கும். காலில் பிரச்சினை இருக்கும். சிலருக்கு காலில் ஊனம் இருக்கும். பண வரவு இருக்கும். கடவுள் நம்பிக்கை இருக்கும். பித்த நோய் இருக்கும். பிள்ளைகளுடன் கருத்து வேறுபாடு இருக்கும்.

சூரியன், செவ்வாய், புதன், குரு, சனி 7-ஆம் பாவத்தில் இருந்தால், இல்வாழ்க்கையில் சிக்கல்கள் இருக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும். மனைவியுடன் சண்டை நடக்கும். சந்தோஷம் குறைவாக இருக்கும். பெண்களுக்கு வயிற்றில் பிரச்சினை இருக்கும். பூர்வீக சொத்தில் சிக்கல்கள் இருக்கும்.

சூரியன், செவ்வாய், புதன், குரு, சனி 8-ஆம் பாவத்தில் இருந்தால், வயிற்றில் பிரச்சினை இருக்கும். சிலருக்கு விபத்து நடக்கும். சிலருக்கு ஆபரேஷன் நடக்கும். சிலர் ஆறு அல்லது குளத்திற்கு அருகில் வாழ்வார்கள். நீரில் கண்டம் இருக்கும். பண வரவு இருக்கும். செலவுகள் அதிகமாக இருக்கும்.

சூரியன், செவ்வாய், புதன், குரு, சனி 9-ஆம் பாவத்தில் இருந்தால், நல்ல படிப்பு இருக்கும். சிலர் விவசாயியாக இருப்பார்கள். கடுமையாக உழைத்து பணம் சம்பாதிப்பார்கள். மனைவியுடன் சண்டை இருக்கும். தந்தையால் குறைவான சந்தோஷமே இருக்கும். சிலருக்கு தந்தை இருக்கமாட்டார். சிலர் தொழிலை மாற்றிக்கொண்டே இருப்பார்கள்.

சூரியன், செவ்வாய், புதன், குரு, சனி 10-ஆம் பாவத்தில் இருந்தால், சிலர் குருவாக இருப்பார்கள். சிலர் துறவியாக இருப்பார்கள். சிலர் அரசியல் வாதியாக இருப்பார்கள். மனைவியால் சந்தோஷம் இருக்காது. பண வசதி இருக்கும். தைரிய குணம் இருக்கும்.

சூரியன், செவ்வாய், புதன், குரு, சனி 11-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் பணக்காரராக இருப்பார். வயிற்றில் நோய் இருக்கும். மன நோய் இருக்கும். பெண்களுக்கு கர்ப்பப் பையில் பிரச்சினை இருக்கும். பூர்வீக சொத்தில் சிக்கல்கள் இருக்கும். பித்த நோய் இருக்கும். வயிற்றில் உஷ்ணம் அதிகமாக இருக்கும்.

சூரியன், செவ்வாய், புதன், குரு, சனி 12-ஆம் பாவத்தில் இருந்தால், மனதில் சந்தோஷம் இருக்காது. சிலர் ஏழையாக பிறந்து, கடுமையாக உழைத்து பணம் சம்பாதிப்பார்கள். சிலருக்கு தாமதமாக திருமணம் நடக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும். சிலர் வெளியூரில் வாழ்வார்கள். சிலர் பிறரை குறை கூறிக்கொண்டே இருப்பார்கள்.

செல்: 98401 11534