சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், சனி லக்னத் தில் இருந்தால், உடல்நலம் பாதிக்கப்படும். வயிற்றில் நோய் இருக்கும். வீண் செலவுகள் இருக்கும். கோப குணம் இருக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும். திருமண வாழ்க்கையில் பல பிரச்சினைகள் இருக்கும்.

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், சனி 2-ஆம் பாவத்தில் இருந்தால், இளம்வயதில் பல கஷ்டங்கள் இருக்கும். தைரிய குணம் இருக்கும். ஜாதகர் கடுமையான உழைப்பாளியாக இருப்பார். சிலருக்கு தந்தையால் குறைவான சந்தோஷமே கிடைக்கும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் செலுத்தவேண்டும். சகோதரர்களுடன் சுமாரான உறவே இருக்கும்.

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், சனி 3-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் வெளியூரில் சென்று வாழ்வார். அங்கு பெயர், புகழ் கிடைக்கும். ஜாதகர் கடுமை யாக உழைப்பார். சுவாச நோய் இருக்கும். வயிற்றில் பிரச்சினை இருக்கும். சகோதரர்களுடன் சுமாரான உறவு இருக்கும். சிலர் தொழிலதிபர்களாக இருப்பார்கள். சிலர் எந்திரங்களை வைத்து பணி புரிவார்கள்.

s

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், சனி 4-ஆம் பாவத்தில் இருந்தால், திருமண விஷயத்தில் தடங்கல்கள் இருக்கும். இளம் வயதில் பல கஷ்டங்கள் இருக்கும். சிலர் கட்டடம் கட்டும் நிபுணர்களாக இருப்பார்கள். சிலர் மேஸ்திரியாக இருப்பார்கள். சிலர் ரியல் எஸ்டேட் துறையில் இருப்பார்கள். சிலர் விவசாயியாக இருப்பார்கள். சிலர் வெளியூர் அல்லது வெளிநாட்டில் வாழ்வார்கள்.

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், சனி 5-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரியசா-யாக இருப்பார். படிப்பிற்கேற்ற வேலை இருக்காது. வயிற்றில் அடிக்கடி நோய் வரும். சிலர் இராணுவத்தில் இருப்பார்கள். சிலர் காவல் துறையில் இருப்பார்கள்.

Advertisment

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், சனி 6-ஆம் பாவத்தில் இருந்தால், துணிச்சல் குணம் இருக்கும். திருமண விஷயத்தில் சிக்கல்கள் இருக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும். கணவன்- மனைவி உறவில் பிரச்சினைகள் இருக்கும். சிலருக்கு விபத்து நடக்கும். நல்ல பண வசதி இருக்கும். பூர்வீக சொத்தில் பிரச்சினை இருக்கும்.

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், சனி 7-ஆம் பாவத்தில் இருந்தால், திருமண விஷயத்தில் தடைகள் இருக்கும். பூர்வீக சொத்தில் பிரச்சினைகள் இருக்கும். தைரிய குணம் இருக்கும். ஜாதகருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருக்கும். சிலருக்கு வாழ்க்கையில் பல சிக்கல்கள் இருக்கும். மனைவிக்கு உடல்நல பாதிப்பு இருக்கும்.

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், சனி 8-ஆம் பாவத்தில் இருந்தால், உடல் நலம் பாதிக்கப்படும். திருமண விஷயத்தில் சிக்கல்கள் இருக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும். கோப குணம் இருக்கும். சிலர் வெளியூரில் வாழ்வார்கள். வயிற்றில் நோய் இருக்கும். வாரிசுகளுடன் சரியான உறவு இருக்காது. தோல் நோய் இருக்கும்.

Advertisment

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், சனி 9-ஆம் பாவத்தில் இருந் தால், சிலர் துறவியாக இருப்பார் கள். சிலருக்கு கல் குவாரி இருக்கும்.

ஜாதகருக்குத் தந்தையுடன் சுமாரான உறவே இருக்கும். ஜாதகர் பலசா-யாக இருப்பார். அதர்மவாதியாக இருப்பார். பெண்களுடன் தொடர்பு இருக்கும். பூர்வீக சொத்தில் பிரச்சினை இருக்கும்.

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், சனி 10-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் துணிச்சல் குணம் படைத்தவராக இருப்பார். கோபம் வரும். சிலர் அரசியல் வாதி யாக இருப்பார்கள். குடும்பத்தில் உறவு சரியாக இருக்காது. ஜாதகர் அதர்ம பாதையில் பயணிப்பார்.

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், சனி 11-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரியமானவராக இருப்பார். பணக்காரராக இருப்பார். இளம்வயதில் பல கஷ்டங்கள் இருக்கும். பெண் களுடன் உறவு இருக்கும். சிலருக்கு தந்தையுடன் சுமாரான உறவே இருக்கும். பெண்களுக்கு கர்ப்பப் பையில் பிரச்சினை இருக்கும்.

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், சனி 12-ஆம் பாவத்தில் இருந் தால், வீண் செலவுகள் இருக்கும். மன நோய் இருக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும். சிலருக்கு திருமணமே நடக்காது. சிலர் வெளியூரில் சென்று வாழ்வார்கள். சிலருக்கு விபத்து காரணமாக கா-ல் ஊனம் இருக்கும்.

செல்: 98401 11534