சூரியன், சந்திரன், புதன், குரு, சுக்கிரன் லக்னத்தில் இருந்தால், ஜாதகருக்கு பெயர், புகழ் இருக்கும். சாதுர்ய குணம் இருக்கும். பேச்சுத் திறமை இருக்கும். ஜாதகருக்கு செல்லும் இடங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். இல்வாழ்க்கையில் சந்தோஷம் இருக்கும். நல்ல மனைவி அமைவாள்.
சூரியன், சந்திரன், புதன், குரு, சுக்கிரன் 2-ஆம் பாவத்தில் இருந்தால், இளமையில் கஷ்டங்கள் இருக்கும். ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார். கடுமையான உழைப்பாளியாக இருப்பார். கண்ணில் நோய் இருக்கும். நல்ல பேச்சாற்றல் இருக்கும். பிறரை ஈர்க்கும் சக்தி இருக்கும்.
சூரியன், சந்திரன், புதன், குரு, சுக்கிரன் 3-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். பல தொழில்கள் தெரிந்தவராக இருப்பார். நிறைய படித்தவராக இருப்பார். அலைந்து பணம் சம்பாதிப்பார். அழகான மனைவி இருப்பாள். ஜாதகர் தன் சொந்த ஊரை விட்டு வெளியே சென்று வாழ்வார். அங்கு பெயர், புகழுடன் இருப்பார்.
சூரியன், சந்திரன், புதன், குரு, சுக்கிரன் 4-ஆம் பாவத்தில் இருந்தால், சந்தோஷமான வாழ்க்கை இருக்கும். வீடு, மனை, வாகனம் இருக்கும். தந்தை, தாயால் சந்தோஷம் இருக்கும். ஜாதகர் நல்ல பேச்சாற்றல் கொண்டவராக இருப்பார். தைரியசாலியாக இருப்பார். பல வாகனங்கள் இருக்கும். நல்ல வாரிசு இருக்கும்.
சூரியன், சந்திரன், புதன், குரு, சுக்கிரன் 5-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் நன்கு படித்தவராக இருப்பார். பெரிய அரசு பதவியில் இருப்பார். சிலர் சிறந்த எழுத்தாளராக இருப்பார்கள். சிலர் சிறந்த நடிகர்களாக இருப்பார்கள். சிலர் அரசியலில் பெயர், புகழுடன் இருப்பார்கள். நல்ல வாரிசு இருக்கும்.
சூரியன், சந்திரன், புதன், குரு, சுக்கிரன் 6-ஆம் பாவத்தில் இருந்தால், தலைவலி இருக்கும். வயிற்றில் பிரச்சினை இருக்கும்.
ஜாதகர் பணக்காரராக இருப்பார். பெண் மோகம் இருக்கும். சிலருக்கு கள்ளத் தொடர்பு இருக்கும். காலில் அடிபடும். தைரிய குணம் இருக்கும்.
சூரியன், சந்திரன், புதன், குரு, சுக்கிரன் 7-ஆம் பாவத்தில் இருந்தால், அழகான மனைவி இருப்பாள். பண வசதி இருக்கும். நல்ல வாரிசு இருக்கும். திருமண விஷயத்தில் பல தடங்கல்கள் இருக்கும். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். ஜாதகர் பல தொழில் களைச் செய்வார். அதன்மூலம் பெயர், புகழ் கிடைக்கும்.
சூரியன், சந்திரன், புதன், குரு, சுக்கிரன் 8-ஆம் பாவத்தில் இருந்தால், இளமையில் உடல்நலம் கெடும். பல நோய்கள் இருக்கும். வயிற்றில் பிரச்சினை இருக்கும். சுவாசநோய் இருக்கும். 24 வயதிற்குப்பிறகு, நல்ல பண வரவு இருக்கும். ஜாதகர் பணக்காரராக இருப்பார். தைரியசாலியாக இருப்பார். ஜாதகர் பல விஷயங்களைத் தெரிந்தவராக இருப்பார். இல் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். ராஜயோகம் இருக்கும்.
சூரியன், சந்திரன், புதன், குரு, சுக்கிரன் 9-ஆம் பாவத்தில் இருந்தால், பூர்வீக சொத்து கிடைக்கும். பெயர், புகழ் இருக்கும். ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார்.
தைரியசாலியாக இருப்பார். தர்மச்செயல்களில் ஆர்வம் இருக்கும். அதற்காக செல வழிப்பார். கம்பீரமான மனிதராக இருப்பார்.
சூரியன், சந்திரன், புதன், குரு, சுக்கிரன் 10-ஆம் பாவத் தில் இருந்தால், சிலர் நீதிபதி யாக இருப்பார்கள். சிலர் அரசிய லில் பெரிய பதவியில் இருப்பார் கள். சிலர் பெரிய மனநல நிபுணராக இருப்பார்கள். சிலர் கதாசிரியராக இருப்பார் கள். சிலர் குருநாதராக இருப்பார்கள். பெயர், புகழ் இருக்கும். நல்ல வாரிசு இருக் கும். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.
சூரியன், சந்திரன், புதன், குரு, சுக்கிரன் 11-ஆம் பாவத்தில் இருந்தால், பூர்வீக சொத்து கிடைக்கும். பண வரவு இருக்கும். ஜாதகர் வெளியூரில் சென்று வாழ்வார். நல்ல வாரிசு இருக்கும். தந்தையுடன் நல்ல உறவு இருக்கும். ஜாதகருக்கு நல்ல பேச்சாற்றல் இருக்கும்.
சூரியன், சந்திரன், புதன், குரு, சுக்கிரன் 12-ஆம் பாவத்தில் இருந்தால், ஆடம் பரச் செயல்கள் இருக்கும். கம்பீரமான தோற்றம் இருக் கும். இளமையில் பல கஷ்டங் கள் இருக்கும். சிலர் வெளியூ ரில் சென்று வாழுவார்கள். சந்தோஷமான வாழ்க்கை இருக்கும். சிலர் பயணம் செய்து பணம் சம்பாதிப் பார்கள்.
செல்: 98401 11534