சூரியன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் லக்னத்தில் இருந்தால், நல்ல பணவசதி இருக்கும். தைரிய குணம் இருக்கும். பல பொருட்கள் சொந்தமாக இருக்கும். கம்பீரமான தோற்றம் இருக்கும். பெயர், புகழ் இருக்கும். பல பணியாட்கள் இருப்பார்கள்.
சூரியன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் 2-ஆம் பாவத்தில் இருந்தால், இளமையில் கஷ்டங்கள் இருக்கும். ஜாதகர் கடுமையாக பேசுவார். சூழலுக்கேற்றபடி பேசுவார். 25 வயதில் சம்பாதிக்க ஆரம்பித்துவிடுவார். நிறைய படித்தவராக இருப்பார். நல்ல வாரிசு இருக்கும். அழகான நல்ல மனைவி இருப்பாள். தைரிய குணம் இருக்கும். ஜாதகர் நகைகளைச் சேர்த்து வைத்திருப்பார்.
சூரியன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் 3-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். வெள
சூரியன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் லக்னத்தில் இருந்தால், நல்ல பணவசதி இருக்கும். தைரிய குணம் இருக்கும். பல பொருட்கள் சொந்தமாக இருக்கும். கம்பீரமான தோற்றம் இருக்கும். பெயர், புகழ் இருக்கும். பல பணியாட்கள் இருப்பார்கள்.
சூரியன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் 2-ஆம் பாவத்தில் இருந்தால், இளமையில் கஷ்டங்கள் இருக்கும். ஜாதகர் கடுமையாக பேசுவார். சூழலுக்கேற்றபடி பேசுவார். 25 வயதில் சம்பாதிக்க ஆரம்பித்துவிடுவார். நிறைய படித்தவராக இருப்பார். நல்ல வாரிசு இருக்கும். அழகான நல்ல மனைவி இருப்பாள். தைரிய குணம் இருக்கும். ஜாதகர் நகைகளைச் சேர்த்து வைத்திருப்பார்.
சூரியன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் 3-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். வெளியூரில் சென்று பணம் சம்பாதிப்பார். ராஜயோகம் இருக்கும். பல தொழில்களைச் செய்வார். பெரிய தொழிலதிபராக இருப்பார். சிலர் புகழ்பெற்ற மருத்துவர்களாக இருப்பார்கள். நல்ல வாரிசு இருக்கும். சொந்த வீடு, வாகனம் இருக்கும். 32 வயதிற்குப்பிறகு, வாழ்க்கை நன்றாக இருக்கும்.
சூரியன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் 4-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் துணிச்சல் குணமுள்ளவராக இருப்பார். பூர்வீக சொத்தில் பிரச்சினை இருக்கும். வீடு, மனை, வாகனம் இருக்கும். சிலருக்கு மறுமணம்
நடக்கும். சிலருக்கு திருமண விஷயத்தில் தடங்கல்கள் இருக்கும். பணவசதி இருக்கும். நல்ல வாரிசு இருக்கும். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.
சூரியன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் 5-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். நிறைய படித்தவராக இருப்பார். அரசியலில் நல்ல பதவியில் இருப்பார். படிப்படியாக முன்னேறுவார். நல்லவாரிசு இருக்கும். கம்பீரமான தோற்றம் இருக்கும். ராஜயோகம் இருக்கும்.
சூரியன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் 6-ஆம் பாவத்தில் இருந்தால், திருமண விஷயத்தில் சிக்கல்கள் இருக்கும். கோப குணம் இருக்கும். ரத்தம் சம்பந்தப்பட்ட நோய் இருக்கும். நல்ல பேச்சாற்றல் இருக்கும். பயணங்கள் இருக்கும். பணவரவு இருக்கும்.
சூரியன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் 7-ஆம் பாவத்தில் இருந்தால், துணிச்சல் குணம் இருக்கும். கோபம் வரும். அழகான மனைவி இருப்பாள். சிலருக்கு மறுமணம் நடக்கும். பல தொழில்கள் இருக்கும். பணவரவு இருக்கும். நல்ல வாரிசு இருக்கும்.
சூரியன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் 8-ஆம் பாவத்தில் இருந்தால், இளமையில் உடல்நலம் பாதிக்கப்படும். விபத்துகள் நடக்கும். வீடு, மனை, வாகனம் இருக்கும். ஜாதகர் வெளியூரில் பெயர், புகழுடன் இருப்பார். நல்ல பண வசதி இருக்கும்.
சூரியன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் 9-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். கடுமையாக உழைப்பார். முதுகுத்தண்டில் சிறிய பிரச்சினை இருக்கும். பூர்வீக சொத்து இருக்கும். தர்ம காரியங்களில் ஈடுபாடு இருக்கும். ஆணவ குணமிருக்கும்.
சூரியன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் 10-ஆம் பாவத்தில் இருந்தால், சிலர் அரசியல்வாதியாக இருப்பார்கள். சிலர் புகழ் பெற்ற டாக்டர்களாக இருப்பார்கள். ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார். துணிச்சல் குணமுள்ளவராக இருப்பார். அவ்வப்போது உடல்நல பாதிப்பு இருக்கும். நல்ல சம்பாத்தியம் இருக்கும். சொத்து இருக்கும்.
சூரியன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் 11-ஆம் பாவத்தில் இருந்தால், ராஜயோகம் இருக்கும். ஜாதகர் பணக்காரராக இருப்பார். பயணம் இருக்கும். கடவுள் நம்பிக்கை இருக்கும். ஜாத கருக்கு தன் தந்தையின் மீது அளவற்ற பாசம் இருக்கும். நல்லவாரிசு இருக்கும்.
சூரியன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் 12-ஆம் பாவத்தில் இருந்தால், சிலருக்கு தாமதமாக திருமணம் நடக்கும்.
ஜாதகர் நல்ல பண வசதியுடன் இருப்பார். கோப குணம் இருக்கும். சிலர் வெளியூரில் வாழ்வார்கள். 32 வயதிற்குப் பிறகு, சம்பாத்தியம் இருக்கும். ஜாதகர் சாந்தமாக பேசமாட்டார். சூழலுக் கேற்றபடி மாறக்கூடிய பச்சோந்தி யாக இருப் பார்.
செல்: 98401 11534