சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன் லக்னத்தில் இருந்தால், ஜாதகர் அதிகமாக பொய் பேசுவார். இரக்க குணம் இருக்கும். பெண் மோகம் இருக்கும். இல்வாழ்க்கையில் பிரச்சினை இருக்கும். சிலருக்கு தாமதமாக திருமணம் நடக்கும். வாரிசு வருவதில் பிரச்சினை இருக்கும்.
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன் 2-ஆம் பாவத்தில் இருந்தால், இளம்வயதில் கஷ்டங்கள் இருக்கும். பணவரவு குறைவாக இருக்கும். சிரமப் பட்டு படிக்க வேண்டியதிருக்கும். சிலர் தத்துப் பிள்ளைகளாக வளர்வார்கள். வயிற்றில் நோய் இருக்கும். சிலருக்கு கல்லீரலில் பாதிப்பு இருக்கும். சந்தோஷமான வாழ்க்கை இருக்கும்.
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன் 3-ஆம் பாவத்தில் இருந்தால், தைரிய குணம்
இருக்கும். ஜாதகர் சுயமாக சம்பாதிப்பார். கடுமை யாக உழைப்பார். வெளியூரில் சென்று பணம் சம்பாதிப்பார். நல்ல வாரிசு இருக்கும். பெண் மோகம் இருக்கும். சொந்த வீடு, வாகனம் இருக்கும்.
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன் 4-ஆம் பாவத்தில் இருந்தால், கோப குணம் இருக்கும். சிலருக்கு தாமதமாக திருமணம் நடக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும். சிலர் இளம்வயதில் காதலில் ஈடுபட்டு, பிரச்சினையில் மாட்டிக்கொள்வார்கள். ஆணவ குணம் இருக்கும். வீண்செலவுகள் இருக்கும். மனைவியால் சந்தோஷம் இருக்காது.
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன் 5-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார். கோபம் வரும். வாரிசு இருக்கும். பணவரவு இருக்கும். பதவி இருக்கும். ஜாதகர் பிறரை மதிக்கமாட்டார். நிறைய பொய் பேசுவார்.
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன் 6-ஆம் பாவத்தில் இருந்தால், அடிக்கடி பயணம் இருக்கும். இல்வாழ்க்கையில் பிரச்சினை இருக்கும். ஜாதகர் வெளியூர் அல்லது வெளிநாட்டில் இருந்து பணம் சம்பாதிப்பார். சிலர் கூலி தொழிலாளிகளாக இருப்பார்கள். சிலருக்கு தோல் வியாதி இருக் கும். அதிக செலவுகள் இருக்கும்.
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன் 7-ஆம் பாவத்தில் இருந்தால், திருமண வாழ்க்கையில் சிக்கல்கள் இருக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும். சிலருக்கு கள்ளத்தொடர்பு இருக்கும். ஜாதகர் பல தொழில்களைச் செய்வார். தைரிய சாலியாக இருப்பார். சூழ்நிலைக்கேற்றபடி பேசுவார். ஆணவ குணம் இருக்கும்.
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன் 8-ஆம் பாவத்தில் இருந்தால், கோப குணம் இருக்கும். இல்வாழ்க்கையில் பிரச்சினைகள் இருக்கும். ஜாதகர் அதிகமாக பேசுவார். வயிற்றில் பிரச்சினை இருக்கும். சிலர் வெளியூரில் சந்தோஷமாக வாழ்வார்கள். சிலர் போதைக்கு அடிமையாக இருப்பார்கள். சிலர் ஓவியராக இருப்பார்கள். சிலர் கலைஞர்களாக இருப்பார்கள்.
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன் 9-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் பணக்காரராக இருப்பார். தர்மசீலராக இருப்பார். வீண் செலவுகள் இருக்கும். முதுகுத்தண்டில் நோய் இருக்கும். ஜாதகருக்குப் பிறரை ஏமாற்றும் குணம் இருக்கும். மற்றவர் களின் பணத்தை அபகரிக்க நினைப்பார்.
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன் 10-ஆம் பாவத்தில் இருந்தால், துணிச்சல் குணம் இருக்கும். ஜாதகர் நல்ல பதவியில் இருப்பார். பணக்காரராக இருப்பார். மற்றவர் களை மதிக்கமாட்டார். பெண் மோகம் அதிகமாக இருக்கும். சொந்தவீடு, வாகனம் இருக்கும். நல்ல வாரிசு இருக்கும்.
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன் 11-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். நல்ல பணவசதி இருக்கும். இளம்வயதில் படிப்பு விஷயத்தில் தடங்கல்கள் இருக்கும். 14 வயதிற்குப்பிறகு, படிப்பு நன்றாக நடக்கும். 36 வயதிற்குப்பிறகு, வாழ்க்கை நன்றாக இருக்கும். சிலருக்கு தோல் நோய் இருக்கும். ஜாதகர் சுயமாக சம்பாதித்து, முன்னுக்கு வருவார். பொய் பேசுவதில் மன்னராக இருப்பார்.
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன் 12-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் துணிச்சல் குணம் படைத்தவராக இருப்பார். சிலருக்கு மறுமணம் நடக்கும். பெண் மோகம் இருக்கும். வீண்செலவுகள் இருக்கும். அடிக்கடி பயணம் இருக்கும். சிலர் போதைக்கு அடிமையாக இருப் பார்கள். சிலருக்கு தந்தையால் சந்தோஷம் இருக்காது. சிலர் வெளியூர் அல்லது வெளிநாட்டில் வாழ்வார்கள்.
செல்: 98401 11534