சூரியன், சந்திரன், செவ்வாய், சுக்கிரன், சனி லக்னத்தில் இருந்தால், கோப குணம் இருக்கும். ஜாதகர் அனைவரிடமும் சண்டைபோடுவார். பணம் குறைவாக வரும். தர்மச் செயல்களில் அதிக ஈடுபாடு இருக்கும். இளமையில் பல கஷ்டங்கள் இருக்கும்.
சூரியன், சந்திரன், செவ்வாய், சுக்கிரன், சனி 2-ஆம் பாவத்தில் இருந்தால், குடும்பத்தில் பல கஷ்டங்கள் இருக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும். இல்வாழ்க்கையில் சந்தோஷம் இருக்காது. 23 வயதிற்குப்பிறகு, பணவரவு இருக்கும். பல இடங்களுக்கு ஜாதகர் பயணிப்பார். பல தொழில் களைச் செய்வார். கண்ணில் நோய் இருக்கும். ஜாதகர் தேவையற்றதைப் பேசுவார்.
சூரியன், சந்திரன், செவ்வாய், சுக்கிரன், சனி 3-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் வெளியூரில் சென்று தொழில் செய்வார். இளமைய
சூரியன், சந்திரன், செவ்வாய், சுக்கிரன், சனி லக்னத்தில் இருந்தால், கோப குணம் இருக்கும். ஜாதகர் அனைவரிடமும் சண்டைபோடுவார். பணம் குறைவாக வரும். தர்மச் செயல்களில் அதிக ஈடுபாடு இருக்கும். இளமையில் பல கஷ்டங்கள் இருக்கும்.
சூரியன், சந்திரன், செவ்வாய், சுக்கிரன், சனி 2-ஆம் பாவத்தில் இருந்தால், குடும்பத்தில் பல கஷ்டங்கள் இருக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும். இல்வாழ்க்கையில் சந்தோஷம் இருக்காது. 23 வயதிற்குப்பிறகு, பணவரவு இருக்கும். பல இடங்களுக்கு ஜாதகர் பயணிப்பார். பல தொழில் களைச் செய்வார். கண்ணில் நோய் இருக்கும். ஜாதகர் தேவையற்றதைப் பேசுவார்.
சூரியன், சந்திரன், செவ்வாய், சுக்கிரன், சனி 3-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் வெளியூரில் சென்று தொழில் செய்வார். இளமையில் கடுமையான வாழ்க்கை இருக்கும். திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். ஜாதகர் மனைவியிடம் கோபமாக பேசுவார். வாரிசுகளுடன் கருத்து வேறுபாடு இருக்கும்.
சூரியன், சந்திரன், செவ்வாய், சுக்கிரன், சனி 4-ஆம் பாவத்தில் இருந்தால், பூர்வீக சொத்தில் பிரச்சினை இருக்கும். சிலருக்கு சொத்து இருக்காது. திருமண வாழ்க்கையில் பல சிக்கல்கள் இருக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும்.
தாய்க்கு உடல்நல பாதிப்பு உண்டாகும். சிலருக்கு விபத்து நடக்கும்.
சூரியன், சந்திரன், செவ்வாய், சுக்கிரன், சனி 5-ஆம் பாவத்தில் இருந்தால், வயிற்றில் பிரச்சினை இருக்கும். படிப்பு விஷயத்தில் பிரச்சினை இருக்கும். ஜாதகர் கடுமையான உழைப்பாளியாக இருப்பார். ஒரு வாரிசு இருக்கும். பணவரவு இருக்கும். ஜாதகர் அனைவரிடமும் வாதம் செய்வார். உட-ல் தழும்பு இருக்கும்.
சூரியன், சந்திரன், செவ்வாய், சுக்கிரன், சனி 6-ஆம் பாவத்தில் இருந்தால், திருமண வாழ்க்கையில் பிரச்சினை இருக்கும். பெண் மோகம் இருக்கும். அதன்காரணமாக வீண்செலவுகள் உண்டாகும். ஜாதகர் அதர்ம செயல்களில் ஈடுபடுவார். கோப குணம் இருக்கும். கண்ணில் நோய் இருக்கும். ஆடம்பர செலவுகள் இருக்கும்.
சூரியன், சந்திரன், செவ்வாய், சுக்கிரன், சனி 7-ஆம் பாவத்தில் இருந்தால், திருமண விஷயத்தில் தடங்கல்கள் இருக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும். மனம் சரியாக இருக்காது. கோப குணம் இருக்கும். வீண் விவாதம் இருக்கும். ஜாதகர் அதர்ம செயல்களைச் செய்வார்.
சூரியன், சந்திரன், செவ்வாய், சுக்கிரன், சனி 8-ஆம் பாவத்தில் இருந்தால், பல நோய்கள் இருக்கும். விபத்து நடக்கும். முன்னோர்களின் சாபம் இருக்கும். பூர்வீக சொத்தில் பிரச்சினை இருக்கும். ஜாதகர் வெளியூரில் சென்று பணம் சம்பாதிப்பார். மனைவியுடன் விவாதம் செய்வார். வாக்கு சுத்தம் இருக்காது.
சூரியன், சந்திரன், செவ்வாய், சுக்கிரன், சனி 9-ஆம் பாவத்தில் இருந்தால், தந்தையுடன் ஜாதகருக்கு விவாதம் இருக்கும். படிப்பிற்கும் தொழிலுக்கும் சம்பந்தம் இருக்காது. முதுகுத் தண்டில் பிரச்சினை இருக்கும். மனைவியுடன் சந்தோஷம் இருக்காது. வாரிசுகள் வெளியே சென்று வாழ்வார்கள்.
சூரியன், சந்திரன், செவ்வாய், சுக்கிரன், சனி 10-ஆம் பாவத்தில் இருந்தால், வாழ்க்கையின் முற்பகுதியில் பல சிக்கல்கள் இருக்கும். சிலர் அரசியல்வாதியாக இருப்பார்கள். ஜாதகர் அனைவரிடமும் வாதம் செய்வார். தந்தையுடன் கருத்து வேறுபாடு இருக்கும். சிலருக்கு தந்தை இருக்கமாட்டார். ஜாதகர் கடுமையாக உழைத்து, பணம் சம்பாதிப்பார். செலவுகள் அதிகமாக இருக்கும்.
சூரியன், சந்திரன், செவ்வாய், சுக்கிரன், சனி 11-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் நேர்மையற்ற வழியில் பணம் சம்பாதிப்பார். பெண்களுக்கு கர்ப்பப் பையில் பிரச்சினை இருக்கும். அதிகமான சிந்தனைகள் இருக்கும். அதனால், மனதில் பிரச்சினை இருக்கும். அடிக்கடி பயணம் இருக்கும். அதன்மூலம் பணம் வரும்.
சூரியன், சந்திரன், செவ்வாய், சுக்கிரன், சனி 12-ஆம் பாவத்தில் இருந்தால், குடும்ப வாழ்க்கையில் பல பிரச்சினைகள் இருக்கும். பல செலவுகள் இருக்கும்.
பணத்தைச் சேமிக்க முடியாது. மன கஷ்டம் இருக்கும். பூர்வீக சொத்தில் பிரச்சினை இருக்கும். உடல்நலம் கெடும்.
செல்: 98401 11534