சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு எங்கு இருந்தால் என்ன நடக்கும்.... (07.03.25)

/idhalgal/balajothidam/what-will-happen-if-sun-moon-mars-mercury-and-jupiter-are-located-070325

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு லக்னத்தில் இருந்தால், கோப குணம் இருக்கும். மனைவியுடன் விவாதம் இருக்கும். மனைவி தன் கணவனுடன் சண்டை போடுவாள்.

மோசமான பெண்ணாக இருப்பாள். ஜாதகரும் கெட்ட மனிதராக இருப்பார். பிறரை ஏமாற்ற நினைப்பார்.

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு 2-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் கோபக்காரராக இருப்பார். இளமை யில் பல பிரச்சினைகள் இருக்கும். பேச்சாற்றல் இருக்கும்.

அதன்மூலம் வருமானம் வரும். குடும்பத்தில் விவாதம் இருக்கும். சகோதரர்களுடன் பிரச்சினை இருக்கும். நல்ல வாரிசு அமையும்.

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு 3-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் சுய சம்பாத்தியத்தின்மூலமாக பெரிய மனிதராக ஆவார். வெளியூரில் சென்று வாழ

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு லக்னத்தில் இருந்தால், கோப குணம் இருக்கும். மனைவியுடன் விவாதம் இருக்கும். மனைவி தன் கணவனுடன் சண்டை போடுவாள்.

மோசமான பெண்ணாக இருப்பாள். ஜாதகரும் கெட்ட மனிதராக இருப்பார். பிறரை ஏமாற்ற நினைப்பார்.

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு 2-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் கோபக்காரராக இருப்பார். இளமை யில் பல பிரச்சினைகள் இருக்கும். பேச்சாற்றல் இருக்கும்.

அதன்மூலம் வருமானம் வரும். குடும்பத்தில் விவாதம் இருக்கும். சகோதரர்களுடன் பிரச்சினை இருக்கும். நல்ல வாரிசு அமையும்.

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு 3-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் சுய சம்பாத்தியத்தின்மூலமாக பெரிய மனிதராக ஆவார். வெளியூரில் சென்று வாழ்ந்து, பணத்தைச் சம்பாதிப்பார். ஆண்- பெண் வாரிசுகள் இருப்பார்கள். ஜாதகர் தான்தான் பெரிய ஆள் என்ற நினைப்புடனே எப்போதும் இருப்பார். தலைவலி இருக்கும்.

ss

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு 4-ஆம் பாவத்தில் இருந்தால், வீட்டில் சண்டை இருக்கும். கோபம் வரும்.

அலைச்சல்கள் இருக்கும். ஜாதகர் தேவையற்ற வேலைகளைச் செய்வார். முன்னோரின் சம்பாத்தியத்தை வீண் செய்வார். சிலருக்கு மறுமணம் நடக்கும்.

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு 5-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் அரசாங்க பணியில் இருப்பார். இளமையில் கஷ்டங்கள் இருக்கும். சிலர் பெரிய பதவிகளில் இருப்பார்கள். ஆடம்பரமாக வாழ்வார்கள். ராஜயோகம் இருக்கும். நல்ல வாரிசு இருக்கும். நல்ல பண வரவு இருக்கும்.

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு 6-ஆம் பாவத்தில் இருந்தால், திருமண வாழ்க்கையில் சில பிரச்சினைகள் இருக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும். ஜாதகர் பணக்காரராக இருப்பார். பலசாலியாக இருப்பார். நிறைய படித்தவராக இருப்பார். தைரியசாலியாக இருப்பார்.

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு 7-ஆம் பாவத்தில் இருந்தால், திருமண வாழ்க்கையில் பிரச்சினை இருக்கும். கோப குணம் இருக்கும். ஜாதகர் வீண் சண்டை போடுவார். சிலருக்கு மறுமணம் நடக்கும். சிலருக்கு கள்ளத்தொடர்பு இருக்கும். ஜாதகர் நன்கு படித்தவராக இருப்பார். வீண் செலவுகள் இருக்கும்.

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு 8-ஆம் பாவத்தில் இருந்தால், இளமையில் உடல்நலம் பாதிக்கப்படும். வயிற்றில் நோய் இருக்கும். ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். கோபம் வரும். ஜாதகர் வெளியூரில் சென்று, பணம் சம்பாதிப்பார். யாருடனும் பழக மாட்டார்.

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு 9-ஆம் பாவத்தில் இருந்தால், துணிச்சல் குணம் இருக்கும். பணம் பல வழிகளிலும் வரும். பூர்வீக சொத்து இருக்கும். ஜாதகர் அனைவரு டனும் சண்டை போடுவார். கோப குணம் இருக்கும். பெண் மோகம் இருக்கும். சிலர் பெண் தொடர்பின் மூலம் பணத்தை இழந்துவிடு வார்கள்.

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு 10-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரிய குணம் கொண்டவராக இருப்பார். கோப குணம் இருக்கும். நல்ல பதவியில் இருப்பார். சிலர் வைத்தியராகவோ டாக்ட ராகவோ இருப்பார்கள். நல்ல பண வரவு இருக்கும். சிலர் தர்ம உபதேசம் செய்பவராக இருப் பார்கள். தாயுடன் உறவு சரியாக இருக்காது. ஜாதகர் எப்போதும் ஆணவத்துடன் இருப்பார். பிறரை மதிக்க மாட்டார்.

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு 11-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் பணக்காரராக இருப்பார். இளமையில் உடல் நலம் கெடும். இளம் வயதில் படிப்பில் பிரச்சினை இருக்கும். பின்னர் படிப்பு நன்றாக இருக்கும். ஜாதகர் பட்டம்கூட வாங்குவார். பணம் வரும். அத்துடன் சோம்பேறித்தனமும் இருக்கும். நல்ல வாரிசு இருக்கும்.

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு 12-ஆம் பாவத்தில் இருந்தால், இளமையில் பல சிக்கல்கள் இருக்கும். சிலர் வெளியூர் அல்லது வெளிநாட்டில் வாழ்வார்கள். செலவுகள் அதிகமாக இருக்கும். நல்ல பண வரவு இருக்கும். சிலருக்கு கள்ளத் தொடர்பு இருக்கும்.

செல்: 98401 11534

bala070325
இதையும் படியுங்கள்
Subscribe