சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன், சனி லக்னத்தில் இருந் தால், ஜாதகர் பணக்காரராக இருப்பார். நல்ல வாரிசு இருக்கும். நிறைய நண்பர்கள் இருப்பார்கள். சந்தோஷம் குறைவாகவே இருக்கும். எனினும், ஜாதகர் எப்போதும் உற்சாகத்துடன் இருப்பார். தன் கஷ்டத்தை வெளியே காட்டிக்கொள்ள மாட்டார்.

சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன், சனி 2-ஆம் பாவத்தில் இருந்தால், நல்ல பண வசதி இருக்கும். தைரிய குணம் இருக்கும். காதல் திருமணம் நடக்கும். தொண்டையில் பிரச்சினை இருக்கும். பேச்சின்மூலம் பண வரவு இருக்கும். சகோதரர்களுடன் சுமாரான உறவு இருக்கும்.

சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன், சனி 3-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் துணிச்சலான மனிதராக இருப்பார். பண வசதி இருக்கும். பல தொழில்கள் இருக்கும். சிலர் வெளியூரில் சென்று பணம் சம்பாதிப் பார்கள். சிலர் வெளிமாநிலத்தில் அல்லது வெளிநாட்டில் வாழ்வார்கள். சிலர் தங்களைத் தாங்களே புகழ்ந்து பேசிக்கொள்வார்கள்.

ss

சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன், சனி 4-ஆம் பாவத்தில் இருந்தால், கோப குணம் இருக்கும். ஜாதகர் உயரமானவராக இருப்பார். தைரிய குணம் இருக்கும். ஜாதகர் ஈர்க்கக்கூடிய ஆடைகளை அணிவார். வாரிசு இருக்கும். எப்போதும் ஏதாவது தொழிலை ஜாதகர் செய்துகொண்டே இருப்பார். வாகனம் இருக்கும். பூர்வீக சொத்தில் பிரச்சினை இருக்கும்.

சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன், சனி 5-ஆம் பாவத்தில் இருந்தால், தைரிய குணம் இருக்கும். ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார். நல்ல பதவியில் இருப்பார். கோப குணம் இருக்கும். மனதில் சந்தோஷம் இருக்காது. எப்போதும் ஏதாவது குறை இருப்பதாக ஜாதகர் நினைத்துக் கொண்டே இருப்பார். வாரிசு களுடன் விவாதம் இருக்கும்.

Advertisment

சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன், சனி 6-ஆம் பாவத்தில் இருந்தால், துணிச்சல் குணமிருக்கும். காலில் நோய் இருக்கும். அடிக்கடி சீதளம் பிடிக்கும். ஜாதகர் பணக்காரராக இருப்பார். 28 வயதிற்குப்பிறகு, நல்ல பண வரவு இருக்கும். பல பெண்களுடன் தொடர்பு இருக் கும். சூது விளையாடும் பழக்கம் இருக்கும். ஜாதகர் அதில் பணத்தைச் செலவிடுவார்.

சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன், சனி 7-ஆம் பாவத்தில் இருந்தால், சிலருக்கு மறுமணம் நடக்கும். செலவுகள் அதிகமாக இருக்கும். பணவரவு இருக்கும். பெண் மோகம் அதிகமாக இருக்கும். அடிக்கடி பயணம் இருக்கும். ஜாதகர் தன் வேலைகளை யாருக்கும் தெரியாமல் ரகசிய மாக செய்வார்.

சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன், சனி 8-ஆம் பாவத்தில் இருந்தால், தைரியசாலியாக இருப்பார். அவ்வப்போது உடல்நல பாதிப்பு உண்டாகும்.

Advertisment

மனதில் சிந்தனைகள் அதிகம் இருக்கும். கடன் வாங்குவார். சோம்பேறியாக இருப்பார்.

சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன், சனி 9-ஆம் பாவத் தில் இருந்தால், துணிச்சல் குணம் இருக்கும். நிறைய படித்தவராக இருப்பார். பணவரவு இருக்கும். வாரிசு இருக்கும். பிற பெண்களுடன் கள்ளத் தொடர்பு இருக்கும்.

சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன், சனி 10-ஆம் பாவத் தில் இருந்தால், தைரியசாலியாக இருப்பார். இளமையில் பல சிக்கல்கள் இருக்கும். பூர்வீக சொத்தில் பிரச்சினை இருக்கும். தந்தையுடன் உறவு சரியாக இருக்காது. பதவியில் பல பிரச்சினைகள் உண்டாகும்.

சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன், சனி 11-ஆம் பாவத்தில் இருந்தால், இளம்வயதில் பல கஷ்டங்கள் இருக்கும். சீதளம் பிடிக்கும். வயிற்றில் நோய் இருக்கும். பயணம் இருக்கும். படிப்பிற்கும் மேல் வருமானம் வரும். செலவுகள் அதிகமாக இருக்கும்.

சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன், சனி 12-ஆம் பாவத் தில் இருந்தால், வீண் செலவு கள் இருக்கும். திருமண வாழ்க் கையில் பிரச்சினைகள் இருக் கும். பெண் மோகம் அதிகமாக இருக்கும். தலைவலி வரும்.

சிலருக்கு தந்தை இருக்க மாட்டார்.