சூரியன், சந்திரன், செவ்வாய், சனி லக்னத் தில் இருந்தால், ஜாதகர் ஒல்லியான சரீரத்தைக் கொண்டிருப்பார். கோப குணம் இருக்கும். பண வசதி இருக்காது. வறுமை இருக்கும். பெண் மோகம் இருக்கும். பல மோசடி வேலைகளை ஜாதகர் செய்வார். தலையில் நோய் இருக்கும்.
சூரியன், சந்திரன், செவ்வாய், சனி 2-ஆம் பாவத்தில் இருந்தால், குடும்பத் தில் பல பிரச்சினைகள் இருக்கும். இளமையில் கஷ்டங்கள் இருக்கும். படிப்பில் பிரச்சினை இருக்கும். சகோதரர்களுடன் உள்ள உறவில் சிக்கல்கள் இருக்கும். முகத்தில் தழும்பு இருக்கும். சிலருக்கு முகத்தில் காயங்கள் இருக்கும். தந்தையுடன் ஜாதகருக்கு சுமாரான உறவு இருக்கும். திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள் இருக்கும்.
சூரியன், சந்திரன், செவ்வாய், சனி 3-ஆம் பாவத்தில் இருந்த

சூரியன், சந்திரன், செவ்வாய், சனி 3-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். கோப குணம் இருக்கும். ஜாதகர் சொந்த ஊரை விட்டு வெளியே சென்று பணம் சம்பாதிப்பார். சகோதர்களுடன் சரியான உறவு இருக்காது.
சிலர் எஞ்சீனியர்களாக இருப்பார்கள். சிலர் மேஸ்திரிகளாக இருப்பார்கள்.
சூரியன், சந்திரன், செவ்வாய், சனி 4-ஆம் பாவத்தில் இருந்தால், பூர்வீக சொத்தில் பிரச்சினை இருக்கும். தாயின் உடல்நலம் பாதிக்கப்படும். சொந்தத்தில் நிலம் வாங்குவதில் பிரச்சினை இருக்கும். திருமண வாழ்க்கையில் சிக்கல்கள் இருக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும். கடுமையாக உழைத்தும் பெயர் கிடைக்காது.
சூரியன், சந்திரன், செவ்வாய், சனி 5-ஆம் பாவத்தில் இருந்தால், வாழ்க்கையின் முற்பகுதியில் கஷ்டங்கள் இருக்கும். வயிற்றில் பிரச்சினை இருக்கும். பெண்களுக்கு கர்ப்பப் பையில் பிரச்சினை இருக்கும். சில பெண்களுக்கு கர்ப்பம் கலைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இளம் வயதில் படிப்பு விஷயத்தில் பிரச்சினை இருக்கும். சிலர் இராணுவத்தில் அல்லது காவல் துறையில் இருப்பார்கள்.
சூரியன், சந்திரன், செவ்வாய், சனி 6-ஆம் பாவத்தில் இருந்தால், திருமண வாழ்க்கையில் பிரச்சினை இருக்கும். பலவித கஷ்டங்கள் இருக்கும். இளம் வயதில் உடல்நலம் பாதிக்கப்படும். வயிற்றில் பிரச்சினை இருக்கும். பணம் சம்பாதிப்பதற்காக வெளியூர் செல்ல வேண்டியதிருக்கும். குடும்பத்தை அழிப்பதற்கு எதிரிகள் இருப்பார்கள்.
சூரியன், சந்திரன், செவ்வாய், சனி 7-ஆம் பாவத்தில் இருந்தால், சிலருக்கு மறுமணம் நடக்கும். கோபம் அதிகமாக வரும். கணவன்- மனைவி உறவில் பிரச்சினை இருக்கும். பணம் சம்பாதிப்பதில் சிக்கல்கள் இருக்கும். கடன் இருக்கும்.
சூரியன், சந்திரன், செவ்வாய், சனி 8-ஆம் பாவத்தில் இருந்தால், கோபம் அதிகமாக வரும். சிலருக்கு அடிக்கடி விபத்து நடக்கும். திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள் இருக்கும். ஜாதகர் பூர்வீக சொத்தை அழிப்பார். தேவையற்றதைப் பேசுவார். அதன்காரணமாக சண்டை உண்டாகும்.
சூரியன், சந்திரன், செவ்வாய், சனி 9-ஆம் பாவத்தில் இருந்தால், தந்தையுடன் சுமாரான உறவு இருக்கும். படிப்பு விஷயத்தில் பல பிரச்சினைகள் இருக்கும். பெற் றோருக்கு உடல்நல பாதிப்பு உண்டாகும். பணம் சம்பாதிப்பதற் காக வெளியூர் சென்று தொழில் செய்ய வேண்டியதிருக்கும். முதுகுத் தண்டில் நோய் இருக்கும்.
சூரியன், சந்திரன், செவ்வாய், சனி 10-ஆம் பாவத்தில் இருந்தால், பண வரவு இருக்கும். சிலர் துறவி களாக இருப்பார்கள். சிலர் அரசியல் வாதிகளாக இருப்பார்கள். சிலரின் அன்னைக்கு உடல்நல பாதிப்பு இருக் கும். தந்தையுடன் சுமாரான உறவு இருக்கும். வாழ்க்கையில் உயர்வு, தாழ்வு இரண்டுமே இருக்கும்.
சூரியன், சந்திரன், செவ்வாய், சனி 11-ஆம் பாவத்தில் இருந்தால், பலருக்கு ஒரேயொரு வாரிசுதான் இருக்கும். கஷ்டப்பட்டு பணம் சம்பாதிக்க வேண்டியதிருக்கும். பெண்களின் கர்ப்பப் பையில் பிரச்சினை இருக்கும். சிலருக்கு ரத்தம் குறைவாக இருக்கும். அடிக்கடி தலைவலி வரும்.
சூரியன், சந்திரன், செவ்வாய், சனி 12-ஆம் பாவத்தில் இருந்தால், இல்வாழ்க்கையில் பிரச்சினை இருக்கும். சிலருக்கு தாமதமாக திருமணம் நடக்கும். கண்ணில் நோய் இருக்கும். கோபம் அதிகமாக வரும். வீட்டில் யாராவது ஒருவருக்கு மனநோய் இருக்கும்.