Advertisment

சூரியன், சந்திரன், குரு எங்கு இருந்தால் என்ன நடக்கும்?

/idhalgal/balajothidam/what-will-happen-if-sun-moon-and-jupiter-are-present

சூரியன், சந்திரன், குரு ஜாதகத்தில் லக்னத் தில் இருந்தால், ஜாதகர் நிலையான மனம் கொண்டவராக இருப்பார். அறிவாளியாக இருப்பார்.தர்மத்தைக் கடைப்பிடிப்பவராக இருப்பார். மனம் வேகமாக செயல்படும். ஜாதகர் சாதுர்ய குணம் கொண்டவராக இருப்பார். பலருக்கும் சேவை செய்பவராக இருப்பார்.

Advertisment

சூரியன், சந்திரன், குரு 2-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகருக்கு நல்ல பண வசதி இருக்கும். கண்ணில் நோய் இருக்கும். குடும்பம் நன்றாக இருக்கும்.பேச்சாற்றல் இருக்கும். பெற்றோர் சந்தோஷமாக இருப்பார்கள்.

Advertisment

சூரியன், சந்திரன், குரு 3-ஆம் பாவத்தில் இருந்தால், வாழ்க்கையின் முற்பகுதியில் பல பிரச்சினைகள் இருக்கும். ஜாதகர் நிறைய பயணங்களை மேற்கொள்வார

சூரியன், சந்திரன், குரு ஜாதகத்தில் லக்னத் தில் இருந்தால், ஜாதகர் நிலையான மனம் கொண்டவராக இருப்பார். அறிவாளியாக இருப்பார்.தர்மத்தைக் கடைப்பிடிப்பவராக இருப்பார். மனம் வேகமாக செயல்படும். ஜாதகர் சாதுர்ய குணம் கொண்டவராக இருப்பார். பலருக்கும் சேவை செய்பவராக இருப்பார்.

Advertisment

சூரியன், சந்திரன், குரு 2-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகருக்கு நல்ல பண வசதி இருக்கும். கண்ணில் நோய் இருக்கும். குடும்பம் நன்றாக இருக்கும்.பேச்சாற்றல் இருக்கும். பெற்றோர் சந்தோஷமாக இருப்பார்கள்.

Advertisment

சூரியன், சந்திரன், குரு 3-ஆம் பாவத்தில் இருந்தால், வாழ்க்கையின் முற்பகுதியில் பல பிரச்சினைகள் இருக்கும். ஜாதகர் நிறைய பயணங்களை மேற்கொள்வார். சுயமுயற்சியால் முன்னுக்கு வருவார். பெரிய பதவியில் இருப்பார். உடன்பிறந்தோரால் சந்தோஷம் இருக்கும்.

gg

சூரியன், சந்திரன், குரு 4-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் சுய முயற்சியால் பல வெற்றிகளை அடைவார். நிறைய படித்தவராக இருப்பார். நிலம், மனை விஷயத்தில் போராடி, வெற்றி கிடைக்கும்.

மனம் எப்போதும் அலைபாய்ந்த வண்ணம் இருக்கும். அரசாங்க விஷயத்தில் பெயர், புகழ் கிடைக்கும்.

சூரியன், சந்திரன், குரு 5-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் அரசு அதிகாரியாக இருப்பார். நிறைய கற்றவராக இருப்பார். ஏழை வீட்டில் பிறந்தாலும், பெரிய பணக்காரராக வளர்ச்சி அடைவார். உடல்நலம் நன்றாக இருக்கும். வாரிசுகள் நல்லவர்களாக இருப்பார்கள்.

சூரியன், சந்திரன், குரு 6-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். பகைவர்கள் குறைவாக இருப்பார்கள். சிலருக்கு காலில் அடிபடும். ஜாதகர் அதிகமாக பயணம் செய்வார். வெளித் தொடர்புகளின்மூலம் நல்ல பண வரவு இருக்கும். பித்த நோய் இருக்கும்.

சூரியன், சந்திரன், குரு 7-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் துணிச்சல் குணம் கொண்டவராக இருப்பார். மனைவி அழகாக இருப்பாள். ஜாதகர் பல தொழில்களைச் செய்வார். அனைத்திலும் வெற்றி கிடைக்கும். ஜாதகர் சுய முயற்சியால் வீடு, மனை வாங்குவார்.

சூரியன், சந்திரன், குரு 8-ஆம் பாவத்தில் இருந்தால், சொந்தத்தில் விவசாய நிலம் இருக்கும். சொத்து இருக்கும். சிலர் தொழிலதிபர்களாக இருப்பார்கள். சிலருக்கு மலச் சிக்கல் பிரச்சினை இருக்கும். பூர்வீக சொத்து கிடைக்கும். சிலர் ஆழமாக சிந்திப்பார்கள்.

சூரியன், சந்திரன், குரு 9-ஆம் பாவத்தில் இருந்தால், வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். தாத்தா, தந்தையால் புகழ் கிடைக்கும். வீடு, மனை, வாகனம், தங்கம்... அனைத்தும் இருக்கும். ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார். பெரிய பதவியில் இருப்பார்.

சூரியன், சந்திரன், குரு 10-ஆம் பாவத்தில் இருந்தால், சிலருக்கு பெரிய அளவில் அதிர்ஷ்டம் இருக்கும். சிலர் அரசியலில் பெரிய பதவியில் இருப்பார்கள். சிலர் நீதிபதியாக இருப்பார்கள். நல்ல பேச்சுத் திறமை இருக்கும். உடல்நலம் நன்றாக இருக்கும். பிள்ளை களால் புகழ் கிடைக்கும்.

ஜாதகர் நேர்மையின் சின்னமாக இருப்பார்.

சூரியன், சந்திரன், குரு 11-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகருக்கு ஒரு ஆண் வாரிசு இருக்கும். பணக்காரராக இருப்பார். நிறைய சொத்து இருக்கும். நிறைய படித்தவராக இருப்பார். அரசாங்க விஷயத்தில் ஆதாயம் இருக்கும். வலது தோளில் பாதிப்பு இருக்கும். சகோதரர்கள் சந்தோஷமாக இருப்பார்கள். மனைவியால் மகிழ்ச்சி இருக்கும்.

சூரியன், சந்திரன், குரு 12-ஆம் பாவத்தில் இருந்தால், வாழ்க்கையில் 31 வயதிற்குப் பிறகு சந்தோஷம் இருக்கும். கண்களுக்கு கண்ணாடி போட வேண்டியதிருக்கும். வெளித்தொடர்புகளின்மூலம் பணம் வரும். சிலர் வெளியூரில் தொழில் செய்வார்கள். சிலர் குள்ளமாக இருப்பார்கள். செலவுகள் அதிகமாக இருக்கும். ஆனால், அதைச் சமாளிக்கக்கூடிய அளவிற்கு பணம் வரும்.

செல்: 98401 11534

bala171123
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe