சூரியன், சுக்கிரன், சனி லக்னத்தில் இருந்தால், பெயர் கெடுவதற்கான வாய்ப்பிருக்கிறது. விரோதி கள் அதிகமாக இருப்பார்கள். அவர்கள் ஏதாவது செய்துவிடுவார்களோ என்ற பயம் எப்போதும் இருக்கும். மனதில் கெட்ட சிந்தனைகள் இருக்கும். சிலர் மனகட்டுப்பாடே சிறிதுமில்லாமல் இருப்பார்கள். சிலர் தவறான காரியங்களைச் செய்து மாட்டிக்கொள்வார்கள்.
சூரியன், சுக்கிரன், சனி 2-ஆம் பாவத்தில் இருந்தால், அதிகமாக பேசுவார்கள். குடும்பத்தில் ஏதாவது பிரச்சினை இருக்கும். கண்ணில் சிறிய நோய் இருக்கும். கணவன்- மனைவி உறவில் பிரச்சினை இருக்கும். வாழ்க்கையின் முன்பகுதியில் கஷ்டங்கள் இருக்கும். பின்பகுதியில் கடுமையாக உழைத்து பணத்தைச் சம்பாதிப்பார்கள். சிலருக்கு வாரிசு உண்டாவதில் பிரச்சினை இருக்கும்.
சூரியன், சுக்கிரன், சனி 3-ஆம் பாவத்தில் இருந்தால

சூரியன், சுக்கிரன், சனி 3-ஆம் பாவத்தில் இருந்தால், தைரிய குணம் இருக்கும். சிலர் மனதில் எப்போதும் ஏதாவது பாடலை முணுமுணுத்துக் கொண்டே இருப்பார்கள். பெண் மோகம் இருக்கும்.
அடிக்கடி பயணம் செய்வார்கள். அதன்மூலம் பணம் சம்பாதிப்பார்கள். வயிற்றில் நோய் இருக்கும்.
சூரியன், சுக்கிரன், சனி 4-ஆம் பாவத்தில் இருந்தால், பூர்வீக சொத்தில் பிரச்சினை இருக்கும். சிலர் ஜாதகரை ஏமாற்றிவிடுவார்கள். ஜாதகர் பெண் விஷ யத்தில் மாட்டிக் கொண்டு, பணத்தை இழப்பார். இளம் வயதில் பல கஷ்டங் கள் இருக்கும். பெண் மோகம் அதிகமாக இருக்கும். வாக னம் வாங்குவதில் பிரச்சினைகள் இருக்கும்.
சூரியன், சுக்கிரன், சனி 5-ஆம் பாவத்தில் இருந் தால், ஜாதகர் நிறைய படித்தவ ராக இருப்பார். தைரியசாலியாக இருப்பார். அதிகமாக பயணம் செய்வார். பெண்களின் வயிற் றில் நோய் இருக்கும். ஆண்களுக்கு பித்த நோய் இருக்கும். கோப குணம் இருக்கும். சிலர் பொறியாளராக இருப்பார்கள். சிலர் அரசு பதவிகளில் இருப்பார்கள். சிலர் வெளியூர்களுக்குச் சென்று சம்பாதிப் பார்கள்.
சூரியன், சுக்கிரன், சனி 6-ஆம் பாவத்தில் இருந்தால், பகைவர்கள் குறைவார்கள். தலைவலி இருக்கும். பெண் மோகம் அதிகமாக இருக்கும். சிலருக்கு பூர்வீக சொத்தில் பிரச்சினை இருக்கும். கணவன்- மனைவி உறவில் சிக்கல்கள் இருக்கும்.
சூரியன், சுக்கிரன், சனி 7-ஆம் பாவத் தில் இருந்தால், சிலருக்கு மறுமணம் நடக்கும். சிலர் பெண் மோகத்தில் மாட்டிக் கொள்வார்கள். சிலர் பலவகையான வியாபாரங்களை அல்லது தொழில்களைச் செய்வார்கள். அதன்மூலம் பணம் சம்பாதிப்பார்கள்.
சூரியன், சுக்கிரன், சனி 8-ஆம் பாவத் தில் இருந்தால், உடல்நலம் கெடும். பூர்வீக சொத்து கிடைப்பதில் பிரச்சினை இருக்கும். மது அருந்துவதால், ஈரல் பாதிக்கும்.
ஜாதகர் தைரியமாக செயல்பட்டு, பணத் தைச் சம்பாதிப்பார். சிலர் வெளியூருக்குச் சென்று தொழில் செய்வார்கள்.
சூரியன், சுக்கிரன், சனி 9-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகருக்கு தந்தையுடன் கருத்து வேறுபாடு இருக்கும். முன்னோரின் சொத்து கிடைப்பதில் சிக்கல்கள் இருக்கும். தலைவலி இருக்கும். கோப குணம் இருக்கும். தைரியமாக செயல்பட்டு, ஜாதகர் பணம் சம்பாதிப்பார். சிலர் அதிகமாக கடன் வாங்குவார்கள். சிலர் பல தொழில்களைச் செய்வார்கள். அதிகமாக பயணம் செய்வார்கள்.
சூரியன், சுக்கிரன், சனி 10-ஆம் பாவத்தில் இருந்தால், வாழ்க்கையில் பல போராட்டங்கள் இருக்கும். இறுதியில் வெற்றி கிடைக்கும். பல தொழில்களைச் செய்வார்கள். சிலர் அரசியலில் இருப்பார்கள். அதில் வெற்றி, தோல்வி... இரண்டுமே இருக்கும்.
சிலருக்கு பிள்ளைகளால் பிரச்சினை இருக்கும். சிலர் தைரியசாலியாக இருப் பார்கள். சிலர் பொறியாளராக இருப் பார்கள். சிலர் துறவிகளாக இருப்பார் கள்.
சூரியன், சுக்கிரன், சனி 11-ஆம் பாவத்தில் இருந்தால், தைரிய குணம் இருக்கும். அதை வைத்து ஜாதகர் பணம் சம்பாதிப்பார். பலவித தகிடுதத்தங் களைச் செய்து ஜாதகர் பொருளை ஈட்டுவார். சிலருக்கு வாரிசு உண்டாவ தில் பிரச்சினை இருக்கும். பெண்களுக்கு கர்ப்பப் பையில் பிரச்சினை இருக்கும். சிலர் பணத்தைச் சம்பாதிப்பதற்காக பல முயற்சிகளையும் செய்து, பிறரை ஏமாற்றுவார்கள்.
சூரியன், சுக்கிரன், சனி 12-ஆம் பாவத்தில் இருந்தால், செலவுகள் அதிக மாக இருக்கும். மனதில் நிம்மதி குறைவாக இருக்கும். சிலர் போதைப் பழக்கத்திற்கு அடிமை யாக இருப்பார்கள். சிலருக்கு பெண் மோகம் இருக்கும். சிலருக்கு கண்ணில் பிரச்சினை இருக்கும்.
செல்: 98401 11534